கர்ப்ப காலத்தில் யோனியில் ஏற்படும் மாற்றங்கள் – நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

கர்ப்ப காலத்தில் யோனியில் ஏற்படும் மாற்றங்கள் – நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

யோனி(Vaginal), கருப்பையில் இருந்து பிறப்புறுப்புக்கு வரும் பாதை. இந்த பாதையில் பெண்களுக்கு கருப்ப காலத்தில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றது.  நீங்கள் எவ்வளவுதான் உங்களை தயார் செய்து வைத்திருந்தாலும், கர்ப்ப காலத்தில் உங்கள் உடம்பில் ஏற்படும் மாற்றங்களால் நீங்கள் அதிகம் குழப்பம் அடைவதுண்டு. பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு என்ன நடக்கின்றது என்று புரியாமல் இருப்பார்கள். மேலும் அத்தகைய மாற்றங்கள் உங்களை சில சமயம் ஆச்சரியப் படுத்தவும் செய்யும்.


பொதுவாக கர்ப்பகாலத்தில் பெண்கள் தங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை, குறிப்பாக, உடல் எடை கூடுவது, தலை முடி பலபலப்பாவது, வயிற்றுப் பகுதி பெரிதாவது என்று சில அறிகுறிகளை கவனித்தாலும், உடலுக்குள் ஏற்படும் மாற்றங்களை பெரும்பாலும் உணருவதில்லை. குறிப்பாக, கருப்பையில் இருந்து பிறப்புறுப்புக்கு  வரும் பாதையில் ஏற்படும் மாற்றங்களை உணருவதில்லை.


இத்தகைய மாற்றங்களை நீங்கள் கவனிப்பது கடினமே. குறிப்பாக கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் உங்களால் இதனை பெரிதாக உணர முடியாது. எனினும், உங்கள் கர்பகாலத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலையில் அது முற்றிலும் வேறுபட்டிருக்கும். உங்கள் உடலில் பெண்மையை குறிக்கும் பகுதிகளிலும் ஹார்மோன் மாற்றங்களால் சில மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும். இத்தகைய மாற்றங்கள் கர்ப்பகாலத்தில் இயல்பானதே.


கர்ப்பகாலத்தின் தொடக்கத்தில் ஏற்படும் சில மாற்றங்கள்:
நீங்கள் கருவுற்றிருக்கின்றீர்கள் என்பதை உறுதி செய்யும் விதமாக உங்கள் உடலில் சில முதல் நிலை மாற்றங்கள் ஏற்படும். அவற்றை நீங்கள் புரிந்து கொண்டால், உங்கள் வேலை சுலபமாகிவிடும். இதனால் நீங்கள் உங்களை எளிதாக பின் வரும் கர்ப்பகாலத்திர்க்கு தயார் படுத்திக் கொள்ளலாம்.


இங்கே, நீங்கள் தெரிந்து கொள்ள சில கர்ப்பகால மாற்றங்கள்


அடிக்கடி சிறுநீர் கழித்தல்:
உங்கள் முதல் நிலை கர்ப்ப காலத்தின் இறுதியில், உங்களுக்கு அதிகம் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றும். இது குறிப்பாக உங்கள் கருப்பை  வளர, வளர சிறுநீர்ப்பையை அழுத்துவதால் ஏற்படுகிறது. இதனால் நீங்கள் தும்மும் போதும் அல்லது இரும்பும் போதும் கூட உங்களை அறியாமல் சிறுநீர் வெளியேறி விடுவதுண்டு.


மயக்கம் / கிறுகிறுப்பு:
நீங்கள் கருவுற்றிருக்கும் போது அதிக அளவிலான இரத்தம் உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவைப் படுகிறது. இதனால் உங்களுக்கு அவ்வப்போது மயக்கம் அல்லது கிறுகிறுப்பு ஏற்படுகிறது, இதனால் நீங்கள் அதிக பசி, உடல் சோர்வு அல்லது அழுத்தம் போன்ற அறிகுறிகளை உணரக் கூடும்.


vaginal chnages pregnancy003


முகத்தை பளபளப்பாக்கும் வைட்டமின் ஈ ஆயில் எப்படி பயன்படுத்தலாம்


நெஞ்செரிச்சல்:  
கர்ப்ப காலத்தின் போது உணவை உடைக்கும் தசைகள் தளர்வாக இருக்கும். இதனால் ஹார்மோன் மாற்றங்களும் மெதுவாக இருக்கும். நீங்கள் உண்ணும் உணவு உங்கள் வயிற்றிலேயே அதிக நேரம் தங்கி விடுகிறது. இதனால் உங்கள் உடல் சத்துக்களை எடுத்துக் கொள்ள அதிக நேரம் பிடிக்கிறது. இவை அனைத்தும் உங்களுக்கு நெஞ்செரிச்சலை ஏற்படுத்தக் கூடும்.


மல சிக்கல்:
உங்கள் உணவு வயிற்றில் உடைந்து சத்தாக மாறுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், மல சிக்கல், வாயு மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படக் கூடும். இதனாலேயே, உங்கள் மருத்துவர் உங்களுக்கு அதிகம் நார் சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கின்றார். நார் சத்து நீங்கள் இலகுவாக மலம் கழிக்க உதவும்.


காணக்கூடிய நரம்புகள்:
கர்ப்ப காலத்தில் உங்கள் உடம்பில் அதிக இரத்தம் உற்பத்தி ஆகிறது. மேலும் உங்கள் இதயம் விரைவாக இரத்தத்தை தள்ளுகிறது. இதனால் உங்கள் வயிறு, மார்பு மற்றும் கால்களில் நீல நிற நரம்புகள் தோன்றும். அவை காணக்கூடியதாகவும் இருக்கும். மேலும் உங்கள் முகம், கழுத்து அல்லது கைகளில் சிலந்தி நரம்புகளும் தோன்றக் கூடும். இவை சிரிய இரத்த நானங்கலாகும்.


சருமத்தில் மாற்றங்கள்:
கர்ப்ப காலத்தில் உங்கள் முகம் ரோஜாப்பூ போல பொலிவோடு மாறுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இது குறிப்பாக அதிகரிக்கும் இரத்த ஓட்டத்தால் ஏற்படுவது. கர்ப்ப கால ஹார்மோன்கள் உங்கள் சருமத்தில் அதிக எண்ணையை உருவாக்கும்.


மார்பகத்தில் மாற்றங்கள்:
கர்ப்ப காலத்தில் பெரும்பாலான பெண்கள் தங்கள் மார்பகத்தில் மாற்றங்கள் ஏற்படுவதை கவனித்திருப்பார்கள். இது உடலில் உள்ள ஹார்மோன்கள் தாய்பால் சுரக்க உங்களை தயார் செய்து கொண்டிருப்பதைக் குறிக்கும். இந்த மாற்றங்கள் ஏற்படும் போது உங்கள் மார்பகம் சற்று பருமனாகவும், மிருதுவாகவும் மாறும். கர்ப்ப காலம் முழுவதும் மார்பகத்தில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்படும். அவை பெரிதாவதோடு, நிறைந்திருப்பதாகவும் நீங்கள் உணருவீர்கள்.


வளரும் தொப்பை:
கர்ப்பப்பை வளர வளர, உங்கள் தொப்பையும் அதிகரிக்கும். இது குறிப்பாக உங்கள் கர்ப்பகாலத்தின் இரண்டாம் நிலையில் தெரியும்.


மனரீதியான மாற்றங்கள்:
கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு உடலில் மட்டும் மாற்றங்கள் ஏற்படுவதில்லை. அவர்கள் மனதிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. இதனால் எண்ணங்களில் மாற்றங்கள், ஞாபக மராத்தி, கவனச் சிதறல், மன அழுத்தம் ஆகியவை ஏற்படுகின்றது.


கர்ப்ப காலத்தில் யோனியில்(Vaginal) ஏற்படும் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள்


கர்ப்ப காலத்தில் உங்கள் உடலில் பொதுவாக ஏற்படும் மாற்றங்களைத் தவிர, யோனி(Vaginal) பகுதியிலும் சில மாற்றங்கள் ஏற்படுகின்றது. அவற்றை நீங்கள் தெரிந்து கொண்டால், உங்களை நீங்கள் மேலும் திடமாக இந்த காலகட்டத்தில் தயார் படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும்.


கோடையில் அழுது வடியும் எண்ணெய் பசை சருமத்தை பராமரிப்பதற்கான எளிய டிப்ஸ்!


  • உங்கள் புணர்புழையின் (யோனி)(Vaginal) அகலம் தடிமனாகவும், குறைந்த உணர்வோடும் இருக்கும்

  • மெல்லிய வெள்ளை வெளியேற்றம் ஏற்படும். இது கர்ப்ப காலத்தில் இயல்பான ஒன்று

  • யோனியில்(Vaginal) லேசான இரத்தப்போக்கு ஏற்படக் கூடும். இது பொதுவான அறிகுறியாக இருந்தாலும், இரத்தப்போக்கு அதிகமாக இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. மேலும் வலியோடு சேர்ந்து இரத்தபோக்கு ஏற்பட்டால், நீங்கள் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.


சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பின்வருமாறு


நாற்றம்: கர்ப்ப காலத்தில் பிரசவத்திற்கு சம்பந்தமான உடலுருப்புகளுக்கு இரத்த போக்கு அதிகமாக இருக்கும். இதில் கருப்பை மற்றும் யோனி(Vaginal) ஆகியவையும் அடங்கும். இதனால் அதிகரிக்கும் இரத்த ஓட்டம், pH சமநிலையில் இருக்கும் இரசாயனங்களின் அளவை பாதிக்கும். இதன் விளைவாக ஒரு விதமான நாற்றம் ஏற்படக்கூடும்.


அதிக வெளியேற்றம்: கர்ப்ப காலத்தில் யோனி(Vaginal) பகுதியில் இருந்து அதிக திரவம் வெளியேறும். இது குறிப்பாக உங்கள் பிரசவ காலம் நெருங்கும் போது ஏற்படும். எனினும் இது அனைத்து கர்ப்பிணிகளுக்கும் ஏற்படுவதில்லை. இத்தகைய வெளியேற்றம், கர்ப்பிணி பெண்களுக்கு பிறப்புறுப்பு பகுதிகளில் எந்த நோய் தொற்றும் ஏற்படாமல் இருக்க உதவும்.


சிறுநீர் பாதை நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு: இது கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை. பெரிதாகும் கர்ப்பப்பை சிறுநீர்ப்பையை அழுத்துவதால், சிறுநீர் முற்றிலுமாக வெளியேற முடியாமல் சில சமயங்களில் போகலாம். இதனால் சிறுநீர் பாதையில் நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.


அதிக உணர்ச்சி: கர்ப்ப காலத்தில் அதிகரிக்கும் இரத்த ஓட்டத்தால், பெண்ணின் கருவாயில் மாற்றங்கள் ஏற்படும். இதனால் இந்த கருவாய் விரிவடைந்து அதிகம் உணர்ச்சி அடைகிறது.


வெரிகோஸ் நரம்புகள் (வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள்): இதுவும் அதிகரிக்கும் இரத்த ஒட்டாத்தால் ஏற்படும் ஒரு மாற்றமே. இத்தகைய விளைவுகள் யோனி(Vaginal) பகுதியிலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும். எனினும், அது கண்ணிற்குத் தெரியாமல் இருக்கலாம். நரம்புகளின் சுவறுகள் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகிறது. இதனால் நரம்புகளின் வழியாக செல்லும் இரத்தத்தின் அளவு குறைய வாய்ப்பு உள்ளது. இதனாலேயே கர்ப்பிணி பெண்களுக்கு வெரிகோஸ் நரம்புகள் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கிறது.


vaginal chnages pregnancy004


ஈஸ்ட் தொற்று: இது அனைத்து பெண்களுக்கும் பொதுவான ஒரு பிரச்சனை. எனினும், கர்ப்பிணி பெண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படக் கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது. பெண்களின் பிறப்புறுப்பு பகுதியில் pH அளவில் ஏற்படும் மாற்றங்களாலேயே இத்தகைய ஈஸ்ட் தொற்று யோனி(Vaginal) பகுதியில் கர்ப்ப காலத்தில் ஏற்படுகின்றது.    


பிறப்புறுப்பு பகுதியில் அதிக முடி வளர்ச்சி: இரத்த ஓட்டத்தில் ஈஸ்ட்ரோஜனின் அளவு அதிகமாக இருப்பதால், பிறப்புறுப்பு பகுதியில் முடியின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். இதனால் அந்த பகுதியில் கரிபிணி பெண்களுக்கு அதிக வியர்வை ஏற்படுவதுண்டு.


ஒரு பெண் கருவுறத் தொடங்கிய நாள் முதல் குழந்தை பிறக்கும் நாள் வரை அவள் உடலில் பல கண்ணுக்குத் தெரிந்த மற்றும் தெரியாத மாற்றங்கள் பல ஏற்படுகிறது. அத்தகைய மாற்றங்கள் கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு நிலையிலும் மாறுபடும். பெரும்பாலும் அவை, குழந்தை பிறந்ததும் நின்று விடும்.


என்னதான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாற்றங்கள் பொதுவானதாக இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் அவை மாறுபடக் கூடும். மேலும், உங்கள் முதல் கர்ப்பத்திர்க்கும் இரண்டாவது கர்ப்பத்திர்க்கும் கூட சில வித்யாசங்கள் ஏற்படக் கூடும். சிலருக்கு, மிதமான மாற்றங்கள் இருக்கலாம், சிலருக்கு மிக அதிகமான மாற்றங்கள் ஏற்படலாம். உங்களால் சமாளிக்க முடியாத சூழ்நிலையில், நீங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.


எப்படி யோனி(Vaginal) பகுதியில் ஏற்படும் மாற்றங்களால் உண்டாகும் வலி மற்றும் அழுத்தத்தை குறைக்கலாம்?


கர்ப்பகாலத்தில் இது போன்ற மாற்றங்கள் நிச்சயம் சில உபாதைகளை கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படுத்தக் கூடும். இதனால் அவர்கள் அதிகம் அசௌகரியமாகவும், சோர்ந்தும், மற்றும் ஊக்கம் குறைந்தும் காணப்படுகிறார்கள்.


இத்தகைய பிரச்சனைகளை உங்கள் கர்ப்ப காலத்தில் குறைக்க, இங்கே சில குறிப்புகள், உங்களுக்காக:


  • அவ்வப்போது உங்கள் கைகள் மற்றும் கால்களை நீட்டி, மடக்கி சிறு உடற் பயிற்சி செய்யுங்கள்.

  • உங்கள் முதுகு மற்றும் இடுப்பு பகுதிகளுக்கும் சற்று குனிந்து நிமிர்ந்து சில அசைவுகளை செய்யுங்கள்

  • கர்ப்பிணி பெண்களுக்கென்ற யோகா உள்ளது, அதனை முறையாக நன்கு பயின்ற ஆசிரியரிடம் கற்றுக் கொள்ளுங்கள். இது நீங்கள் பாதுகாப்பாக பரிசி செய்ய உதவும்

  • 1௦ நிமிடத்திற்கு வலி இருக்கும் பகுதிகளில் சூடு ஒத்தடம் கொடுப்பது நல்லது

  • நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிறு நடை செல்வது நல்லது. இது உங்கள் உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சியைத் தரும். மேலும் உங்கள் தசைகளையும் பலப்படுத்தும் 

  • அதிகம் தண்ணீர் அருந்துங்கள். இது உங்கள் உடல் சூடாவதை தவிர்பப்தோடு உங்களை சக்த்தியோடும் வைத்துக் கொள்ள உதவும்


இந்த குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அவர்களது, வயது, உடல் நிலை மற்றும் பிற காரணங்களால் சில பிரச்சனைகள் ஏற்படக் கூடும். அவை அனைவருக்கும் ஒன்று போல இருக்காது. அதனால், உங்களுக்கு அதிகம் வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.


மார்பகத்தை அழகாக வைக்க உதவும் சில ரகசிய டிப்ஸ்!


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo