திருமணம் செய்ய வற்புறுத்தல் : ஆபாச புகைப்படங்கள் எடுத்து மிரட்டுவதாக நடிகை நிலானி புகார்!

திருமணம் செய்ய வற்புறுத்தல் : ஆபாச புகைப்படங்கள் எடுத்து மிரட்டுவதாக நடிகை நிலானி புகார்!

சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருந்தவர் நிலானி (Nilani). தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டை கண்டித்து போலீஸ் உடை அணிந்து கடுமையாக விமர்சனம் செய்து தனது பேஸ்புக்கில் நேரலையாக வெளியிட்டார். அதைதொடர்ந்து காவலர் சீருடையை சொச்சைப்படுத்தியதாக நடிகை நிலானி மீது வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த நிலானி கைது செய்யபட்டார்.

Youtube

இதனை தொடர்ந்து உதவி இயக்குநர் காந்தி என்பவரை நடிகை நிலானி காதலித்து வந்தார். திடீரென அவர் தற்கொலை செய்து கொள்ள, நிலானி தான் அவரது தற்கொலைக்கு காரணம் என செய்திகள் வெளி வந்தன. இதனால் மனம் உடைந்த நிலானி தற்கொலைக்கு முயன்று பின்னர் காப்பாற்றப்பட்டார். இந்நிலையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை நிலானி(Nilani) நேற்று பரபரப்பு புகார் மனு ஒன்று அளித்துள்ளார்.

நிஷா கணேஷிற்கு வளைகாப்பு நடத்திய கியூட் வீடியோ வெளியீடு : ரசிகர்கள் வாழ்த்து!


நான் பல்வேறு சிக்கலில் மாட்டிக்கொண்டு தவித்த போது ஏராளமான நபர்கள் என்னை தொடர்பு கொண்டு எனக்கு உதவி செய்வதாக கூறினர். அதில் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு மஞ்சுநாதன் என்பவர் என்னை தொடர்பு கொண்டு எனக்கு உதவுவதாக கூறினார். அவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், நான் இந்தியா வரும் போது உதவுவதாகவும் கூறி என்னிடம் நண்பர் போல் பழகினார்.

Youtube

பின்னர் நேரில் என்னை பார்த்த சில மாதங்களுக்கு பின் திருமணம் செய்ய ஆசைப்படுவதாகவும், எனக்கு திருமணம் ஆகவில்லை என்றும் கூறினார். நானும் எனது பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக சம்மதித்து அவருடன் பழகினேன். பிறகு எனக்கு மஞ்சுநாதன் செல்போன் ஒன்று வாங்கி கொடுத்தார். அதனை தொடர்ந்து ரகசியமாக திருமணம் செய்ய வற்புறுத்தினார். அதற்கு நான் மறுக்கவே எனக்கு வாங்கி கொடுத்த செல்போனை எடுத்து கொண்டு சென்று விட்டார்.


பின்னர் சமாதானம் பேச அவரது தாய் என்னிடம் பேசவைத்தார். அதன் பிறகுதான் மஞ்சுநாதனுக்கு திருமணம் நடந்து குழந்தைகள் இருப்பது தெரிய வரவே நான் அதிர்ச்சியடைந்தேன். இதனால் அவரை விட்டு நான் விலகினேன். மேலும் அவரின் தொல்லையால் நான் வீட்டை காலி செய்து விட்டு எனது போன் நம்பரை மாற்றிவிட்டேன். ஆனால் எப்படியோ எனது செல்போன் நம்பரை கண்டுபிடித்து என்னை தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார்.

முதல் மழை நம்மை நனைத்ததே..! சென்னையின் மழைக் கொண்டாட்டங்கள் !

அதற்கு நான் மறுக்கவே, என் குளியல் அறையில் வீடியோ எடுத்திருப்பதாகவும், அவன் கொடுத்த போனில் ஏராளமான ஆபாச போட்டோக்கள் இருப்பதாகவும் கூறி, அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டி வருகிறார். மேலும் என்னை கொலை செய்து விடுவதாகவும், ஆசிட் வீசுவேன் என்றும், எனது பிள்ளைகளை கடத்துவேன் என்றும் மிரட்டுகிறார்.

Youtube

அதோடு என் நம்பரை பலருக்கு கொடுத்து ஆபாசமாக பேச வைக்கிறார். கடந்த மூன்று மாதங்களாக வெவ்வேறு நம்பர்களில் இருந்து பலர் என்னை தொடர்பு கொண்டு மிரட்டுகின்றனர். மேலும் ஆபாசமாக பேசுவதால், நான் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன். எனவே மஞ்சுநாதனிடம் இருக்கும் என் சம்பந்தமான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை கைப்பற்றி அழிக்க வேண்டும்.


மஞ்சுநாதனால் எனக்கும், என் பிள்ளைகள் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது. எனவே எனக்கும், எனது பிள்ளைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். என்னுடைய புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாச படத்தை சமூக வலைத்தளங்களில் போடுவேன் என மிரட்டுகிறார். ஏற்கனவே என்னுடைய பெயர் கேட்டு போய் உள்ளது. என் நிலையை விளக்கி என்னை காப்பாற்றிக் கொள்ளவே சட்ட உதவியை நாடி வந்துள்ளேன்.

தமிழ் சினிமாவில் இன்று வரை சிங்கிளாக இருக்கும் நடிகைகள்!


மஞ்சுநாதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே நடந்த சம்பாவங்களால் எனக்கு சினிமா வாய்ப்பு வராமல் போய்விட்டது. இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. ஜனநாயக மாதர் சங்கத்தின் துணையுடன் வந்து அவர் புகார் அளித்துள்ளார். நடிகை நிலானி (Nilani) புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo