உடலுறவு ரகசியங்கள் பற்றி அம்மா மகளுக்கு எழுதிய கடிதம்

உடலுறவு ரகசியங்கள் பற்றி அம்மா மகளுக்கு எழுதிய கடிதம்

டாட்'ஸ்  லிட்டில் பிரின்சஸ்களாக வாழும் பெண்கள் ஒரு பருவத்துக்கு மேல் அம்மாவோடு நெருக்கமாவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.


காரணம் உடல் மாற்றங்கள் மற்றும் ஹார்மோன் வளர்ச்சிகள் அப்பாவை ஒரு ஆணாக சில பெண்களை உணர வைக்கும். மாதவிலக்கு துன்பங்கள் மூலம் அம்மாவோடு ஐக்கியமாகும் பெண் குழந்தைக்கு அவரது தாய் காமம் (sex) பற்றியும் உடல் உறவு பற்றியும் எடுத்து கூறும் ஒரு கடிதம் பற்றி இப்போது பார்க்கலாம்.


பெண்ணை பெண்ணால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்பது ஓரளவிற்கு உண்மை என்றாலும் பெண்ணை பெண்ணால் கொஞ்சம் அதிகமாக புரிந்து கொள்ள முடியும் என்பதுதான் உண்மை.


பெண்குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகள் பற்றி அப்பாவை விடவும் அம்மாவால் எடுத்து சொல்ல முடியும். இங்கே ஒரு அம்மா காமம் பற்றி அதில் செய்ய வேண்டிய சில ரகசியங்கள் பற்றி கடிதத்தில் எழுதியிருக்கிறார்.என் பிரிய மகளே!


காமம் எனும் போதையில் சதா சர்வ காலமும் மூழ்கி கிடக்கும் ஒரு உலகில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம். பொதுவாக காமம் பற்றி எந்த பெற்றோரும் தனது குழந்தைகள் உடன் பேச மறுக்கின்றனர். அசூயைப்படுகின்றனர். என் பெற்றோரும் அப்படித்தான். நானும் சிறுமி என்பதால் என்னாலும் அவர்களிடம் எதுவும் கேட்க முடியவில்லை.


நீ எனக்கு மகளாக பிறந்த அன்றைக்கே நான் முடிவு செய்து விட்டேன். நீ என்னிடம் எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம் கேட்கலாம் நானும் அதற்கான பதில்களை தரலாம் என்று முடிவு செய்திருந்தேன்.


இந்த நேரத்தில் நீ உடல் உறவிற்கு தயார் ஆக வேண்டி இருப்பதால் இதைப் பற்றி நான் பேச நினைக்கிறேன். அதற்கான முக்கியமான 7 விஷயங்கள் பற்றி நீ அறிந்து கொண்டால் அதுவே போதும் உன் வாழ்நாளிற்கும் நீ அதனை பயன்படுத்தலாம்.


நாங்கள் திருப்தி அடையவில்லை - தாம்பத்யம் குறித்து மனம் திறக்கும் பெண்கள்உடலின் தேவைகள்


இந்த உடல் தேவைகள் பற்றி உனக்கே தெரிந்திருக்கும். ஆனாலும் காமம் பற்றிக் கற்றுக் கொடுக்கும் சினிமா மற்றும் புத்தகங்களில் அதனை வக்கிரமாகவும் ஆபாசமாகவும் தான் சித்தரிக்கின்றன.  காமம் என்பது பொதுவான உணர்வுதான். பசி தாகம் போன்ற உடல் தேவைகள் போலத்தான். இதைப்பற்றி நீ குழம்ப வேண்டாம். அது தவறானது அல்ல. செக்ஸை நீ சந்தோஷமாக அணுகு. உன்னை மதிப்பவரிடம் உன்னை மரியாதையாக நடத்துபவரிடம் உன்னை தர தயங்காதே. ஆனால் அந்த மரியாதை நடிப்பா நிஜமா என்பதில் கவனம் வை.காதல் என்பது மரியாதையான ஒரு காமத்தை தரும் என்பதால் அதில் நீ தவறி விட முயலாதே.


மற்றவர் தூண்டுதல்


உன் வயதில் மற்றவர் தூண்டுதல் அதிகம் இருக்கலாம். உனது நண்பர்கள் செய்து விட்டார்களே என்பதற்காக உன்னையும் தூண்டுவ்வார்கள்.  அதற்காக நீ முயலாதே. உனக்கு முன் 25வருட அனுபவம் வாய்ந்த உன் தோழி சொல்கிறேன். உனக்காக தோன்றினால் அதற்கான சரியான நபர் கிடைத்தால் உன்னை அவர் மதித்தால் சரியான நேரமும் நபரும் கூடி வந்தால் இதனை நீ முயற்சிக்கலாம்


விரல் நுனியில் விளையாடும் காமம்.. உறுதியான உச்சம் அடைய அவசியமாகும் ஆப்கள்..காதல் காமம் வித்தியாசம்


நாம் நேசிக்கும் நபருடன் உடல் தேவைகள் உருவாகும் தான் என்றாலும் காதல் காமம் இரண்டிற்கான வித்தியாசங்களை நீ தெரிந்து கொள்ள வேண்டும். காதல் உன்னோடு நேரம் செலவழிக்கும் புரிதல் இருக்கும். ஆனால் காமமோ புரிதல்கள் இருக்காது நேரமும் செலவழிக்க விரும்பாது. எப்போதும் கூடல் மட்டுமே அதன் குறிக்கோள் ஆக இருக்கும். இதனை நீ செய்யாதே.


காமத்திற்காக கெஞ்சாதே


காதல் என்பது காமம் கொள்வதற்காக என்று யாராவது நடக்கலாம். உறவு வைத்து கொள்வதற்காக மற்றவரிடம் கெஞ்ச வேண்டி வரலாம். அப்படி கெஞ்சி கேட்டு உடல் உறவை வைத்து கொள்ளாதே. காரணம் அது நாம் நேசிக்கும் நபரை காமத்திர்காக பயன்படுத்தி கொள்வது போன்றது.


 பிடிக்காத போது நோ சொல்ல பழகு


உன்னை நேசிப்பதற்காக உன்மேல் அதிக உரிமை கோர கூடாது. உன் விருப்பம் இல்லாமல் யாரேனும் உன்னை தொட்டால் நீ தயங்காமல் நோ சொல்ல வேண்டும். மீறி உன்னை வற்புறுத்தி செய்யபடும் காமம் சட்டபடி குற்றம்.


சிக்கலுக்கு தீர்வு செக்ஸ் அல்ல.


மனரீதியான சிக்கல்கள் வெளியுலக சிக்கல்கள் இதற்கெல்லாம் வடிகால் செக்ஸ் தான் என்று தவறாக முடிவெடுக்க வேண்டாம். செக்ஸ் ஆறுதல் கொடுக்கும் ஆனாலும் அது தற்காலிகமாக இருக்கும். சிக்கல்களை நேரடியாக சந்திப்பதுதான் நன்மை தரும்.நானும் உன் தோழி தான்.


நமக்குள் வயது வித்தியாசம் இருந்தாலும் உன் வயதை நான் கடந்து தான் வந்திருக்கிறேன். எதுவாக இருந்தாலும் என்னிடம் மனம் விட்டு பேசி பார். நிச்சயம் மாற்றம் கிடைக்கும் . என்னை நீ ஒரு தோழியாக நம்பலாம்


இப்படி ஒரு அழகான கடிதத்தை அம்மா மகளுக்கு எழுதி இருக்கிறார்.  


புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.