உடல் பருவமடைதல், ஆரோக்கியமும் பாலுறுப்புகளின் சுத்தமும்

உடல் பருவமடைதல், ஆரோக்கியமும் பாலுறுப்புகளின் சுத்தமும்

பருவமடைதல்
பருவமடைதல் என்பது நம் நாட்டை பொறுத்த வரை மிக முக்கியமான, புனிதமான ஓர் நிகழ்ச்சி, ஏழை முதல் பணக்காரர்கள்வரை பல ஆயிரங்கள் செலவழிக்கும் ஓர் நிகழ்ச்சி. பருவமடைதல் என்பது பெண்/ஆண் இருபாலருக்கும் இயற்கையாக நடக்கக்கூடிய ஓர் உடல்ரீதியான மாறுதலாகும். பெண்/ஆண் குழந்தையை பொருத்தவரை பருவமடைதல் என்பது உடல் ரீதியாக அவர்கள் (அதாவது ஒரு ஆணும் ஒரூ பெண்ணும்) உடலுறவு மூலம் குழந்தையை உருவாக்க தகுதிபெற்று விட்டார்கள் என்பதைக் பருவமடைதல் காட்டுகிறது. குழந்தை பருவத்துக்கும், பருவமடைதல் பருவத்துக்கும் இடைப்பட்ட பருவம் யௌவனப் பருவம் எனப்படும். யௌவனப் பருவம் என்பது பருவமடைதலுடன் தொடங்குகிறது. இப்பருவத்தில் பாலியல் குணங்கள் வெளிப்பட ஆரம்பிக்கிறது.


சராசரியாக ஒரு பெண் குழந்தை பருவமடைவதற்கு சில காலங்கள் முன் (அதாவது 11லிருந்து 14 வரை பெண்களும் 14-15 வயதில் ஆண்களும்) உடல் வளர்ச்சியானது, மிக விரைவாக வளர்ச்சி பெறுகிறது. இன உறுப்புகளும் வளர்ந்து பருவமடைகின்றன. பெண் குழந்தைகளுக்கு பொதுவாக 11 வயது 6 முதல் 14 வயதிற்குள் முறையான மாதவிடாய் ஆரம்பமாகிறது. இந்த முதல் மாதவிடாயை தான் நாம் ‘பெண் பூப்பெய்து விட்டாள்’ என்று சடங்குகள் செய்து, விழா எடுக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.


உடல் ஆரோக்கியமும் பாலுறுப்புகளின்(vagina) சுத்தமும்
நாம் நம் உடலை தினமும் சுத்தமாக வைத்திருக்கிறோம், என்றால் நம் உடலை நல்ல முறையில் பராமரிக்கின்றோம் என்று பொருள். அதனால் நம் உடல் பல நோய்களிலிருந்து பாதுகாப்பைப் பெறுகிறது. தினசரி குளிப்பது, பல் துலக்குவது, தூய்மையான ஆடைகளை அணிவது அதேபோல்தான் பாலுறுப்புகளின்(vagina) சுத்தமும், அவற்றை தினமும் கவனம் செலுத்தி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் தொற்று கிருமிகள் சூழ்ந்து பல நோய்களை உருவாக்கும் நிலை ஏற்படும். இயற்கையாகவே பாலுறப்புகளில் சுரக்கும் திரவம் அவ்வுறுப்புகளை தூய்மை செய்து வருகிறது. இந்த திரவம் பெண்ணுறுப்பின் உள் இருக்கும்வரைதான் அது நோய்கிருமிகளை எதிர்த்து அப்பகுதிகளை தூய்மையாக வைக்கிறது. இது பெண்ணுறுப்பின் வெளிபுறத்தில் வரும்போது அதுவே நமக்கு தீமையை விளைவிக்கும். அதற்கு வெளிச்சூழல்தான் காரணம்.


வெளிச்சூழலில் இருக்கும் பாக்டீரியாக்களின் தாக்குதலால் துர்நாற்றம் வீசும் நிலை ஏற்படுகிறது. நாம் மிக கவனமுடன் அப்பகுதிகளை எப்போதும் சுத்தமாக பேண வேண்டும்.


ஒவ்வொரு முறை நம் உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றும்போது, அப்பகுதிகளை மிகவும் நன்றாக தூய்மை செய்ய வேண்டும். ஏனென்றால், நம் உடலிலிருந்து வரும் கழிவுகளில் ஏராளமான நுண்கிருமிகளும் வெளிவரும். அவை அப்பகுதிகளில் தங்கிவிடக்கூடும். பாலுறுப்புகளை(vagina) தூய்மை செய்ய நாம் அன்றாடம் உடம்பிற்கு பயன்படுத்தும் சோப்பே போதும். ஏதாவது அரிப்பு ஏற்பட்டால் டெட்டால் உபயோகப்படுத்தாலம். டெட்டால் ஓர் கிருமிநாசினியாக பயன்படுகிறது.


இது தவிர, லோஷன் அல்லது ரசாயான பொருட்கள் உபயோகிப்பது என்பது டாக்டரின் அறிவுரை கேட்டபின்பு உபயோகப்படுத்த வேண்டும். டாக்டரின் ஆலோசானை இன்றி பயன்படுத்தினால், கொப்புளங்கள், புண்கள், அரிப்பு போன்றவை வர வாய்ப்புள்ளது. பாலுறுப்புக்களை(vagina) சுத்தமாக பராமரிக்கும் போது மற்ற உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்.


மாதவிடாய் காலத்தில் மிகவும தூய்மையுடன் உடலை பராமரிக்க வேண்டும். ஏனென்றால், பல தொற்று கிருமிகள் பாலுறுப்புகளை(vagina) தாக்க நேரிடும். தினமும் குளித்து அவ்வப்போது நாப்கின் அல்லது துணியை மாற்றி சுத்தமான மாற்று துணியினை வைக்க வேண்டும். மாதவிடாய் காலங்களில் டெட்டால் நீரில் கலந்து அப்பகுதிகளை சுத்தம் செய்வது மிகவும் நல்லது. நல்ல காற்றோட்டம் உள்ள பகுதியில் வேலை செய்வது உடலுக்கும் மனதுக்கும் தெம்பை கொடுக்கும். உள்ளாடைகளை நன்றாக துவைத்து சூரிய ஒளியில் காயவைத்து உடபோயப்படுத்துவது நல்லது. பொதுவாக மற்றவர்களின் உள்ளாடைகளை ஒருபோதும் அணியக்கூடாது. பருத்தி துணியினால் ஆன உள்ளாடைகளை உபயோகப்படுத்த வேண்டும். ஏனென்றால், வியர்வையினால் வரக்கூடியத்தொற்று நோயை அது தடுக்கும்.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo