எல்லாரும் எதிர்பார்த்த பிக் பாஸ் மூன்றாவது சீசன் ஜுன் 23ம் தேதி! போட்டியாளர்கள் யார் தெரியுமா?

எல்லாரும் எதிர்பார்த்த பிக் பாஸ் மூன்றாவது சீசன் ஜுன் 23ம் தேதி! போட்டியாளர்கள் யார் தெரியுமா?

பிக் பாஸ்(Bigg boss) மூன்றாவது சீசன் விரைவில் தொடங்க இருக்கிற நிலையில், வெளியிடப்படும் தேதி குறித்து பல்வேறு தகவல்கள் பரவலாக பேசப்பட்டது. தற்போது எப்போது வெளியிடப்படும் என்கிற தேதியை பிரபல சேனல் நிறுவனம் அதிகார பூர்வமாக தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


பிக் பாஸ்(Bigg boss)நிகழ்ச்சி ஒட்டுமொத்த தொலைக்காட்சி மக்களையும் கட்டிப்போட்ட ஒன்று. அடுத்து என்ன நடக்கும் என்று பார்ப்பதில் மக்களுக்கு அவ்வளவு ஆர்வம்.


அதிலும் மற்றவர்களை விமர்சிப்பது என்பது ஈஸியான ஒரு விஷயம் கூட. இந்நிகழ்ச்சியின் 3வது சீசன் புரொமோக்கள் இதுவரை வெளியான நிலையில் நிகழ்ச்சி குறித்து ஒரு புது அப்டேட்.


அதாவது நிகழ்ச்சி(Bigg boss) வரும் ஜுன் 23ம் தேதியில் இருந்து தொடங்க இருக்கிறதாம்.அதில் கலந்துகொள்ள இருக்கிற போட்டியாளர்களை இறுதி செய்கிற வேலையில் மும்முரமாக இருக்கிறது சேனல் தற்போது அந்த பணியும் நிறைவடைந்து முடிவு செய்யப்பட்டுள்ளது


செலிபிரிட்டிகள் பலரிடமும் இதற்காகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். (காமெடி நடிகை மதுமிதா கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது.)


பளபளப்பான அழகான உதட்டை பெற! லிப்ஸ்டிக் போடுவதற்கான எளிய முறைகள்!


ஷங்கர் படத்தின் ஷூட்டிங் போல இந்த ஏற்பாடுகள் படு சீக்ரெட்டாக நடந்து வந்தாலும், அந்த ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே இருக்கும் ஸ்லீப்பர் செல்கள் ரிலீஸ் செய்கிற க்ளிப்பிங்ஸ் போல நமக்கும் தகவல்கள் ஏதாவது வந்து விடுகின்றன. அந்த வகையில், இந்த வாரம் பிக் பாஸ்(Bigg boss) 3 குறித்து கிடைத்த ஏறக்குறைய உறுதி செய்யப்பட்ட மூன்று தகவல்கள் உங்களுக்காக இங்கே..முதலாவது, பிக் பாஸ்(Bigg boss) சீஸன் மூன்றில் நிச்சயம் ஒரு திருநங்கை கலந்து கொள்கிறார். முதல், இரண்டாவது சீசனிலேயே திருநங்கை ஒருவரை கலந்துகொள்ள வைக்க சேனல் முயற்சி செய்து, அது தோல்வியில் முடிய, இந்த சீசனில் அது சாத்தியப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.


இதற்காக மீடியா வெளிச்சம் பட்ட திருநங்கைகள் சிலரிடம் பேசியிருக்கிறார்கள். யார் என்பது அடுத்த சில தினங்களில் தெரிந்து விடும். இரண்டாவது, பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் கலந்துகொள்வதாகவும் தெரியவந்துள்ளது. மூன்றாவது பண்பலை ரேடியோவின் ஜாக்கி ஒருவர் கலந்துகொள்கிறார். 


வாய் துர்நாற்றத்தை போக்கும் எளிய வீட்டு வைத்திய முறைகள்


கண்டிப்பாக இந்து பிக் பாஸ் 2 வது சீசன் போன்று மொக்கையாக இருக்கக் கூடாது என்பதில் சேனலும் பிக் பாஸ் நிறுவனமும் அதிக முயற்சி எடுத்து வருகின்றனர். முதல் பிக் பாஸிற்கு இருந்த வரவேற்பு கண்டிப்பாக ்இரண்டாவது பிக் பாஸிற்கு இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் இரண்டாவது சீசனில் விட்டதை பிடிக்க சேனல் அதிக மெனக்கெடல் எடுத்து வருகின்றது. மூன்றாவது சீசனில் பிரபலமானவர்களை உள்ளே இரக்கினால் தான் பிழைக்க முடியும் என்று யோசித்த நிறுவனம் கொஞ்சம் பிரச்சணைக்குரியவர்களையும் உள்ளே இரக்க துணிந்துள்ளது என்பது கூடுதல் தகவல்கள்.


உடலில் அதிகமான வியர்வை வெளியேறுவது ஏன்? என்னென்ன மாற்றங்கள் நிகழும்?


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo