logo
ADVERTISEMENT
home / Self Help
நீங்கள் கல்லூரிக்கு புதிதா? உங்கள் கல்லூரி வாழ்க்கையை வெற்றியாக்க சில குறிப்புகள்!

நீங்கள் கல்லூரிக்கு புதிதா? உங்கள் கல்லூரி வாழ்க்கையை வெற்றியாக்க சில குறிப்புகள்!

கல்லூரி(college) வாழ்க்கை ஒவ்வொரு மாணவருக்கும் மிகப் பெரிய கனவுகளோடும், கற்பனைகளோடும் தொடங்கும் ஓர் அற்புதமான காலம். இது உங்கள் வாழ்க்கையில் ஒரு சிறு காலகட்டமாக இருந்தாலும், இதனால் உங்களுக்கு ஏற்படும் அனுபவங்களும், என்றும் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். நீங்கள் கல்லூரியில்(college) பயிலும் அந்த மூன்று அல்லது நான்கு ஆண்டு காலம் உங்களுக்கு ஒரு பொற்காலம் என்றே சொல்லலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கை வேறு ஒரு பரிமாணத்தை அடைகிறது. மேலும் நீங்கள் கல்லூரியை விட்டு படிப்பு முடிந்து வெளியே வரும் அந்த காலத்தில் உங்கள் வாழ்க்கை மற்றுமொரு பரிமாணத்தை நோக்கி பயணிக்கத் தொடங்குகிறது.

பள்ளி பருவத்திற்கும் கல்லூரி(college) பருவத்திற்கும் பல வேறுபாடுகள் உள்ளது. கல்லூரியில்(college), நீங்கள் உங்கள் எதிர் காலத்திற்குத் தேவையான கல்வியை கற்றுக்கொள்வதோடு உங்கள் வாழ்க்கையையும் கற்றுக்கொள்கின்றீர்கள். இதனால், நீங்கள் கல்லூரியை விட்டு படிப்பு முடிந்து, பட்டம் பெற்று வெளியே வரும்போது உங்கள் வாழ்க்கையை மாணவ பருவத்தில் இருந்து ஒரு பொறுப்பான மனிதனாய் தொடங்குகின்றீர்கள்.

நாம் திரைப்படத்தில் பார்ப்பது போலவும், மற்றவர்கள் பேசுவதை போலவும், கல்லூரி(college) வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்காது. அதிலும் பல சவால்களை நீங்கள் சந்திக்கத் தான் வேண்டும். எனினும், அவை நிச்சயம் சுவாரசியம் நிறைந்ததாகவே இருக்கும். போட்டிகள், சிறு சிறு சண்டைகள், கருத்து வேறுபாடுகள் என்று உங்கள் நண்பர்களுடன் சுவாரசியமாக கல்லூரி(college) வாழ்க்கை நடக்கும். இருப்பினும் அவற்றை நீங்கள் எளிதாக சமாளித்து, உங்கள் எதிர் காலத்தை கருத்தில் வைத்து முன்னேறி செல்ல வேண்டும்.

உங்கள் கல்லூரி(college) வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெறவும், மகிழ்ச்சியாக உங்கள் காலத்தை நல்ல நினைவுகளோடு களிக்கவும், இங்கே சில பயனுள்ள குறிப்புகள் உங்களுக்காக!

ADVERTISEMENT

அனைத்திலும் பங்குபெறுங்கள்:  
பள்ளியோ, கல்லூரியோ(college) அனைத்து மாணவர்களுக்கும் ஏற்படும் ஒரு சிக்கல், அங்கு ஏற்பாடு செய்யப்படும் அனைத்து விழாக்கள் மற்றும் விளையாட்டுக்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு பங்குபெருவது தான். அனைத்து இடங்களிலும் போட்டிகள் இருக்கத்தான் செய்யும். இருப்பினும், உங்களை நீங்களே பின்வாங்கிக் கொள்ளாமல், முடிந்த வரை, விழாக்கள், விளையாட்டு, போட்டிகள் என்று ஏதாவது ஒன்றில் உங்கள் நண்பர்களுடனோ அல்லது தனித்தோ பங்கு பெறுவது மிக முக்கியம். இதனால் உங்கள் திறமைகளை வெளி கொண்டு வர ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும். இதனோடு சேர்ந்து பிற மாணவர்களுடன் நீங்கள் பழகவும், நல்ல நட்பை ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும்.

collage student003

வகுப்பில் நண்பர்களை உருவாக்குங்கள்:
உங்கள் கல்லூரி(college) வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் ஏற்படுகிறது என்றால் அதற்கு உங்கள் நண்பர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றார்கள். மேலும் நீங்கள் நல்ல நண்பர்கள் வட்டாரத்தை ஏற்படுத்தும் போது, ஆறுதலாகவும், மகிழ்ச்சியாகவும் உணருவீர்கள். அவர்கள் உங்களுக்கு அனைத்திலும் நல்ல உறுதுணையாக இருப்பார்கள்.

வகுப்பகளை புறக்கணிக்காதீர்கள்:
நீங்கள் கல்லூரியில்(college) சேரும் போது ஒன்றை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். கல்லூரி வாழ்க்கை இனிமையானது என்பதில் சந்தேகம் இல்லை. இருந்தாலும் நீங்கள் கல்லூரியில்(college) சேர்ந்த நோக்கத்தை மறந்து விடக் கூடாது. இந்த கல்லூரி(college) படிப்பு உங்கள் எதிர் கால வாழ்க்கைக்கு ஒரு அஸ்திவாரம். அதனால் நீங்கள் வகுப்புகளை புறக்கணிக்காமல், உங்கள் பாடத்தில் கவனம் செலுத்தி படிப்பது மிக முக்கியம். இதனால் நீங்கள் நல்ல மதிப்பென்களோடு பட்டம் பெறுவீர்கள்.

ADVERTISEMENT

உங்கள் நண்பர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும்:
பல மாணவர்கள் கல்லூரி(college) விடுமுறை நாட்களுக்கு ஊருக்கு சென்று விட்டால், அதன் பின் மீண்டும் கல்லூரிக்கு(college) திரும்பி வரும் வரை எந்த தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை. அந்த காலத்தை போல இல்லாமல், இன்று ஸ்மார்ட் போன், மின் அஞ்சல், ஸ்கைப் என்று தொழில்நுட்பம் வளர்ந்து உங்கள் தொடர்பை எளிமையாக்கி விட்டது. அதனால் நீங்கள் முடிந்த வரை விடுமுறை நாட்களில் உங்கள் நண்பர்களுடன் தொடர்பில் இருக்க முயற்சி செய்யுங்கள். இதனால் உங்கள் நட்பு வளருவதோடு, நீங்கள் அனைவரும் ஒன்று சேர்த்து உங்கள் எதிர் காலத்திற்கு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து அதற்கான முயற்சிகளை எடுக்க வாய்ப்பு கிடைக்கும்.

தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்:
இந்த உலகத்தில் யாரும் அனைத்தையும் 1௦௦% சரியாக செய்து விடுவதில்லை. சொல்லப்போனால், தவறுகளில் இருந்தே கற்றுக்கொள்கிறார்கள். தங்களை திருத்திக் கொண்டு முன்னேறி செல்கிறார்கள். அதனால் நீங்கள் ஏதாவது தவறு செய்து விட்டால் அதனை எண்ணி வருத்தப்படாமல், எப்படி திருத்திக் கொள்வது என்றும், அதிலிருந்து எப்படி மேலும் கற்றுக்கொள்வது என்றும் தெரிந்து கொள்ளுங்கள். சுருக்கமாக சொல்லப்போனால், தவறுகளில் இருந்து உங்கள் வாழ்க்கையை கற்றுக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாகவும் இருக்கும்.

கவனமாக இருக்க வேண்டும்:
கல்லூரி(college) பல வகையில் உங்களுக்கு புது அனுபவங்களை நீங்கள் படிப்பை முடித்து விட்டு வெளியேறும் வரை தந்து கொண்டே இருக்கும். அதனால் நீங்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் எதை செய்தாலும் அதனை ஒரு முறைக்கு இரு முறை யோசித்து, உங்களுக்கும், மற்றவர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு செய்ய வேண்டும். குறிப்பாக நீங்கள் செய்யும் விடயங்கள் உங்கள் வாழ்க்கை மற்றும் உங்கள் நற்பெயரை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

நேரத்தை திட்டமிடுங்கள்:  
கல்லூரியில் நீங்கள் படிப்பைத் தவிர கற்றுக்கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளது. குறிப்பாக சொல்லப்போனால் பல கல்லூரிகளில்(college) மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு வகுப்பு நேரம் போக தொழில் கல்வி, பயிற்சி கல்வி என்று பல கற்றுக்கொடுக்கப் படுகிறது. இத்தகைய கல்வி நீங்கள் கல்லூரியை(college) முடித்தவுடம் விரைவில் நல்ல நிறுவனத்தில் நல்ல வேலையில் சேர உதவியாக இருக்கிறது. எனினும் அதற்கு நீங்கள் தரமான நேரத்தையும் ஒதுக்க வேண்டும். இதில் முக்கியமாக, பிரதானமான உங்கள் கல்லூரி(college) பட்டப் படிப்பை கோட்டை விட்டுவிடக் கூடாது. அதனால், முடிந்த வரை உங்கள் நேரத்தை திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

ADVERTISEMENT

collage student004

எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்:
உங்கள் கல்லூரியில்(college) பல விழாக்கள், போட்டிகள், கலை நிகழ்சிகள் என்று ஏராளமான விடயங்கள் நடக்கலாம். இதனோடு, உங்கள் திறனை வளர்க்கும் வகையில் போட்டிகள், மற்றும் உங்கள் பட்டம் சார்ந்த சர்டிபிகேட் வகுப்பு என்று பல இருக்கும். அதனில் எது உங்களுக்கு முக்கியம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு நல்ல பலனையும், எதிர்காலத்திற்கு பயன் தரக்கூடிய ஒன்றையும் நீங்கள் சரியாக தேர்ந்தெடுத்து, முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

அரசியலுக்கு வருகிறார் நயன்தாரா! தீவிர ஏற்பாடுகள் ஆரம்பம்…

உங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்:
நீங்கள் கல்லூரிக்கு(college) முதன் முதலில் செல்கின்றீர்கள் என்றால், முதலில் உங்களை பற்றி நீங்கள் சில விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். உதாரனத்திர்க்கு, உங்களுக்கு விருப்பமான கலை, படிப்பு, உங்களுக்கு பிடித்த நண்பர்கள், நீங்கள் புதிய விடயங்களை கற்றுக்கொள்வதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வம், நீங்கள் மேலும் எவ்வாறு உங்களை முன்னேற்றிக் கொள்ள வேண்டும் என்று பல உள்ளன. இப்படியாக நீங்கள் உங்களை பற்றி சில விடயங்களை தெரிந்து கொண்டு நீங்கள் மேலும் உங்களை எப்படி முன்னேற்றிக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு செயல் பட வேண்டும்.

ADVERTISEMENT

உங்கள் பேராசிரியருடன் பேசுங்கள்:
அவ்வப்போது உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது அல்லது தேவைப்படும் போது உங்கள் பேராசிரியரை பார்த்து அவருடன் சில நிமிடங்கள் செலவிடுங்கள். இவ்வாறு செய்யும் போது அவரிடம் இருந்து நீங்கள் பல புது விடயங்களை கற்றுக்கொள்ள முடியும். இது நீங்கள் மேலும் நன்றாக படிக்கவும், நல்ல மதிப்பென்கள் பெறவும் உதவும். உங்கள் அறிவையும், திறனையும் இதனால் நீங்கள் வளர்துக்கொள்ளலாம்.

ஆலோசகரிடம் ஆலோசனை பெறுங்கள்:
உங்களுக்கு ஏதாவது ஒரு காலகட்டத்தில் குழப்பம் ஏற்பட்டாலோ அல்லது எப்படி சில தருணங்களில் சூழ்நிலையை சமாளிப்பது என்று தெரியாமல் போனாலோ, ஒரு நல்ல மாணவருக்கான ஆலோசகரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. இது நீங்கள் சரியான பாதையில் மேற்கொண்டு தொடர உதவும். மேலும் நீங்கள் எந்த பிழையும் செய்யாமல் சரியாக செயல் படவும் அவரது ஆலோசனை உதவியாக இருக்கும்.

முகத்தின் அழகை கெடுக்கும் முடியை வீட்டிலேயே சரி செய்யலாம்!

முகாம்களில் பங்கு பெறுங்கள்:
அனைத்து கல்லூரிகளிலும் ஏதாவது ஒரு முகாம் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இது மாணவர்களுக்கு பல புதிய விடயங்களை கற்றுக்கொடுப்பதோடு அவர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தையும் வாழ்க்கையில் ஏற்படுத்திக் கொடுக்கும். அதனால் உங்கள் கல்லூரியில் முகாம்கள் நடந்தால் உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து அதில் பங்கு பெற மறந்து விடாதீர்கள்.

ADVERTISEMENT

உங்களுக்கென நேரம் ஒதுக்குங்கள்:
உங்கள் கல்லூரி(college) நாட்களில் அனைத்து நாட்களையும் படிப்பிலும், மதிப்பென்கள் எடுப்பதிலுமே கழித்து விடாமல், உங்களுக்காகவும் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். இதனால் உங்கள் மனம் சற்று ஓய்வெடுப்பதோடு, புத்துணர்ச்சியும் பெரும். இதனால் உங்கள் செயல் திறன் மற்றும் படைப்பாற்றல் அதிகரிக்கும். அதனால், அவ்வப்போது உங்களுக்கென சிறிது நேரத்தை ஒதுக்க மறந்து விடாதீர்கள்.

நல்ல உணவு:
கல்லூரி வாழ்க்கையில், குறிப்பாக விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை, நல்ல உணவு. என்னதான் கல்லூரி நிற்வாகம் உங்களுக்கு விதவிதமாக தினமும் உணவு கொடுத்தாலும், அதில் நீங்கள் எதிர் பார்க்கும் அந்த ருசி இல்லாமல் போகலாம். மேலும் சில இடங்களில் தரம் குறைந்த உணவே கிடைக்கக்கூடும். அப்படி இருக்கும் போது நீங்கள் உங்கள் நண்பர்களுடனோ அல்லது தனித்து உங்களுக்குத் தேவையான உணவை சமைத்து சாப்பிட ஏற்பாடுகளை செய்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

செக்க சிவந்த அழகான உதடு வேண்டுமா? வீட்டிலேயே செய்யலாம்!

ஆரோக்கியமாக இருக்க வேண்டும்:
உங்கள் கல்லூரி வாழ்க்கையில் ஆரோக்கியமாக இருப்பது மிக முக்கியம். நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே, நல்ல சக்த்தியோடு படித்து, எண்ணிய காரியத்தை முடிக்க முடியும். அதனால் ஒரு நல்ல ஆரோக்கியமான சூழலை உங்கள் கல்லூரி(college) காலகட்டத்தில் அமைத்துக் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

இந்த குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். இது மட்டுமல்லாமல், நீங்கள் உங்கள் கல்லூரி(college) காலத்தில் எப்போதும் ஒன்றை மறவாது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அது என்னவென்றால், நீங்கள் எதை நோக்கி பயனிக்கின்றீர்களோ அதில் வெற்றி பெற வேண்டும் என்பது தான். உங்கள் பெற்றோர்களும் அந்த வெற்றியை எதிர் நோக்கியே காத்துக் கொண்டிருகின்றார்கள் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் கல்லூரிக்குள் முதன் முதலாக நுழையும் போது உங்களை அறியாமலே ஒரு பயம் ஏற்படலாம். அதனை பொருட்படுத்தாமல் உங்கள் குறிக்கோளை மட்டும் நோக்கி முன்னேறி செல்லுங்கள்.  

10 May 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT