வால்நட் (அக்ரூட்) – நற்பலன்கள் மற்றும் அதிகம் உண்பதால் ஏற்படும் உபாதைகள் (Benefits Of Walnut In Tamil)

வால்நட் (அக்ரூட்) – நற்பலன்கள் மற்றும் அதிகம் உண்பதால் ஏற்படும் உபாதைகள் (Benefits Of Walnut In Tamil)

முந்திரி, பிஸ்தா, மற்றும் பாதம், வகையில் வால்நட் அதாவது வாதுமைக்கொட்டையும் சேரும். இந்த வால்நட் பல மருத்துவ குணங்கள் கொண்டுள்ளது. இது வால்நட் மரத்தில் இருந்து கிடைக்கும் கொட்டை. இந்த கொட்டையால் கிடைக்கும் நற்பலன்கள் ஏராளம். கடந்த சில ஆண்டுகளாக மக்களிடையே இந்த கொட்டையை பற்றின விழிப்புணர்வு அதிகரிக்கத் தொடங்கியதும் இதன் உறபத்தியும், மற்றும் விர்ப்பனையும் அதிகரிக்கத் தொடங்கி விட்டது.


வால்நட் எதற்குப் பயன் படுகிறது


வால்நட் நன்மைகள்


பக்க விளைவுகள்


வால்நட்டில் நிறைந்துள்ள சத்துக்கள் (Nutritional Value Of Walnut)


2


 • வால்நட்டில் கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளது. இதனால் உடலில் இருக்கும் கெட்டக் கொழுப்பை இது குறைக்கவும், மற்றும் வெளியேற்றவும் உதவுகிறது

 • இதில் ஏராளமான விட்டமின்கள், மற்றும் மினரல் சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக வைட்டமின் A, B, C, D, E, மற்றும் K நிறைந்துள்ளது

 • மேலும் இதில் சோடியம், துத்தநாகம், பல்நிறைவுற்ற கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் சர்க்கரை நிறைந்துள்ளது.

 • 25 கிராம் வால்நட்டில் 123 கலோரிகள் உள்ளது

 • வால்நட்டில் ஒமேக 3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது

 • மேலும் செம்பு, டிரிப்டோபான், மற்றும் மாங்கனீஸ் சத்துக்களும் நிறைந்திருக்கிறது


Also Read: நன்மைகள் மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கு பக்க விளைவுகள் (Sweet PotatoBenefits & Side Effects)


வால்நட் எதற்குப் பயன் படுகிறது? (Uses Of Walnut)


வால்நட் பற்றி நீங்கள் மேலும் தெரிந்து கொள்வதற்கு முன், இது எதற்க்காக பெரிதும் பயன் படுத்தப் படுகிறது என்ற தகவலை நீங்கள் தெரிந்து கொள்வதால் இதன் நற்குணங்கள் பற்றி நீங்கள் நன்கு புரிந்து கொள்ள உதவும்.  


Also Read ஜாதிக்காயினால் கிடைக்கும் நற்பலன்கள் (Benefits Of Nutmeg)


உங்களுக்காக இந்த வால்நட்டைப் பற்றி சில சுவாரசியமான தகவல்கள்:


 • கற்கால மனிதர்கள் முதல் இந்த வால்நட்டை பயன் படுத்தி வருகிறார்கள்

 • இது பெரும்பாலும் அரசு குடும்பத்தினர்களால் பெரிதும் பயன் படுத்தப் பட்டது

 • வால்நட் எண்ணை குடலில் ஏற்படும் உபாதைகளை சரி செய்ய, வயிற்றுப்போக்கு மற்றும் மூல நோய் ஆகியவற்றைக் குணப்படுத்த பயன் படுத்தப் பட்டு வருகிறது

 • இது மேலும் கிருமிகளை அளிக்க,  உறைபனியால் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய, தசைப்பிடிப்பு போன்ற பிரச்சனைகளை தீர்க்க பயன் படுத்தப் படுகிறது

 • இது ஒரு நல்ல கிருமிநாசினியாகப் பயன் படுத்தப் படுகிறது

 • கொப்புளங்கள், புண், நமைச்சல், தலைப் பொடுகு போன்றவற்றையும் குணப்படுத்தப் பயன் படுத்தப்படுகிறதுவால்நட்டின் பொதுவான பயன்பாடுகள்:


மேலே குறிப்பிட்டது போக இந்த வால்நட் மேலும் பல வகையில் பொதுவாக மக்களால் பயன் படுத்தப் படுகிறது. இங்கே உங்களுக்காக அது குரித்து சில தகவல்கள்.


 • வால்நட் உணவில் சேர்க்கப்படுவதால் இதில் நிறைந்துள்ள பல்நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள், மற்றும் ஹைப்பர்லிபிடிமிக் உள்ள லிப்பிட் ஜீரணத்தை சீற்படுத்துகிறது.

 • அல்சைமர் நோயை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது


Also Read : கெமோமில் தேயிலை நன்மைகள்


வால்நட் / அக்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் (Benefits of Walnut In Tamil)


வால்நட்டில் பல நற்குணங்கள் உள்ளது. இதனை சரியான விதத்திலும், சரியான அளவிலும் நீங்கள் உண்பதால், நல்ல பலன்களைப் பெறலாம். வால்நட்டை பற்றி நீங்கள் மேலும் தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படிக்கவும்.


1. இருதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் (Improve Heart Health)


3


உடலில் நல்ல கொழுப்பு அமிலங்களை உற்பத்தி செய்வதால் வால்நட் உங்கள் இருதயத்தின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்த உதவுகிறது. இதில் ஒமேக 3 மற்றும் ஒலீயிக் அமிலம் நிறைந்துள்ளதால் உடலுக்குத் தேவையான அராசிடோனிக் அமிலங்கள், ALA, மற்றும் லினீலியிக் அமிலம் பெற உதவுகிறது. மொத்தத்தில் இருதய நோய் ஏற்படும் வாய்ப்புகளை இது குறைகிறது அல்லது தடுக்கிறது.


Also Read Benefits Of Nutmeg In Tamil


2. உடலில் உள்ள எலும்புகளை பலமாக்குகிறது (Strengthens Your Bones)


உடலில் எலும்புகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. எலும்புகள், திடமாகவும் பலமாகவும் இருந்தால் மட்டுமே, ஒரு மனிதனால் ஆரோக்கியமாக செயல் பட முடியும்.  வால்நட் நாம் உண்ணும் உணவில் உள்ள கால்சியத்தை உடலில் சார உதவுகிறது, இதனால் உங்கள் எலும்புகள் பலமாகுகிறது. மேலும் இது சிறுநீரகத்தில் கல் ஏற்படாமல் தடுக்கிரது.


3. வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது (Improves Metabolism)


துத்தநாகம், தாமிரம், பொட்டாசியம், மாங்கனீஸ், கால்சியம், மெக்னீசியம், செலினியம் மற்றும் இரும்பு போன்ற தாது பொருட்கள் இதில் நிறைந்துள்ளது. இதனால் வளர்சிதை மாற்றங்கள் சீராக உடலில் ஏற்படுகிறது. மேலும் விந்தணு உற்பத்தி, நியூக்ளிக் அமிலம் தொகுப்பு, செரிமானம் மற்றும், உடலின் மொத்த வளர்ச்சிக்கு இது உதவியாக உள்ளது. உங்கள் உணவில் தினமும் வால்நட் சேர்த்துக் கொள்வதால் உங்கள் உடலுக்குத் தேவையான சத்துக்கள் சீராக கிடைக்கிறது.


4. நீரழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது (Control Diabetes)


4


நீரழிவு நோய் இருப்பவர்களுக்கு பொதுவாக உடல் எடை அதிகரிக்கும். எனினும் வால்நட்டில் பல்நிறைவுற்ற கொழுப்பு உள்ளதால், கெட்ட கொழுப்பு உடலில் தேங்குவதை இது தவிர்ப்பதோடு அது உடலை விட்டு வெளியேறவும் உதவுகிறது. இதனால் உங்கள் உடல் எடை சீரான அளவிற்கு வருகிறது. 


5. புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது (Prevent Cancer)


சில குறிப்பிட்ட சத்து பொருட்கள் வால்நட்டில் இருப்பதால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை இது பெரிதும் தவிர்க்கிறது. பினாலிக் கலவைகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் இந்த வேலையை சிறப்பாக செய்கிறது. உடம்பில் உள்ள ப்ரீ ராடிகல்ஸ்சை வெளியேற்றி புற்றுநோய் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.


6. நோய்த்தொற்றை தவிர்க்கிறது (Prevent From Infection)


உங்கள் உணவில் வால்நட் சேர்த்துக் கொள்வதால் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. நோய்த்தொற்றை நீங்கள் ஆரம்ப காலத்திலேயே கவனிக்காமல் விட்டுவிட்டால் அது மரணம் உண்டாகும் வகையில் விளைவுகளை ஏற்படுத்தி விடும். வால்நட்டில் உள்ள பாலிபினாலிக் கலவைகள் நோய்த்தொற்றை குறைப்பதோடு நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.


7. சரும ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது (Improve Skin Health)


Untitled design %289%29


வால்நட்டில் வைட்டமின் E சத்து அதிகம் உள்ளது. லிப்பிட் கரையக்கூடிய ஆக்ஸிஜனேற்றம் அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள ப்ரீ ராடிகல்ஸ்களை வெளியேற்றி உங்கள் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. மேலும் வால்நட்டில் பி -6, ஃபோலேட், ரிபோப்லாவின், நியாசின் மற்றும் பாந்தோத்தேனிக் அமிலம் போன்ற சத்து பொருட்கள் நிறைந்துள்ளதால் உங்கள் சருமம் மேலும் ஆரோக்கியமாகிறது.


மேலும் படிக்க -மீண்டும் ஒரு இளமையான தோற்றத்தை பெற இந்த உணவை தினமும் சாப்பிட்டால் போதும்


8. நல்ல தூக்கம் பெற உதவுகிறது (Helps To Get Good Sleep)


ஒரு மனிதனுக்கு சராசரியாக 7 அல்லது 8 மணி நேர உறக்கம் ஒரு நாளைக்குத் தேவைப் படுகிறது. அவ்வாறு போதுமானத் தூக்கம் கிடைக்கவில்லை என்றால் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடும். ஓய்வு உடம்பிற்க்கு மிக முக்கியம். இது உங்கள் மனதை அமைதிப் படுத்தவும், எண்ணங்களைத் தெளிவு படுத்தவும் உதவுகிறது. ஆனால், இன்றைய விரைவாக நகரும் வாழ்க்கை முறையில் பெரும்பாலானோர் சரியான தூக்கம் இல்லாமல் அவதிப் படுகிறார்கள். குறிப்பாக இதனால் மன அழுத்தம் மற்றும் பதற்றம் அதிகரிக்கிறது. எனினும் வால்நட்டை உண்பதால் உங்களுக்கு நாளடைவில் நல்ல தூக்கம் கிடைக்கும். இதில் உள்ள மெலடோனின் உங்களுக்குத் தூக்கத்தை ஏற்படுத்துகிறது.


9. உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது (Helps To Maintain Body Weight)


வால்நட் உண்பதால் உங்கள் உடல் எடை அதிகரிக்காது. அதனால் இதனை நீங்கள் தினமும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் உங்களது தற்போதைய அதிகரித்திருக்கும் உடல் எடையை சீர்படுத்தவும் இது உதவுகிறது.


10. தலை முடி நன்கு வளர உதவும் (Helps To Prevent Hair Loss)


5


வால்நட் உங்கள் தலை முடிக்கு போஷாக்களித்து, ஈரப்பதத்தோடு வைத்துக்கொள்ள உதவுகிறது. இதில் உள்ள சத்துக்கள் முடி உதிர்வை தடுக்க உதவுகிறது. இதனைத் தொடர்ந்து பயன் படுத்தி வரும்போது அடர்த்தியான மற்றும் ஆரோக்கியமான கூந்தல் உங்களுக்குக் கிடைக்கும்.


வால்நட் தொடர்ந்து உண்பதால் ஏற்படும் உபாதைகள் (Side Effects Of Walnut)


வால்நட்டில் உள்ள பல நற்குணங்களை பார்த்தோம். எனினும் எந்த பொருளாக இருந்தாலும் அதில் 1௦௦% நன்மை மட்டுமே நிறைந்துள்ளது என்றுக் கூற முடியாது. அந்த வகையில் வால்நட்டிலும் பல உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வால்நட்டால் ஏற்படும் சில உபாதைகள்:


1. வயிற்று வலி: வால்நட்டில் நார் சத்து அதிகம் உள்ளது நல்ல விடயமே. ஆனால் நீங்கள் தினமும் எடுத்துக் கொள்ளும் உணவில் அதிகம் நார் சத்து இருந்து அதனோடு நீங்கள் மேலும் வால்நட் சேர்த்துக் கொண்டால் அது எதிர்வினையை ஏற்படுத்தக் கூடும். குறைந்த காலகட்டத்தில் அதிக நார் சத்து எடுத்துக்கொள்ளும் போது உங்கள் ஜீரண சக்த்தியை அது பாதிக்கக்கூடும். இதனால் வயிற்ருப்போக்கு மற்றும் குடல் வீக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் உங்களுக்கு வயிற்று வலி ஏற்படக்கூடும்.


2. உடல் எடை அதிகரிப்பு: ஒரு குறிப்பிட்ட அளவு வரை வால்நட் (walnut) சாப்பிடுவதால் எந்த உபாதைகளும் உங்களுக்கு ஏற்படப்போவதில்லை. எனினும், அதே அளவிற்கு அதிகமாக உண்ணும்போது உங்கள் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால் நீங்கள் அளவாகவே வால்நட் எடுத்துக்கொள்வது நல்லது.


Untitled design %2810%29


3. ஒவ்வாமை: இது புதிதாக இருந்தாலும், இதற்க்கான சான்றும் உள்ளது. வால்நட் அளவிற்கு அதிகமாக உண்டால் ஒரு சிலருக்கு ஒவ்வாமை ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. தடிப்பு, நமைச்சல் மற்றும் சிவந்த சருமம் போன்ற அறிகுறிகளை வைத்து நீங்கள் வால்நட் ஏற்படுத்தும் உபாதைகளை புரிந்து கொள்ளலாம். அவ்வாறு ஏற்பட்டால், வால்நட் சாப்பிடுவதை தவிர்த்து விட்டு, உடனடியாக மருத்துவ உதவி எடுத்துக் கொள்ளுங்கள். இது மேலும் மிகைப்படுத்தாமல் உங்களை பாதுகாக்கும்.


இது மட்டுமல்லாமல் ஒரு சிலருக்கு சுவாச பிரச்சனைகள் மற்றும் உணவை சரியாக விழுங்க முடியாத நிலை என்று சில உபாதைகளும் ஏற்படக் கூடும். நீங்கள் தொடர்ந்து அதிக அளவு வால்நட் சாப்பிடுவதால் மார்பு வலி, இரத்த கொதிப்பின் அளவில் மாற்றம் மற்றும் பலவீனமான நாடித் துடிப்பு போன்ற பிரச்சனைகளும் ஒரு சிலருக்கு ஏற்படக் கூடும்.


வால்நட் சாப்பிடும் முறை (Best Way To Eat Walnut)


6


வால்நட் பல நற்பலன்களை கொண்டிருந்தாலும் அதன் அளவு அதிகரிக்கும் போது சில உபாதைகள் ஏற்படுகிறது. எனினும் இதனை நீங்கள் சரியான அளவு உங்கள் உணவில் தினமும் சேர்த்துக் கொள்ளும் போது இதன் நன்மைகள் எண்ணிலடங்காதவையாக இருக்கும்.மருத்துவ குறிப்புப்படி ஒரு நாளைக்கு ஒருவர் 2௦ முதல் 84 கிராம் வரை சாப்பிடலாம்.


மேலும் படிக்க - தினமும் டிரை பூருட்ஸ் மற்றும் நட்ஸ் எவ்வளவு சாப்பிட வேண்டும்


நீங்கள் மேலும் இந்த வால்நட்டை பற்றி பல தகவல்களை சேகரித்துத் தெரிந்து கொண்டு இதனை எப்படி சரியான அளவு பயன் படுத்தினால் உங்களுக்கு தேவையான நன்மைகள் கிடைக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம். சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இதனை உண்ணலாம். எனினும் இதன் எண்ணிக்கை அல்லது அளவு மிக முக்கியம்.


எங்களது இந்தப் பதிவு உங்களுக்குப் பயன் தருவதாக இருக்கும் என்று நம்புகிறோம். சரியான அளவு வால்நட்டை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழ வாழ்த்திகிறோம்.


பட ஆதாரம்  -  pexels, pixabay 


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்திதமிழ்தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.