ஆரோக்கியமாக இருக்க விரும்புபவர்கள் பின்பற்ற வேண்டிய சிம்பிள் டயட்ஸ்!

ஆரோக்கியமாக இருக்க விரும்புபவர்கள் பின்பற்ற வேண்டிய சிம்பிள் டயட்ஸ்!

இன்றைய நவீன உலகில் ஆரோக்கியம் என்பது கிட்டத்தட்ட கிடைக்காத விஷயமாகவே இருந்து வருகிறது. பாஸ்ட் புட், சாலையோர உணவுகள் என நாவின் சுவைக்கு நாம் அடிமையாகி கொண்டிருக்கிறோம். ஆரோக்கியமாக வாழ விரும்புவர்கள் ஒரு சில டயட் (diets) முறைகளை பின்பற்றி வந்தாலே போதுமானது. அவை என்ன என்பதற்கு இங்கு காணலாம்.

ஆரோக்கியமாக வாழ டயட் டிப்ஸ்

 • தினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிடுங்கள். இதயத்துக்கு ஆரோக்கியம் அளிக்கும் நல்ல கொழுப்பு செலினியம் நட்ஸ் வகைகளில் உள்ளது. இதனை தொடர்ந்து சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறைந்து ஆயுள் அதிகரிக்கும். 
Youtube

 • உங்கள் உணவில் வாரத்தில் இரண்டு நாட்கள் மீன் சாப்பிடுங்கள். அதில் ஒரு நாள் எண்ணை வகை மீன் சாப்பிடுவது நல்லது. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தக்கூடிய ஒமேகா 3 பேட்டி ஆசிட் எண்ணை செறிந்த மீன்களில் அதிகம் உள்ளது. அதனால் டயட்(diets) உணவின் மீன் சேர்த்து கொள்ளுங்கள். 
 • சாப்பாடுகளுக்கு இடையே 3 மணி நேர இடைவெளி அவசியம். மூன்று வேளை உணவுகளில் காலை உணவை முழுமையாக சாப்பிட்டு டயட் இருங்கள் .
 • மூன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் காய்கறி, பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். காய்கறிகள் அதிகமான நார்ச்சத்தையும், குறைவான சர்க்கரை சத்தையும் கொண்டுள்ளன.
 • பிரெட், பேக்கிங் உணவு வகைகளில் அதிக உப்பு மறைந்திருக்கிறது. உணவில் அதிகளவு உப்பு சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். 
 • சராசரியாக 9 வகை மாவுச்சத்து உணவுகளை சாப்பிட வேண்டும். ஒரு துண்டு ரொட்டி, முட்டை அளவு உருளைக்கிழங்கு, 28 கிராம் சாதம் போன்றவை இதில் அடங்கியிருக்கலாம்.
 • ஒருமுறை உணவை விழுங்கும் முன்பு 15 முறை மெல்ல வேண்டும். நாம் சராசரியாக 7 முறைதான் உணவை மெல்கிறோம்.
 • நாம் அனைத்து விதமான சத்துகளையும் பெற, ஒவ்வொரு 3 நாட்களுக்கும் 17 விதமான உணவு வகைகளை உண்ண வேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். எனவே டயட் (diets) இருக்க விரும்புபவர்கள் உணவு அருந்துவதை விட பழங்களை சேர்த்து கொள்வது நல்லது. 
Youtube

 • தினமும் ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு என ஏதாவது ஒரு பழம் சாப்பிட வேண்டும். அல்லது ஜூஸ் செய்து அருந்தலாம். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடுவது ஆரோக்கியம் அளிக்கும்.
 • அதிக எண்ணெய் சேர்க்காத உணவுகளை சேர்த்துக்கொள்ளவும். 
 • முடிந்தவரை காய்கறிகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். வேக வைத்த பயிறு, தாணியங்கள், காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்து சாப்பிட்டு டயட் இருங்கள்
 • காலையில் இட்லி, இடியப்பம், ஆப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகள் சாப்பிடலாம். மாலை வேலையில் வேகவைத்த சுண்டல் சாப்பிட்டு வாருங்கள். 

அத்திபழத்தின் நன்மைகள் – சரும மற்றும் உடல் ஆரோக்கியம் பெற அத்திப்பழம்!

 • புளிப்பான உணவுகளை முடிந்தவரை குறைத்து விடுங்கள் வேண்டுமென்றால் புளிக்கு பதிலாக தக்காளி சேர்த்து கொள்ளலலாம். 
 • காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக்கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர் காப்பி, டீ போன்றவைகளை குடிக்கலாம்.

இந்த உணவுகளை சேர்த்து உண்ணாதீர்கள்

 • தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும் என்பதால் இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது. இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில் சாப்பிடவேண்டும்.
 • வாழைப்பழத்தை தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது.
 • பழங்களைத் தனியேதான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.
 • வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.
Youtube

 • மீன் சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது. அவ்வாறு மீறி உண்டால் வெண் மேகம் போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

கல்லீரல் ஆரோக்கியத்திற்கான டயட்

 • உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு தான் கல்லீரல். கல்லீரல் தான் உடலில் உள்ள நச்சுக்களை பிரித்து உடலில் இருந்து வெளியேற்றும் வேலையை செய்கிறது. கல்லீரலானது சரியாக செயல்படாவிடில் உடலில் இருந்து டாக்ஸின்கள் வெளியேறாமல் இருக்கும். இதனால் உடலில் மோசமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கல்லீரலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கும், கல்லீரலில் நோய்கள் வராமல் இருக்கவும் சரியான டயட்டை மேற்கொள்ள வேண்டும். 

வினய் விஜயனை கரம் பிடித்தார் மலையாள நடிகை விஷ்ணு பிரியா : குவியும் வாழ்த்துக்கள்!

 • வெங்காயம் மற்றும் பூண்டை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த உணவுப் பொருட்களில் சல்பர் அதிகமாக உள்ளது. இவை கல்லீரல் நன்கு செயல்பட உதவி புரிவதோடு, கல்லீரலில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல் தடுக்கும்.
Youtube

 • பீட்ரூட்டில் (diets) உள்ள பெக்டின் என்னும் பொருள் கல்லீரலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்ற உதவும். மேலும் பீட்ரூட் உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. 
 • முட்டைக்கோஸிலும் சோடியம் அதிகம் உள்ளது.  முட்டைகோஸை தொடர்ந்து சாப்பிட்டு வர கல்லீரழுக்கு ஆரோக்கியம் அளித்து சீராக செயல்படவும் உதவும்.

இதையெல்லாம் என் கணவரிடம் இருந்து மறைத்திருக்கிறேன்.. மனைவிகளின் அதிர வைக்கும் வாக்குமூலங்கள் !

 • கேரட்டில் உள்ள நியாசின் மற்றும் பீட்டா கரோட்டீன் கண்கள் மற்றும் கல்லீரலுக்கு நல்லது. முக்கியமாக இதில் உள்ள நியாசின், டாக்ஸின்கள் வெளியெற உதவுவதோடு, கல்லீரல் கெட்ட நச்சுக்களை உறிஞ்சாமல் தடுக்கிறது. 
 • பதப்படுத்தப்பட்ட (diets)உணவுகள் உட்கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் சேர்க்கப்பட்டுள்ள கெமிக்களால் கல்லீரலின் செயல்பாடு பாதிக்கப்படும்.
Youtube

 • செயற்கை (diets) சுவையூட்டிகள் மற்றும் ஃபுருக்டோஸ் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
 • ஆல்கஹாலை அளவுக்கு அதிகமாக குடித்தால், கல்லீரலின் செயல்பாடு மற்றும் ஆரோக்கியம் பாதிக்கப்படும். எனவே ஆல்கஹால் பருகுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவற்றை பின்பற்றி டயட் (diets) இருந்து வந்தால் வாழ்வில் ஆரோக்கியம் என்பது உங்கள் வசமே. 

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.