அம்மாவாக, பெண்ணாக, நடிகையாக தற்போது திருப்தியாக இருக்கிறேன் : ஜோதிகா உருக்கம்!

அம்மாவாக, பெண்ணாக, நடிகையாக தற்போது திருப்தியாக இருக்கிறேன் : ஜோதிகா உருக்கம்!

ஒரு அம்மாவாக, பெண்ணாக, நடிகையாக திருப்தியாக இருக்கிறேன் என நடிகை ஜோதிகா (jothiga) கூறியுள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகிய இருவரும் தயாரித்து, ஜோதிகா நாயகியாக நடித்திருக்கும் படம் ‘ராட்சசி’. புதுமுக இயக்குனர் கௌதம் ராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார் கோகுல் பெனோய் ஒளிப்பதிவு மற்றும் பிலோமின் ராஜ் எடிட் செய்துள்ளார். ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த  படம் வரும் ஜூலை 5ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. 

twitter

நினைவுகளை பகிர்ந்த ஜோதிகா

அப்போது பேசிய ஜோதிகா, தன்னுடைய நினைவு ஒன்றை பகிர்ந்துகொண்டார். 5 ஆண்டுகளுக்கு முன்னர் என் பெண் படித்த பள்ளி ஆண்டுவிழாவில் ஆசிரியர் ஒருவர் பேசியதை இங்கு கூறலாம் என நினைக்கிறேன். ஏனென்றால் அந்த வார்த்தைகளை கேட்டவுடன் அதனை என் வாழ்க்கையில் கடைப்பிடித்து வருகிறேன். மலையில் உயரமான இடத்துக்கு ஏறிவிட்டு, கீழே நிற்பவர்களை பார்ப்பதற்கு பெயர் வெற்றியாக இருக்கலாம் என இருக்கலாம். 

மீராவை சமாதானப்படுத்திய அபிராமி : அழுகை, மகிழ்ச்சி, சண்டை என களைகட்டும் பிக் பாஸ் வீடு!

ஆனால் அதுவே சாதனை அல்ல. எது முக்கியம் என்றால், மலை ஏறும் போது கிடைத்த அனுபவம் தான் அழகாக இருக்க வேண்டும். நாம் மலை ஏறும் போது மற்றவர்களையும் கைப்பிடித்து அழைத்துக்கொண்டு செல்வது, அந்த பயணத்தை சந்தோஷமானதாக்கும். அதுதான் உண்மையான வெற்றி. அவர் சொன்ன இந்த வார்த்தைகளை எனது வாழ்க்கையில் இப்போதும்  பயன்படுத்துகிறேன் என நெகிழ்ச்சியாக கூறினார். மேலும் இந்த கொள்கைகளை தான் என் 2வது திரையுலக பாதை பின்பற்றுகிறேன்.

twitter

எனக்கு வரும் நிறைய நல்ல கதைகளில் இருந்து சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுக்கிறேன். மேலும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் ஆண்களை இந்த பயணத்தில் தான் சந்திக்கிறேன் என்று மகிழ்ச்சியாக கூறினார். ஒரு அம்மாவாக, பெண்ணாக, நடிகையாக திருப்தியாக உள்ளேன். இது தான் எனது வாழ்வின் மிகப்பெரிய சாதனையாக நான் உணர்கிறேன் என்று நடிகை ஜோதிகா (jothiga) பெருமையாக தெரிவித்துள்ளார்.

ஏன் விநாயகர் சதுர்த்தி இந்தியாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக இருக்கிறது !

பெண் சமுத்திரக்கனி விமர்சனம்

இதனை தொடர்ந்து பெண் சமுத்திரக்கனி என்று விமசித்தவர்கள் குறித்து பதிலளித்த ஜோதிகா, ராட்சசி ட்ரைலர் பார்த்த சில ட்விட்டரில் சாட்டை படம் போன்று உள்ளதாகவும், என்னை பெண் சமுத்திரக்கனி என்றும் சொல்லியிருந்தனர். பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் ஒரே மாதிரியாக ஹீரோக்கள் சண்டை போட்டு, காதலித்து, டூயட் பாடும் போது ஒரே மாதிரியாக இப்போதாக செல்லாதவர்கள் இது மாதிரியான படங்களை மட்டும் ஏன் ஒப்பிட்டு பேசுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

twitter

ராட்சசி பட இயக்குநர் கெளதம் 2 மணி நேரம் கதை சொன்னார். அரசாங்க பள்ளி எப்படி நடக்க வேண்டும் என்ற மெசேஜ் ஏற்கனவே வந்திருக்கிறது. ஆனாலும் இந்தக் கதை அவ்வளவு புதிதாக இருந்தது. இதிலிருக்கும் சின்ன சின்ன விஷயங்கள் அற்புதமாக இருக்கும். ஒரு அப்பா, பெண்ணோட ரிலேஷன்சிப் புதிதாக இருக்கும். இயக்குநர் கல்யாணத்துக்கு முன்பு எப்படி இவ்வளவு அனுபவமாக வாய்ந்தவராக இருக்கிறார் என்று தெரியவில்லை. அரசாங்க பள்ளிகள் குறித்து காட்டியிருப்பதால் இந்த படமும் அதே போன்று இருக்காது. ஆனால் அதே போன்று 100 படங்கள் வந்தாலும் கூட அவை சமுதாயத்திற்கு தேவையான படங்கள் தான் சென்றார் அழுத்தமாக.

twitter

அகரன் பவுண்டேஷனில் இருக்கும் மாணவர்களில் 99 சதவீதம் பேர் அரசுப்பள்ளியில் இருந்து வந்தவர்கள். அதில் சுமார் 35 சதவிகிதம் மாணவர்கள் அவர்களது வகுப்பறைக்கு ஒரு வருடமாக ஆசிரியர்கள் வருவதில்லை என்று கூறுகின்றனர் இப்படி ஒரு சூழலில் படிக்கும் மாணவர்களால் எப்படி நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என கேள்வி எழுப்பினார் தமிழ்நாட்டில் பாதி பேர் அரசுப்பள்ளியில் படித்தவர்கள் தான் ஆகவே இந்த மாதிரி கருத்துள்ள 100 படங்கள் வந்தால் கூட நிம்மதியாக உட்கார்ந்து பார்க்கலாம் என ஜோதிகா (jothiga) கூறியுள்ளார். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.