கேர்ள் பாஸ் (Girl Boss) : உங்களுக்கு யாரும் தெரிவிக்காத ஐந்து 'கேர்ள் பாஸ்' விஷயங்கள்

 கேர்ள் பாஸ் (Girl Boss) : உங்களுக்கு யாரும் தெரிவிக்காத ஐந்து 'கேர்ள் பாஸ்' விஷயங்கள்

#POPxoWomenWantsMore: கேர்ள் பாஸ் ஆக மாற இங்கு யாருக்குத்தான் ஆசையில்லை கூறுங்கள்?! நாம் அனைவருமே ஒரு நல்ல துறையில் பணியில் இருந்தாலும், அது நம்முடைய தற்போதைய அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யத்தான் என்றது நிஜம். பெண்கள் இன்றைய காலத்தில் தனக்கு பிடித்த வேலையை சுயமாகவே துவங்கி அதை கையாள ஆரம்பித்து விட்டார்கள். நீங்களும் நிறைய வெற்றிபேற்ற பெண்களை பார்த்து ரசித்து வியந்து போயிருப்பீர்கள். ஆனால், அதற்கு பின்னால் இருக்கும் சில முக்கிய விஷயங்களை யாரும் உங்களிடம் கூறி இருக்க மாட்டார்கள். நீங்களும் உங்கள் தொழிலை சுயமாக ஆரம்பித்து ஒரு கேர்ள் பாஸ் ஆக முயற்சித்தால், அதற்கான முக்கிய படிகளை இங்கு காணலாம்.


1)  மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதை தவிர்க்கவும்


உங்கள் துறை மற்றவர்களின் துறை ஆகிவிடாது. அதிலும், நீங்கள் எந்த விஷயத்தில் சிறப்பாக பணி புரிகிறீர்களோ அதில் மாற்றவர்கள் சிறப்பாக இருக்கமாட்டார்கள் என்றதுதான் உண்மை. ஆகையால், ஒருபொழுதும் உங்கள் தொழிலில் நீங்கள் சாதிக்கும் விஷயங்களை கால அவகாசத்துடன் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதை தவிர்க்கவும்.


ஆம் ! தொழிலில் போட்டிகள் இருக்கலாம். உங்கள் போட்டியாளர் தனது தொழிலை எவ்வாறு திறமையாக கையாளுகிறார்கள் என்று பின்பற்றி கொள்ளலாம். அதுவே ஆரோக்கியமான தொழிலிற்கான அடையாளம்.


2) உங்கள் குழுவை கண்டறியுங்கள் -


pexels-photo-1068523


இது மிக முக்கியமான ஒன்றாகும். எந்த ஒரு தொழிலிலும் முன்னேற வேண்டிய தருணங்களில் உங்கள் துறையில் மிக சிறப்பாக பணியாற்றுபவர்களை கண்டறிந்து சேர்த்துக்கொள்ளுங்கள். இவர்கள் தான் உங்கள் பாதையில் மிகவும் அவசியம்.


நான் எனது ப்ரீலன்சிங்கில் முன்பதாக ஒரு சிறிய தொழிலை செய்த்துக்கொண்டிருந்தேன். அதில் தேவைக்கேற்ப ஆட்களை தேர்ந்தெடுத்து விரிவாக்கம் செய்ய யோசித்தேன். அதில், என் துறையை சேர்ந்தவர்களை கண்டறிந்து பணிகளை பகிர்ந்து செய்யும்போதுதான் எனக்கு அதற்கான பலன் கிடைத்தது. அதுபோல,  நீங்களும்  பணிக்கு ஏற்ற சிறந்த நண்பர்களை தேர்ந்தெடுங்கள்.


3) இல்லை / விருப்பமில்லை என்ற சொல்லிற்கு இடம் கொடுங்கள் -


சொந்த தொழிலில் உடனடியாக முன்னேறவோ, வெற்றியை அடையவோ முடியாது என்ற விஷயத்தை நன்கு ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். எப்பொழுதும் ... இல்லை பெரும்பாலும் பலர் உங்கள் சேவைகளை / பொருட்களை வேண்டாம் என்று கூறுவார்கள். அல்லது இதில் விருப்பமில்லை என்றதை பல விதங்களில் கூறுவார்கள். அப்போதெல்லாம் மனதை தளரவிடாமல், உங்கள் தொழிலின் மூலோபாயத்தின் மீது கவனம் செலுத்துங்கள்.  மார்க்கெட்டிங் என்பது ஒரு பெரிய கலை. அதை நீங்கள் எவாறு வேண்டும் என்றாலும் உங்கள் கற்பனைக்கேற்ற விதத்தில் செயல்படுத்தி வெற்றி பெறலாம்.


மேலும், நீங்கள் சொந்தமாக  தொழில் (business) துவங்கியதை பார்த்து பலர் உங்களிடம் தொழிலின்  முன்னேற்றத்தை பற்றி விசாரிக்கலாம். ஒருபுறம் சுமாராக போய்க்கொண்டு இருந்தாலும், நன்றாக நடத்துவதாக சொல்லவேண்டிய தருணங்களும் வரலாம். பெண்ணே ! இவை அனைத்தும் இயல்பு. பொதுவாக அனைவரும் சந்திக்கும் கணங்களே ! கவலை வேண்டாம்.


4. வாடிக்கையாளர்கள் உடனடியாக அமைய மாட்டார்கள் ! பரவாயில்லை !!


pexels-photo-1569076


எந்த தொழிலிலும் உங்களுக்கான வாடிக்கையாளர்கள் டக்கென்று அமைவது அவ்வளவு எளிதல்ல. இதில் இரண்டு வகை உண்டு...  உங்கள் தொழிலில் உடனடியாக வந்து சேரும் வாடிக்கையாளர்கள், மறுபுறம் யாரும் வராத தருணங்கள்.. இது இயல்பு. இதற்கு திறமையான உழைப்பு மட்டுமில்லாமல் இந்த நேரங்களில் நீங்கள் உங்கள் பணியின் அம்சங்களை சிறிது மேம்படுத்த பார்க்கலாம். உங்கள் சேவைகளின் விலை, உங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகள், அவர்களின் எண்ணிக்கை, வேறு சேவைகள் என்று அனைத்தையும் பரிசோதித்து பாருங்கள்.


5. இது ஒரு தொடர்ந்து செல்லும்(என்றும் முடியாத )சவாலாக இருக்கும்


உங்கள் மனதிற்கு பிடித்த தொழில் என்றதால், நீங்கள் இதை மிகவும் திறமையாக கையாள முடியும் என்று ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இதில் வெற்றி தோல்வி என்று அனைத்தும் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கும். தடையின்றி செயல்பட ஏராளமான சவால்களை எதிர்கொள்ளவேண்டும். இருப்பினும்,  தன்னம்பிக்கை மற்றும் சிறப்பான வழிமுறைகளை பின்பற்றி நீங்களும் எளிதில் மற்ற பெண்களைப்போல முன்னேறலாம். ஆகையால், இதுபோன்ற பயமுறுதலான சிந்தனைகளை அகற்றுங்கள்..விரைவில் உங்கள் 'கேர்ள் பாஸ்' (girl boss) அந்தஸ்தை பெற வாழ்த்துக்கள்!


gifskey


உங்கள் கேர்ள் பாஸ் பயணத்தில் நீங்கள் சந்தித்த சவால்களை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.


பட ஆதாரம்  - gifskey,pexels,pixabay,instagram


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.