logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
196 நாடுகளுக்கு பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்த 21 வயது பெண்!

196 நாடுகளுக்கு பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்த 21 வயது பெண்!

லெக்ஸ் அல்ஃபோர்ட், 21 வயது நிரம்பிய பெண், உலகம் முழுவதும் பயணித்து(travel) ஒரு மிகப் பெரிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். யேமன் முதல் ஜோர்டான் வரை, காட்மாண்டூ முதல் பாக்கிஸ்தான் வரை என்று பரந்த நிலபரப்பை பயணித்து, 196 நாடுகளுக்கு பயணம் செய்து கின்னஸ் உலக சாதனை  படைத்த முதல் இளம் பெண் என்ற பாராட்டுகளை பெற்றுள்ளார், பலர் அருகாமையில் இருக்கும் கோவா, போன்ற ஊர்களுக்கு சுற்றலா செல்ல யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், இவர் எளிதாக 196 நாடுகளுக்கு பயணம் செய்து ஒரு உலக சாதனையையே படைத்து விட்டார் என்றால், அது நிச்சயம் ஆச்சரியப் பட வேண்டிய விடயமே.

லெக்ஸ் அல்ஃபோர்ட் தன்னுடைய பயண(travel) அனுபவங்களை பகிர்ந்து கொள்கையில், அவரது பள்ளி பருவத்தில், பெறோர்கள் அவரை பல இடங்களுக்கு பயணம்(travel) செய்ய அழைத்து சென்றதாக கூறுகின்றார். பயணம்(travel) அவரது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டதாக கூறுகின்றார். மேலும் அதனை அவரால் மறக்க முடியாது என்றும், அவரது குழந்தை பருவம் முதல், பயணித்த இடங்களும், அனுபவங்களும் மனதில் நன்கு பதிந்து விட்டதாகவும் கூறுகின்றார்.

மேலும் கூறுகையில், அவரது பெற்றோர்கள், அவரை வருடத்தின் ஒரு முறையாவது பல வாரங்களுக்கும், அல்லது மாதங்களுக்கும் கூட பள்ளியை விட்டு வெளியே கூட்டி செல்வார்கள். இதனால் அவர் தானாகவே பள்ளி பாடங்களை படிக்க வேண்டிய சூழலும் அவருக்கு ஏற்பட்டதாகவும் நினைவு கூறுகின்றார்.

ஆரம்பமே அபிராமியின் காதலில் .. முதல் நாளே திட்டு வாங்கிய தர்ஷன்.. பிக்பாஸ் 3 சுவாரஸ்யங்கள்

ADVERTISEMENT

Instagram

லெக்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு பயணத்தில்(travel) ஏற்பட்ட சில அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றார். குறிப்பாக மியான்மார் அதிகாலை சூரிய உதயம் முதல் யேமன் நாட்டில் நடந்த போருக்கு நடுவில் நடந்த துப்பாக்கி சூட்டை பற்றியும், செர்னோபில் விலக்கு தளம் பற்றியும் பகிர்ந்து கொள்கின்றார்.

தனது பெற்றோர்கள் அவர் இந்த உலகிண் அனைத்து திசைகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணினார்கள், அதன் பிரதிபலிப்பாகவே இன்று அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை என்று கூறுகின்றார். தனக்கு எப்போதுமே வெவ்வேறு இடங்களில் வாழும் மக்கள் எப்படி தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் சௌகரியமாகவும் அமைத்துக் கொள்கின்றார்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதிகம் இருப்பதாக கூறுகின்றார்.

ADVERTISEMENT

 

Instagram

இன்ஸ்டாகிராமில் லெக்ஸ் அவரது சாகசம் நிறைந்த பயணத்தில்(travel) சந்தித்த மக்களுடன் எடுத்துக் கொண்ட புகைப் படங்களை பகிர்ந்து கொள்வார். அப்படி ஒரு பயணத்தில்(travel) அவரை மனதை மிகவும் அதிகமாக பாதித்த ஒன்று தன்சானியா நாட்டில் எடுத்த குழந்தைகள் புகைப் படம். அது அவர் மனதை மிகவும் கவர்ந்த ஒன்றாக இருந்ததை பகிர்ந்து கொள்கின்றார்.

ADVERTISEMENT

லெக்ஸ்சின் இந்த உலக சாதனை படைக்க 24 வயது நிரம்பிய ஜேம்ஸ் அஸ்க்வீத் ஒரு தூண்டுகோலாக இருந்தார் என்று கூறலாம். அவருக்கு முதன் முதலில் 2016ல் கலிபோர்னியா வீட்டில் இருக்கும் போது உலக சாத்தனை படைக்கும் எண்ணம் தோன்றியதாக கூறுகின்றார். அவர், பள்ளிக்கு சென்று படிப்பை தொடரும் என்னத்தை விட்டுவிட்டு முழு நேர முயற்சியாக இந்த சாதனையை படைக்க வேண்டும் என்று செயல் படத் தொடங்கினார். அவர் இந்த பயணத்தை(travel) மேற்கொள்ள பணம் தேவைப் படும் என்பதை உணர்ந்து தனது 12 வயது முதல் சேமிக்கத் தொடங்கி விட்டார். மேலும் அவர் அவ்வப்போது கிடைக்கும் வேலைகளையும் செய்து பணம் சேமித்தார்.

கலக்கலான போட்டியாளர்களால் களை கட்டும் பிக்பாஸ் வீடு !

Instagram

ADVERTISEMENT

தனது பயணத்திற்குத்(travel) தேவையான பணத்தை அவரே சம்பாதித்து, சேமித்துக் கொண்டார். அதன் பின் திட்டமிட்டு அந்த பணத்தில் தனது பயணத்தை(travel) தொடங்கினார். மேலும் அவர் கூறுகையில், ஒரு பயணத்தை(travel) தொடங்கும் முன் நன்கு ஆராய்ந்து, திட்டமிட்டு, நல்ல சலுகைகள் கிடைக்கும் விடுதிகள், விமான பயண(travel) சீட்டு முன் பதிவு செய்வது மற்றும் இதர செலவுகளை சமாளித்ததாக கூறுகின்றார். மேலும் பெற்றோர்களுடன் வீட்டில் இருக்கும் போது தனது மாதாந்திர செலவுகளை முடிந்த வரை எவ்வளவு குறைவாக வைத்துக் கொள்ள முடியுமோ, அவ்வளவு குறைவாக வைத்துக் கொள்ள முயற்சித்ததாகவும் கூறுகின்றார். தனக்கு எந்த ஒரு வாகன கடனும் இல்லை என்றும், அல்லது மாணவர் கடன் இல்லை என்றும் கூறுகின்றார். மேலும் தேவையற்ற பொருட்களை வாங்க செலவு செய்வதில்லை என்றும் கூறுகின்றார்.

இந்த 21 வயது லெக்ஸ் அல்ஃபோர்டின் இன்ஸ்டாகிராம் பதிவுகள் பலருக்கு தங்களது பயணத்தை(travel) திட்டமிடவும், நீண்ட கால சாகச பயணம்(travel) செய்ய வேண்டும் என்ற ஆசைகளை நிறைவேற்றவும் ஒரு தூண்டுகூலாக இருக்கின்றது. 

திருமணம் செய்ய வற்புறுத்தல் : ஆபாச புகைப்படங்கள் எடுத்து மிரட்டுவதாக நடிகை நிலானி புகார்!

ADVERTISEMENT

இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

24 Jun 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT