பிறந்த நாள் என்பது ஒரு சாதாரண நாள் இல்லை. இந்த உலகத்திற்கும் உங்களுக்கும் தொடர்பை ஏற்படுத்திய நாள். சிலர் பிறந்த நாளின் முக்கியத்துவத்தை உணரவேயில்லை. சிலர் நான் பிறந்த நாள் கொண்டாடுவதையே நிறுத்திவிட்டேன் என்று சலிப்பாக சொல்லுகின்றனர். நாம் இந்த பூமியில் பிறப்பதன் மூலம் பல்வேறு சொந்தங்களை ஏற்படுத்துகின்றோம். சிலரின் செல்லப்பிள்ளையாக கூட மாறுகின்றோம். பிறந்த நாளை கொண்டாடுகிற அளவிற்கு நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என கூட சிலர் கருத்து தெரிவிக்கலாம். ஆனால் சின்ன வாழ்த்து மற்றும் மகிழ்ச்சியான வார்த்தைகள் போதும் பிறந்த நாளை சந்தோஷப்படுத்துவதற்கு.
பிறந்த நாள் குறித்து பல்வேறு தலைவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதில் சிறந்த பதிலாக நம் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஐயா (Former President Dr. APJ Abdul Kalam Azad) அவர்களின் பதில் தேர்வு செய்யப்பட்டது. அவரின் பதில் – வாழ்க்கையின் முதல் மற்றும் கடைசி நாளாக உள் அழுகை குரல் கேட்டு உன் தாய் சிரித்த தருணம் அது.
பிறந்த நாளை நீங்களும் சிறு சிறு வாழ்த்து மடல் மற்றும் வார்த்தைகளை கொண்டு பரிமாற பழகிக்கொள்ளுங்கள். அதற்கு நாங்கள் உதவி செய்கிறோம்.
Pirantha Naal Vaazhthukkal ஒவ்வொரு உறவுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் (Birthday Wishes In Tamil)
கணவருக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள் (Birthday Wishes For Husband)
- தினமும் கடவுளிடம் வேண்டி கொள்கிறேன் உங்களை போல நல்ல கணவன் எனக்கு அமைந்த கொடுப்பினைக்கு.
- கஷ்டம் வந்தாலும் காட்டி கொள்ளாமல் என் மனம் நோகுமோ என்று நினைத்து என்னை பற்றி கவலைப்படும் என் அன்பானவருக்கு இனிய பிறந்த தின வாழ்த்து.
என் மணாளனின் பிறந்த நாளே என் வாழ்க்கையின் மகத்தான சந்தோசம். வாழ்த்துக்கள் கணவரே. - நமக்குள் எத்தனை சண்டைகள், மனஸ்தாபங்கள், வேதனைகள், கோபங்கள் இருந்தாலும் நிகழ்ந்தாலும் என்றுமே பிரிவு என்ற ஒன்று மட்டும் நமக்குள் வந்ததில்லை. அதுவே நாம் சிறந்த கணவன் மனைவி என்ற இலக்கணத்திற்கு வழி வகுக்கிறது. வாழ்த்துக்கள் என் ஆருயிரே
தந்தை தன் மக்களை காக்கவும் நல்ல படியாக பார்த்து கொள்ளவும் தேர்ந்தெடுக்கும் சிறந்த வாலிபனே “கணவன்” - அன்று உனக்கென என்னை தாரை வார்த்தார்கள். இன்று எனக்குள்ளே உன்னை வைத்து நான் காதலை வளர்க்கிறேன். என் இதயபூர்வமான வாழ்த்துக்கள் புருஷா
- உங்களை பற்றி ஒன்றும் தெரியாமல் மணவறைக்குள் அமர்ந்தேன். இன்று உங்களை பற்றி முழுவதும் புரிய வைத்து என் இல்லறத்தை அழகாக்கி விட்டீர்கள். என் சார்பில் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள் என் ஆசை நாயகனுக்கு.
- வாழ்க்கை சிறக்க வேண்டுமானால் அவசியம் நல்ல கணவன் அமைய வேண்டும். அப்படிப்பட்ட உண்மையான என் கண்ணாளனுக்கு என்னவர் உதித்த சிறந்த தினமான இன்று என் வாழ்த்துக்களை பகிர்வதில் எனக்கு கொள்ளை சந்தோசம்.
- என் காதலால் உன்னை தேர்ந்தெடுதேன், மனைவியாக உன்னோடு சங்கமம் ஆயினேன், நம் குழந்தைகளில் அன்னையாக இன்று முழுவதுமாக நம் தாம்பத்ய வாழ்க்கைக்கு அர்த்தம் தேடி கொண்டேன். என்றுமே மனதில் நிலைக்குமாறு நாம் கொண்டாடும் உன் பிறந்த தினம் அமையட்டும். என் காதல் கணவனுக்கு ஹாப்பி பர்த்டே
- குறிஞ்சி பூப்பது பனிரெண்டு வருடத்திருக்கு ஒரு முறைதானாம் யார் சொன்னது? வருடத்திற்கு ஒருமுறை பூக்கிறது உன் பிறந்த நாளாக!
கர்ப்ப காலத்தில் யோனியில் ஏற்படும் மாற்றங்கள் – நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
காதலருக்கான பிறந்த நாள் வாழ்த்து (Birthday Wishes For Lovers)
- இன்று என்ன வருடத்தின் பெளர்ணமி நாளா உலகமே உன்னை போல் முழு நிலவாய் தெரிகிறதே
- உன் பிறந்தநாளன்று முதலாளாய் 12 மணிக்கே வாழ்த்தவில்லையென சண்டைக்கு வருகிறாய். நீ பிறந்த நேரத்தில் வாழ்த்துவதற்காய் நான் காத்திருந்ததை எப்படி சொல்லிப் புரிய வைப்பது?
உன் பெயரில் நடக்கும் பிறந்தநாள் அர்ச்சனையை ஏற்றுக்கொள்ள தவம் கிடக்கின்றன… எல்லாத் தெய்வங்களும்! - மழைக் காலம், கார்காலமெல்லாம், எந்த மாதமென்று எனக்குத் தெரியாது… நீ பிறந்த மாதம் அழகுக்காலம்!
- ஒருமுறைதான் பிறந்தாய் உன்னைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் பிறக்கிறேன்!
என் மனதை என்னிடம் இருந்து சப்தம் இல்லாமல் பறித்தவனே. என் காதல் என்ற இலக்கியத்துக்கு அழகான இலக்கணம் தந்தவனே. என் நேசத்தை கத்தியின்றி ரத்தமின்றியும் அலங்காமல் கொள்ளை அடித்த என் உயிர் காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். - கண்களுக்கு என்றுமே மனதின் மொழி புரியும். அதனால் தான் என்னவோ என்னை உன்னிடம் சேர்த்து வைத்து விட்டது. உன்னவளின் உனக்கான பிறந்த தின நல்வாழ்த்துக்கள்.
- புன்னகை என்ற ஒன்று என்றுமே உன் இருப்பிடம் தேடி கட்டாயம் வந்து அடைய மனநிறைவுடன் உன் நலனையே என்றும் விரும்பும் உன்னுடைய காதலியின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
- என் வாழ்க்கையில் இனிமை என்ற ஒன்றை உன் நினைவுகளால் தந்தவனே. உன்னை நான் என்றுமே மறவேன். வாழ்விலும் நாம் ஒன்றாக இணையும் காலம் வெகு தூரம் இல்லை. இந்த புது வருட உன் பிறந்த தினம் நம் காதலை மேலும் அழகாக்கும் என நம்புகிறேன் வாழ்த்துக்கள் காதலா.
- உன் காதல் என்னும் மோக வலையத்தில் ஈர்த்து என்னை மீண்டு வர கூட வழி தெரியாது. சிறை செய்து வைத்து இருக்கும் என் திருட்டு காதல் கள்வனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்து.
சகோதரருக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள்(Birthday Wishes For Brothers)
- என்றும் என்னுடனே இருக்கும், உயிருக்கு உயிராய், சண்டையிடும் கோழிகளாய், பாசத்தில் பரவசமாய், ரத்த பந்தத்தில் என் சொந்தமாய் விளங்கும் என் அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
- எப்போதுமே நமக்குள்ளே வருமே வேற்றுமை. அந்த வேற்றுமையிலும் ரத்த பந்த சொந்தத்தால் வளரும் நமக்குள்ளே ஒரு ஒற்றுமை. இனிய நல்வாழ்த்துக்கள் அண்ணா.
- வாழ்க்கையில் என்றுமே வெற்றிகளே உன் படையலில் குவியட்டும். பல சாதனைகளைஉனதாக்கி விருதுகள் உன் மனதை வலுவாக்கட்டும். என் உள்ளம் கனிந்த இனிய பிறந்த தினம் வாழ்த்து என் சகோதரனே
- இன்று உன் வாழ்க்கையில் நீ காணும் பிறந்த நாள் பொலிவோடும் என்றுமே நிலைத்து நிற்குமாறு உன் வாழ்வில் மாறுதல்களையும் தருமாறு அமையட்டும். பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் அன்பான உடன்பிறப்பே.
- உன் வாழ்க்கையில் பிறந்த நாள் எனும் புதிய அத்தியாயம் நோக்கி பயணிக்க இருக்கும் என் சகோதரனுக்கு இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள்.
Also Read: தந்தையர் நாள் பரிசு கருத்துக்கள்
சகோதரிக்கு பிறந்த நாள் வாழ்த்து (Birthday Wishes For Sisters)
- பத்து மாதம் என்னை சுமக்காமல் எனக்கு தாய் ஆனாள், தன் அன்பான அரவணைப்பிலும் நாசூக்கான கண்டிப்பிலும் எனக்கு தந்தாய் ஆனாள், பட்ட படிப்பு படிக்காமலே எனக்கு பாடம் சொல்லி தரும் குரு ஆனாள், அவள் தான் என் உடன் பிறந்த சகோதரி. என் அன்பார்ந்த பிறந்த தின வாழ்த்துக்கள்.
- நீ என்னை அடித்தாலும் நான் உன்னை கடிந்தாலும் இறுதியில் பாசம் என்ற ஒன்று வரும்போது அனைத்துமே மறைந்து போகும் ரத்த பிணைப்பில் இணையும்போது இனிய நல்வாழ்த்துக்கள் என் சகோதரியே.
- கடவுளிடம் என்றுமே என்னை விட்டு நீங்காத வரம் ஒன்றை கேட்டதால் தான் என்னவோ எனக்கு தங்கையை அளித்திருக்கிறான் போலும். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் நேசமிகு தங்கையே.
- பாசம் என்ற ஒன்றை அறியாதவரும் அறிவார் அக்கா, தங்கைகள் கூட பிறக்கும்போது.
அம்மாவை போன்ற தாய்மை குணத்தை இன்னொருவரிடம் காண முடியும் என்றால் அது நிச்சயம் அக்காவாக தான் இருக்க முடியும் என்றும் சீரும், சிறப்புடன் வாழ உன் பிறந்த நாளில் போற்றுகிறேன். - என்றும் வற்றாமல் நல்ல குணத்துடனும், நீண்ட ஆயுள் மற்றும் அளவில்லாத செல்வத்துடனும் என்றுமே புகழோடும் புன்னகையோடும் வாழ உன் பிறந்த நாளில் வாழ்த்துகிறேன் என் சகோதரியே.
முகத்தின் அழகை கெடுக்கும் முடியை வீட்டிலேயே சரி செய்யலாம்!
பெற்றோருக்கு பிறந்த நாள் வாழ்த்து (Birthday Wishes For Father)
- ஒவ்வொரு நாளும் எனக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்து அழகு பார்த்த என் அழகான அப்பாவுக்கு இந்த பிறந்த நாள். என்றும் நீங்கள் நூறு வயது வரை எந்த குறையும் உடலிலும், மனதிலும் காணாது நீண்டு வாழ நான் பிரார்த்திக்கிறேன்.
- இன்பம் மட்டுமே கூட்டிக்கொண்டு துன்பம் என்ற ஒன்றை உங்கள் வாழ்க்கையில் களைத்து விட்டு ஆயுள் என்ற ஒன்றை மென்மேலும் பெருக்கி கொண்டும் காலம் முழுவதும் நலமுடன் வாழ இந்த இனிய பிறந்த தினத்தில் வாழ்த்துகிறேன்.
- அன்று நான் என் அப்பாவின் மடியில் குழந்தையாய் இருந்தேன் இன்று என் அப்பா என் பிள்ளையிடம் விளையாடி குழந்தையாகி விட்டார். என் கனிவான உங்களுக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் செல்ல தந்தையே.
- என் வாழ்க்கையில் எல்லா நாளுமே உங்களை நினைக்காத நாள் இல்லையே என் அன்பு தந்தையே. நீங்கள் பிறந்த இந்த பொன்னான சிறப்பு தினத்தில் இன்று போல் என்றும் குறை இன்றி மனதில் கவலைகள் இல்லாது நூறு ஆண்டுகளுக்கும் மேலே நீங்கள் வாழனும் என வாழ்த்துகிறேன் அப்பா.
- தனது மகளை அப்பாவை விட நேசிக்கவும், நன்கு பார்த்து கொள்ளவும், அவள் வாழ்வை வளப்படுத்தி சிறப்பாக்கி கொடுக்க வேறு ஒரு ஆடவர் எவரும் இருப்பதாய் எனக்கு தோன்றவில்லை. அப்படிப்பட்ட என் தந்தைக்கு இந்த செல்ல மகளின் பிறந்த நாள் நல்வாழ்த்துகளைஉரித்தாக்குகிறேன்.
- வாழ்க்கை கொடுக்கும் அனுபவங்களை இலவசமாக சொல்லி கொடுக்கும் ஆசான் தான் என் அப்பா. என் உள்ளம் கனிந்த பிறந்த தின வாழ்த்துக்கள்.
குழந்தைக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள்(Birthday Wishes For Children)
- பூக்களின் எதிரி அழகிலே, நிலவுக்கு சொந்தக்காரி நிறத்திலே, குறும்புக்கார சிறுமி குணத்திலே, வாய் ஜால கில்லாடி பேச்சிலே, பாசமிகு தேவதை எங்கள் இதயத்திலே. எம் வம்சத்தின் குலவிளக்கான என் செல்ல குட்டிக்கு இன்று பிறந்த நாளாம் என் பொன்னான நல்வாழ்த்துக்கள்.
- எங்கள் வாழ்க்கையின் சிறந்த தினம் என் மகளாக இந்த குடும்பத்தில் நீ ஒரு அங்கமாக ஜனனித்த இந்த உன் பிறந்த தினம்.
- அன்று நீ பிறந்த இந்த நாளில் நம் குடும்பத்தில் மகாலட்சுமியே குடி வந்தது போல உணர்ந்தேன். என்றுமே நீ இன்பமாகவும் நினைத்தது அனைத்தும் ஜெயம் பெற வாழ்த்துகிறேன்.
- வாழ்க்கையின் இன்னல்களை தவிடு பொடியாக்கி என்றும் மென் மேலும் உயர்ந்து என் மகளாக உன்னை அடைந்ததற்கு நான் பெருமிதம் கொள்ளும்படி செய்வாயாக. என்றும் வளம் பெற பிறந்த நாளில் வாழ்த்துகிறேன் உன்னை.
- எங்கள் வீட்டின் சொத்தான மாண்புமிகு இளவரசிக்கு இந்த பிறந்த நாள் மிக சிறப்பானதாக அமையவும் உன் வாழ்க்கை இன்று கொண்டாடி மகிழும் இனிப்பை போல என்றும் சிறக்க வாழ்த்துகிறேன் என் தங்கமான மகளே.
முகத்தை பளபளப்பாக்கும் வைட்டமின் ஈ ஆயில் எப்படி பயன்படுத்தலாம்
பாஸ்ஸிற்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள் (Birthday Wishes For Boss)
- உங்களை போன்ற ஒரு சிறந்தவரோடு சேர்ந்து பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
- தாங்கள் என்னுடைய முதலாளி மட்டுமன்று என்னுடைய சிறந்த நண்பனும் மற்றும் சிறந்த வழிகாட்டியும் ஆவீர்கள். நன்றி. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
- உன் பிறந்த நாளான இன்று உனக்கு எல்லா சந்தோசங்களும், நலமும், வளமும் பெறுவாயாக. இவ்வனைத்தும் உனக்கு என்றும் நிறைவுடன் கிடைக்கும்.
- நான் பணிக்கு சேர்ந்த முதல் என்னை சரிசமமாக மரியாதையுடன் நடத்தும் என இனிய முதலாளிக்கு பிறந்த நாள் வாழ்த்து
- உன்னிடம் இன்று நான் கற்றுக்கொண்டது அநேகம். உன்னிடம் நான் தேடியும் கண்டுபிடிக்க முடியாத கர்வமற்ற என் பாஸ்ஸிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo