11 அறிகுறிகள் – உங்களுடையவர் லட்சத்தில் ஒருவன் என்பதற்கு!

11 அறிகுறிகள் – உங்களுடையவர் லட்சத்தில் ஒருவன் என்பதற்கு!

நல்ல ஆண்(man) மகனை காண்பது அரிது. இதை நாம் அனேகமானவர்கள் பேசுவதை கேட்டிருப்போம். எனினும் ஒரு பண்புள்ள ஆண் மகன் இந்த பூமியில் இருக்கத்தான் செய்கிறான். நிச்சயம் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒருவன் இருக்கிறான். என்னவென்றால், எதோ சில காரணங்களுக்காக அவனை நீங்கள் கண்டறிய சற்று தாமதம் ஆகுகிறது. நீங்கள் அத்தகைய ஆண் மகனுக்காக காத்திருப்பவர் என்றால், அல்லது உங்களுக்கு ஏற்கனவே அப்படி ஒருவர் உள்ளார் என்றால் அவரை இறுக்கமாக பற்றிக் கொள்ளுங்கள். குறிப்பாக பின் வரும் அறிகுறிகள் அவரிடம் இருந்தால் விட்டு விடாதீர்கள்.


பெண்களே ஒரு அற்புதமான ஆண் மகனை கண்டறிய உங்களுக்காக இதோ சில குறிப்புகள்!


1. உங்களை அவர் ஒரு மாயை போல பார்க்கிறார்
மற்ற யாரும் கவனிக்காத சிறு சிறு விடயங்களைக் கூட அவர் உங்களிடத்தில் கவனிக்கிறார். அது நீங்கள் தலை முடி வெட்டியதாகட்டும் அல்லது புது ஆடை அணிந்திருப்பதாகட்டும், உங்களை கவனிப்பது அவரே முதல் ஆளாக இருப்பார். உங்களை அதிகம் நேசிப்பார் மேலும் நீங்கள் அழகானவள் என்று எண்ணுவார். அவர் உங்களுடைய ஒரு பெரிய ரசிகர் என்றே சொல்லலாம். (உங்கள் தாய்க்கு பின், நிச்சயமாக!)


1-Signs-you%E2%80%99re-dating-an-amazing-man


2.  தன் தவறை ஒப்புக் கொள்வார்
வாக்குவாதங்கள் அதிகரிக்கும் போது, யாரும் தங்களது தவறை, அது ஆணாகட்டும் அல்லது பெண்ணாகட்டும், அனேக நேரங்களில் ஒப்புக் கொள்வதில்லை. ஆனால் அவர் தன்னுடைய தவறை ஒப்புக் கொண்டால், மேலும் வாக்குவாதத்தை முடித்துக் கொள்ள எண்ணினால், உடனே அவரை கட்டி அனைத்துக் கொள்ளுங்கள். அதை விட மதிப்பு மிகுந்தது ஒன்றும் இல்லை.


3. உங்களது மாத விடா காலத்தில் உங்கள் மீது அதிக கவனம் வைப்பார்
பொதுவாக பெண்கள் மாத விடா காலங்களில் அதிகம் மன அழுத்தத்துடன் காணப் படுவார்கள். அவர்களது மன நிலை ஒரு நிலையில் இருக்காது. இத்தகைய சூழலை அவர் புரிந்து கொண்டு உங்களது கைகளை பற்றிக் கொண்டு உங்களுக்கு ஆறுதலாக இருக்க எண்ணினால், நீங்கள்தான் அதிர்ஷ்ட்டசாலி.


3-signs-youre-dating-an-amazing-man


4. அவருக்கு சில குறிக்கோள்கள் உள்ளது மற்றும் அதை நோக்கி தீர்க்கமாக செயல் படுகிறார்
அவருக்குத் தெரியும் என்ன வேண்டும் என்று மேலும் எப்படி அதனை அடைய வேண்டும் என்று. வாழ்க்கையில் சில தருணங்களில் அவர் கீழே இறங்குவது போல இருந்தாலும், அவருக்குத் தெரியும் எப்படி மீண்டும் எழுவது என்று. அவருக்கு என்ன வேண்டும் என்பதில் மட்டும் அவர் தெளிவாக இல்லை, மேலும் உங்களுடன் சேர்ந்து அவர் வாழ்க்கையில் என்ன சாதிக்க வேண்டும் என்பதிலும் தெளிவாக இருப்பார்... நிச்சயமாக!


5. உங்கள் கனவை நினைவாக்க உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்
அவருக்கு என்ன வேண்டும் என்பதில் மட்டும் அவர் தெளிவாக இல்லை, மேலும் உங்களது கனவையும் நினைவாக்க அவர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். உங்களை மேலே தூக்கி விடுவதில் அவர் அதிகம் கவனம் செலுத்துவார். அவரால்தான் நீங்கள் வாழ்க்கையில் உயருகின்றீர்கள்.


5-signs-youre-dating-an-amazing-man


6. உங்கள் நண்பர்கள் மீதும் அக்கறை காட்டுவார்
உங்கள் நண்பர்கள் என்றால், உங்களுக்கு அவருக்கும் தெரிந்த உலகம். உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து உங்கள் விருப்பத்திற்க்கேற்ப அவரும் நேரம் ஒதிக்கி வெளியில் செல்வது என்று சில மகிழ்ச்சியான விடயங்களை செய்வார்.


7. நீங்கள் அவருடன் தனிமையில் இருக்கும் போது, அவருக்கு எதுவும் வேண்டாம், உங்களைத் தவிர
முக்கியமான அழைப்பைத் தவிர சமூக வலைத்தளங்கள் மற்றும் கைபேசியை அவர் தவிர்க்கிறார் என்றால், அவர் உங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று அர்த்தம். அவ்வாறு செய்தால் உங்களுக்கு அதை விட வேறு என்ன வேண்டும் அவரிடம் இருந்து. ஒருவரை ஒருவர் உண்மையாக நேசிப்பதை விட மேலும் அவர் உங்களை முக்கியமாக தன் வாழ்க்கையில் எண்ணுவதை விட உங்களுக்கு வேறு என்ன வேண்டும்.


7-signs-youre-dating-an-amazing-man


8.  உங்களிடம் புத்திசாலித் தனமாக உரையாடுவது
உறவு உங்களை வாழ்க்கையில் வளர வைக்க வேண்டும். உங்களிடம் பேசிக் கொண்டு உங்களது நாளை கழிக்க உதவுவதோடு உங்களிடம் புத்திசாலித்தனமான உரையாடலையும் செய்ய வேண்டும். இது உங்கள் இருவரின் வளர்ச்சிக்கு மட்டும் உதவுவதோடு நீங்கள் இருவரும் பலமிக்கவராக உணர செய்யும்.


9. உங்கள் இருவருக்கும் நல்ல உடல் வேதியியல் உள்ளது
சிறந்த உடல் வேதியியல் உங்கள் இருவருக்கும் இருப்பது மிக முக்கியமான ஒன்று. அவர் உடல் வாகை கண்டு நீங்கள் ஈர்க்கப் பட்டால் பின் படுக்கையில் உங்கள் நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடுங்கள். நம்புங்கள் பெண்களே, நீங்கள் உங்களுடைய ஆண் மகனை கண்டு பிடித்து விட்டீர்கள்!


9-signs-youre-dating-an-amazing-man


1௦. உங்கள் தவறுகளையும் நேசிப்பவரா, கூடவே உங்கள் மீது அக்கறை காட்டுபவரா?
பெண்களே, நீங்கள் அனேக நேரங்களில் பொருட்களை கை தவறி உடைப்பது அல்லது நடக்கும் போது கால் தவறி கீழே விழுவது போன்று செய்கிறீர்களா? அப்படி என்றால், நீங்கள் அவ்வாறு தவறுகள் அல்லது தன்னை அறியாது நிகழும் சில விடயங்களை அவர் ரசிக்கின்றார் என்றால், கூடவே உங்களை அனைத்துக் கொண்டு உங்களை நேசிப்பதாக கூறினால், யோசிக்காதீர்கள், அவரை நீங்கள் கூடவே வைத்துக் கொள்ள வேண்டும். போக விடாதீர்கள்!


11. உங்களை எப்போதும் கோபத்தோடோ அல்லது பதற்றத்தோடோ தூங்க விடுவதில்லை
உங்களுக்குள் ஏதேனும் சண்டை அல்லது வாக்குவாதம் ஏற்பட்டா உங்களை அவர் தூங்கும் மும் சமாதானம் செய்ய முயற்ச்சித்து அமைதியாக தூங்க செய்கிறாரா. அவ்வாறு செய்தால் அவர் நீங்கள் தேடும் லட்ச்சத்தில் ஒருத்தர் என்பதில் சந்தேகமே இல்லை!


11-signs-youre-dating-an-amazing-man


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.