மீராவை சமாதானப்படுத்திய அபிராமி : அழுகை, மகிழ்ச்சி, சண்டை என களைகட்டும் பிக் பாஸ் வீடு!

மீராவை சமாதானப்படுத்திய அபிராமி : அழுகை, மகிழ்ச்சி, சண்டை என களைகட்டும் பிக் பாஸ் வீடு!

விஜய் டிவியில் பிக் பாஸ் ஷோ (biggboss3) தமிழில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.  இதுவரை இரண்டு சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ஜூன் 23ம் தேதி மூன்றாவது சீசன்15 போட்டியாளர்களுடன் தொடங்கியது. 16-வது போட்டியாளராக மீரா மிதுன் பிக்பாஸ் (biggboss3) வீட்டுக்குள் சென்றதிலிருந்தே, அவருக்கும் அபிராமிக்கும் சிறு சிறு மோதல் வந்து போகிறது. மீரா மிதுன் வந்தது முதலே அபிராமியும், சாக்ஷியும் வேண்டா வெறுப்பாக நடந்து கொள்கின்றனர். 

வினய் விஜயனை கரம் பிடித்தார் மலையாள நடிகை விஷ்ணு பிரியா : குவியும் வாழ்த்துக்கள்!

அபிராமி - மீரா சமாதானம்

இந்நிலையில்  நேற்று நடந்த எபிசோட்டில் எனக்கு வாழ்க்கையில் பிடிக்காத விஷயமே என்னைப் பார்த்து எல்லாரும் பொறாமைப் படுவது தான். மத்தவங்க என்னப் பத்தி என்ன நினைக்கிறாங்க, என்ன செய்வாங்கன்னு என்னால ஃபீல் பண்ண முடியும் என அழுதுக் கொண்டே ஃபாத்திமா பாபுவிடம் சொல்கிறார் மீரா. நாம் 16 பேர் மட்டும் சேர்ந்தது அல்ல பிக் பாஸ், மக்களை நம்மளை பார்த்து கொண்டிருக்கின்றனர்.இங்கிருப்பவர்கள் உங்களை டார்கெட் செய்வதை நினைத்து வருத்தப்பட தேவையில்லை என ஃபாத்திமா ஆறுதல் கூறி கொண்டிருந்தார். இப்படி விடாமல் மீரா அழுதுக் கொண்டிருப்பதைப் பார்த்த, அபிராமி அவருக்கு தண்ணீர் கொண்டு வந்துத் தருகிறார். 

twitter

அதை மீராவும் வாங்கிக் குடிக்கிறார். இதான் எதார்த்தம் என்கிறார் ஃபாத்திமா. அபிராமி தனக்கு பிக் பாஸ் வருவதற்கு முன்னரே தெரியும் என்றும்,  ஆனால் பிக் பாஸ் ஷோவ்வில் நுழைந்த முதல் நாளே அவர் என்னை பிடிக்காத விதமாக நடந்து கொண்டது ஏன் என்று தெரியவில்லை என்றும் மீரா கூறினார் அதற்கு இதுவரை நடந்த அனைத்தையும் மறந்து விடுங்கள், நான் உங்களை காயபடுத்திருந்தால் மன்னித்து விடுங்கள் என்கிறார் அபிராமி. உங்களுக்கு எதிராக எந்த திட்டமும் எனக்கு இல்லை இது குறித்து இனிமேல் எதுவும் பேசாமாட்டேன் என கூறி இருவரும் சமாதானம் ஆகினர். 

பட்டிமற்றங்களில் பேசுவதையே தற்போதும் விரும்புகிறேன் : மனம் திறந்த அறந்தாங்கி நிஷா!

ரசிக்க வைத்த சேரன்

இதனை தொடர்ந்து அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் குறித்து பேசினர். அதாவது ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் தங்களின் வாழ்க்கையில் சந்தித்த துயரங்களை பகிர்ந்து வருகின்றனர். கடந்த 3 நாட்களாக பிரபலங்கள் பகிர்ந்து வரம் தகவல்கள் ஹவுஸ் மேட்ஸை மட்டுமின்றி பார்வையாளர்களையும் அழ வைத்து வருகின்றனர்.  இந்நிலையில் நேற்றைய எபிசோடில் சேரன், மதுமிதா, தர்ஷன் மற்றும் சரவணன் ஆகியோர் தங்களின் பர்சனல்களை பகிர்ந்துகொண்டனர். 

twitter

சேரன் தனது மூத்த மகள் பிறந்தது குறித்தும், அப்போது தனது சூழ்நிலை குறித்தும் இயக்குநர் ஸ்டைலிலேயே ரசித்து ரசிக்கக்கூடிய வகையில் பகிர்ந்துகொண்டார். அவரை தொடர்ந்து பேசிய தர்ஷன் தான் கடந்து வந்த பாதை, தனது தாய் தந்தை பட்ட கஷ்டம் ஆகியவற்றை பகிர்ந்துகொண்டார். தர்ஷனை தொடர்ந்து நகைச்சுவை நடிகையான மதுமிதா பேசினார். அப்போது தான் ஒரு வயது குழந்தையாக இருக்கும் போதே தனது தந்தை மரணமடைந்துவிட்டதாக கூறிய மதுமிதா, தந்தையை பார்க்க வேண்டும் என்று கூறி அழுதார். தர்ஷன் மற்றும் மதுமிதாவின் பேச்சும் கலங்க வைக்கும் வகையில் இருந்தது. 

கண்ணீரில் திழைத்த சரவணன்

இதைத்தொடர்ந்து பேசினார் நடிகர் சரவணன். பணம் இல்லாமல் மனைவி பணத்தில் பல ஆண்டுகள் வாழ்ந்ததாக கூறினார். குடி உட்பட அனைத்திற்கும் தனது முதல் மனைவிதான் பணம் கொடுப்பார் என்று குறி கண்ணீரும் விட்டார் சரவணன். குழந்தை இல்லாததால் பெற்றோரின் வற்புறுத்தல் காரணமாக இரண்டாவது திருமணம் செய்து  கொண்டதாகவும், அதற்கு தாலி, புடவை என அனைத்தையும் வாங்கிக்கொடுத்தது தனது முதல் மனைவிதான் என்றார் உருக்கமாக. 

twitter

தற்போது ஒரு மகன் இருப்பதாகவும் கூறினார். பணம் தான் வாழ்க்கை, பணம் எவ்வளவு முக்கியம் என்பதை தனது குடும்பத்தினர்தான் தனக்கு கற்றுக்கொடுத்ததாக கூறினார். மேலும் தனக்கு அண்ணன் தம்பி, அம்மா அப்பா என்று எந்த சொந்தமும் இல்லை என்றும்,  தனது சொந்தம் இரண்டு மனைவிகளும் தனது மகனும்தான் என்று கூறினார் சரவணன். அவரது பேச்சின் மூலம் குடும்பத்தினரால் அவர் பெரிதும் ஏமாற்றப்பட்டுள்ளார் என்பது தெளிவானது. மேலும் பணம் தான் எல்லாம் குருவி சேர்ப்பது போல் பணத்தை சேர்த்து வையுங்கள் என்று பிக்பாஸ் பார்க்கும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஒரு காதல்.. சில மோதல்.. கொஞ்சம் கண்ணீர்.. ஸ்க்ரிப்ட்டட் வெர்ஸஷனுக்கு மாறுகிறதா பிக் பாஸ் ?

மிராவிடம் சீறும் வனிதா

இந்நிலையில் இன்று காலை, என்னை ஒரு நாளைக்கு ஒரு தடவை அழ வைக்கவில்லை என்றால் இவங்க யாருக்குமே தூக்கம் வராது என்று மீரா மிதுன் அழுது கொண்டே முகென் ராவ் மற்றும் சாண்டி மாஸ்டரிடம் தெரிவிக்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. மீரா மிதுன் ஒரு புறம் அழ மறுபுறம் வனிதா விஜயகுமாரோ, இவ போதைக்கு நான் ஊறுகாய் கிடையாது என்கிறார் கோபமாக. 

twitter

எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு என்று மீரா கூற, கொடுக்க வேண்டிய இடத்தில் கரெக்டா கொடுப்பேன் நான் என்று வனிதா சீறுகிறார். மீரா மிதுனை கட்டிப்பிடித்து சாக்ஷி ஆறுதலாக உள்ளார். நான் இந்த வீட்டிற்கு வந்ததில் இருந்து எவ்வளவு வேலை செய்தேன் என்று இந்த கேமராவுக்கு (biggboss3) தெரியும் என்கிறார் மீரா. நமக்கு எல்லாம் பேக்கிரவுண்டு இல்லையா, பாப்புலாரிட்டி இல்லையா என்று வனிதா தனியாக குமுறுகிறார். இதையடுத்து மீரா மிதுனோ இப்படி எல்லாம் என்னால் இருக்க முடியாது. அது என் கேரக்டரே இல்லை என்கிறார். 

இந்த புரோமைவை பார்த்த ரசிகர்கள், பிக் பாஸில் (biggboss3) இன்றும் அழுக்காச்சியா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.