சுதந்திரம் பெருகிய இந்த காலத்தில் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யும்படி தொழிநுட்பங்களும் பெருகிவிட்டது.
இதனால் நாம் எப்போது வேண்டும் என்றாலும் நமக்கு விருப்பமான இடத்திற்கு போக முடிகிறது. இருப்பினும் பயணம் என்று வருகையில் செல்லும் இடத்தின் தட்ப வெட்ப நிலை விழாக்கள் போன்றவற்றை மனதில் கொண்டு தமிழ் நாட்டில் எந்தெந்த மாதங்களில் எங்கெங்கு பயணிக்கலாம் என்பது பற்றி பார்க்கலாம்
முதலில் குளிர்வாசஸ்தலங்களுக்கு செல்பவர்கள் கொடைக்கானல், உதகை, குன்னூர், ஏலகிரி, தேக்கடி, மேகமலை, ஏற்காடு போன்ற இடங்களுக்கு கோடை காலம் மற்றும் வசந்த காலங்களில் செல்லலாம்.
இது அனைவருக்கும் பொதுவான காலமாக இருக்கும்.
தமிழகத்தின் தலை நகரான சென்னைக்கு சுற்றி பார்ப்பதற்காக வரவேண்டும் என்றால் நீங்கள் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை வரலாம். அதன்பின் சென்னையில் (Chennai) வெயில் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். உலகின் நீண்ட இரண்டாவது கடற்கரை முதல் ஆயிரம் வருட ஆலமரம் வரை சென்னையில் (Chennai) பார்க்க வேண்டிய இடங்கள் பல உண்டு.
உதகையில் இருந்து மைசூர் செல்லும் வழியில் இந்த இடம் உள்ளது. இந்த இடத்தில் தான் மிக பெரிய விலங்குகள் சரணாலயம் இருக்கிறது என்பதால் இது ஒரு சுற்றுலா தலமாக பார்க்கப்படுகிறது. போகும் வழியில் மசினகுடி , அவிலஞ்சி போன்ற இடங்கள் அவசியம் தங்கி ரசித்து பார்த்து செல்ல வேண்டிய இயற்கை ஸ்தலம் ஆகும். அக்டோபர் முதல் மே மாதம் வரை இங்கு செல்லலாம்.
தமிழ்நாட்டின் தென்கோடியில் இருக்கும் கன்னியாகுமாரி சுற்றுலாவிற்கு பெயர்போன இடம் என்றாலும் இங்கும் சில குறிப்பிட்ட மாதங்களில் போவது நல்லது. இங்குள்ள முக்கடல் சங்கமம் மிக ப்ரசித்தி பெற்ற ஒரு இடமாகும். அலஹாபாத் எனும் புண்ணிய தலத்திற்கு இணையாக இவ்விடம் பார்க்கப்படுகிறது. மேலும் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் தவம் செய்த பாறை போன்றவை முக்கியம் வாய்ந்தவை. இங்குள்ள கன்யாகுமரி (Kanyakumari) அம்மன் நித்ய கன்னியாக இருந்து அனைவருக்கும் அருள்பாலிப்பது இதன் சிறப்பு. இங்கு அக்டொபர் முதல் மார்ச் வரை செல்லலாம்.
தூங்காநகரமான மதுரையில் (Madhrai) மீனாட்சி அம்மன் கோவிலை பார்க்காமல் தமிழ்நாட்டு சுற்றுலாவை யாரும் முடிக்க முடியாது. இந்த கோவிலின் கட்டுமானம் உலக அதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் மதுரையில் சுற்றிப்பார்க்க பல்வேறு இடங்கள் அருகே மலைவாசஸ்தலங்கள் போன்றவை உள்ளன. மதுரையும் (Madhurai) வெயிலுக்கு பெயர்போன இடம் என்பதால் இங்கு டிசம்பர் முதல் பிப்ரவரி வரை சென்று வருவது நல்லது.
மற்றொரு கடற்கரை நகரமான பாண்டிச்சேரி (Pondicherry)அனைவரையும் கவரும் சுற்றுலா தலமாகவே பார்க்கப்படுகிறது. காரணம் இங்கு இன்னும் பிரெஞ்சு முறைப்படிதான் பல்வேறு சடங்குகள் மற்றும் விதிகள் ஆகியவை பின்பற்றப்படுகின்றன. இங்குள்ள பொருட்களுக்கு வரிவிதிப்பு போன்ற திணிப்புகள் இருப்பதில்லை. அதிக வெளிநாட்டவர்கள் வந்து போகும் இடமாக இந்த பாண்டிச்சேரி இருக்க ஸ்ரீ அன்னை மற்றும் அரவிந்தர் ஆசிரமமும் அவர்களால் கட்டப்பட்ட ஆரோவிலும் ஒரு காரணம். மன அமைதி தேடுபவர்களுக்கான முதல் இடம் பாண்டிச்சேரி(Pondicherry) . இங்கு அக்டொபர் முதல் மார்ச் வரை செல்லலாம்.
சோழர்களின் கட்டிட கலைக்கு பெயர்போனவை தஞ்சாவூரில் உள்ள கோயில்கள். கோயில்களுக்கும் விவசாயத்திற்கும் பெயர்போன ஊர் இந்த தஞ்சாவூர்(Thanjavur). இங்கும் கடற்கரை உண்டு.தமிழகத்திற்குள் வந்து போகும் அனைவரும் ஒருமுறையாவது தஞ்சை பெரியகோயிலை தரிசிக்க வேண்டும் . அதன் சிறப்பு அத்தகையது. இங்கு ஜூன் முதல் அக்டோபர் வரை செல்லலாம்.
உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
---
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.