உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்க ஆயில் புல்லிங்!

உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்க ஆயில் புல்லிங்!

இன்று ஜோதிகாவின் இதயம் நல்லெண்ணெய் விளம்பரத்திற்கு பிறகு பலருக்கு ஆயில் புல்லிங்(Oil Pulling) செய்வதை பற்றின விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதற்கு இதயம் நிருவனர்த்திற்கும், ஜோதிகாவிற்கும் நன்றி சொல்லத் தான் வேண்டும்!

எண்ணை இழுப்பு, அதாவது ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால் ஆயில் புல்லிங்(Oil Pulling), இது ஒன்றும் புதிதல்ல. ஆண்டாண்டு காலமாக நம் முன்னோர்கள் இந்த ஆரோக்கிய செயல் முறையை பின் பற்றி வருகின்றனர். ஆனால் இடையில், ஏனோ அனைவரும் அதனை மறந்து விட்டார்கள். இப்போது, பலருக்கும் ஆயில் புல்லிங் செய்வதன் நன்மைகள் பற்றி நல்ல விழிப்புணர்வு வரத் தொடங்கி உள்ளது. இதனால் அவர்கள் நல்ல பலனடைவதையும் உணருகின்றனர்.

ஆயில் புல்லிங்(Oil Pulling) செய்ய நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணை பயன் படுத்தப் படுகின்றது. ஆனால், பெரும்பாலும், நல்லெண்ணெய் அதிக அளவில் இதற்கு பயன் படுத்தப் படுகின்றது. இதற்கு, அதில் அடங்கி உள்ள மருத்துவ குணங்களும், மேலும் பல நற்குணங்களும் தான் முக்கிய காரணம்.

ஒருவர் தொடர்ந்து சில தினங்கள் ஆயில் புல்லிங்(Oil Pulling) செய்து விட்டால், பின் அவர் தானாகவே அதனை தினந்தோறும் செய்து விடுவார். காரணம், அதன் நன்மைகள், அவரை தொடர்ந்து செய்யத் தூண்டும். மேலும் பிறருக்கும் பரிந்துரைக்கத் தொடங்கி விடுவார்கள்.

ஆயில் புல்லிங்கை(Oil Pulling) பற்றி தெரிந்து கொள்ள, மேலும் தொடர்ந்து படியுங்கள்

ஆயில் புல்லிங்(Oil Pulling) என்றால் என்ன?

எளிதாக கூற வேண்டும் என்றால், சிறிது நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி, சிறிது நேரம் நன்கு கொப்பளித்து துப்பி விட வேண்டும். இது ஒரு சித்த மற்றும் ஆயுர்வேத வைத்திய முறையும் கூட. இது குறிப்பாக பற்களின் ஆரோக்கியம் மற்றும் வாய் மற்றும் அது சார்ந்த உருபுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த செய்யப் படுகின்றது. மேலும் இதை செய்வதால், வாயிலும், பற்களிலும் உள்ள கிரிமி பூசிகள் மற்றும் பக்டீரியாக்கள் அழிந்து விடுகின்றது.

அது மட்டுமல்லாது, ஆயில் புல்லிங்(Oil Pulling) செய்வதால், உங்கள் உடல் ஆரோக்கியம் அதிகரிகின்றது. குறிப்பாக இருதயம், நுரை ஈரல் போன்ற உருப்புகள் நலம் பெறுகின்றன.

ஆயில் புல்லிங்(Oil Pulling) பற்றி சில அறிய தகவல்கள்

காலையில் வெறும் வயிற்றில் ஆயில் புல்லிங் (Oil Pulling)செய்வதால், அது வாயில் இரவு முழுவதும் உருவாகிய கிருமிகள் மற்றும் நச்சு போன்றவற்றை அகற்ற உதவுகின்றது. இது பல உடல் உறுப்புகள் நல்ல நிலையில் ஆரோக்கியமாக செயல் பாடவும் உதவுகின்றது.

தொடர்ந்து ஆயில் புல்லிங் (Oil Pulling)செய்வதால், தலை வலி, மயக்கம் மற்றும் ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் குறைகின்றது, மேலும் நாளடைவில் முற்றிலுமாக குணமடைகின்றது.

வாட்ஸ் ஆப் மூலம் பிரசவம் பார்த்த செவிலியர்கள்! ஆபத்தான நிலையல் குழந்தை

எந்த எண்ணை ஆயில் புல்லிங்(Oil Pulling) செய்ய சரியானது?

சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம், நல்லெண்ணெய் சரியான தேர்வு என்று பரிந்துரை செய்கின்றது. மேலும் பல ஆண்டு காலமாக முன்னோர்களும், நல்லெண்ணெய்யையே பயன் படுத்தி வருகின்றனர்.

சூரிய காந்தி எண்ணையையும் சிலர் பரிந்துரை செய்கின்றனர். எனினும், இது அதிகமாக வழக்கத்தில் இல்லை. மேலும் சூரிய காந்தி எண்ணையை பயன் படுத்தி ஆயில் புல்லிங்(Oil Pulling) செய்யலாம் என்கின்ற விழிப்புணர்வும் மக்களிடையே அதிகம் இல்லை.

நல்லெண்ணைக்குப் பிறகு, தேங்காய் எண்ணை மற்றுமொரு பிரபலமான தேர்வாக இருகின்றது. இதில் ஆக்ஸிஜனேற்றம் அதிகம் உள்ளதால், பலர் இந்த எண்ணையை பயன் படுத்த விரும்புகின்றனர்.

இந்த எண்ணைகள் மட்டும் இல்லாமல், ஆலிவ் எண்ணை, நெல்லிக்காய் சாறு, மற்றும் பாலும் ஆயில் புல்லிங் (Oil Pulling)செய்ய பயன் படுத்தலாம் என்று கூறப் படுகின்றது. எனினும், இந்த பொருட்கள், ஆயில் புல்லிங் செய்ய ஏற்றது என்று சரிவர நிரூபிக்கப் படவில்லை.

செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். அது உங்களுக்கு பல நல்ல பலன்களையும் தரும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

gifskey, pexels, pixabay, Youtube

ஆயில் புல்லிங் (Oil Pulling)செய்வதனால் கிடைக்கும் நன்மைகள்

எந்த மருத்துவ செலவுகளும் இல்லாமல், மருத்துவரிடமும் செல்லாமல் மற்றும் உணவில் பெரிதாக கட்டுபாடுகளை வைக்காமலும், ஆரோக்கியமாக பல ஆண்டு காலம் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள், நிச்சயம் இந்த ஆயில் புல்லிங்கை(Oil Pulling) முயற்சி செய்யலாம். இதனை தொடர்ந்து நீங்கள் செய்து வரும் போது, உங்கள் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படுவதை காணலாம். இந்த வகையில், நீங்கள் தெரிந்து கொள்ள, இங்கே ஆயில் புல்லிங்கால்(Oil Pulling) உங்களுக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றிய சில தகவல்கள்

காவிடிகளை உருவாகும் பக்டீரியாக்களை குறைகின்றது: ஆயில் புல்லிங் (Oil Pulling)செய்வதால், பிரச்சனைகளை உண்டாகும் பக்டீரியாக்கள் கொள்ளப் படுகின்றது. இதனால் பற்களில் காவிடிகள் உண்டாவதை தடுக்கலாம். குறிப்பாக பற்களை அதிகமாக பாதிக்கும்  எஸ் ம்யுடன் என்ற பக்டீரியா இதனால் வளர்ச்சி அடையாமல் தடுக்கப் படுகின்றது. இது பற்களின் ஆரோக்கியத்தை அதிகப் படுத்துகின்றது.

பற்குழிகளை தடுகின்றது: இது வாயில் ஏற்படும் மற்றுமொரு பெரிய பிரச்சனை. நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணைக் கொண்டு ஆயில் புல்லிங்(Oil Pulling) செய்வதால் பற்குழிகளை உண்டாக்கும் தகடு குறைக்கப் படுகின்றது. மேலும் இது வாய் துர் நாற்றத்தையும் தடுகின்றது.

வாய் வென்புன்னை தடுகின்றது: ஆயில் புல்லிங்கை(Oil Pulling) தினமும் செய்வதால், வாய் வென்புன்னை தடுக்கலாம். இது வாயில் காண்டிடா என்னும் கிரிமி அதிக அளவில் வளருவதால் பூஞ்சை நோய் உருவாவதை தடுக்க உதவுகின்றது. மேலும், இந்த பூஞ்சை நோய் ஏற்பட்டால், அதற்கு பல மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். ஆனால், ஆயில் புல்லிங்கை சரியான முறையில் தினமும் செய்து வந்தால், அத்தகைய மருத்துவ உதவி தேவைப் படாமல் போகும்.

இங்கே குறிப்பிடப் பட்டுள்ள நன்மைகள் மட்டுமல்லாது, ஆயில் புல்லிங் (Oil Pulling)செய்வதால் பற்களுக்கு நன்மை தரக்கூடிய பக்டீரியாக்கள் பாதுகாக்கப் படுகின்றது. அதே சமயத்தில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் அழிக்கப் படுகின்றது.

தேங்காய் எண்ணை அல்லது நல்லெண்ணெயில் இருக்கும் வைட்டமின்கள், கால்சியம், மக்னீசியம், மற்றும் பாஸ்பரஸ் மேலும் உங்கள் பற்களை பலம் பெற செய்கின்றது.

தமிழ் திரையுலகில் கதை வசன கர்த்தவாகவும், நடிகராகவும் திகழ்ந்த கிரேசி மோகன் காலமானார்

நீங்கள் ஆயில் புல்லிங் (Oil Pulling)செய்தால் மட்டும் உங்கள் பற்கள் முழு நலம் பெரும் என்று கூறி விட முடியாது. அதற்கு உதவும் வகையில் நீங்கள் மேலும் சில முயற்சிகளை எடுக்க வேண்டும். குறிப்பாக, இனிப்பு பலகாரங்களை உண்ட பின் வாயை நன்கு தண்ணீர் விட்டு கொப்பளிக்க வேண்டும். குறிப்பாக இரவு உணவு உண்ட பின், படுக்க செல்லும் முன் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். சரியான உணவு முறையை கடை பிடிக்க வேண்டும். முடிந்த வரை, தேநீர், காபி மற்றும் உணவு உண்ட பின், உடனடியாக வாயை கொப்பளித்து விட வேண்டும். அவ்வப் போது வாயை தண்ணீர் விட்டு கொப்பளித்து விட்டால், வாயில் கிருமிகள் தேங்காமல், வெளியேற்றப் படும். இந்த குறிப்புகளோடு சேர்ந்து நீங்கள் ஆயில் புல்லிங்கை(Oil Pulling)தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை செய்து வரும் போது, நல்ல ஆரோக்கியத்தை பெறலாம். உங்கள் பற்களும், நல்ல நிறத்தில் இருப்பதை காணலாம்.

ஆயில் புல்லிங் (Oil Pulling) செய்வதால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள்

வாயில் இருக்கும் நச்சுத் தன்மை உடலில் இருக்கும் இரத்த ஓட்டத்தில் கலக்கின்றது. அது சருமத்தையும் பாதிகின்றது. ஆனால் ஆயில் புல்லிங் (Oil Pulling)செய்யும் போது, வாயில் இருக்கும் நச்சு வெளியேற்றப் படுவதால், சருமத்தில் எந்த அசுத்தங்களும் சேராமல் இருப்பதோடு, முகத்தில் பருக்கள், அரிப்பு மற்றும் தடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமலும் தடுகின்றது.

எப்போது ஆயில் புல்லிங்(Oil Pulling) செய்யலாம்?

ஒரு நாளைக்கு குறைந்த ஒரு முறையாவது இதனை செய்து வந்தால், நல்ல பலனை நீங்கள் காணலாம். அதிகப் படியாக உங்களுக்கு நேரம் இருந்தால், மூன்று முறை வரை ஆயில் புல்லிங்(Oil Pulling) செய்யலாம். குறிப்பாக, காலை எழுந்தவுடன், மதிய அல்லது மாலை வேளையில் மற்றும் இரவு தூங்கப் போவதற்கு முன் இதனை செய்யலாம்.

காலை அல்லது இரவு தூங்கப் போவதற்கு முன் செய்வது நல்ல பலனைத் தரும். காலை எழுந்தவுடன் பற்களை விளக்கி விட்டு பின் ஆயில் புல்லிங்(Oil Pulling) செய்வது நல்லது.

எப்படி ஆயில் புல்லிங் செய்வது?

சரியான முறையில் ஆயில் புல்லிங் (Oil Pulling)செய்து முழு பயன் பெற, இங்கே சில குறிப்புகள்:

  • வழக்கம் போல உங்கள் பற்களை காலை எழுந்தவுடன் விளக்கி விடுங்கள்
  • வாயில் எந்த பற்பசையும், அசுத்தமும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்
  • 1௦ மில்லி லிட்டர் நல்லெண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள்
  • உங்கள் வாய் முழுவதும் நல்லெண்ணெய் பருவும் படி நன்கு கொப்பளிக்க வேண்டும்
  • பல் இடுக்குகளில் நல்லெண்ணெய் செல்லும் படி வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும்
  • உங்கள் தாடையை எதையோ நீங்கள் மென்று கொண்டிருப்பது போல நன்கு அசைத்து வாயை கொப்பளிக்க வேண்டும்
  • சில நிமிடங்கள் கழித்து அதனை துப்பி விட வேண்டும்
  • பின் சாதாரண தண்ணீரைக் கொண்டு வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும்
  • அதன் பின், நல்ல பலனைப் பெற, குறைந்தது 2௦ நிமிடமாவது எதையும் அருந்தவோ அல்லது உண்ணவோக் கூடாது
  • இப்படி செய்து வந்தால், உங்கள் பற்கள் நல்ல பலபலப்பாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள்
gifskey, pexels, pixabay, Youtube

ஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் உபாதைகள்

குறிப்பிடும் வகையில் ஆயில் புல்லிங்(Oil Pulling) செய்வதால் எந்த உபாதைகளும் ஏற்படுவதில்லை. எனினும், இதை சரியான முறையில் செய்யாமல் போனால் சில குறைபாடுகள் ஏற்படக் கூடும் என்று ஆய்வு கூறுகின்றது.

குறிப்பாக வறண்ட வாய், லிப்போயிட் நிமோனியா, வயிற்றில் பிரச்சனை, சளியோடு சேர்ந்த இருமல், வாந்தி, மயக்கம், தாடை விறைப்பு, அதிக தாகம் எடுத்தல், உணவின் ருசித் தெரியாமல் போதல், போன்றவை உபாதைகலாக கருதப் படுகின்றது. எனினும், இவை நிரூபிக்கப் படவில்லை.

முதல் முறையாக குழந்தையை வெளியில் காமித்த ப்ரஜின் மற்றும் சாண்ட்ரா

ஆயில் புல்லிங்,(Oil Pulling)உங்களுக்கு எந்த பல் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க உதவும். இதனை நீங்கள் தொடர்ந்து செய்வதால், எந்த உபாதைகளும் ஏற்படாது. மேலும் அவ்வாறு ஏற்பட்டதாக எந்த தடையங்களும் இல்லை.  ஒரு நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ, ஆயில் புல்லிங் (Oil Pulling)ஒரு எளிய மற்றும் சக்தி வாய்ந்த செயல் முறையாகும். இதனை உங்கள் குழந்தைகளுக்கும், குடும்பத்தினர்களுக்கும் பரிந்துரை செய்து, அவர்களையும் செய்ய ஊக்கவிப்பதால், அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo