முகம் என்பது எல்லோருக்கும் முக்கியமான ஒன்று. அதனை பாதுகாப்பாத்தில்தான் அவர்களது தன்னம்பிக்கை மற்றும் தைரியம் ஆகியவை வெளிப்படுகிறது. வெகு சில பெண்களே தங்கள் அழகு பற்றிய கவலைகள் இல்லாமல் அல்லது காட்டிக்கொள்ளாமல் இருப்பார்கள்.
தைரியம் மற்றும் தன்னம்பிக்கை பெண்ணை பலபடிகள் மேலே கொண்டு சேர்க்கும். முகம் களையில்லாமல் இருக்கும்போது நமக்கே கொஞ்சம் அவநம்பிக்கை வருகிறது. நாம் சொல்வதை மற்றவர்கள் கேட்கிறார்களா அல்லது தான் நேசிக்கப்படும்விதத்தில் அவர்களுக்கு சந்தேகம் எழுகிறது.
இதனை மாற்ற களையிழந்து உங்கள் முகத்தை ஜொலிக்க வைக்க சில அழகு குறிப்புகள்.
கொஞ்சம் புதினா உடன் தயிர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளுங்கள். இதனை உங்கள் முகத்தை தூசு போக கழுவியபின்னர் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் உலர விடுங்கள். அதன் பின்னர் முகத்தை கழுவுங்கள். உங்கள் முகத்தை சீர் கெட செய்திருந்த கரும் திட்டுக்கள் எல்லாம் மறைந்து முகம் ஜொலிக்கும்.
நீண்ட சில்கி கூந்தல் உங்கள் கனவா ? முடி உதிர்வால் பாதிப்பா ? கவலைய விடுங்க! இந்த எண்ணெய் இருக்கே !
தக்காளி முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி பொலிவடைய செய்கிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட் கலவை இதனை செய்கிறது. ஒரு தக்காளியை எடுத்து கொள்ளுங்கள் அதனை மிக்சியில் நன்கு கூழாக்கி கொள்ளுங்கள். இதனை ஒரு கிண்ணத்தில் ஊற்றி பிரீஸரில் வையுங்கள். அல்லது ஐஸ் ட்ரே உபயோகிக்கலாம். உறைந்த பின்னர் தக்காளி ஐஸ் கட்டியை எடுத்து முகத்தில் கழுத்தில் தடவி சிறிது நேரம் கழித்து துடைத்து எடுங்கள். உங்கள் முகம் தக்காளியால் டாலடிக்கும்.
ஓட்ஸ் எடுத்து அதனை பொடித்து வைத்து கொள்ளுங்கள். அதில் ஒரே ஒரு ஸ்பூன் ஓட்ஸ் எடுங்கள். வெறும் தண்ணீரில் ஓட்ஸை கலந்து அதனை பேஸ்ட் போல செய்து முகத்தில் தடவுங்கள். அதன் பின்னர் உலர விட்டு மெல்ல தேய்த்து கொடுங்கள். அதன் பின்னர் கழுவி விடுங்கள். இப்படி செய்வதால் இறந்த செல்கள் வெளியேறி முகம் பொலிவாக இருக்கும்.
அந்த’ இடத்தில் இருக்கும் கருமையால் கவலையா ! இரண்டே வாரங்களில் அதனை போக்கும் எளிய தீர்வுகள் !
வெள்ளரிக்காய் ஒன்றை எடுத்து பாதியாக அல்லது தேவையான அளவிற்கு நறுக்குங்கள். அதனை மிக்சியில் கொஞ்சம் பால் சேர்த்து அரைத்து அதனை முகத்தில் தடவி உலர விடுங்கள். புத்துணர்வுடன் முகம் பளிச்சிடும்.
உங்கள் முக அழகினை பலமடங்காக்கும் முட்டை ஓடு.. ஒரே வாரத்தில் வித்தியாசத்தை காணுங்கள் !
மேற்கண்ட முறைகளை செய்து பாருங்கள். களையிழந்து உங்கள் முகம் நிமிடங்களில் முழு நிலவு போல பிரகாசிப்பதை காண்பீர்கள். Beauty tips.
பருக்களை எவ்வாறு தடுப்பது என்பதையும் படிக்கவும்
புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo