logo
ADVERTISEMENT
home / Celebrity Life
தன்னை விமர்ச்சித்தவர்களுக்கு நடிகை சமீரா ரெட்டி பதிலடி : பிகினியில் மேலும் ஒரு புகைப்படம் வெளியிட்டார்..

தன்னை விமர்ச்சித்தவர்களுக்கு நடிகை சமீரா ரெட்டி பதிலடி : பிகினியில் மேலும் ஒரு புகைப்படம் வெளியிட்டார்..

நடிகை சமீரா ரெட்டியின்(sameera reddy) கவர்ச்சி புகைப்படங்களுக்கு ரசிகர்களிடையே எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மீண்டும் பிகினி உடையில் புகைப்படம் ஒன்றை ஷேர் செய்துள்ளார். தென்னிந்தியாவிலும், பாலிவுட்டிலும் சமீரா ரெட்டி பிரபலமான நடிகையாவார். குறிப்பாக தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் அவர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் நடித்த வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் வரவேற்பு பெற்றார்.

இதனை தொடர்ந்து அசல், வேட்டை உள்ளிட்ட படங்களில் அவர் நடித்தார். கடந்த 2014ம் ஆண்டு தொழிலதிபர் அக்சய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்ட சமீராவிற்கு 3 வயதில் மகன் இருக்கிறான். திருமணத்திற்கு பிறகு திரை வாழக்கையில் இருந்து அவர் விலகியுள்ளார்.

கோடை கால பராமரிப்பு : இயற்கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு உடல் சூட்டை தணிக்கலாம்!

இந்நிலையில் தற்போது அவர் 8 மாத கர்ப்பமாக உள்ள அவர், தனது வாழ்க்கையின் முக்கியமான தருணங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் வயிறு தெரியும் வகையில் உடை அணிந்து சென்றதால் அனைவரது விமர்சனத்திற்கும் ஆளானார். இதனை தொடர்ந்து கவர்ச்சி உடை அணிந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இதற்கு அவரது ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ADVERTISEMENT

 

விக்னேஷ் ஷிவன் கண்கள் வழியாக நயன்தாரா.. வைரலாகும் புகைப்படம் !

முன்னதாக கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் பதிவிட்டார் அப்போது நீங்கள் கவர்ச்சியாக இருக்கிறீர்கள் என்று பலர் விமர்ச்சித்திருந்தனர். அதற்கு பதிலளித்த சமீரா நீங்கள் உங்கள் அம்மா வழியாக தான் வந்துள்ளீர்கள், உங்கள் அம்மாவும் கர்ப்பமாக இருக்கும் போது கவர்ச்சியாக இருந்தாரா என கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் முதல் குழந்தை பிறந்தவுடன் உடல் எடையை குறைக்க எனக்கு சில காலம் தேவைப்பட்டது. அதே போல இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்குவேன் என்றும், பழைய உடலமைப்பை பெற மேலும் சில காலங்கள் ஆகும் என்று உருக்கமாக கூறியிருந்தார். இந்நிலையில் தனது கணவர், மகனுடன் கோவா சென்றுள்ள அவர் கடற்கரையில் பிகினி உடையில் நின்றவாறு உள்ள புகைப்படங்களை அவரது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

அந்த படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலர்  அவருக்கு வாழ்த்து கூறியிருந்தனர். மேலும் சிலர் கர்ப்பிணியாக இருந்து கொண்டு இப்படியா உடை அணிவது என விமர்ச்சித்திருந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிகினி உடையில் மற்றொரு புகைப்படத்தை நடிகை சமீரா ரெட்டி பதிவிட்டுள்ளார். அதில் குழந்தையின் ஆழ்ந்த அத்மா நிழல் முடிவில் நீந்தி கொண்டிருக்கிறது. என் கர்ப்பிணி வயிற்றை பார்த்து சங்கடமாக உணர்பவர்களுக்கு இதுவே என் பதில் என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

 

முதல் முறையாக குழந்தையை வெளியில் காமித்த ப்ரஜின் மற்றும் சாண்ட்ரா

சமீரா ரெட்டி(sameera reddy) கர்ப்ப காலத்தில் என்ன உடை அணிய வேண்டும் என சொல்லும் அதிகாரம் யாருக்கும் இல்லை. அவர் பிகினி உடை அணிவதில் அவரது கணவருக்கே அட்சேபனை இல்லாத போது மற்றவர்கள் சமூக வலைத்தளத்தில் அவரை திட்டுவதும், விமர்சப்பதும் தவறு என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். முன்னதாக முதல் பிரசவத்திற்கு பின்னர் சமீரா 100 கிலோ எடை இருந்ததை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் விமர்சித்தனர். முதன் கர்ப்பத்தின் போது உடல் நலக்குறைவால் சில மாதங்கள் படுத்த படுக்கையாக சமீரா இருந்ததால், தற்போது அவர் நலமாக இருக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

11 Jun 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT