logo
ADVERTISEMENT
home / Budget Trips
அயல்நாட்டிற்கு பயணம் செய்ய  ஆசையா? உங்கள் செலவை குறைக்க சில  ட்ராவல் பட்ஜெட் டிப்ஸ்

அயல்நாட்டிற்கு பயணம் செய்ய  ஆசையா? உங்கள் செலவை குறைக்க சில  ட்ராவல் பட்ஜெட் டிப்ஸ்

#StrengthOfAWomen: பெண்களுக்கு ஆயிரம் வேலைகள், யோசனைகள் மற்றும் பொறுப்புகள் இருக்கலாம். அதற்காக நீங்கள் உங்கள் பொன்னான நேரத்தை உங்களிற்காக ஒதுக்க தயங்காதீர்கள். சில சமயங்களில்… எல்லா வேலைகளையும் உதறிவிட்டு சுற்றுலா செல்ல வேண்டும் என்ற அந்த ஒரு வாய்ஸ் உள்ளே ஒலிக்கும்.  இருப்பினும், அதை கவனித்து நமக்கு நாம் பதில் சொல்ல கூட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருப்போம். இப்படி நம் அனைவரும் எதற்கு எதை அடைய ஓடுகிறோம் என்று தெரியாமலே வாழ்கிறோம் என்பதுதான் கசப்பான உண்மை !

சரி ! அப்படி ஒரு வாய்ஸ் அடுத்த தரவை உங்களுக்குள் வந்தால், எதையும் யோசிக்காமல் கெளம்பிடுங்கள். உங்களிற்கான அந்த நேரத்தை ஒதுக்கி இந்த மங்கையர் மாதத்திலிருந்து உலகத்தை சுற்றி வர மற்றும் உலகின் அற்புதமான இடங்கள், மக்கள், உணவு, கலாச்சாரம்  என்று அனைத்தையும் ரசித்து அனுபவியுங்கள்.

உங்களுக்கு இது முதன்முறையாக இருந்தாலும் சரி அல்லது பலமுறை பயணம்(ட்ராவல்) செய்திருந்தாலும் சரி… உங்களிற்கான சிறந்த பட்ஜெட் (budget) மற்றும் பயண திட்டத்தின் விவரங்களை (டிப்ஸ்) நாங்கள் அளிக்கிறோம்.

விமான கட்டணம் –

20190302 203729

ADVERTISEMENT

தொலை தூரத்தில் இருக்கும் ஒரு இடத்திற்கு செல்ல விமான பயணம் (travel)அவசியமே. அந்த பயணத்திற்கான டிக்கெட்டுகளை  மிக சிறந்து சலுகையில் வாங்கிட, எவளவு வாரங்கள் /மாதங்களிற்கு முன்னதாக புக்கிங் செய்யவேண்டும் என்று பார்ப்பது அவசியம். விவரங்களிற்கு இங்கே பாருங்கள்.

இதை தவிர நீங்கள் சில புகழ்பெற்ற பயண வலைத்தளங்களிலும் ஒப்பிட்டு பார்க்கலாம். அல்லது,நீங்கள் ஒரு குறிப்பிட்ட விமானத்தில் மட்டுமே செல்பவர் என்றால் அவர்களின் வலைத்தளத்தில் உள்ள சலுகைகளை பெற்று விமான கட்டணத்தை குறைக்கலாம்.

தங்கும் இடம் –

ஒரு ஊரிற்கு சென்ற பின் அங்கு தங்குவது,அந்த இடம், மிக முக்கியமான ஒன்று. இதை உங்கள் விருப்பம் போல் அமைத்துக்கொள்ள பிரபலமான வலைத்தளங்களில் அந்த ஊரில் /நாட்டில் உள்ள 3 ஸ்டார் /5 ஸ்டார் ஹோட்டல்களை பார்க்கலாம். அல்லது  உங்களுக்கு வெளிநாட்டிலும் வீட்டை போல் ஒரு அனுபவம் தேவைப்பட்டால் அதற்கென்று சில வலைத்தளங்கள் உள்ளது. விவரங்கள் இங்கே !

இங்குள்ள விடுதி மிக சிறந்த விலையில்  அற்புதமாக இருக்கிறது. இதை நீங்கள் மற்ற பயணிகளுடன் பகிர்ந்து தங்கலாம். உங்கள் செலவும் மிச்சமாகும், நட்பு வட்டாரமும் பெருகும்.

ADVERTISEMENT

உணவு –

breakfast-2408818 960 720

வெளிநாட்டில் உணவுக்கு பயந்தே நம்மில் பலபேர் சுற்றுலா செல்ல தயங்குவார்கள். இனி அந்த கவலை வேண்டாம். சில ஹோட்டல்களில் காலை ப்ரேக்பாஸ்ட இலவசமாக இருக்கும். அதை பயன்படுத்துங்கள். சில ஹோட்டல்களில் அறைகள் சமையல் அறையுடன் வரும். இதில் நீங்கள் உங்கள் தேவைக்கு சமைத்துக்கொள்ளலாம். அதை பார்த்து புக் செய்யுங்கள். அல்லது, உங்கள் பாக்கிங்கில் ரெடி மிக்ஸ் உணவு வகைகள் (சாம்பார் சாதம், உப்மா, சூப்,டீ, காபி ) அனைத்தையும் கொண்டு சென்றால் உணவு செலவு மிச்சம்.

தங்கும் இடம், விமான கட்டணம் மற்றும் உணவு இது மூன்று மட்டுமே உங்கள் பட்ஜெட்டில் இருக்கும் பெரிய செலவு. இதை தாண்டிவிட்டால் மீதி இருக்கும் செலவுகளை எளிதில் சமாளிக்கலாம். அதை தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.

உள்ளூர் பயணம் –

எந்த நாட்டிற்கு சென்றாலும், அங்கு உள்ளூர் பயணம் என்று ஒன்று இருக்கதான் செய்யும். அதற்கென்று நீங்கள் ஒரு சிறிய தொகையை எடுத்து வைக்க அங்குள்ள முக்கிய இடங்கள், அதற்கான கட்டணம் என்று எல்லாவ்ற்றையும் அந்நாட்டின் வலைத்தளத்தில் பாருங்கள். இதில் பஸ், டாக்ஸி, மெட்ரோ அல்லது நடந்து செல்வதில், எது சிறந்த வழி என்று முன்கூட்டியே தோராயமாக தீர்மானித்து வையுங்கள். நான் சமீபத்தில் துபாய் சென்ற போது, எந்த திட்டமும் இலாததுனால் பெரும்பாலான இடங்களிற்கு டாக்ஸியில் சென்றேன். அது சௌகரியமாக இருந்தாலும் அதை விட மிக குறைவான கட்டணமாக இருந்தது அங்குள்ள மெட்ரோ ரயில். இதுபோல் மெட்ரோ ரயிலில் சென்றால் அங்குள்ள வீதிகள் மற்றும் உள்ளூர் மக்கள் எல்லாவற்றையும் முழுமையாக ஆராய ஒரு அறிய வாய்ப்பாக அமையும் என்றது என் கருத்து.

ADVERTISEMENT

ஷாப்பிங் –

20190302 204219

மிக மிக முக்கியமான ஒரு பகுதி !! இதற்காகவும் கூட நீங்கள் நான் மேல் கூறி இருக்கும் மற்ற செலவுகளை குறைத்து விடலாம். ஏனெனில் ஷாப்பிங்கில் ஒரு தனி சந்தோஷத்தை நாம் அடையலாம். இல்லையா?! உங்கள் கவனத்திற்கு,  நீங்கள் செல்லும் நாட்டில் எந்த பொருள் சிறந்ததாகவும் பிரபலமாகவும் இருக்கிறது என்று நன்கு அறிந்து அதை வாங்குங்கள். துபாய் சென்று தங்கம் வாங்குவதை விட்டுவிட்டு காஷ்மீரி போர்வையை வாங்குவதில் என்ன பலன்? அது நம் நாட்டிலேயே கிடைக்கும் அல்லவா?  

மற்ற செலவுகள் –

வேடிக்கை பார்ப்பது, முக்கிய இடங்களில் நுழைவு கட்டணம், அங்கு ஏதேனும் சாப்பிட ஸ்னாக்ஸ், மேலும் மற்ற உடல் நல செலவுகள் (தேவைப்பட்டால் ) என்று இதற்கு ஒரு சிறிய தொகையை எடுத்து செல்லுங்கள்.

சாமர்த்தியமாக சிந்தித்து, திட்டமிட்டால், வெளிநாட்டையும் நாம் பட்ஜெட்டில் வலம் வரலாம்!

ADVERTISEMENT

gifskey

பட ஆதாரம்  – பிக்ஸாபெ,ஜிப்ஸ்கி,பேக்செல்ஸ் ,இன்ஸ்டாகிராம்  

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

ADVERTISEMENT

Also read places you can travel in Tamilnadu during different months of the year

01 Mar 2019
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT