இந்த குணங்கள் உங்களிடம் இருந்தால் உலகின் அரிய மனிதர்களில் நீங்களும் ஒருவர்தான்! (INFJ personalities)

இந்த குணங்கள் உங்களிடம் இருந்தால் உலகின்  அரிய மனிதர்களில் நீங்களும் ஒருவர்தான்! (INFJ personalities)

உங்களால் மற்றவர்களுடன் பேச முடியவில்லையா? தொடர்புகளில் இருந்து விலகி இருக்க விரும்புகிறீர்களா? தனிமை உங்களை உள்ளுக்குள் பயணிக்க வைக்கிறதா? மற்றவர்கள் உங்களை புரிந்து கொள்ள முடியாத புரியாத புதிராகப் பார்க்கிறார்களா?


வாழ்த்துக்கள்!


உலகின் மிக அரிதான ஆளுமை (பர்சனாலிட்டி)யில் நீங்களும் ஒருவர். மொத்தம் 16 வகை ஆளுமைகள் உள்ளன. இதில் மிக மிக அரிதான (rare) ஆளுமை உங்களுடையதுதான். உலக மக்கள் தொகையில் மொத்தம் 2 சதவிகிதத்தினர் மற்றுமே இந்த ஆளுமையின் கீழ் வருகின்றனர்.


கீழ்கண்ட குணங்களில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு ஒத்து போனாலும் நீங்கள் இந்த அரியவகை ஆளுமைக்குள் வருகிறீர்கள்.INFJ (Introversion, Intuition, Feeling, Judging) எனப்படும் இந்த அரிய ஆளுமைகள் கொண்டவர்கள் நிச்சயம் ஸ்பெஷல் தான்!


உங்களை ஸ்பெஷலானவர் என்று கூறும் இந்த குணங்கள் உங்களிடம் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.


தொலை நோக்கு பார்வை


INFJ ஆளுமையாளர்கள் சிறிய விஷயங்களில் நீங்கள் ஈடுபாடு காட்ட மாட்டீர்கள். எதிர்காலத்தில் என்ன நடக்கும் அல்லது நடக்க வேண்டும் என்பதில் நீங்கள் கவனமாக இருப்பீர்கள். எந்தவகையான சவால்களையும் சந்திக்க தயங்க மாட்டார்கள். எதற்கும் நோ சொல்ல மாட்டார்கள். இவர்களின் வெற்றியை இவர்களே வடிவமைப்பார்கள்.இலக்கை நோக்கிய பயணம்


INFJ ஆளுமையாளர்கள் எப்போதும் தங்கள் இலக்கை நோக்கிய பயணத்தில் பின்வாங்க மாட்டார்கள். கடினமாக உழைக்கத் தயார் ஆவார்கள். இலவசமாக தரப்படும் எதுவும் இவர்களை பாதிக்காது. சுயமாக சம்பாதிக்கும் ஒவ்வொரு பைசாவும் இவர்களுக்கு சந்தோஷத்தை தரும்.மனதின் குரல்


INFJ ஆளுமையாளர்கள் எப்போதும் உள்ளுணர்வில் வலிமை மிக்கவர்களாக இருப்பார்கள். மனதின் போக்கை தொடர்ந்து கவனிப்பவர்களாக இருப்பார்கள். உள்ளுணர்வில் இவர்களுக்குத் தோன்றும் எதுவும் நடக்காமல் போகாது. ஒரு செயலைத் தொடங்கும் முன்பே அதன் முடிவு இப்படித்தான் இருக்கும் என்கிற தெளிவு இவர்களிடம் நிறைந்திருக்கும். தன்னை சுற்றியுள்ள மனிதர்கள் மற்றும் அவர்களின் குணங்கள் பற்றித் துல்லியமாக அறிந்து வைத்திருப்பார்கள்.இயல்பால் உண்மையானவர்கள்


INFJ ஆளுமையாளர்கள் தங்களோடு பிரபஞ்சத்தை இணைத்துக் கொள்வதில் வல்லவர்கள். இந்த வாழ்வின் நோக்கம் என்ன எதற்காக நாம் பிறந்திருக்கிறோம் எதை நோக்கி செல்கிறோம் என்கிற உண்மையை நோக்கிய தேடலில் இவர்கள் பயணம் இருக்கும். இந்த அகிலத்தை தங்களோடு இணைத்துக் கொண்டு மற்றவர் வாழ்வில் உள்ள உண்மைகளையும் இவர்களால் அறிய முடியும்.சுமைதாங்கி


INFJ ஆளுமையாளர்கள் பெரும்பாலும் மற்றவர்களின் பாரங்களை சுமக்கத் தயங்க மாட்டார்கள். மற்றவருக்காக ஆறுதலை எப்போதும் தரக் காத்திருப்பார்கள். தன்னை தேடி வருபவர்களின் மனக்குறைகளை நீக்கி அவர்களை மனரீதியாக குணப்படுத்தி விடுவதில் வல்லவர்கள். தன்னை நம்புபவர்களை பாதுகாப்பதில் சிறந்தவர்கள்.அடுத்தவர்களை அறிவதில் வல்லவர்கள்


INFJ ஆளுமையாளர்கள் தங்கள் உடன் பழகுபவர்கள் மனதை முழுமையாக அறிந்திருப்பார்கள். உள்ளுணர்வை நல்ல சக்தியாக இவர்கள் பயன்படுத்துவதால் அருகில் இருப்பவர்களின் எண்ணங்களை இவர்களால் நன்றாக அறிய முடியும். தன்னோடு பழகிக் கொண்டிருப்பவர்களின் தனக்கு கெடுதல் செய்பவர்கள் பற்றியும் துரோகம் இழைப்பவர் பற்றியும் நன்கு அறிந்தே இருப்பார்கள்.தனிமைப் பறவை


INFJ ஆளுமையாளர்கள் எப்போதும் தனியாக இருப்பதையே விரும்புவார்கள். குழுக்களோடு சேர்ந்து பயணிப்பது இவர்களுக்கு பிடிக்காது. சிறிய குழுக்கள் அதுவும் இவர்கள் தேர்வு செய்த மனிதர்களோடு மட்டுமே இவர்களால் பயணிக்க முடியும். கும்பலாக இருந்தாலும் தனியாகவே இருப்பார்கள். இவர்களோடு முழு நம்பிக்கையுடன் பழக வேண்டும் அல்லது பழகாமல் இருந்து விட வேண்டும் என்று நினைப்பார்கள். இதற்கு நடுவே ஊசலாட்ட மனநிலை கொண்டவர்கள் இவர்களோடு பழகவே முடியாது.எழுத்து


INFJ ஆளுமையாளர்கள் எப்போதும் பேசிக் கொண்டே இருப்பதை விரும்ப மாட்டார்கள். பேச்சைக் குறைத்துக் கொண்டு கவனிப்பதில் நேரம் செலுத்துவார்கள். மேலும் இவர்களுக்கு பெரும்பாலும் பேச்சு என்பதே எழுத்து வடிவில்தான் இருக்கும். எதுவாக இருந்தாலும் சொல்வதை விட எழுதுவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். பேசிவிட்டு தான் பேசவே இல்லை என்று சாதித்து விடலாம். ஆனால் எழுதிய ஒரு வார்த்தையை எப்போதும் இல்லை என்றே மறுக்க முடியாது. தான் உண்மையை மட்டுமே பேசுவேன் எனும் மனதைரியம் இவர்களிடம் எப்போதும் இருக்கும்.இப்படிப்பட்ட குணங்களில் ஏதேனும் ஒன்றாவது உங்கள் குணங்களுக்குள் வந்தால் நீங்கள் இந்த அதிசய ஆளுமையான INFJ ஆளுமையாளர்கள் என்று அழைக்கப்படுவீர்கள்.


முதல் இரண்டு தலைப்பைத் தவிர மற்ற அத்தனை குணங்களும் எனக்கு ஒத்துப் போகிறது. நான் ஒரு INFJ ஆளுமையாளர் என்பதில் நிச்சயம் எனக்குப் பெருமைதான். அதே போல உங்களது குணமும் ஒத்துப் போனால் அதனை உங்கள் விருப்பக்குறிகள் மூலமும் அல்லது கமெண்ட்கள் மூலமும் தெரியப்படுத்துங்கள்.படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.