காதலர் தினத்தின் மீது எனக்கு   ஏன் 'காதல்' இல்லை ?! மற்றும் இந்த வீ -டே வில் செய்ய 5 சுவாரசியமான விஷயங்கள் (சிங்கிள்ஸ் ஸ்பெஷல் ) !!

காதலர் தினத்தின் மீது எனக்கு   ஏன் 'காதல்' இல்லை ?! மற்றும் இந்த வீ -டே வில் செய்ய 5 சுவாரசியமான விஷயங்கள் (சிங்கிள்ஸ் ஸ்பெஷல் ) !!

பிப்ரவரி வந்தால் போதும்!  வாலெண்டைன்ஸ் டே (valentine day) என்று எங்கும் எதிலும் கார்ட்ஸ், பரிசு பொருட்கள், எந்த நிறத்திற்கு என்ன அணியலாம் - என்ன அர்த்தம், லவ் டே மலர்கள், காதல் கொண்ட வரிகள்/வாழ்த்துக்கள் எனும் பல விஷயங்களை  உங்களை சுற்றி இருக்கும் கடைகள் மற்றும் சமூக ஊடகத்தில் பார்க்க ஆரம்பித்து இருப்பீர்கள்.


giphy %289%29


வருஷம் ஆரம்பித்து ஒரே மாதத்தில் வரும் இந்த காதலர் தினத்தை பற்றி எனக்கு பெரிய அபிப்ராயம் கிடையாது. ஆம்! ஏனெனில், என்னை பொறுத்த வரை 'அன்பு உலகலாவியல்'. மேலும் அது நிபந்தனையற்ற ஒன்றாகும். இதில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நாளை தேர்ந்தெடுத்து கொண்டாதுவதில் எனக்கு பெரிய ஈடுபாடு இல்லை. சிங்கிளா (single) என்று உங்களுக்குள் ஒரு கேள்வி தோன்றுகிறது  என்றால் ...


விளையாட மிகவும் சுவாரஸ்யமான விளையாட்டுகளையும் படிக்கவும்


ஆம்! நான் சிங்கிள் தான். அனால் கமிடெட்டும் கூட…குழப்பமாக இருக்கிறதா?!


இதற்கு பதில் தெரிய மேலும் படியுங்கள்...


காதலர் தினம் ஏன் எனக்கு பிடிக்காது  என்று கேட்டால் ...எங்கும் எதிலும் "ஐ லவ் யு " செய்திகள்... உண்மையில் இதில் எனக்கு ஒரு பிடிப்பு இல்லாதது போலதான் தெரிகிறது. அன்பை வெளிப்படுத்த அந்த ஒரு நாள் மட்டுமே போதுமானதா என்ன?  அதை எப்போதும் எங்கேயும், தோன்றும் நொடிகளில் எல்லாம் வெளிப்படுத்துவது அவசியம் என்று நினைக்கிறேன்.


அன்பு நித்தியமானது.வார்த்தைகளை விட செயல்கள்  மிக முக்கியம்!


அதற்கு பின்,  எல்லோரும் இந்த நாளில் அவர்களின் அன்பார்ந்தவருக்கு  அன்பளிப்பு கொடுப்பார்கள். என் முகத்தில் ஒரு அறை விட்டு என்னை  எனக்கே காட்டி, என்னை யாரும் விரும்பவில்லையா  என்று ஒரு கேள்வியை எழுப்பிவிடும்...


சுய அன்பு  - உண்மையில், இந்த உலகில், உங்கள் மேல் அன்பு காட்ட உங்களை விட சிறந்த ஒரு நபர் கிடையாது என்பதுதான் நிஜம் !(அனுபவப்பூர்வமாக கூறுகிறேன் ! )


எங்கும் வெளியில் செல்ல ஒரு பிளான் கூட இருக்காது ... ஆனால் உங்கள் கூட வேலை செய்யும் பெண்கள் மற்றும் மற்ற அலுவலக பிரெண்ட்ஸ், காலேஜ் பிரெண்ட்ஸ் எல்லோருக்கும் சில பல  பிளான்ஸ் இருக்கும். அதை பற்றி அவர்கள் பேசும்போது.... அந்த அன்பை நம்மால் அனுபவித்து பார்க்க முடியவில்லையே என்று ஒரு ஏக்கம் எட்டி பார்க்கவும் வாய்ப்புள்ளது!


ஆனால் என் கருத்து ...உங்களுக்குள் அன்பு  ஏற்கனவே மிகுதியாக இருக்கிறது. அதை கொஞ்சம் தட்டி எழுப்புங்கள். இதற்கு இனொருவர் எதற்கு தேவை ?!


ஆகையால், இந்த காதலர் தினத்திற்கு,  சுதந்திரமாக (என்னை போல்..) உலாவிக்கொண்டு இருக்கும் சிங்கிள்ஸ்ற்கு சில அற்புதமான யோசனைகள் அளிக்க இருக்கிறேன்... உங்களுடன் நீங்கள் டேட் செய்ய!


giphy %281%29


  • முதலில் அந்த ஷாப்பிங் கார்டில் ரொம்ப நாட்களாக இருக்கும் உங்களுக்கு பிடித்த பொருளை வாங்கிவிடுங்கள். இனி எதற்கு தாமதம்? அதை அனுபவிக்க நேரம் வந்துவிட்டது. அதை உங்களுக்கே  பரிசாக இந்த காதலர் தினத்தன்று கொடுத்து கொள்ளுங்கள்.

  • உங்களை ஒரு ஸ்பா டேட்டிற்கு அழைத்து செல்லுங்கள்... உங்கள் உடம்பை முழுமையாக பாம்பெர் (pamper) செய்து  கொள்ளுங்கள் ( நான் செய்வதெல்லாம் அன்புடனும்.. அன்பை தவிர வேறு ஒன்றும் இல்லை!...) உங்கள் கைகள், கால்கள், மற்றும் உடம்பை மஸ்ஸாஜ் செய்து  நன்கு அமைத்து கொள்ளுங்கள் (எல்லாவற்றுக்கும் மேல், உங்களை நீங்கள் தானே பார்த்துக்கொள்ள வேண்டும்...)


giphy %284%29-min %281%29


  • பாடம் என்பது வெறும் படிப்பு அறையில் மட்டுமில்லை. அதனால், ஏதேனும் ஒரு கிராஷ் கோர்ஸ்ஸில் (crash course)  சேருங்கள். பேக்கிங் உங்களுக்கு விருப்பம் என்றால் சட்டென்று ரேடி செய்ய ஒரு கேக் ( சாக்லேட் கேக்....ஹ்ம்ம்!!!) எவ்வாறு செய்யவேண்டும் என்று கற்றுக்கொள்ளுங்கள் ( அங்கே சில நண்பர்களையும்  சந்திக்க வாய்ப்புகள் இருக்கிறது...)

  • அடுத்து.. ஏதேனும் ஒரு படம் அதும் உங்களுக்கு பிடித்த டாபிக்கில்! ஏனெனில், உங்களுக்கு பிடித்த சமாச்சாரத்தை உங்களை விடை வேறு யாரால் அதிகம் ரசிக்க முடியும்? ஒரு வேலை உங்களுக்கு ஒரு பார்ட்னர் இருந்தாலும் அவருக்கும் அது பிடிக்கும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே,அந்த ஒரு நபர் (ஆம்! தனி ஒருவன்...) வரும் வரை நீங்கள் வாழ்க்கையை அனுபவிக்கலாமே!


giphy %286%29


  • காலை முதல் மாலை வரை நான் சொன்னதை நீங்கள் செயதீர்கள் என்றால், உங்கள் மீது உங்களுக்கு அவ்வளவு பாசம் இருக்கிறது  என்று தெரிந்து கொள்வீர்கள்( பின்பு அந்த தனி ஒருவன் வந்தால் கூட உங்கள் கவனம் அங்கே திரும்புவது சந்தேகம்தான்! ) கடைசியாக... உங்கள் கார் அல்லது ஒரு பொது போக்குவரத்தில் சிட்டியை  உலா வாருங்கள். இப்போது தெரிகிறதா...நான் ஏன் கமிட்டேட் என்று கூறினேன் என்று?!


உங்கள் நாள் மிக இனிமையாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்!  


மிகுதியான அன்பை உங்கள் மீது பொழிந்து கொண்டாடுங்கள்..உண்மையான நிபந்தனையற்ற அன்பு உங்கள் பாதையில் மாயமாக வந்து சேருவதை காண்பீர்கள்!


giphy %2810%29


பட ஆதாரம் - pexels,pixabay,giffy


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !


 மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.