பளபளக்கும் தக்காளி பேஷியல் வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

பளபளக்கும் தக்காளி பேஷியல் வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

தக்காளி(Tomato)ஜூஸை பயன்படுத்தி முகத்துக்கு வசீகரம் சேர்க்கலாம். தக்காளியில் கலந்திருக்கும் வைட்டமின் சி முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் தோன்றுவதை கட்டுப்படுத்தும். தக்காளி(Tomato) ஜூஸுடன் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி எளிய முறையில் முகத்திற்கு பேஷியல் செய்வது பற்றி பார்ப்போம்.


எண்ணெய் பசையான சருமம் கொண்டவர்கள் தக்காளி ஜூஸுடன் வெள்ளரிக்காய் மற்றும் தேன் கலந்து பயன்படுத்தலாம். ஒரு தக்காளி(Tomato) பழத்தை மிக்சியில் அரைத்து ஜூஸாக்கிக்கொள்ள வேண்டும். அதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் பேஸ்ட் மற்றும் இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவிவிடவும். தக்காளி(Tomato) ஜூசும், வெள்ளரிக்காயும் முகத்தில் படியும் அதிகப்படியாக எண்ணெய் பிசுபிசுப்பை போக்கி, முகத்தை பளபளக்கசெய்யும்.


உருளைக்கிழங்கு துருவல் சாறு - 1 டீஸ்பூன்,
தக்காளி விழுது - அரை டீஸ்பூன்


இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை கழுத்திலும் முகத்திலும் தடவி 20 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால், சில வாரங்களிலேயே வித்தியாசத்தை உணர முடியும். ரொம்ப நாட்களாக முகத்தை சரிவர பராமரிக்கதாவர்களின் முகத்திலுள்ள செல்கள் இறந்து போய் முகம் பொலிவிழந்து விடும்.


அவர்களுக்கான ஸ்பெஷல் சிகிச்சை இந்த தக்காளி பேஷியல் ஸ்க்ரப். ஒரு தக்காளியின்(Tomato) சாறுடன் கால் டீஸ்பூன் ரவையைக் கலந்து கொள்ளுங்கள் இதை நன்றாக முகத்தில் தேய்த்துக் கழுவுங்கள்.


தொடர்ந்து இதைச் செய்து வந்தால், முகம் சூரியனாகப் பிரகாசிக்கும். காரணம் தெரியாமலேயே நல்ல பழக்கங்களை கடைபிடிக்கும் வயது இது. ஒரு நல்ல நடத்தையால் என்ன நன்மை என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர் இச்சமயத்தில் சொல்லி கொடுத்தால் அந்நடத்தை அவர்களின் ஆளுமையில் வேறூன்றி ஆயுட்காலம் முழுமைக்கும் நிலைத்து நிற்கும்.


உலர்ந்த சருமம் கொண்டவர்கள் தக்காளியுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து பயன்படுத்தலாம். ஒரு தக்காளி(Tomato) பழத்தை ஜூஸாக்கி அதனுடன் இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை கலந்து முகத்தில் பூசிவர வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து நன்றாக உலர்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரை கொண்டு முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். குளிர்ந்த நீரை பயன்படுத்தக்கூடாது. தொடர்ந்து அவ்வாறு மசாஜ் செய்து வந்தால் சருமம் மென்மையாகவும், ஈரப்பதமாகவும் மாறத்தொடங்கி விடும்.


சுற்றுப்புற மாசுகளால் சருமத்தில் படியும் அழுக்குகளை போக்குவதற்கு தக்காளி, தயிர், எலுமிச்சை பழம் ஆகியவற்றை பயன்படுத்தலாம். ஒரு தக்காளி பழத்தை ஜூஸாக்கி அதனுடன் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, சிறிதளவு தயிர் சேர்த்து முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால் சருமம் பளிச்சென்று காட்சியளிக்கும். மாசுவினால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தலாம்.


மென்மையான, மிருதுவான சருமத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு தக்காளியும், ஓட்ஸும் கைகொடுக்கும். தக்காளிப்பழத்தை(Tomato) கூழாக்கிக்கொள்ள வேண்டும். ஓட்ஸை பவுடராக மாற்றிவிட வேண்டும். பின்னர் தலா இரண்டு டேபிள் ஸ்பூன்கள் தக்காளி கூழையும், ஓட்ஸையும் ஒன்றாக பிசைந்து அதனுடன் சிறிதளவு வெள்ளரிக்காய் கூழை சேர்த்து முகத்தில் பூசிவர வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுவது அவசியம்.


தக்காளியை கூழாக்கி ஏதாவது ஒருவகையில் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சருமம் மிருதுவாகவும், பளபளப்புடனும் காட்சி தரும்.


சருமத்தில் தென்படும் நிறத்திட்டுகளையும், புள்ளிகளையும் போக்கி சருமத்திற்கு பொலிவு சேர்ப்பதிலும் தக்காளி ஜூஸின் பங்களிப்பு அதிகமிருக்கிறது. தக்காளிப்பழத்தை கூழாக்கி அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்க்க வேண்டும். ஒரு டீஸ்பூன் பாலும் சேர்த்துக்கொள்ளலாம். அந்த கலவையை முகத்தில் பூசிவிட்டு அது நன்றாக உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி வர வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால் சருமம் பிரகாசமாகும்.


செக்ஸ் உணர்வை தூண்டும் பெண்களின் மார்பகம் ஆண்கள் காதலிக்க காரணம்?


கூந்தல் அழகை பராமரிக்கும் கற்றாழையின் 6 அற்புத பயன்கள்


வயதில் குறைவான நடிகர்களை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நடிகைகள்


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo