கோடையில் அழுது வடியும் எண்ணெய் பசை சருமத்தை பராமரிப்பதற்கான எளிய டிப்ஸ்!

கோடையில் அழுது வடியும் எண்ணெய் பசை சருமத்தை பராமரிப்பதற்கான எளிய டிப்ஸ்!

எண்ணெய் பசை(oil Skin) சருமம் கொண்டவர்களின் சருமம் எப்போதும் பொழிவுடன் மற்றும் இளமையுடன் காணப்பட்டாலும் மேக்கப் வெகு நேரம் நிக்காது. சீக்கரம் கலைந்து முகம் பொலிவற்று காணப்படும். அதுவும் வெயில் காலத்தில் சொல்லவே வேண்டாம் அழுது வடிந்தார் போன்று தான் எப்போதும் இருக்கும். இதற்கு காரணம் நமது சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் தான். இதை இயற்கை முறையில் எப்படி பராமரிப்பது என்பதை இங்கு பார்ப்போம்.


 • தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெப் பசை(oil Skin) குறையும்.

 • உங்களுக்கு எண்ணெய் பசை(oil Skin) சருமமாக இருந்தால், பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன், கேரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால், அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.

 • எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சை சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு அவற்றை நன்றாக கலக்கி, முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும். எண்ணை பசை(oil Skin) குறைந்து புத்துணர்ச்சி அளிக்கும்.

 • வெள்ளரிச்சாற்றுடன், பால் பவுடர் கலந்து தடவினாலும், எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும் இதை தொடர்ந்து ஒரு மாத காலமாவது பின்பற்ற வேண்டும்.

 • வெள்ளரிக்காயை, தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம்.

 • அப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை(oil Skin) குறையும்.


oilskin summer004


இதையும் படியுங்கள்: சருமத்திற்கு கிவி பழம்


 


 • எண்ணெய்ப் பசை கொண்ட சருமத்துக்கு முல்தானிமெட்டியுடன் சிறிதளவு பன்னீர் கலந்து முகத்தில் தடவலாம்.

 • பாதாம் பருப்பை கஸ்தூரி மஞ்சளுடன் சேர்த்து அரைத்து வாரம் ஒருமுறை தடவிவந்தால் முகத்தில் எண்ணெய் வழியாது.

 • தக்காளிச்சாறு, வெள்ளரிக்காய், சின்ன வெங்காயம் ஆகியவற்றை அரைத்து, வேகவைத்து ஆறியதும் சிறிதளவு தயிர் கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் எண்ணெய்ப் பசை(oil Skin) நீங்கி முகம் பொலிவுபெறும்.

 • உருளைகிழங்கையும் பச்சையாக அரைத்து முகத்தில் பூசினாலும் எண்ணெய் பசை(oil Skin) மாறி முகம் பொலிவாக இருக்கும்.

 • படுக்கும் போது சந்தனத்தைக் குழைத்து முகத்தில் தடவிக் காலையில் எழுந்திருக்கும் போது பன்னீரால் முகத்தைக் கழுவவும். எண்ணெய் பசையுள்ள(oil Skin) முகம் பளபளப்புடன் இருக்கும்.

 • முகத்தில் எண்ணெய் வடிவதைப் போக்க, ஐஸ் கட்டியை மெல்லிய துணியில் வைத்துக் கட்டி, முகத்தில் காலை, மாலை ஒற்றி வந்தால் எண்ணெய் வடிவது மாறி விடும்.

 • வேப்ப இலை, புதினா இலை, மஞ்சள் மூன்றையும் வைத்து நன்றாக மை போல் அரைத்து முகம் முழுவதும் பத்துப்போல சீராகப் போட வேண்டும். தினமும் இரவில் படுக்கப் போகும் போது கிளிசரின் தடவிக் கொண்டால், எண்ணெய்ப் பசை(oil Skin) நீங்கி முகம் மிருதுவாகும்.

 • தக்காளி, பப்பாளிச் சாறெடுத்து தினமும் முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகத்தில் எண்ணெய் பசை(oil Skin) குறையும்.

 • எண்ணெய் பசை சருமத்தினர், அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தை அலம்ப சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால், எண்ணெய் வழிவது குறைவதோடு, முகமும் பளபளப்பாக காட்சியளிக்கும்.

 • எண்ணெய்ப் பசை(oil Skin) சருமத்தினர், வெயிலில் சென்று விட்டு வீட்டிற்கு வந்ததும், சிறிது தயிர், கடலைமாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும்.

 • எண்ணெய் பசை(oil Skin) சருமம் உள்ளவர்கள், மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், எண்ணெய் வழிவது குறையும்.


oilskin summer003


வெயிளிற்கு குட் பை சொல்லும் ஃப்ரூட் பேஷியல்!


அழகான அடர்த்தியான புருவங்கள்ளுக்கான ரகசிய டிப்ஸ்!


வீட்டில் இருந்தபடியே பப்பாளி ஃபேசியல் செய்வது எப்படி!


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo