இந்த தேதியில் பிறந்தவர்கள் மற்றவர்களை எளிதாக வசீகரிப்பார்களாம்!

இந்த தேதியில் பிறந்தவர்கள் மற்றவர்களை எளிதாக வசீகரிப்பார்களாம்!

4-ம் தேதியில் பிறந்தவர்கள்:(birth) 13,22,31 தேதிகளில் பிறப்பவர்களை  விட மிகுதியான கண்டிப்பு உடையவர்களாக இருப்பார்கள். நல்ல துணிச்சலும் பலமும் இருக்கும். போர் வீரர் போன்று வாழ்வர். வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவங்கள் நிகழும் போதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்து, சோர்வடையாமல் இருக்கவேண்டும். அதற்காகவே இவர்கள் தியானம் செய்வதில் ஈடுபடுவது நன்மை தரும். மற்றவர்களிடம் இனிமையாகவும் மென்மையாகவும் பேசவேண்டும்.


13-ம் தேதி பிறந்தவர்கள்(birth): திடுக்கிடக் கூடிய சம்பவங்கள் வாழ்க்கையில் எதிர்பாராமல் நிகழும். அபாயங்கள் வந்து நீங்கும். சிறு வயதிலேயே குடும்பத்தில் இவர்களைப் பாதிக்கக் கூடிய மாறுதல்கள் ஏற்படும். மிக்க வலிமையுடைய இவர்கள், நேர்மையாகவும் மறைவில்லாமலும் நடந்துகொள்ள வேண்டும். அப்படி வாழ்ந்தால் மிக்க உன்னத நிலையை அடைவர்.


22-ம் தேதி பிறந்தவர்கள்: சந்தர்ப்பச் சூழ்நிலைகள் தவறான பாதையில் வழிநடத்தும். அந்த நேரங்களில் இவர்கள் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவேண்டும். மற்ற மூன்று தேதிகளில் பிறந்தவர்களை(birth) விடவும் இவர்கள் எளிதாகப் பணம் சம்பாதிப்பார்கள். போட்டி பந்தயங்களிலும் பணம் சம்பாதிப்பர்.


31-ம் தேதி பிறந்தவர்கள்(birth): நல்ல தைரியசாலியாகவும், மிதமிஞ்சின மனோசக்திகளும், சூட்சும அறிவும் உடையவராகவும் இருப்பர். புதிதாகப் பழகுகிறவர்கள் கூட சில நிமிடங்களிலேயே, இவர் சாதாரண மனிதர் அல்ல என்று கண்டுபிடித்துவிடலாம். லாப நஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் தன் மனப் போக்கின்படியே செயல்படுவர். ஏகாந்த இடங்களுக்குச் செல்வதிலும், வேதாந்த ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதிலும் ஆர்வம் கொண்டிருப்பர்.  


அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: 1,10,19,28 ஆகிய தேதிகள் அதிர்ஷ்ட தினங்களாகும். இதில் 28-ம் தேதி கிடைக்கும் வெற்றிகள் சீக்கிரமே மறைந்துவிடும். 9,18,27 ஆகிய தேதிகள் சாதகமான பலன்களைத் தரும். 1,10,19,28 தேதிகளிலேயே முக்கிய காரியங்களைச் செய்து வந்தால் அதிர்ஷ்டம் விருத்தியடையும்.  


தவிர்க்கவேண்டிய தேதிகள்: இவர்களுக்கு 8,17,26 ஆகிய தேதிகளில் எதிர்பாராத சிரமங்கள் வரும். ஆகவே, இந்தத் தேதிகளில் புதிய முயற்சிகள் துவங்குவதைத் தவிர்க்கவும்.


அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர்நீலம் அல்லது நீலக்கோடுகள் போட்ட துணிகளே இவர்கள் மனதைக் கவரும். பரிசுத்தமான மனம் உடையவர்களாதலால் நீலத்தையே மிகவும் விரும்புவர். வெளிர்நீல நிற ஆடைகள் மனச்சாந்தி தரும். இவர்களுக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தை தரும் வண்ணம் மஞ்சள்.  


அதிர்ஷ்ட ரத்தினம்: கோமேதகம்  வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை வழிபடவேண்டிய தலம்: பட்டீஸ்வரம்


5,14,23 தேதிகளில் பிறந்தோரும்(birth), பிறந்த தேதி, மாதம், வருடம் மூன்றையும் கூட்டினால் 5 எண்ணிக்கை வருவோரும் 5-ம் எண்ணின் ஆதிக்கத்தில் வருவர். மற்றவர்களை வசீகரிக்கும் தன்மை இவர்களுக்கு இருக்கும். இவர்களுடைய வாழ்க்கை சாதாரண நிலையில் ஆரம்பித்தாலும், விரைவிலேயே முக்கியப் பிரமுகராகி புகழ் பெறுவர். இந்த எண்ணில் பிறந்த அன்பர்களில் பலரும் தொழிலதிபர்களாக பிரகாசிக்கிறார்கள். இவர்களில் சிலர் இளம் வயதிலேயே ஆன்மிகத்தில் ஈடுபட்டு, மற்றவர்களுக்கு குருவாகத் திகழ்கிறார்கள்.


5-ம் தேதியில் பிறந்தவர்கள்(birth): இவர்கள் சிறு வயதில் இருந்தே பெரிய லட்சியங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை வசீகரிக்கும்படியான குணங்களும், பிறரை மதிக்கும் பண்பும் இவர்களுக்கு இயல்பிலேயே அமைந்திருக்கும். மற்றவர்களுக்கு நல்ல அறிவுரைகளைச் சொல்லி வழிநடத்துவார்கள். இவர்களில் சிலருக்கு தெய்விகமான வாழ்க்கை அமைவது உண்டு.


14-ம் தேதியில் பிறந்தவர்கள்(birth): பயணம் செய்வதிலும், பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். ஊக்கமும் பிடிவாதமும் சரிசமமாக இவர்களிடம் காணப்படும். பொருள்களைச் சேர்க்கும் அதிர்ஷ்டம் இவர்களுக்கு உண்டு. வியாபாரத்தில் பெருத்த லாபம் சம்பாதிப்பர். இவர்களைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்தபடி இருக்கும். எனினும் முக்கிய காரியங்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்கக் கூடாது. இந்த எண்ணில் பெயர் அமைந்திருக்கும் வர்த்தக நிறுவனங்கள் விரைவிலேயே மக்கள் மனதில் இடம்பிடித்துவிடும். பிறந்த தேதியோ அல்லது பெயர் எண்ணோ 14-ஆக அமையப் பெற்றவர்கள் எளிதில் மற்றவர்களின் அபிமானத்தைப் பெற்றுவிடுவார்கள். முகராசி என்று சொல்லுவார்களே அது இந்த எண்ணைச் சேர்ந்தவர் களுக்கு நிறையவே உண்டு.


23-ம் தேதி பிறந்தவர்கள்(birth): இவர்களால் சாதிக்க முடியாதது உலகில் ஒன்றுமேயில்லை. மிதமிஞ்சின ராஜ வசியமும், ஜன வசியமும் இருக்கும். இவர்களை விட மேல்நிலையில் இருப்பவர்களும் இவர்களைப் புகழ்வர். இவர்களுடைய பெயர் மட்டும் சரியாக அமைந்து விட்டால், உலகை ஒரு குடையின் கீழ் ஆளலாம். இவர்கள் மேலான பண்புகளையும், நல்ல நடத்தையையும் கொண்டிருந்தால், சரித்திரத்தில் இடம் பெறும் அளவுக்கு சாதனைகள் புரிந்து, பலரும் போற்றும்படி வாழ்வார்.  


அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: 5,14,23 தேதிகளில் பிறந்தவர்களுக்கும்(birth) மற்றபடி தேதி, மாதம், வருடம் மூன்றையும் கூட்டினால் 5 என்று வருகிற மற்ற தேதிகளிலும் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு மாதத்திலும் வரும் 5, 9, 14, 18, 23, 27 தேதிகளே அதிர்ஷ்டமான தினங்கள். இந்தத் தேதிகளில் தொடங்கும் காரியங்களில் அபரிமிதமான முன்னேற்றம் காணலாம்.  


தவிர்க்கவேண்டிய தேதிகள்: எந்தத் தேதியில் பிறந்தவர்களையும்(birth) வசீகரிக்கும் ஆற்றல் கொண்டவர்கள் என்பதால், இந்த எண்ணைச் சேர்ந்தவர்களுக்கு எல்லா நாளுமே அதிர்ஷ்டம் தரக்கூடிய நாள்களாகவே அமையும். எனவே, இவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லாத நாட்கள் என்று தனியாக ஒரு தேதியையும் குறிப்பிடுவதற்கு இல்லை.  


அதிர்ஷ்ட நிறங்கள்: சாம்பல் வண்ணமே அதிர்ஷ்டமானது. பச்சை, கறுப்பு போன்ற அடர்த்தியான வண்ணங்களை தவிர்த்துவிடவும். இந்த நிறங்களாலான ஆடைகளையும் ஒரு நாளும் அணியலாகாது.


அதிர்ஷ்ட ரத்தினம்: வைரம் வழிபடவேண்டிய தெய்வம்: மகாவிஷ்ணு  வழிபடவேண்டிய தலம்: திருவரங்கம், திருவெண்காடு


 POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo