பிரிந்த கணவர் மூலம் குழந்தை பெற விரும்பும் மனைவி.. அன்பின் ஆழத்தை கண்டு திகைத்த நீதிமன்றம்

பிரிந்த கணவர் மூலம் குழந்தை பெற விரும்பும் மனைவி.. அன்பின் ஆழத்தை கண்டு திகைத்த நீதிமன்றம்

பிரிவதற்காகவே இணைகின்ற ஜோடிகளாய் இன்றைய திருமணங்கள் மாறி கிடக்கின்றன. இந்நிலையில் பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கும் கணவர் மூலமாக தனக்கொரு குழந்தை(Baby) வேண்டும் என்று மனைவி ஒருவர் கேட்டிருப்பது நீதிமன்றத்தையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.                   

இந்த வித்யாசமான கோரிக்கையை வைத்திருப்பவர் மும்பை பகுதியை சேர்ந்த 35 வயது பெண். நன்னெட்டில் உள்ள நீதிமன்றத்தின் துணையை இவர் நாடியிருக்கிறார்.                      

2017ம் ஆண்டு மனைவி தன்னை கொடுமைப்படுத்துவதாக வழக்கு தொடர்ந்த இவரது கணவர் இதன் மூலமாக விவாகரத்து கோரி இருக்கிறார். இதற்கு பதில் மனுவாக தனக்கு இழப்பீடு வேண்டும் என்று மனைவி கோரியிருந்தார்.                        

விவாகரத்து இன்னமும் கிடைக்காத நிலையில் கணவன் மனைவி இருவரும் இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். இவ்விருவருக்கும் முன்பே ஒரு குழந்தை(Baby) இருக்கிறது. பாதுகாப்பின் பொருட்டு குழந்தை(Baby) தாயிடம் தான் வளர்கிறது.                 

பெற்றோர்கள் விவாகரத்து.. தனிமைப்படுத்தப்படும் குழந்தைகள்..     

Youtube

இப்போது இரண்டு ஆண்டுகள் கழித்து பிரிந்து வாழும் கணவன் மூலமாக தனக்கு குழந்தை(Baby) வேண்டும் என்று நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறார். இவர் அளித்திருக்கும் மனுவில் உடல் உறவு மூலமாகவோ அல்லது செயற்கை கருத்தரிப்பு மூலமாகவோ தனது கணவன் மூலம் தனக்கொரு குழந்தை(Baby) வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.                                          

மனுவை விசாரித்த நீதிபதி கணவன் இதற்கான பதிலை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டது. கணவரோ இதில் தனக்கு விருப்பம் இல்லை என்று பதிலுக்கு ஒரு மனு கொடுத்திருக்கிறார்.                 

இது மிகவும் அரிதான வழக்கு என்பதால் சட்டமுறைகள் இதற்காக எதுவும் இல்லை என்றான போதும் மற்ற வெளிநாடுகளில் இந்த மனுவை எப்படி கையாள்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொண்ட நீதிபதி தனது தீர்ப்பை கூறியிருக்கிறார்.

தனக்காக மட்டுமே வாழ்ந்த அம்மா.. மறுமணம் செய்து வைத்த மகன்.. வைரலாகிறது பேரன்பின் பெருங்கதை                      

Youtube

தனது வம்சத்தை பெருக்க நினைக்க வேண்டும் என்பது பெண்ணின் அடிப்படை உரிமை என்று பல தீர்ப்புகள் வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட நீதிபதி இதற்காக விந்தணு தானம் செய்யவோ உடல் உறவு கொள்ளவோ கணவரை கட்டாயப்படுத்த முடியாது என்று கூறியிருக்கிறார்.

ஆனால் பெண்ணின் வேண்டுதலை ஏற்று கொண்ட நீதிமன்றம் செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை(Baby) பெறுவது பற்றிய மருத்துவ ஆலோசனைக்கு கணவன் மனைவி இருவரும் வருகின்ற ஜூலை 14ம் தேதி ஆஜராக வேண்டும் என்று கூறியிருக்கிறது.

கணவன் தாண்டிய காதல்களால் பெற்ற பிள்ளைகளை கொலை செய்து கொண்டிருக்கும் அம்மாக்கள் பற்றிய செய்திகளுக்கு நடுவே கணவன் மீதான காதலை வெளிப்படுத்தும் வாய்ப்பாக தனக்கு அவர் மூலமாக இன்னொரு குழந்தை(Baby) வேண்டும் என்று மனைவி கேட்டிருக்கும் இந்த செய்தி உலகில் மிச்சமிருக்கும் காதலின் வேர்களுக்கு நம்பிக்கை மழையை பொழிந்திருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் !

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.