பெண்களின் அழகு குறிப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். புராணங்களில் கூந்தலை வைத்து அநேக கவிதைகள் விவாதங்கள் மற்றும் கவிதைகளே இருக்கின்றன. பெண்ணிற்கு மிக பெரிய மகிமையை கூந்தல் தருகின்றது. தற்போது இருக்கும் நவநாகரீக உலகின் கூந்தலை பராமரிப்பது என்பது அனைவருக்கும் சாத்தியமில்லாத விஷயமாக உள்ளது. கூந்தலை பராமரிக்க கண்ட கண்ட க்ரீம்கள் மற்றும் பொருட்களை வாங்கி முற்றிலுமாக கெடுத்துக்கொள்கின்றனர்.
அழகுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் முக்கிய இடம் கற்றாழைக்கு(aloe-vera) உள்ளது. இயற்கையாக கிடைக்கும் காற்றாழை ஜெல்லை கொண்டு கூந்தலுக்கு மாஸ்க் போட்டு வந்தால் முடி பளபளக்கும், பட்டுப்போன்ற மென்மையான கூந்தலையும் பெறலாம். கற்றாழையானது கூந்தலுக்கு இயற்கை கண்டிஷனராக பயன்படுகின்றது. ரசாயனம் கலந்த செயற்கை ஷாம்புக்களை தவிர்த்து இயற்கையான முறைக்கு மாறினால் கூந்தலுக்கு மட்டுமின்றி உடலும் நலம் பெறும்.
தொடர்ந்து கற்றாழை(aloe-vera) ஜெல்லை கூந்தலுக்கு பயன்படுத்தி வந்தால் கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. இதனால் கூந்தல் பாதுகாக்கப்படுகின்றது. கூந்தலுக்கு தேவையான விட்டமின்கள், மினரல்கள் கற்றாழையில் இருந்து கிடைப்பதால் கூந்தலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது. சரியான பிஎச் அளவு கூந்தலுக்கு கிடைப்பதோடு, நீளமான கூந்தலை பெறலாம்.
காற்று மற்றும் வெயில் காரணமாக கூந்தல் வறட்சி அடைவதோடு, கூந்தலின் முனை வெடித்து விடுகின்றது. ஆனால் தொடர்ந்து கற்றாழை ஜெல்லை(aloe-vera) பயன்படுத்தி வரும்போது மாசுவில் இருந்து பாதுகாப்பதோடு கேசம் உடைவதையும் தடுக்கின்றது.கற்றாழை ஜெல்aloe-vera முடி உதிர்வை தடுத்து கூந்தலை வலுவுடையதாக்குகின்றது. பொடுகு, மாசு உள்ளிட்டவற்றில் இருந்து கூந்தல் பாதுகாக்கப்படுவதால் முடி உதிர்வு என்ற விஷயத்திற்கே இடமின்றி போகின்றது.
வளர்ச்சி
கற்றாழை ஜெல்லில்(aloe-vera) புரோட்டியோலைடிக் என்சைம் உள்ளது. இது தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி மயிர்கால்களுக்கு போஷாக்கு கொடுத்து கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
பட்டு போன்ற கூந்தல்
கற்றாழை ஜெல்(aloe-vera) உங்கள் கூந்தலை உடனடியாக பட்டு போன்று மென்மையாக மாற்றி விடும். எனவே உங்கள் கூந்தலை சிக்கல் இல்லாமல் பராமரிக்க எளிதாகும். இனி எந்த ஹேர் ஸ்டைலையும் நீங்கள் போட்டு அசத்தலாம்.
அடர்த்தி
இது கூந்தல் உதிர்வை குறைத்து கூந்தல் அடர்த்தியாக வளர பயன்படுகிறது.
அழற்சி
இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் அழற்சி போன்றவற்றைப் போக்குகிறது.
பூஞ்சை
கற்றாழையில்(aloe-vera) உள்ள பூஞ்சை எதிர்ப்பு பொருள் தலையில் ஏற்படும் பொடுகு மற்றும் வறண்ட சருமத்தை போக்கி ஆரோக்கியமான சருமத்தை கொடுக்கிறது.
போஷாக்கு
கற்றாழை ஜெல்லில்(aloe-vera) உள்ள புரோட்டியோலைட்டிக் என்சைம், புரோட்டீன், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கூந்தலுக்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்து மயிர்கால்களை ஆரோக்கியமாக வைக்கிறது.
ஈரப்பதம்
கற்றாழை ஜெல்(aloe-vera) உங்கள் கூந்தலுக்கு போதுமான ஈரப்பதம் மற்றும் நீர்சத்தை கொடுக்கிறது. இதை உங்கள் வீட்டு தொட்டியில் மற்றும் தோட்டங்களில் கூட எளிதாக வளர்த்து கொள்ளலாம். தண்ணீரே இல்லாமல் வறட்சியான பகுதிகளில் கூட இது நன்கு வளரும் தன்மை கொண்டது. சிறியதாக ஒரு செடியை நட்டால் போதும். அது படந்து வளர ஆரம்பித்து விடும்.
கற்றாழை பேக்
தேவையான பொருட்கள்:- தேங்காய் எண்ணெய் கற்றாழை ஜெல்(aloe-vera)
பயன்படுத்தும் முறை – இதை இரண்டையும் நன்றாக கலந்து மெதுவாக தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் மசாஜ் செய்து வர வேண்டும். பிறகு நீரில் அலசிக் கொள்ளுங்கள். இதை வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வந்தால் நல்ல பட்டு போன்ற கூந்தல் அசைந்தாடும்.
இது போன்று வாரம் இரண்டு முறை கற்றாழையை(aloe-vera) பயன்படுத்தி கூந்தல் உதிர்வை தடுப்பதுடன் பட்டு போன்ற மென்மையான சில்கி கூந்தலை பெறலாம்.
பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube
வயதில் குறைவான நடிகர்களை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நடிகைகள்
செக்ஸ் உணர்வை தூண்டும் பெண்களின் மார்பகம் ஆண்கள் காதலிக்க காரணம்?
எள் விதையின் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்(Sesame Seeds)
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo