காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் என்ன குடிக்கலாம், எது நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும், நாள் முழுதும் புத்துணர்ச்சி தரக்கூடியது எது தெரியுமா?
காலை எழுந்ததும் டீ அல்லது காபி குடிப்பது பலர் வழக்கமாக வைத்து உள்ளார்கள். இதற்கு முக்கிய காரணமாக புத்துணர்ச்சி, எனர்ஜி ஆகியவற்றையும் குறிப்பிடுகிறார்கள். ஆனால் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சூடான இந்த பாணங்களை விட வெதுவெதுபான தண்ணீர்(water) குடித்தால் நாம் பெறும் நன்மை ஏராளம்.
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் அமீலத்தை சரிசெய்வது மட்டுமில்லாமல், வயிறும் பாதுகாக்கப்படுகிறது.
வெந்நீர் இல்லாமல் சாதாரண சுத்தமான தண்ணீர்(water) பருகினால் அசிடிட்டி குறைந்து நம் உடலின் ஆற்றல் அதிகப்படும்.
தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதனால் பசி குறையும். உடல் பருமன் அதிகரிப்பதை குறைக்கலாம்.
நமது உடலை சீராக வைத்து கொள்வது நமது கடமை. தண்ணீர் அதிகம் குடிப்பதனால் சருமத்தில் உள்ள சுருக்கம், வறட்சி, உண்டாகாமல் பார்த்து கொள்ள முடியும்.
Also read all you need to know about benefits of drinking water
நம் அன்றாடம் சரியாக தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நமது குடல் இயக்க செயல்பாட்டில் சில மாற்றம் நேர வாய்ப்பு உள்ளது. இதனால் மலம் கழிப்பதில் பாதிப்பு உண்டாகும். காலையில் தண்ணீர்(water) அதிகம் குடித்தால் மலசிக்கல் போன்ற பிரச்னை ஏற்படாது.
தண்ணீர் அதிகம் குடிப்பதனால் சிறுநீரகத்திலுள்ள நச்சுகள் வடிகட்டி வெளியேற்றப்படும். ரத்தத்தில் உள்ள நச்சுளும் போகும். இதனால் உடல் முழுவதும் புத்துணர்ச்சியை பெற உதவும்.
1. நமது குடல் சுத்தமாக்கப்படும். இதனால் சிறிது நேரத்திலேயே சீரான முறையில் மலச்சிக்கல் பிரச்சனை இல்லாமல் மலம் கழிக்க முடிகிறது.
2. தண்ணீரானது நமது உடலின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்கள் மற்றும் கிருமிகளை சிறுநீர் மூலமாக வெளியேற்றி, எப்போதும் நமது உடலின் சுறுசுறுப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.
3. தண்ணீரை நாம் அதிகமாக குடித்தால், நமது உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கப்படும். இதனால் நீரிழிவு நோய் மற்றும் அடிக்கடி ஏற்படும் தலைவலி பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படுகிறது.
4. அதிகாலையில் தினமும் 1 மணி நேரத்திற்கு முன் தண்ணீர் குடித்து விட்டு பின் சாப்பிட்டால் அல்சர் பிரச்சனை மூலம் ஏற்படும் தீவிரத்தை வராமல் தடுக்கலாம்.
5. வெறும் வயிற்றில் தண்ணீர்(water) குடிப்பதால், ரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சி அதிகரித்து, அதிகப்படியான ஆக்ஸிஜன் கிடைப்பதால், நமது உடலானது எனர்ஜியுடன் இருக்கும்.
6. அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து, உடல் எடை குறைக்கிறது.
தினமும் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர்(water) அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டிருக்கும் கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்ற விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.
இம் முறையை நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக பின்பற்றி வந்துள்ளார்கள். அவர்கள் தண்ணீருக்குப் பதிலாக பழந்தண்ணீரை (சோற்றுப் பானைக்குள் எஞ்சிய சோற்றிக்குள் விட்டு வைத்த நீர்) குடித்துவிட்டு தோட்டத்திற்கோ, வேறு தொழில்களுக்ககோ செல்வார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் தற்பொழுது நாகரீக உலகில் அவையெல்லாம் அநாகரிகமாக கணிக்கப்பெற்று கட்டிலில் தேனீர் (Bed tea) அருந்தும் வழக்கம் முன்னெடுக்கப் பெற்று நாம்மெல்லாம் நோயாளிகளாகி வருகின்றோம்.
நாம் நித்திரையில் இருக்கும்போது வாய்மூலம் உடலினுள் புகும் நோய் கிருமிகளை அழிப்பதற்காக வாயினுள் பல நோய் எதிப்பு சுரப்புகள் சுரப்பதாகவும், அவை நாம் நித்திரை விட்டெழுந்ததும் வாய் கழுவாது நீர் பருக்கும் போது உடலினுள் சென்று பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாக மாறுகின்றன எனவும் அறிய முடிகின்றது. வாய் கழுவாது காலையில் நீர் குடிப்பவர்கள் கட்டாயம் நித்திரைக்குச் செல்லும்போது பல் துலக்கி வாயை சுத்தமாக வைத்திருத்தல் அவசியமாகின்றது.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப் பழைய கடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் 100% வெற்றிகாரமாக குணப்படுத்த முடியுமென ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.
தலை வலி , உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய் , வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமான உடல் பருமன், ஆஸ்துமா, காச நோய், மூளைக்காய்ச்சல், சிறு நீரகம் மற்றும் சிறு நீர் வியாதிகள் , வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள்,
மூல வியாதி, சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி, சகலவிதமான கண் நோய்கள், கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய் கோளாறுகள், காது, மூக்குத், தொண்டை கோளாறுகள் போன்றவற்றுக்கு இந்த நீர் மருத்துவம் 100% பயனளிக்கின்றது என ஜப்பானிய மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo