யாருக்கெல்லாம் தங்கம் ராசியில்லாத உலோகம் ஆகிறது? அவசியம் அறிந்து பயன்படுத்துங்கள்!

யாருக்கெல்லாம் தங்கம் ராசியில்லாத உலோகம் ஆகிறது? அவசியம் அறிந்து பயன்படுத்துங்கள்!

தங்கம் என்பது இன்றைய காலத்தில் தவிர்க்க முடியாத ஒரு உலோகம் ஆகிவிட்டது. இதனை மற்ற நாடுகளில் பொருளாதார வளர்ச்சி மற்றும் சேமிப்பிற்காக பயன்படுத்துகிறார்கள். இந்தியா இதனை ஒரு அலங்கார பொருளாக பயன்படுத்துகிறது. அலங்கார பொருள் மட்டும் அல்ல பொருளாதார தகுதியையும் நிர்ணயிக்கும் ஒரு உலகம்தான் தங்கம்.(gold)


இதனை மத வயது இன பேதமின்றி அனைவரும் விரும்பி வாங்குகின்றனர். இதனை அணிவதால் உடலில் உள்ள தீய சக்திகள் விலகி விடும் என்றொரு நம்பிக்கை இருக்கிறது.முறையாகத் தங்கத்தை அணிவது மட்டுமே அதன் அளவற்ற நன்மைகளை உங்களுக்கு வசப்படுத்தித் தரும்,


தங்கத்தை வாங்கிவிட்டால் மட்டும் போதாது. அதனை பயன்படுத்த சில முறைகள் உண்டு என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். புனிதமான உலோகமாக கருதப்படும் தங்கத்தை எப்படி அணியலாம் என்பதை பார்க்கலாம்.எப்படி அணிய வேண்டும்


மோதிரமாக தங்கத்தை அணிவது என்பது அதிர்ஷ்டத்தின் முகவரியை நமக்கு அளிப்பது போன்றதாகும். ஆண்கள் வலது கை விரலிலும் பெண்கள் இடது கை விரலிலும் மோதிரத்தை அணிவது அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும்.


தங்கம் எதிர்மறை சக்திகளை அழித்து விடும் ஆற்றல் கொண்டது. வெப்பத்தையும் இது உள்வாங்கி கொள்ளும். உங்களுக்கு நுரையீரல் பிரச்னைகள் இருந்தால் சளி போன்ற நோய்கள் இருந்தால் சுண்டு விரலில் தங்க மோதிரம் அணியுங்கள். முற்றிலுமாக குணமடைவீர்கள்.


உங்களுக்கு எல்லா செல்வமும் இருந்து நல்ல பெயர் மட்டும் கிடைக்காமல் இருக்கலாம். தனக்குப் புகழ் வேண்டும் என்று விரும்புபவர்கள் நடு விரலில் தங்க மோதிரத்தை அணியுங்கள்.


உங்களால் எதனையும் சரிவர கவனிக்க முடியவில்லை மனது ஒருநிலையில் இல்லாமல் இருக்கிறது என்றால் நீங்கள் தங்கத்தை ஆட்காட்டி விரல் அணிவது சுபமாக இருக்கும்.


உங்கள் கல்யாண வாழ்க்கை களையிழந்து காணப்படுகிறதா? இன்னமும் மணமாகாமல் இருக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கைத்துணையுடன் இணக்கமாக இல்லையா நீங்கள் கழுத்தோடு ஒட்டிய தங்க ஆபரணத்தை அணியுங்கள். உங்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தை இது கொடுக்கும்.தங்கத்தை எப்போதும் இடுப்பு பாகத்திற்கு மேலேதான் அணிய வேண்டும். மஹாலக்ஷ்மியின் மறு அவதாரமான தங்கத்தை பாதங்களில் அணிவது அவளை அவமதிக்கும் ஒரு செயலாகும். இப்படி செய்வதால் எதிர்மறை உணர்வுகள் உங்களுக்குள் உருவாக ஆரம்பிக்கும்.


யாரெல்லாம் அணியக் கூடாது


வயிறு தொடர்பான சிக்கல்களை உடையவர்கள் அதிக எடை கொண்டவர்கள் தங்கத்தை தவிர்ப்பதே நல்லது. அளவுக்கு அதிகமாக கோபப்படும் நபர்களுக்கும் தங்கம் ஏற்ற உலோகமில்லை. குருவின் ஆதிக்கம் இருந்தால் தங்கத்தை தவிர்க்க வேண்டும். இரும்பு தொடர்பான தொழிலில் இருப்பவர்கள் இதனை அணிய வேண்டாம்.


உங்கள் வீட்டில் தங்கத்தை வைத்திருக்கும் போது சிவப்பு நிற துணியில் அதனை வைப்பது நல்லது. கிழக்கு நோக்கி வைத்தால் இன்னமும் நல்லது. தங்கம் என்பது புனிதமான பொருள் என்பதால் இதனை அணிந்தபடி உல்லாச கேளிக்கைகளில் ஈடுபடாதீர்கள்.


எந்த ராசிக்காரர்களுக்கு என்ன செய்யும்


மேஷம், கடகம், சிம்மம், தனுசு ராசிக்காரர்களுக்கு தங்கம் அணிவது நன்மையைத் தரும். விருச்சிகம்,மீனராசிக்காரர்கள் இதனை அணிந்தால் இரண்டும் நடைபெறும். ரிஷபம், மிதுனம், கன்னி கும்ப ராசியை சேர்ந்தவர்களுக்கு இது சில சிக்கல்களை உருவாக்கும். துலாம் ராசி மற்றும் மகர ராசிக்கு தங்கம் சேரவே சேராது. முழுக்க முழுக்க தங்கத்தை தவிர்த்து விடுங்கள்.


தங்கம் அணிந்தால் பிரச்னை என்பதால் மனம் தளர வேண்டாம். இருக்கவே இருக்கிறதே வைரமும் பிளாட்டினமும் ! பிறகென்ன மாற்றி பாருங்கள். வாழ்வின் உச்சம் தொடுங்கள்.படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.


 Also read best affordable and designer jewellery to buy online