பெண்களை விட்டு விலகும் ஆண்கள் காரணம் இதுதான்

பெண்களை விட்டு விலகும் ஆண்கள் காரணம் இதுதான்

நான் கடக்கும் ஒவ்வொரு திருமண மண்டபத்தையும் அதில் எழுதியுள்ள மணமக்கள் பெயரையும் பார்க்கும்போது ஒரு வேதனையோடுதான் கடக்கிறேன். காரணம் இந்த பெயர்கள் இன்னும் எத்தனை வருடங்களுக்கு ஒன்றாக இருக்கப் போகிறது என்பதுதான்.


திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். இது ஒரு சிறப்பான பழமொழியாக இன்று வரை போற்றப்பட்டு வருகிறது. என்றாலும் திருமணத்தை நாம் இன்னமும் அப்படிதான் மதிக்கிறோமா என்பதும் இந்த சமூகம் திருமணத்தை எப்படி கையாள்கிறது என்பதும் கொஞ்சம் கேள்விக்குறியான விஷயம்தான்.


முன்பெல்லாம் பெரியவர்கள் நாம் மதிக்கும் படி அவர்கள் நடந்து கொண்டார்கள். நாமும் நடந்தோம். குடும்பத்தில் சிக்கல் என்றால் அவர்களின் ஆலோசனை கேட்டோம். பெரும்பாலும் பெண்ணை அனுசரித்துப் போக சொல்லும் ஆலோசனையாக அது இருந்தாலும் கூட அது குடும்பத்துக்கு ஒரு பாதுகாப்பு அளித்தது. பிள்ளைகள் ஆரோக்கியமான மனநிலையில் வளர்ந்தார்கள்.இப்போதோ பாலியல் குற்றங்கள் முதற்கொண்டு எல்லாமும் ஆரம்பித்து வைப்பதே சில பெரியவர்கள் என்கிற நிலை இருக்கிறது. அப்படி மோசமானவர்கள் குறைவு என்றாலும் கூட அனுபவம் என்கிற ஆணவமும் அதிகாரமும் கூட இன்னமும் சிலரிடம் இருக்கிறது. நீ அந்த பொண்ண அத்து விட்டுட்டு வாடா என்பதை யாரோ ஒரு பெரியவர் பெற்றவர்தான் கூறிக் கொண்டிருக்கின்றனர்.


பொருளாதார சுதந்திரம் நமது பேரன்பை எங்கோ ஒரு ஆழத்தில் கொண்டு போய் புதைத்து விட்டது. அதன் மேல் ஏறி அது நின்று கொண்டிருக்கிறது. நீ எனக்கு தேவையில்லை என்னை நான் பார்த்துக் கொள்ள முடியும் என்பதை காய்கறி விற்கும் பெண் முதற்கொண்டு அறிந்து கொண்டிருக்கிறாள்.


இதனால் திருமணம் ஆன மூன்றாம் மாதம் முதல் விவாகரத்து வழக்கு போடப்படுகிறது,மூன்று மாதத்தில் நீங்கள் என்ன புரிந்து கொண்டிருக்க முடியும்? ஒரு நண்பனை புரிந்து கொள்ள அந்த நேரம் போதுமானதாக இருக்குமா? ஆனாலும் என்னை இவர் புரிந்து கொள்ளவில்லை என்று வழக்கு போடப்படுகிறது.மேலும் சில திருமணங்கள் விவகாரத்துக்கான தேதியை குறித்து விட்டுத்தான் முஹுர்த்தத்துக்கான தேதியைக் குறிக்கிறது. சில திருமணங்கள் விவகாரத்துக்குப் பின் தரும் ஜீவனாம்சம் குறித்த கணக்குகளோடுதான் செய்யப்படுகிறது. அப்படிப்பட்ட பலரை நான் நேரடியாகவே சந்தித்திருக்கிறேன்.


இது தவிர மிச்சம் இருக்கும் நல்ல தம்பதிகள் பலரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதை விட்டுவிட்டு விலகிப் (avoiding) போக முயற்சிக்கின்றனர். இன்னமும்கூட பெரும்பாலும் ஆண்களுக்கு இன்னொரு சாய்ஸ் கிடைத்து விடும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. தனது மனைவியைத் தாண்டி இன்னொரு உறவை அவர்களால் ஏற்படுத்திக் கொள்ள முடிகிறது. அதனை அந்த இன்னொரு பெண்ணும் ஏற்றுக் கொள்வதும் தொடர்கிறது. பெண்ணுக்குப் பெண் தான் எதிரி என்பது இதில் இருந்துதான் தொடங்கி இருக்க வேண்டும்.


ஒரு ஆண் தனக்கு விருப்பமான பெண்ணை விட்டு ஏன் விலகுகிறான் என்பது பற்றி பார்க்கலாம்.


திருமணம் ஆன ஆரம்ப காலத்தில் ஒருவருக்கொருவர் காதல்பறவைகள் போல அடிக்கடி காணப்படுவோம். போகப் போக அது ஏன் குறைகிறது என்றால் டி என் ஏ என்பது ஆணுக்கு வேறு வகையில் செயல்படும். பெண்ணுக்கு வேறு வகையில் செயல்படும். இந்த இருவேறு நபர்களைத்தான் இயற்கை ஒன்றிணைத்து தனது செயலைத் தொடர்கிறது. 


இது எல்லாரிடமும் இருக்கும் குறைதான்.புதியதாக ஆரம்பிக்கும் வேலை, பணியிடம், உடை இப்படி புதிய எந்த விஷயமும் நம்மை புல்லரிக்க வைக்கும். மாய்ந்து மாய்ந்து பேச வைக்கும். பின்னர் ... அது பழகி விடும். அதன் பின் அதே வேலையை நாம் கடமைக்கு செய்வோம். திருமணமும் இப்போது கடமைக்கான ஒன்றாகி விட்டது. இதனால் ஒருவருக்கொருவர் ஈடுபாடு குறைகிறது. ஒத்துப் போவதில் சிக்கல் வருகிறது. இந்த சமயத்தில் ஆண் விலக ஆரம்பிக்கிறான் என்கிறது உளவியல். பெண்களை பொறுத்தவரை எவ்வளவு மோசமான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அன்றைய நாளின் முடிவில் அதனை மறந்து தனது கணவன்தான் முக்கியம் கருத்து அல்ல என்பார்கள். ஆனால் ஆண்கள் இதனால் சலிப்படைகிறார்கள்.


இரண்டாவதாக காமம் பற்றி வெளிப்படையாக பேசுவதில்லை என்பது இவர்களின் அடுத்த குறையாக இருக்கிறது. சில பெண்கள் கணவனை அவமானப்படுத்தும் இடமாகவே படுக்கை அறையைப் பயன்படுத்துகின்றனர். தங்களது பல்வேறு விதமான கோபம் எரிச்சல் போன்ற உணர்வுகளை பெண்கள் கட்டிலில் வெளிப்படுத்துகிறார்கள். விருப்பம் இல்லாமல் கடமைக்கு கணவனோடு ஒத்துழைக்கின்றனர். இதுவும் ஆண்கள் புரிந்து கொள்வதால் விலகுகிறார்கள்.


மூன்றாவதாக நமது வீடு நமது கணவர் என்கிற எண்ணம் நம் பெண்களுக்கு எப்போதும் உண்டு. அதனால் அவர்கள் அலட்சியமாக தங்களை வைத்துக் கொள்வார்கள். பெரும்பாலான இந்தியப்பெண்களின் உடை என்பது தற்போது நைட்டி தான். எல்லா நேரங்களிலும் இப்போதெல்லாம் பள்ளியில் குழந்தைகளைக் கொண்டு வந்து விடும்வரை இந்த நைட்டி உடை பயணிக்கிறது, இதைப் போன்றே வேலைக்கு செல்லும் பெண்கள் அலுவலக அழுத்தங்களோடு வீடு வருகையில் அவர்களும் கணவன் என்பவனை நாம் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி யோசிப்பதில்லை. காலம்பூராவும் நம்மோடு பயணிக்கும் துணை பற்றிய விழிப்புணர்வு நமக்கு எப்போதும் வேண்டும்.இறுதியாக பெண்கள் தங்களுக்கு குழந்தை பிறந்த உடன் கணவனை நேசிப்பதை நிறுத்தி விடுகின்றனர், இது ஆண்கள் சந்திக்கும் இரண்டாவது ஏமாற்றம் . முதல் ஏமாற்றம் தனது அம்மா தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்தபின் தன்னை கவனிக்க மறந்து விடுவது. இந்த இரண்டாவது ஏமாற்றம் ஒரு ஆணை மிகவும் பாதிக்கிறது. ஆண் கம்பீரமானவன் தான் என்றாலும் அவனுக்குள்ளும் அன்புக்காக எங்கும் ஒரு குழந்தையும் இருக்கிறான் என்பதைத் தாய்மையின் உச்சத்தில் இருக்கும் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


குழந்தை பிறந்த உடன் தங்கள் உடல் வடிவங்களை பற்றி பெண்கள் கவலைப்படுவதில்லை, ஆனால் ஆண்களுக்கு அவர்களின் மரபணுப்படி இது மிக முக்கியம். நம்மை கண்டபடி வைத்துக் கொண்டு அவர் நம்மை அணுகுவதில்லை என்று கவலைப்படுவது நியாயமா? நமது உடல்நிலையை பராமரிப்பதன் மூலம் குடும்பத்தின் ஆரோக்கியத்தை நாம் பராமரிக்கிறோம். பிள்ளைகளின் பாதுகாப்பை நாம் உறுதி செய்கிறோம் எனும் கவனம் ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவை.


மேலே குறிப்பிட்ட விஷயங்களை கவனத்தில் கொண்டு ஒவ்வொரு ஆணையும் அவர்களது பெண்கள் அக்கறையோடு அணுகினால் ஆண்கள் தங்கள் பெண்களை விட்டு வேறொரு வாய்ப்பைத் தேடித் செல்ல மாட்டார்கள் என்பது உண்மை. இருப்பினும் சந்தர்ப்பம் கிடைத்தாலும் தவறு செய்யாமல் இருக்கும் பேராண்மகன் இந்த பூமியில் மிக மிக குறைவு என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். 


--- 


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPx