உடலில் அதிகமான வியர்வை வெளியேறுவது ஏன்? என்னென்ன மாற்றங்கள் நிகழும்?

உடலில் அதிகமான வியர்வை வெளியேறுவது ஏன்? என்னென்ன மாற்றங்கள் நிகழும்?

வியர்வை (Sweating) வெளிப்படுவது என்பது ஒவ்வொருவருக்கும் நடக்கும் ஒரு சாதரண நிகழ்வு தான். இந்த வியர்வை ஒவ்வொருவருக்கும் அவர்களின் தோலிலுள்ள வியர்வைச் (Sweating) சுரப்பிகள் இயல்பாக சுரந்து, வியர்வை (Sweating) திரவத்தை கசியவைத்து வெளியேற்றுகின்றன. ஒரு சிலரின் தோல் மென்மையாகவும், ஈரப்பதமாகவும் அமைவதற்கும் இதுவே காரணம். கோடை காலங்களில் அல்லது உடலின் வெப்பம் அதிகரிக்கும் நிலையில் வியர்வைச் (Sweating) சுரப்பிகளால் சுரக்கப்படும் வியர்வை (Sweating) காரணமாகவே உடல் இதமாகப் பாதுகாக்கப்படுகிறது.


தோலிலிருந்து வியர்வை (Sweating) ஆவியாகி மறையும் போது உடலில் குளிர்ச்சியை உணர முடிகிறது. இது ஒரு இயல்பான தினசரி செயல்பாடு தான்... ஆனால் ஒரு சிலருக்கு உடலில் அதிகப்படியான வியர்வை (Sweating) வெளியேறும். இதற்கான காரணங்கள் என்ன? இவ்வாறு அதிகமான வியர்வை வெளியேறுவது ஆபத்தான ஒன்றா? அதிகமான வியர்வை (Sweating) வெளியேறுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை பார்ப்போம்.


நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
வியர்வை (Sweating) அதிகம் வெளியேறினால், உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது ஊக்குவிக்கப்படும். அதனால் தான் காய்ச்சலின் போது வியர்த்தால், காய்ச்சலானது குணமாகிவிடுகிறது.


இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த சாதணை பெண்கள்!


எடை குறையும்
உடற் பயிற்சியின் போது வெளிவரும் வியர்வையானது இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. அதிலும் வாக்கிங் அல்லது வேறு ஏதேனும் உடற்பயிற்சி செய்தால், இதயமானது வேகமாக இரத்தத்தை அழுத்துவதால், உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இருந்து, உடலின் மெட்டபாலிசமானது அதிகரித்து, உடல் எடை குறைய வழிவகுக்கிறது.


பொலிவான சருமம்
உங்களுக்கு பொலிவான சருமம் வேண்டுமா? அப்படியானால் நன்கு வியர்க்கவிடுங்கள் (Sweating). ஏனெனில் வியர்க்கும் (Sweating) போது சருமத்துளைகளானது விரிவடைந்து, அதன் வழியே வியர்வை வெளியேறுவதால், சருமத்துளைகளில் தங்கியுள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறி, சருமத்தை பொலிவாகவும், மென்மையாகவும் மாற்றுகிறது.


மனநிலையை ஊக்குவிக்கும்
ஆய்வு ஒன்றில் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது நன்கு வியர்வையானது வெளியேறினால், மன அழுத்தம், சோர்வு போன்றவை நீங்கி, மனநிலையானது புத்துணர்ச்சி அடைவதாக சொல்கிறது. இதற்கு காரணம் உடற்பயிற்சியின் போது மூளையில் உள்ள கெமிக்கல்களானது ஊக்குவிக்கப்பட்டு, ஒருவரின் மனதை சந்தோஷமாகவும், ரிலாக்ஸாகவும் வைக்க உதவுகிறது.


sweat is good003


பளபளப்பான அழகான உதட்டை பெற! லிப்ஸ்டிக் போடுவதற்கான எளிய முறைகள்!


சிறுநீரக கற்களை கரைக்கும்
ஆய்வு ஒன்றில் உடற் பயிற்சியை தினமும் தொடர்ந்து செய்து வந்தால், சிறுநீரகமானது சீராக செயல்பட்டு, சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பு குறையும் என்று நிரூபிக்கப் பட்டுள்ளது. இதற்கு உடற் பயிற்சி செய்து முடித்த பின்னர், அதிக அளவில் தண்ணீர் மற்றும் இதர பானங்களான இளநீரை குடிக்க தோன்றுவதே காரணமாகும். இதனால் தான் சிறுநீரகத்தில் நச்சுக்கள் தங்காமல் வெளியேறி விடுகிறதாம்.


எனவே அதிகமாக நமக்கு மட்டும் வியர்கிறதே (Sweating) என்று தேவையில்லாமல் பயம் கொள்ள வேண்டாம். போதிய உடற் பயிற்சியோ அல்லது வேலையோ செய்தால் கட்டாயம் வியர்க்கும் (Sweating). எந்த உடல் உழைப்பும் இன்றி, மன அழுத்தமும் இன்றி ரிலாக்சாக இருக்கும் போது மட்டும் வியர்த்தால் (Sweating) உடனே மருத்துவரை அனுகலாம். மற்ற படி தேவை இல்லாத பயம் கொள்ள வேண்டாம். நிம்மதியான உடற் பயிற்சி, சுகமான வாழ்வு, ரிலாக்ஸ்சான வாக்கிங் போதுமான வியர்வை (Sweating) என வாழ்க்கையை சுகமாக வாழ்ந்தாலே வாழ் நாள் முழுதும் பேரின்பம் தான்.


வாய் துர்நாற்றத்தை போக்கும் எளிய வீட்டு வைத்திய முறைகள்


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo