தண்ணீர் பிரச்னையால் மெட்ரோ ரயிலில் குளிர்சாதன சேவை நிறுத்தம்

தண்ணீர் பிரச்னையால் மெட்ரோ ரயிலில் குளிர்சாதன சேவை நிறுத்தம்

மெட்ரோ பயணம்தான் சென்னை பயணிகளின் குறைந்தபட்ச சொகுசு பயணமாக இருந்து வந்தது. அதிலும் இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.


எதிர்பார்த்த மழை பெய்யாயதால் இந்த வருடம் சென்னை மக்கள் குடிநீர் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.சென்னைக்கு நீர் ஆதாரங்களான செம்பரம்பாக்கம் ஏரி போரூர் ஏறி ஆகியவை வறண்டு போனதால் குடி நீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.


இதனால் நீர் தேவைகளை குறைக்க மெட்ரோ (Metro train ) ரயில் நிலையம் முடிவு செய்துள்ளது. ஒரு நிலத்தடி மெட்ரோ ரயில் இயங்க நாள் ஒன்றுக்கு 9000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகின்றது.


இதில் 7000 லிட்டர் தண்ணீர் மெட்ரோ ரயிலின் ஏசியை இயங்க வைக்க உதவுகிறதாம். இதனை குறைக்க திட்டமிட்ட மெட்ரோ ரயில் நிர்வாகம் மதியம் பயணிகள் குறைவாக வரும் நேரத்தில் ஏசி சேவையை நிறுத்த முடிவு செய்திருக்கிறதாம்.மதியம் 12 முதல மாலை 5 மணி வரை ஏசி சேவையை நிறுத்துவதால் 30 சதவிகித நீர் பயன்பாட்டை சேமிக்க முடிகிறது என்று மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக இன்னும் என்னென்ன சேவைகளை இழக்க போகிறதோ சென்னை என அச்சம் நிலவுகிறது.


ஸ்கைப் காதல்கள் சாத்தியம்தானா? தொலைதூர காதல் பற்றி நீங்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் !சென்னை மக்கள் சென்னையில் வாழும் வெளி நகரத்து மக்கள் என அனைவரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது நல்ல தீர்வை தரும். ஒட்டு மொத்த சென்னையும் நீரை சேமிக்க தொடங்கினால் நிச்சயம் எதிர்கால தலைமுறை ப்ரகாசமாகவே இருக்கும்.


புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்     


                                                 


மரங்களுக்கும் இனி வந்தாச்சு 'ட்ரீ ஆம்புலன்ஸ்' சேவை மையம்!


  ---                                                                                                            


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                      


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.