logo
ADVERTISEMENT
home / ஃபேஷன்
உங்கள் புடவையின் தோற்றத்தை மாற்றி அமைக்க 40 சிறந்த சேலை குஞ்சங்கள் !

உங்கள் புடவையின் தோற்றத்தை மாற்றி அமைக்க 40 சிறந்த சேலை குஞ்சங்கள் !

ஆடை வடிவமைப்புகளில் மிகுதியான வடிவமைப்புகள் உள்ளது என்று அனைவருக்கும் தெரியும். இன்றைக்கு ஒரு புதிய வடிவமைப்பு வந்திருந்தால் நாளைக்கு அது பழையதாகி விடும். இத்தகைய வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் ஆடை அலங்கார துறை , சுடிதார், சல்வார் கமீஸ், சேலை, ஷர்ட் ஏன் நாம் அணியும் காலனிகளிலும் கூட குஞ்சங்களை  வைத்து அழகு பார்த்திருக்கிறோம்!

இந்த சேலைக் குஞ்சங்களின் வடிவமைப்புகளில் ஒருபுறம் பாரம்பரியத்தின் அமைப்புகள் இருந்தாலும் மறுபுறம் இன்றைய நவீன பெண்மணிக்கான  அனைத்து வகைகளும் வந்துவிட்டது. உங்கள் பழைய சேலையை மேம்படுத்த புதியதாக்க அல்லது ஏதேனும் ஒரு புதிய ஆடைக்கு பொருத்தமுள்ள குஞ்சத்தை தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் , நாங்கள் இங்கு உங்களுக்கு தேவையான அணைத்து ஆராய்ச்சியையும் செய்துவிட்டோம். உங்களுக்கு தேவையான நாப்பது  சிறந்த சேலை குஞ்சங்களின் (kuchu/tassel) யோசனைகளை இங்கு அளிக்கிறோம். உங்களுக்கு பிடித்ததை கண்டறிந்து கொள்ளுங்கள்.

40 தனித்துவமிக்க சேலை குஞ்சம் / டஸ்ஸல் ஐடியாக்கள்

கீழ் கூறியிருக்கும் ஒவ்வொன்றும் உங்கள் சேலையை புதியதை போல் மாற்றி உங்கள் தோற்றத்தையே மாற்ற உள்ளது!

ADVERTISEMENT

1. பிங்க் அண்ட் பெர்ல்

Instagram

உங்கள் தோற்றத்தை நேர்த்தியாக காட்ட உதவும். பார்ட்டிகளுக்கு இது மிகவும் ட்ரெண்டியான தோற்றமாகும்.

2. கொஞ்சம் மாத்தி யோசிங்க பாஸ் !

ADVERTISEMENT

Instagram

குஞ்சம் நேராகவேதான் இருக்கவேண்டுமா என்ன?  இதுபோல் சிறிய வட்டங்களை முயற்சித்து பாருங்கள். உங்கள் ஆடையின் தோற்றத்தையே மாற்றிவிடும்.

3. கூந்தலிக்கிற்கு மட்டும்தான் பின்னலிட வேண்டுமா என்ன?

Instagram

ADVERTISEMENT

இந்த அழகிய சிறிய பின்னல்கள் சேலை குஞ்சங்களிலும் அற்புதமாக பொருந்தும்.

4. சிறு பந்து வடிவத்தில்

Instagram

சிறு பந்து வடிவத்தில் குஞ்சங்களை வைத்து அதன் மேல்   குண்டு மணிகள் உங்கள் ஆடையை இன்னும் அழகுடையதாக காட்டும்.

ADVERTISEMENT

5. குதிரைவால் குஞ்சம்

Instagram

இனி அந்த குதிரைவாலை கூந்தலுக்கு மட்டுமல்லாமல் சேலையின் குஞ்சங்களிலும் சேர்த்து கொள்ளலாம்.

6. வடிவத்தில் இது புதியது

ADVERTISEMENT

Instagram

சர்டோசி வேலைப்பாடுகள் கொண்டிருப்பதால், உங்கள் ஆடையை இன்னும் தூக்கலாக காட்டும்.

7. வட்டமான குஞ்சம்

Instagram

ADVERTISEMENT

போலான வட்டங்களில் காதணிகளும் வலயங்களையுமே பார்த்திருந்தீர்கள் என்றால், இனி அதை மாத்துவோம் ! சேலையின் குஞ்சங்களிலும் சேர்த்து கொள்ளுங்கள்.

8. குஞ்சத்தில் த்ரெட் வர்க்

Instagram

குதிரைவால் குஞ்சங்களின் நடுவில் த்ரெட் ஒர்க் செய்திருந்தால் உங்கள் சேலையின் வடிவமைப்பை அசத்தலாக காட்டும்

ADVERTISEMENT

9. க்ரோஷெட் குஞ்சம்

Instagram

மஞ்சள் நிறம் அல்லது ஏதேனும் ஒரு நிறத்தில் இதுபோல் சிறிய வட்டம் போட்ட குஞ்சமும் ட்ரெண்டில் இருக்கிறது

10. மணிகள் கொண்ட குஞ்சம்

ADVERTISEMENT

Instagram

இதுபோல் தங்க நிறத்தில் மணிகளையும் மற்றும் பல வடிவமைப்பு பொருட்களையும் கொண்டு, சாதா சேலையையும் சிறப்பாக மாற்றிவிடலாம் எண்றதுக்கான உதாரணமே இது !

11. பின்னலில் இது புதியது

Instagram

ADVERTISEMENT

பழங்காலத்து ஸ்டைலாக இருந்தாலும், ஆடை வடிவமைப்புகளில் இன்றைய ட்ரெண்டில் பழையதும் புதியதும் மாறிக்கொண்டே இருப்பதால் இதுவும் உங்களுக்கு பொருத்தமுள்ள குஞ்சமாக இருக்கும்.

மேலும் படிக்க – திருமணத்திற்கு சிறந்த பட்டுப் புடவை தேர்வு செய்யும் முறைகள்!

12. வண்ணமயமான குஞ்சங்களுக்கு

Instagram

ADVERTISEMENT

சேலையின் குஞ்சம் ஒரே நிறத்தில் இல்லாமல், கொஞ்சம் வேற ஸ்டைலில், சேலையின் (saree) நிறங்களுடன் சேரும் பல நிறங்கள் கொண்ட குஞ்சம் இருந்தால் பார்க்க புதுமையாக இருக்கும்.

13. ஜர்டோஸியில் குஞ்சம்

Instagram

ஜர்டோஸி வேலைப்பாடுகளுடன் முன்னும் பின்னும் மாங்காய் வடிவமைப்பும், இதற்கு நடுவில் இரண்டு சிறிய பந்துகளும், உங்களை வட இந்திய தோற்றத்திற்கு மாற்றிவிடும்.

ADVERTISEMENT

14. கற்பனை திறனை தட்டி எழுப்புங்கள் !

Instagram

பட்டு சேலைகளில் இதுபோல் வடிவமைப்பு பொருட்களை கொண்டு உங்கள் கற்பனை திறனை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுங்கள். சாதா பட்டு புடவையும் புதியது போல் மாறிவிடும்.

15. ஆரஞ்சு மற்றும் பச்சை நிற கிளாசிக் குஞ்சம்

ADVERTISEMENT

Instagram

ஆரஞ்சு மற்றும் பச்சை நிறத்தில் ஆடைகள் எதுவாக இருந்தாலும் அசத்தலாக இருக்கும். ஆகையால், இதில் உங்கள் சேலைக்கான  குஞ்சங்களையும் முயற்சித்து பாருங்களேன். இதுபோல் சிறிய பந்து வடிவத்தில் இருக்கும் குஞ்சம் மற்றும் அலங்கரிக்கும் பொருட்களை கொண்டு, உங்கள் தேவைக்கேற்ப அமைத்துக்கொள்ளலாம்.

16. இது க்ரோஷட் பிரியர்களுக்கு !

Instagram

ADVERTISEMENT

பலருக்கு க்ரோஷட் வடிவமைப்பில் இருக்கும் ஆடைகள், அணிகலன்கள், காதணிகள், காலணிகள் என்று அனைத்தும் விருப்பமாக இருக்கும். உங்கள் சேலையின் குஞ்சங்களிலும் இதை முயற்சித்து அசத்துங்கள்.

17. ஒரு குச்சி, ஒரு முத்து!

Instagram

இது பிளவுஸில் இருந்தாலும், உங்கள் ஷீர் புடவைகளுக்கு இதுபோல் குச்சி வடிவத்தில் இருக்கும் குஞ்சத்தில் சிறு முத்துக்கள் அழகாக இருக்கும்.

ADVERTISEMENT

18. த்ரெட் வர்க் குஞ்சம்

Instagram

மஞ்சள் மற்றும் நீல நிற பட்டு புடவையில்,  இதுபோல் ஒரு நுணுக்கமான த்ரெட் ஒர்க் உங்கள் தோற்றத்தை இன்னும் அழகாகும். பண்டிகை, திருமணம் என்று அனைத்திற்கும் நீங்கள் இதை அணியலாம்.

மேலும் படிக்க – சிவப்பை மறந்துவிடுங்க ! இந்த மாறுபட்ட திருமண புடவை நிறங்களில் உங்கள் தனித்துவத்தை காண்பிங்கள்

ADVERTISEMENT

19. தென் இந்தியாவும் வட இந்தியாவும் சேர்த்த கலவை

Instagram

தென் இந்திய பாரம்பரிய பட்டு புடவையில் வட இந்திய குஞ்சம் கொண்ட கலவை, ஆடை வடிவமைப்பு நிபந்தனையற்றது என்றத்திற்கான ஒரு அழகிய உதாரணம்.  உங்கள் கற்பனை கலையை பயன்படுத்த, இது மற்றுமொரு வடிவமைப்பு.

20. க்ரோஷட் ஆசையை நிறைவேற்ற

ADVERTISEMENT

Instagram

உங்கள் க்ரோஷட் ஆசையை நிறைவேற்றும் வகையில், மீண்டும் ஒரு அற்புதமான நுணுக்கமான வடிவமைப்புதான் இது. இதுபோல் ஒருமுறை அணிந்து சென்றால் போதும் , இனி உங்கள் சேலையை குஞ்சம் இல்லாமல் அணிய விரும்பமாட்டீர்கள்  !

21. பாரம்பரிய நிறங்களுக்கு தேவையான குஞ்சம்

Instagram

ADVERTISEMENT

சிவப்பு மற்றும் அடர் நீளம் ஒரு அற்புதமான கலவை ஆகும். இதே நிறங்களில், மற்றுமொரு வித்யாசமான த்ரெட் ஒர்க் அமைப்பு, இந்த சேலையை மிகவும் கம்பீரமாக காட்டுகிறது.

22. முத்துக்கள் பேசட்டும்

Instagram

முத்துக்கள் கொண்ட சேலை எப்போதுமே ஒரு கிளாஸி லுக் அளிக்க உள்ளது. அதை இந்த முத்துக்கள் வைத்த குஞ்சங்களில் நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இது வெள்ளை நிறத்திற்கு மட்டுமில்லாமல் அணைத்து பெஸ்டெல் ஷேட்டிற்கும் (வெளிர் நிறங்கள் ) பொருந்தும்.

ADVERTISEMENT

23. இது மாடர்ன் குஞ்சம்

Instagram

இதுவரை நீங்கள் பாரம்பரிய புடவை ரகங்களில் குஞ்சங்களின் அமைப்பை பார்த்திருந்தீர்கள். இது உங்களுக்குள் இருக்கும் நவீன பெண்மணிக்கான குஞ்சம் ! இதன் அழகிய நிறம், குஞ்சத்தின் வடிவம், அதில் இருக்கும் பூக்கள், இவை அனைத்துமே உங்களுக்கு ஒரு திகைப்பூட்டும் தோற்றத்தை அளிக்கும்.

24. புட்டி டிசைனில் குஞ்சம்

ADVERTISEMENT

Instagram

புட்டி வேலைப்பாடுகளில் நீங்கள் துப்பட்டா,  சுடிதார் மற்றும் சேலை பார்த்திருப்பீர்கள். அதற்கு கீழ் ஓரிரு மணிகளை கொண்ட குஞ்சங்களும் அழகிய புது பாணியில் உங்களை காண்பிக்கும்.

25. மயில் வடிவத்தில்

Instagram

ADVERTISEMENT

வெறும் பட்டு நூலாக மட்டுமில்லாமல் இதுபோல் மயில் வடிவத்தில் உள்ள குஞ்சம் உங்கள் தோற்றத்தை ஸ்டைலாக காட்ட உதவும்

26. ட்ரெண்டில் இருங்க

Instagram

இதுபோன்ற ஏதேனும் ஒரு பீஜ் சேலையில் கருப்பு டஸ்ஸல் உங்களை ஒரு ஸ்டைலிஷ் பெண்மணியாக காட்டும்.

ADVERTISEMENT

27. இயற்கையை விரும்புபவர்களுக்கு

Instagram

பூக்கள் இலைகள் என்று இயற்கையுடன் ஒன்றிட  இதுபோல் ஒரு குஞ்சத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இதில் இருக்கும் த்ரெட் ஒர்க் உங்கள் சேலைக்கு  இன்னும் அற்புதமான தோற்றத்தை அளிக்க உள்ளது.

28. உங்கள் ஸ்டைலை மேம்படுத்த

ADVERTISEMENT

Instagram

பட்டு நூல் குஞ்சம் பழையது போல் தோன்றினாள் இது போல் வெறும் சிறு மணிகளைக் கொண்ட பந்து வடிவத்தில் இருக்கும் குஞ்சத்தை நீங்கள் முயற்சித்து பார்க்கலாம். இது ஒரு புதுமையான பாணியை நிச்சயம்  முன்வைக்கும்.

29. மாங்கா வடிவத்தில்

Instagram

ADVERTISEMENT

அனைவருக்கும் பிடித்த ஒரு வடிவம் என்றால் அது இந்த மாங்கா வடிவம்தான் அல்லது இதை ஒரு இலையின் வடிவம் ஆகவும் கருதலாம். இதுபோல் வடிவங்கள் சேலையில் பெட்ச் ஒர்க்கில் பார்த்திருப்பீர்கள். இதிலும் சேலை டஸ்ஸல் வடிவத்தில் ஒரு அற்புதமான தோற்றத்தை கொண்டு வரலாம் என்பதற்கான உதாரணமே இது!

30. இலை வடிவத்தில்

Instagram

புடவைகளில் ஆரஞ்சு என்றாலே ஒரு அற்புதமான நிறம் ஆகும். அதில் வரும் ப்ரின்டிற்கு  ஏற்ற படி இலை வடிவத்தில் இருக்கும் இந்த சேலையின் குஞ்சம் ஒரு எளிமையான சேலையையும் ஆடம்பரமாக காட்ட உதவுகிறது!

ADVERTISEMENT

31. மயில் வடிவத்தில்

Instagram

ஜர்தோசி வேலைகளில் இதுபோல் மயில்களையும் நீங்கள் செய்து உங்கள் சேலையின் குஞ்சமாக வைத்துக் கொள்ளலாம். இது நிச்சயம் உங்களுக்கு ஒரு தனித்துவமிக்க தோற்றத்தை அளிக்க உள்ளது.

32. முத்துக்களை மறக்க முடியாதல்லவா !

ADVERTISEMENT

Instagram

எந்தவிதமான வடிவங்களும் பிடிக்கவில்லை என்றால் இது போல் வெறும் முத்துக்களை கொண்டு உங்கள் சேலையை நீங்கள் அழகுபடுத்திக் கொள்ளலாம். இது உங்களை மிகவும் நேர்த்தியாக காட்ட உதவும்.

33. இது வேற ஸ்டைல்

Instagram

ADVERTISEMENT

சேலையின் டஸ்ஸல்களை  வடிவமைப்பதில் உங்கள் கற்பனைதிறன் எல்லையற்றதாக இருக்கலாம் என்பதற்கான ஒரு சிறந்த உதாரணம் இதுவே! இந்த வட்டங்களும்  அதன் மேல் இருக்கும் சிறிய பூக்களும் மற்றுமொரு தனித்துவம் மிக்க வடிவமாகும்.

34. த்ரெட் மாடல்

Instagram

எந்தவித ஆடம்பரத்தையும் விரும்பாதவர்களாக இருந்தால் இது போல் சாம்பல் நிறத்தில் அல்லது ஏதேனும் ஒரு பெஸ்டெல் (வெளிர் கொண்ட நிறம்) நிறத்தில் சிறிது த்ரெட் ஒர்க் உடன் சேர்ந்தபடி இருக்கும் முத்துக்களை வைத்து ஒரு ட்ரெண்டியான சேலை வடிவமைப்பை கொண்டு வரலாம்.

ADVERTISEMENT

35. சம்கி வர்க் மாடல்

Instagram

இது போல் உங்கள் சேலையின் நிறத்திற்கு ஏற்ற நூலையும் சம்கியையும்  வைத்து மேலும் தேவைப்பட்டால் சிறிது மணிகளையும் வைத்து அழகிய நவீன குஞ்சங்களை  தயார் செய்யலாம்.

36. கொஞ்சம் இங்க ,கொஞ்சம் அங்க

ADVERTISEMENT

Instagram

வரிசையாக வைக்க பிடிக்காவிட்டால், இதுபோல் தேவையான இடத்திற்கு மட்டுமே இரண்டு அல்லது மூன்று பந்து போல் சிறிய குஞ்சங்களை வைத்து, அதை மணியுடன் சேர்க்கலாம். இவை பட்டு புடவைகளுக்கு பொருத்தமானவை.

37. பொவ் டிசைன்

Instagram

ADVERTISEMENT

இதுபோல் மெல்லிய நூல் வெளிப்பாட்டில் அழகிய சிறிய பொவ் டிசைன்களில் குஞ்சம் இருந்தால், ஏதேனும் ஒரு பிளைன் சிம்பிள் சேலையையும் அசத்தலாக காட்டும்!

38. சிறிய மாலைகள்

Instagram

சிறிய மாலையின் வடிவத்தில் , நடுவில் ஒரு பூவுடன் இருக்கும் இந்த குஞ்சம் உங்கள் பட்டு புடைவைக்கு ஒரு புதிய தோற்றத்தை நிச்சயம் அளிக்க உள்ளது.

ADVERTISEMENT

39. மெட்டாலிக் டச்

Instagram

சரி , தங்க நிறத்தில் குஞ்சம் வைத்து அலுப்பாகி விடாது என்றால் , இதுபோல் மெட்டல் அலங்கார பொருட்களை கொண்டு முயற்சிக்கலாம். இது நிச்சயம் ஒரு கிளாஸி லுக்கை அளிக்க உள்ளது.

40. துணியில் குஞ்சம்

ADVERTISEMENT

Instagram

இதுவரை நூல் மற்றும் மணிகளை கொண்டு செய்தீர்கள் என்றால், ஸ்டைலில் இது கொஞ்சம் வித்தியாசமானது. நீங்கள் அணியும் சேலையின் துணியிலேயே ஒரு பூவை போல் மடித்து சிறிய குஞ்சங்களை வடிவமைக்கலாம்.

சேலையின் குஞ்சங்களை செய்வது எப்படி ?

உங்கள் கற்பனை திறனை காட்டும் அளவிற்கு இப்போது நீங்களே உங்கள் சேலையின் குஞ்சங்களை  செய்து கொள்ளலாம். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

ADVERTISEMENT

தேவையான பொருட்கள்

  1. உங்கள் புடவைக்கு மேட்ச்சான பட்டு நூல்
  2. பட்டன் அல்லது முத்துக்கள் அல்லது வடிவமைப்பிற்கு தேவையான மணிகள்
  3. ஜரி  நூல்
  4. ஊசி
  5. கத்தரிக்கோல்
  6. கோந்து

செய்முறை –

  1. முதலில் உங்கள் சேலைக்கு  ஏற்ற நூல்களை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  2.  அதற்கு பிறகு அந்த நூல்களை ஒரே அளவில் வெட்டி 10 நூலை எடுத்துக் கொள்ளுங்கள்.
  3.  பிறகு அந்த நூலை ஒரு ஊசியில் கோர்த்து அதில் உங்களுக்கு தேவையான அலங்காரப் பொருட்களை( முத்து / மணிகள் ) சேர்த்து உங்கள் சேலையின் நுனியில்  முன்னிருந்து பின் வரும்படி தைக்க ஆரம்பிக்கவும்.
  4. முத்துக்கள் அல்லது உங்கள் சேலையின் குஞ்சம் , சேலையின் நுனியில் வரும் வரை உங்கள் நூலை பின்னிருந்து இழுக்கவும்.
  5. உங்கள் ஊசியை பின்னிருந்து   மேலே எடுத்தபடி சிறிதாக சுற்றினால் ஒரு வட்டம் வரும்.  அந்த வட்டத்தினுள் உங்கள் ஊசியை விட்டு எடுத்தால் ஒரு முடிச்சுப் போட்டு அதை முடித்து விடலாம்.
  6.  இது போல் உங்களுக்கு தேவையான அளவிற்கு இரண்டு அல்லது மூன்று முடிச்சி போட்டு அதை இருக்கமாக கட்டி விடலாம்.

டிப்ஸ் – சேலையின் கீழ் பகுதியை மடித்து தேய்க்காமல்  ஜிக் ஜேக் செய்து விட்டால் இதுபோல் குஞ்சங்களை வைக்க உதவும்.

இது போல் நீங்கள் ஊசியை வைத்தும்  போடலாம் அல்லது உங்கள் குஞ்சங்களை வெறுமனே கைகளில் கூந்தலை போல் பின்னிக் கொண்டே போகலாம். 

Instagram

ADVERTISEMENT

சேலை குஞ்சங்களை ஆன்லைனில் வாங்க

எப்படி செய்வது என்று தெரிந்துகொண்டோம். இதை ஆன்லைனில் எங்கு வாங்கலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்

1. நம் பாரம்பரியத்தின் நிறமான மஞ்சளில்

2. என்றும் ட்ரெண்டில் இருக்கும் சிவப்பு குஞ்சம்

3. கரும் பஞ்சையில் ஜொலித்திட

4. பல வனங்கள் கொண்ட அழகிய டஸ்ஸல்

5. என்றும் பாரம்பரியத்தை காண்பிக்கும் தங்க நிற பட்டு நூல்

6. அடர் நீல நிறத்தில் உங்கள் தோற்றத்தை மேம்படுத்த

7. மயில் பச்சை நிற கொஞ்சம் அந்த கிளாஸ்சியான தோற்றத்திற்கு

8. உங்கள் தனித்துவத்தை காண்பிக்க ப்ரூச் டஸ்ஸல்

9. லேஸ் உடன் சேர்ந்த குஞ்சம் , ஒரு அற்புதமான தோற்றத்திற்கு

10. எந்த நிற சேலைக்கும் பொருந்தும் பல வண்ண பாம் பாம் டஸ்ஸல்

பட ஆதாரம்  – இன்ஸ்டாகிராம் 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

19 Jun 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT