நிஷா கணேஷிற்கு வளைகாப்பு கியூட் வீடியோ வெளியீடு : ரசிகர்கள் வாழ்த்து!

நிஷா கணேஷிற்கு வளைகாப்பு கியூட் வீடியோ வெளியீடு : ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவியில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை நிஷா (nisha). இல்லத்தரசிகளிடையே பிரபலமான நிஷா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான கணேஷ் வெங்கட்ராமனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் மாடர்ன் துறையில் பணியாற்றி பல்வேறு விளம்பரங்களில் நடித்து வந்த இவர், அபியும் நானும் படத்தில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து உன்னைப் போல் ஒருவன், கோ உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த கணேஷ், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார். தொகுப்பாளினியும், சின்னத்திரை நடிகையுமான நிஷாவை(nisha) இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Youtube

2015ம் ஆண்டு திருமண ஆன நிலையில், தற்போது நிஷா கர்ப்பமாக இருக்கிறார். கணேஷோடு நிறைய விழாக்களில் பங்கேற்று வந்தார். அதனை தொடர்ந்து இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களுக்கு சென்று போட்டோ ஷுட் நடத்தி புகைப்பங்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். இருவரும் மகிழ்ச்சியாக குழந்தை வரவேற்பை எதிர்நோக்கி இருகிறார்கள்.


மேலும் இது குறித்து பேசிய கணேஷ், நாம் மட்டுமல்ல எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நிஷாவின் தாய்மை தருணத்தை கொண்டாடி வருகின்றனர். நிஷா கர்ப்பமாக இருப்பதாக கூறியதில் இருந்து தற்போது வரை வானதில் பறப்பதாக உணர்கிறேன் என்று நெகிழ்கிறார். நிஷாவிற்கு நல்ல கணவனாக இருக்கும் எனக்கு தற்போது என் குழந்தைக்கு நல்ல அப்பாவாகவும் இருக்க வேண்டும் என்ற பொறுப்பும், ப்ரோமோஷனும் வந்துள்ளாக தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ்பு சீசன் 3 - புதிய மாற்றங்களுடன் தயாராகி இருக்கிறது ! புகைப்படங்கள் உள்ளே !

Youtube

அவசியமாகப் போக வேண்டிய ஷூட்டிங்கிற்கு மட்டும் நிஷாவை(nisha) அவங்க அம்மா பொறுப்பில் விட்டுட்டு போறேன் மற்றபடி நானே பக்கத்தில் இருந்து கவனித்து கொள்கிறேன் என்கிறார் பொறுப்பான கணவராக  மேலும் என்னோட குழந்தையை பார்க்கணுங்கிற ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது என்று கூறிய கணேஷ், வயிற்றில் இருக்கும் எங்க குழந்தைக்காக தினமும் பாட்டுப் பாடுறேன், நிறைய பேசுறேன், என்னுடைய குரலை கேட்டுட்டு என்னோட குட்டி பேபி சூப்பரா ரியாக்ட் பண்ணுறாங்கன்னு மகிழ்ச்சியாக கூறுகிறார்.

தமிழ் சினிமாவில் இன்று வரை சிங்கிளாக இருக்கும் நடிகைகள்!

Youtube

நிஷாவுடன் சேர்ந்து குழந்தைக்கு நிறைய பெயர் செலக்ட் செய்து வைத்துள்ளதாகவும், அர்த்தமுள்ள பெயர்தான் வைக்கணும்ங்கிறது உறுதியா இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நமது கலாச்சாரம் படி சீமந்தம் முடிந்ததும் பெண்கள் அவர்களது அம்மா வீட்டிற்கு செல்வர். ஆனால் எனக்கு அதில் விருப்பம் இல்லை. நிஷாவை டெலிவரி வரை நான்தான் பார்த்துப்பேன் என்று கண்டிப்புடன் கூறுகிறார். சீமந்தம் முடிஞ்ச பிறகும் கூட நிஷா எங்க வீட்டில்தான் இருக்காங்க என்று கூறிய கணேஷ், மகப்பேறு நேரத்தில் நிஷாவுடன் நான் செலவிடும் நேரம்தான் அவங்களுக்கு நான் கொடுக்கும் மிகப்பெரிய கிஃப்ட் என்கிறார் பொறுப்பான கணவராக. நிஷாவுக்கு (nisha) இன்னோரு சர்ப்ரைஸும் வைத்திருப்பதாகவும், ஆனால் அதனை நேரம் வரும் போது சொல்றேன் என்றும் கணேஷ் கூறியுள்ளார். அந்த சர்ப்ரைஸ் என்ன என்பதை நாம் பொறுத்திருந்து காணலாம்.

இதற்கிடையே நிஷாவின் வளைகாப்பு சமீபத்தில் எளிமையாக வீட்டிலேயே நடந்தது. இது குறித்து கணேஷ் வெங்கட்ராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் எங்கள் குடும்பத்திற்கு வர இருக்கும் புதுவரவை வரவேற்க காத்திருக்கிறோம். அதற்காக வாழ்த்துக்களை பெற நிஷா கணேஷுக்கு பாரம்பரிய சீமந்தம் நடத்தப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் என் வாழ்வின் அப்பா ஆகும் தருணத்திற்காக மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன். என்னை நானே வளர்த்துக் கொள்ள வேண்டிய நேரம் இது என பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த அவர்களின் ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் கேக் வெட்டியும், பராம்பரிய முறைப்படியும் வளைகாப்பு நடைபெற்ற க்யூட்டான வீடியோ ஒன்றை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சினிமா துறையினரும், அவர்களது உறவினர்களும் கலந்து கொண்டனர். வளைகாப்பில் நடைபெற்ற முக்கிய தருணங்கள் அந்த வீடியோவில் மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பார்த்த சினிமா துறையினர் மற்றும் கணேஷ்-நிஷா தாம்பதியினர் ரசிகர்கள் விடியோவை ஷேர் செய்து வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

பிக் பாஸ் 3வது சீசன் : இரண்டு போட்டியாளர்களின் பெயர்கள் அறிவிப்பு!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன. பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo