புடவை கட்டுது எப்படி : பராமரிப்பு மற்றும் தேர்வு செய்வதற்கான பயனுள்ள குறிப்புகள்

புடவை கட்டுது எப்படி :  பராமரிப்பு மற்றும் தேர்வு செய்வதற்கான பயனுள்ள குறிப்புகள்

இந்தியாவில் உள்ள அனைத்து பகுதி பெண்களும் அவர்களது காலச்சாரம் மற்றும் பாரம்பரியம் அடிப்படையில் புடவை(saree) அணிந்து வருகின்றனர். இளம்பெண்கள் மாடர்ன் உடைகளை விரும்பினாலும் திருமணம் போன்ற விஷேச நாட்களில் புடைவை அணிவதையே நடைமுறையாக வைத்துள்ளனர். சில பெண்கள் புடவை கட்டிவிட்டு மேனேஜ் பன்ன சிரமப்பட்டாலும் புடவை மீதான அவர்களது விருப்பம் குறையவில்லை என்பதுதான் உண்மை. இந்த காலத்திற்கு ஏற்றவாறு புடவைகளில் பல்வேறு மாற்றங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது. காட்டன், சில்க் காட்டன், ஒர்க் சாரீஸ், கைத்தறி உள்ளிட்டவைகள் முந்தைய காலத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது, ஷிபான், டிசைனர் பார்ட்டி வியர், நெட்டட் உள்ளிட்ட பல்வேறு வகையான புடைகள் விற்பனைக்கு வருகின்றனர். பெண்கள் அவர்களது விருப்பம் மற்றும் உடலமைப்பை பொறுத்து புடவையை (saree) தேர்வு செய்கின்றனர்.

நிஷா கணேஷிற்கு வளைகாப்பு நடத்திய கியூட் வீடியோ வெளியீடு : ரசிகர்கள் வாழ்த்து!

Youtube

புடவை கட்டுவது எப்படி (How to wear saree)

  • முதலில் புடவையின் முந்தி குறித்த குழப்பம் வராமல் இருக்க புடவையின் மற்றொரு பகுதி முனையில் முடிச்சிட்டுட்டு உள்பாவாடையில் சொருக வேண்டும். புடவையின் நிறத்திற்கு ஏற்றவாறு உள்பாவாடையை தேர்வு செய்ய வேண்டும். கணுக் காலை தொடும் படி உள்பாவாடை அணிய வேண்டியது அவசியமாகும். முக்கால் கால் வரை பாவாடை அணிந்தால் பார்ப்பவர்கள் விமர்ச்சிக்கும் நிலை ஏற்படும் என்பதால் கவனம் தேவை.

Also Read About பட்டு சேலை குச்சு வடிவமைப்பு

Youtube

  • முடிச்சை சொருகிய பின்னர், புடவையை ஒரே ஒரு சுற்று சுற்ற வேண்டும். பின்னர் இடுப்பிற்கான ப்ளீட்ஸை இடது பக்கத்தில் இருந்து எடுக்க வேண்டும். ஒன்றன் பின் ஒன்றாக வைத்து சரி செய்து கொண்டு வயிற்றுப்பகுதியில் சொருக வேண்டும். அப்பகுதி உப்பலாக காணப்பட்டால் சீராக எடுத்து விட வேண்டும்.

  • இதனையடுத்து முந்தி பகுதியில் உள்ள ப்ளீட்ஸை எடுக்க வேண்டும். குண்டாக இருப்பவர்கள் சற்று அகலமான ப்ளீட்சாகவும், ஒல்லியாக இருப்பவர்கள் சிறிதாகவும் எடுத்து கொள்ள வேண்டும். 6 முதல் 8 வரை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப ப்ளீட்ஸை எடுத்து கொள்ளலாம்.

  • முந்தியை பின் செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். அனைத்து ப்ளீட்ஸ்களும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்த பிறகே பின் பண்ண வேண்டும். முந்தியை மூன்று விதங்களாக பின் செய்யலாம். அனைத்து ப்ளீட்ஸ்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தோள்பட்டை பகுதியில் ஒரேதாக பின் பண்ணலாம். அல்லது இரண்டாவது ப்ளீட்ஸை மட்டும் வெளியே எடுத்து விட்டு மற்ற பகுதிகளை ஒன்றாக வைத்து பின் பண்ண வேண்டும்.
Youtube

  • மூன்றாவதாக அனைத்து ப்ளீட்ஸையும் பின் செய்த பிறகு, முதல் ப்ளீட்ஸை மட்டும் எடுத்து முன் பகுதியில் ப்ளவுஸுடன்  சேர்த்து பின் செய்தால் அழகாக இருக்கும். மேலும் இப்படி செய்வதால் ப்ளீட்ஸை ப்ளவுஸுடன் பின் செய்யும் போது கழுத்துப் பகுதி நெருடலாக இருப்பது தவிர்க்கப்படும்.  சிங்கள் ப்ளீட்ஸ் மட்டும் விட நினைப்பவர்கள் முதல் ப்ளீட்ஸை மட்டும் பின் பனி விட்டு, மற்றவற்றை கையில் விழும் இடத்தில் உள் பக்கத்தில் பின் செய்யலாம். புடவையை(saree) கணுக்கால் வரை கட்டமால் சற்று இறக்கி கட்ட வேண்டும் அப்போது தான் நடக்கும் போது புடவை தூக்காமல் இருக்கும்.

தூசி மற்றும் சூரிய ஒளியில் இருந்து தலைமுடியை பாதுகாப்பது எப்படி!

புடவை தேர்வு செய்யும் விதம்( tips to choose saree)

  • பெருமைப்பாலான பெண்கள் கடைக்கு சென்றதும் கண்ணை கவரும் அழகான புடவையை (saree) தேர்வு செய்கின்றனர். ஆனால் துணியின் தரத்தை ஆராய்ந்த பின்னரே புடவையை தேர்வு செய்ய வேண்டும். குறிப்பாக நமது உடல் அமைப்பு மற்றும் நிறத்தை பொறுத்து புடவையை தேர்வு செய்ய வேண்டும்.

Youtube

  • உயரமாக இருப்பவர்கள் அகலமான பார்டர் வைத்த புடவைகளை(saree) தேர்வு செய்ய வேண்டும். வெள்ளையாக இருப்பவர்கள் டார்க் நிற புடவைகளையும், கருப்பாக இருப்பவர்கள் லைட் கலர் புடவைகள் தேர்வு செய்து அணிந்தால் எடுப்பாக இருக்கும்.

புடவை பராமரிப்பு(Saree maintenance)

  • விலை உயர்ந்த புடவைகளில் (saree) பால்ஸ் வைத்து தைத்து பராமரிக்க வேண்டும். இது நடக்கும் போது புடவை தூக்குவதை தடுப்பது மட்டுமின்றி புடவையின் ஓரங்களை பாதுகாக்கும்.  புடவையை அணிந்து விட்டு கழற்றிய உடனே அப்படியே மடித்து வைப்பதை தவிர்க்க வேண்டும் இல்லை என்றால் வியர்வையால் கறைகள் ஏற்படும் இதனை தவிர்க்க சற்று நேரம் காற்றாட போடலாம்
  • பனாரஸ் புடவைகளை மடித்து வைக்காமல் சுற்றி வைக்க வேண்டும் இல்லையென்றால் கிழிந்து போக வாய்ப்புள்ளது இதே போல் ஷிபான் புடவைகளை (saree) ஹாங்கரில் தான் தொங்க விட வேண்டும் தற்போது புடவைகளுக்கென கவர்கள் கடைகளில் கிடைப்பதால் அவற்றை வாங்கி தனித்தனியாக மடித்து வைத்து பராமரிக்க வேண்டும். 
Youtube

உங்கள் புடவையின் தோற்றத்தை மாற்றி அமைக்க 40 சிறந்த சேலை குஞ்சங்கள் !

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo