நீருக்குள் நீந்திடும் தாமரை.. பிகினியில் பூஜா ஹெக்டே ..

நீருக்குள் நீந்திடும் தாமரை.. பிகினியில் பூஜா ஹெக்டே ..

தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே. தனக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத பூஜா அக்கட தேசமான தெலுங்கு சினிமாவிற்கு சென்றார். அங்கிருந்த படியே இந்தி படம் ஒன்றிலும் நடித்தார்.


அதன் பின்னர் தெலுங்கு சினிமா அவரை வாரி அணைத்து கொள்ள பூஜா ஹெக்டே அங்கேயே தங்கிவிட்டார். தற்போது சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த இரண்டு தெலுங்கு படங்கள் போட்டி போட்டு கொண்டு ஓடியதால் இப்போது திரும்பி பார்க்க வைக்கும் நடிகையாக மாறியிருக்கிறார் பூஜா ஹெக்டே.


மிக நீண்ட சர்ச்சைகள் கண்டனங்களுக்கு முற்றுப்புள்ளி.. இளையராஜாவின் அனுமதி இல்லாமல் அவரது பாடல்களை பயன்படுத்த கூடாது ! ஹை கோர்ட் தீர்ப்பு !ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான சமேதா மற்றும் மகேஷ் பாபுவின் மஹரிஷி திரைப்படம் இரண்டுமே அவரது ஐந்து வருட தெலுங்கு சினிமா உழைப்பிற்கான அங்கீகாரத்தை நல்கி இருக்கிறது.


இப்போது இந்தியில் பலத்த எதிர்பார்ப்புகளை கிளம்பியிருக்கும் ஹவுஸ்புல் 4 திரைப்படத்திலும் இவர் நடித்திருக்கிறார்.


திரைப்பிரபலங்கள் தங்கள் காதலை எப்படி ப்ரொபோஸ் செய்தனர் ! சுவாரஸ்ய காதல் கதைகள் !பிஸியான படப்பிடிப்புகளுக்கு நடுவே அவ்வப்போது ஹாட்டான போட்டாக்களை வெளியிடுவதில் பூஜா ஹெக்டே சந்தோஷம் கொள்கிறார் போலும். அவரை விட அவரது ரசிகர்களுக்கு அது நிச்சயம் சந்தோஷம்தான்.


தனது இன்ஸ்டா பக்கத்தில் சமீபமாக அவர் போட்டிருக்கும் நீச்சல் புகைப்படம் நாலரை லட்சத்திற்கும் மேலான லைக்ஸ்களை அள்ளியிருக்கிறது.


NGK - நந்த கோபால குமரன் - எனது பார்வை

அதில் கேப்ஷனாக புயலுக்கு முன்பான அமைதி என்று குறிப்பிட்டு.. கடைசி நேர நீச்சல் நேரங்கள் அதற்கு பின்னர் நடிப்பதற்கு வரிசையாக படங்கள் உள்ளன என்று குறிப்பிட்டிருக்கிறார்.


தற்போது பூஜா பிரபாஸ் உடன் மும்மொழி படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதனை ராதா கிருஷ்ணன் இயக்குகிறார். இது பீரியட் காதல் படம் என்பதால் எதிர்பார்ப்புகள் கூடி இருக்கின்றன. ஜான் என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் ஐரோப்பிய கதைக்களம் கொண்டது என்பது தெரிய வந்துள்ளது.


சுச்சி லீக்ஸ் மூலமாக லீக்கான ஐஸ்வர்யாவின் லிப் லாக் - இதுதான் இப்போது இணையத்தில் வைரல் !புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ் instagram


---                                                                                             


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.