logo
ADVERTISEMENT
home / Celebrity Life
நெஞ்சு வலியால் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி

நெஞ்சு வலியால் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி

இயக்குனர் மணிரத்னம் (manirathinam) சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பியுள்ளார்.  மௌன ராகம், தளபதி, நாயகன், கன்னத்தில் முத்தமிட்டால் என தமிழ் சினிமாவில் பல்வேறு சிறந்த திரைப்படங்களை மணிரத்னம் இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம், தன்னுடைய ரோஜா திரைப்படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் திரை மொழியை மாற்றியத்தில் முக்கிய பங்கு இவருக்கு உள்ளது. கவுதம் வாசுதேவ் மேனன், ஏ.ஆர். முருகதாஸ், செல்வராகவன் முதல் கார்த்திக் சுப்புராஜ், கார்த்திக் நரேன் என அனைவரும் இயக்குனர் மணிரத்தனத்தை (manirathinam) ரோல் மாடலாக எடுத்து வருகின்றனர். 35 ஆண்டுகளாக ஒரு இயக்குனர் படங்களை இயக்கி வருகிறார் என்றால், அது மணிரத்னம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸை இயக்கும் பெண் பாஸ் ! யாரும் அறிந்திராத பிக் பாஸ் நிகழச்சியின் மறுபக்கம் !

ADVERTISEMENT

Twitter

கல்கியில் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் வேலை நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனிடையே இந்த படத்தை தயாரிப்பதாக இருந்த லைகா நிறுவனம் திடீரென பின் வாங்கிவிட வேறு ஒரு தயாரிப்பாளரிடம் பேசி வார்த்தை நடைபெற்று வந்தது.  விரைவில் படப்பிடிப்புகள் நடைபெறும் என கூறப்பட்டிருந்த நிலையில் நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

மணிரத்னம் அவரது வீட்டில் இருந்த போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக அவர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

 

ADVERTISEMENT

திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த தகவல் சமூக வலைதளத்தில் பரவியது. அவரது உடல் நலம் குறித்து ரசிகர்கள் நலம் விசாரித்த வண்ணம் இருந்தனர். மேலும் அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் பிராத்தனை செய்தனர். இதற்கிடையே வழக்கமான பரிசோதனை காரணமாக தான் மணிரத்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பல்வேறு வதந்திகள் பரவின. கடந்த சில காலங்களாக தமிழ் சினிமா பல்வேறு இழப்புகளை சந்தித்து வரும் நிலையில் இயக்குனர் மணிரத்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக வெளியான செய்தியால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

ஆனால் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பின்னர் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் இன்று காலை இது குறித்து விளக்கமளித்த அவரது செய்திதொடர்பாளர், மணிரத்னம் அவர்கள் வழக்கமான பரிசோதனைக்காக தான் அப்போலோ மருத்துவமனைக்கு சென்றதாகவும், பரிசோதனை முடிந்து அவர் வீடு திரும்பிவிட்டார் என்றும் கூறியுள்ளார் .

எனது வாக்கை இழந்துவிட்டீர்கள் : விஷாலை கண்டித்து அறிக்கை வெளியிட்டார் வரலட்சுமி!

 

ADVERTISEMENT

அவர் வழக்கம் போல அலுவலகம் சென்று அவரது பணிகளில் ஈடுபடுவார் என்றும் தகவல் அளித்துள்ளார். மேலும் அவரது உறவினர்களும் வழக்கமான பரிசோதனைக்கு அழைத்து சென்றதாகவும், அவரது உடல் நிலை தற்போது நன்றாக உள்ளதால் பயப்படும்படியாக ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் மணிரத்னம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். முன்னதாக 2015ம் ஆண்டு ஓ காதல் கண்மணி படத்தின் ரிலீசுக்கு பிறகு டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆல்யா மானஸா வா இது ! அடையாளமே தெரியலை! ஆல்யாவின் அபூர்வ புகைப்படம் !

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

17 Jun 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT