வாய் துர்நாற்றத்தை போக்கும் எளிய வீட்டு வைத்திய முறைகள்

வாய் துர்நாற்றத்தை போக்கும் எளிய வீட்டு வைத்திய முறைகள்

வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் நிச்சயம் இந்த வாய்(mouth) துர்நாற்றம் ஏற்படும். அதாவது அல்சர் நோய் உள்ளவர்கள் வாய்(mouth) துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள். மற்ற காரணங்களாவன புகையிலை, வெற்றிலை, பாக்கு போடுதல் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஆகியவற்றாலும் ஏற்படும்.
தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பியில் பிரச்சனை (Infection) ஏற்பட்டால் வாய்(mouth) துர்நாற்றம் ஏற்படும்.


உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் ஏற்படும் வியாதிகள் ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில் ஒரு சிலருக்கு உணவுப் பையிலிருந்து அமிலமானது மேல்நோக்கி வந்து போகும். இதனாலும் வாய்(mouth) துர்நாற்றம் ஏற்படும். இதை ஆங்கிலத்தில் Re-flux என்பார்கள்.
அஜீரணக் கோளாறுகளால் வாய்(mouth) துர்நாற்றம் ஏற்படும். உணவுக்குழாயில் சென்ற உணவானது நான்கு மணி நேரத்திற்குள் ஜீரணமாகிவிடும். நான்கு மணி நேரத்திற்கு மேலும் ஜீரணமாகாமல் உணவு மண்டலத்திலேயே உணவு தங்கும்போது வயிற்றில் ஏற்படும் புளித்த நாற்றம் வாய் வழியாக வந்து சேரும்.


சோம்பு :


வாய்(mouth) துர்நாற்றத்தை போக்கி வாயில் நறுமணம் வீச சோம்பு விதைகள் பெரிய உதவியை செய்கின்றன. சோம்பில் இருக்கும் கிருமியை எதிர்த்து போராடும் தன்மை, வாயில் உள்ள கிருமிகளை அழிக்கிறது. ஒவ்வொரு முறையும் உணவு சாப்பிட்டவுடன் சிறிதளவு சோம்பை வாயில் போட்டு மெல்லுவதால் வாய் துர்நாற்றம் கட்டுப்படும். அல்லது சோம்பு டீயும் பருகலாம். அதனால் தான் ஹோட்டல்களில் சாப்பிட்டு முடித்தவுடன் சோம்பு கொடுக்கிறார்கள்.


natural-home-remedies-for-bad-breath-from-mouth003


வெந்தயம் :


வாயில் உள்ள துர்நாற்றத்தைப் போக்க வெந்தயம் மிகவும் நல்லது. வெந்தயம் சேர்த்து தயார் செய்த டீயை பருகுவதால் வாய்(mouth) துர்நாற்றம் உடனடியாக கட்டுப்படும். தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் 1 ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து , பின் வடிகட்டி பருகவும். ஒரு நாளைக்கு ஒரு முறை இதனை செய்யலாம்.


natural-home-remedies-for-bad-breath-from-mouth004


கைத்தெறி புடைவையை பராமரிப்பது எப்படி?


கிராம்பு :


வாய்(mouth) துர்நாற்றத்தைப் போக்கி நறுமணம் பெற கிராம்பை பயன்படுத்தலாம். கிராம்பில் இருக்கும் அன்டி பாக்டீரியல் தன்மை, வாய்(mouth) துர்நாற்றத்தை முற்றிலும் விரட்டுகிறது. உங்கள் தினசரி உணவிற்கு பிறகு 2 துண்டு கிராம்பு உட்கொள்வதால் வாயில் வீசும் துர்நாற்றம் முற்றிலும் ஒழியும். கிராம்பு போட்டு தயார் செய்யப்பட்ட டீயும் நல்ல பலனை தரும். அதோடு பல் மற்றும் ஈறுகளில் உண்டாகும் வலியும் போய்விடும்.


எலுமிச்சை சாறு :


எலுமிச்சை பழத்தில் இருக்கும் அமிலத்தன்மை, வாயில் கிருமிகள் வளர்வதை அழிக்கிறது. ஒரு டம்ளர் நீரில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறை கலந்து, அந்த நீரால் வாயை கொப்பளித்து வரலாம். இதனால் வாய்(mouth) துர்நாற்றம் கட்டுப்படும். தினமும் இரவு தூங்கும்முன்னும் காலையில் பல் துலக்கிய பின்னும் இதை செய்யலாம்.


ஆப்பிள் சிடர் வினிகர் :


ஆப்பிள் சிடர் வினிகர் வாய்(mouth) துர்நாற்றத்தை போக்க மிகச் சிறந்த வீட்டு வைத்திய பொருளாகும். இதில் இருக்கும் சமச்சீரான pH அளவால் வாய்(mouth) துர்நாற்றத்தை ஏற்படுத்தும் கிருமிகள் அழிக்கப்படுகின்றன. தினமும் காலையில் ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிதளவு ஆப்பிள் சிடர் வினிகர் சேர்த்து கலந்து கொப்பளித்து வருவதால் விரைவில் வாய் துர்நாற்றம் மறையும்.


natural-home-remedies-for-bad-breath-from-mouth005


பட்டை :


லவங்க பட்டையில் சின்னமிக் அல்டிஹைடு இருப்பதால் , வாய்(mouth) துர்நாற்றம் அழிக்கப்படுகிறது. இது வாயில் இருக்கும் கிருமிகளின் எண்ணிக்கையை குறைக்கிறது. ஒரு கிண்ணத்தில் நீரை விட்டு நன்றாக கொதித்ததும் சிறிதளவு லவங்க பட்டை தூளை சேர்க்கவும். இதனுடன் சிறிது பிரிஞ்சி இலை மற்றும் ஏலக்காயைச் சேர்க்கவும். நன்றாக கொதித்தவுடன் அந்த நீரை வடிகட்டி அடிக்கடி வாயை கொப்பளிக்கவும்.


natural-home-remedies-for-bad-breath-from-mouth006


கோடிகளில் புரளும் நயன்தாராவின் தர்பார் சம்பளம் எவ்வளவு தெரியுமா?


டீ ட்ரீ எண்ணெய் :


டீ ட்ரீ எண்ணெயில் இருக்கும் ஆன்டிசெப்டிக் தன்மையால் இது ஒரு சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. ஒரு கிளாஸ் நீரில் சில துளிகள் டீ ட்ரீ எண்ணெய், புதினா எண்ணெய் மற்றும் எலுமிச்சை எண்ணெய் சேர்த்து கலந்து . அதனை பயன்படுத்தி அடிக்கடி வாய்(mouth) கொப்பளிக்கலாம்.


சூயிங் கம் :


சர்க்கரை அல்லது இனிப்பு சேர்க்கப்படாத சுயிங்கம்மை மெல்லுவதால் வாய்(mouth) துர்நாற்றம் கட்டுப்படும். இதனால் ஆரோக்கியமான உமிழ்நீர் வாயில் சுரக்கும். குறிப்பாக புதினா சேர்த்து தயாரிக்கப்பட்ட சுயிங் கம்மை மெல்லலாம்.


கொத்துமல்லி :


வாய் துர்நாற்றத்தைப் போக்க ஒரு சிறந்த மற்றும் எளிய வீட்டு வைத்தியம் கொத்தமல்லி . கொத்தமல்லி இலையில் இருக்கும் பச்சையம் (க்ளோரோபில்கள்) மிகச் சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு வாய்(mouth) துர்நாற்றத்தை அகற்றுகிறது. கொத்தமல்லி இலைகளை சிறிதளவு வாயில் போட்டு மெல்லலாம்.


natural-home-remedies-for-bad-breath-from-mouth007


கழுத்தில் ஏற்படும் கருமையை போக்கும் அழகு குறிப்புகள்!


உப்பு நீர் :


வாயின் pH அளவை பராமரித்து சுத்தம் செய்ய உப்ப நீரைப் பயன்படுத்தலாம். இது ஒரு சிறந்த கிருமினாசினியும் கூட. வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து ஒவ்வொரு நாளும் காலையில் கொப்பளிக்கலாம்.


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo