'சுதந்திரமாக' உறவு கொள்ள உகந்த நாட்கள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

'சுதந்திரமாக' உறவு கொள்ள உகந்த நாட்கள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

காமம் என்பது இனப்பெருக்கத்துக்காக இயற்கை உருவாக்கிய வழி என்று சொல்லப்பட்டாலும் இனப்பெருக்கத்திற்குப் பின்பும் இச்சை எழத்தான் செய்கிறது.


பெரும்பாலான எப்போதும் ஒருவித படபடப்புடன் உறவு கொள்கின்றனர். காமத்தை முழுமையாக அனுபவிக்க முடிவதில்லை. காரணம் கருத்தரித்து விடுவோமோ என்கிற பயம்தான்.


இதனைத் தடுக்க பக்கவிளைவுகள் கொண்ட மாத்திரைகளோ பிளாஸ்டிக் வாசனையுடன் கூடிய ஆணுறைகளையோ அல்லது தங்கள் உடலுக்குள் பொருத்திக் கொள்ளும் ஒருவித பிளாஸ்டிக்கிலான கருவிகளையோ பெண்கள் அனுமதிக்க வேண்டியதாக இருக்கிறது. என்னதான் காரணங்கள் சொன்னாலும் நமது உள்ளுறுப்புக்குள் செலுத்தப்படும் பிளாஸ்டிக் பல பேருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. இது பல்வேறு நீண்ட கால நோய்களுக்கு காரணமாகவும் அமைகிறது.இதில் இருந்து தப்பிக்க மீண்டும் நாம் தஞ்சம் அடைவது நமது முன்னோர்களிடம்தான். இயற்கை முறையில் எப்படி சாமர்த்தியமாக உடலுறவை வைத்துக் கொள்ளலாம் என்பது பெண்களின் மாதவிலக்கு சுழற்சியில் இருந்து கணிக்கப்படுகிறது.


இந்த முறையைப் பின்பற்றி உலகில் கோடிக்கணக்கான பெண்கள் பாதுகாப்பான மற்றும் இயற்கையான உறவில் ஈடுபட்டு அசல் சந்தோஷத்தை அடைகின்றனர். இந்த முறையை மிக கவனமாக கடைபிடித்தால் 90 சதவிகிதம் வரை வெற்றியடைய முடியும் என்கிறது விஞ்ஞானம்.கரு உருவாகும் விதம்


கருவகத்தில் இருந்து வெளியாகும் முட்டை பெலோப்பியன் ட்யூப் வழியாக கருப்பையை சென்று சேர்க்கிறது. இது 24 மணி நேரம் வரை மட்டுமே உயிரோடு இருக்கும். அதற்குள் விந்தணு இம்முட்டையோடு சேர்ந்தால் குழந்தை உருவாகிறது.


ஆணின் விந்து பெண்ணின் கருப்பை மூலமாக பெலோப்பியன் ட்யூபை அடைகிறது. அங்கு அதனால் பல நாட்கள் உயிர்ப்போடு இருக்க முடியும். இந்த காலத்தில் முட்டை வெளியேறினால் கரு உருவாகும்.


 பாதுகாப்பான நாட்களை எப்படி அறிவது (safety days)


இந்த முட்டை வெளிவரும் நாட்களை முழுமையாக கணக்கு போட்டு சொல்லிவிட முடியாது என்றாலும் பெண்களின் மாதவிலக்கு சுழற்சி இதனைக் கணிக்க உதவுகிறது. அடுத்த மாதவிலக்கு வரும் நாளில் இருந்து 14 அல்லது 16 நாளுக்கு முன்னர் இந்த முட்டை வெளிவருகிறது.


பெரும்பான்மை பெண்கள் 28 நாட்கள் மாதவிலக்கு சுழற்சி பெறுகின்றனர். ஒரு சிலருக்கு இது மாறி வரலாம். 35 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு கொண்டவர்கள் உங்கள் 14வது நாள் பாதுகாப்பானது. 15வைத்து நாளில் இருந்து 28வது நாள் வரை கவனமாக இருக்க வேண்டும்.


ஒரு சிலருக்கு 23 நாட்களில் மாதவிலக்கு வரலாம். இவர்களுக்கு 7 அல்லது 9 நாட்களில் முட்டை வெளியேறலாம். ஆகவே இவர்களுக்கு 15 நாட்களுக்கு பின் பாதுகாப்பான நாட்கள் வரலாம்.நாட்களைக் கணக்கிடுவதில் தவறி விட வேண்டாம்


மிக சரியான மாதவிலக்கு சுழற்சி என்பதை இப்படித்தான் கணக்கிட வேண்டும். மாதவிலக்கு ஆரம்பித்த நாள் முதல் நாளாகக் கொள்ள வேண்டும். அடுத்த மாதவிலக்கு ஆரம்பிக்கும் நாளுக்கு முந்தைய நாள் இந்த சுழற்சியின் முடிவு நாள்.


இதுதான் சரியான கணக்கு. மற்றபடி மாதவிலக்கு நின்ற நாளில் இருந்து நீங்கள் கணக்கெடுத்துக் கொண்டால் உங்களுக்குத் தவறான முடிவுகள்தான் கிடைக்கும்.


மாதவிலக்கு சுழற்சி ஒழுங்காக நடைபெற்றுக் கொண்டிருப்பவர்கள் மட்டுமே இதனை முயற்சிக்க வேண்டும். ஒழுங்கற்ற மாதவிலக்கு கொள்பவர்கள் செய்ய வேண்டாம். 23 முதல் 32 நாட்களுக்குள் ஒரு வருடமாவது சுழற்சி ஒழுங்காக நடந்தால் அவர்கள் முயற்சிக்கலாம்.இதுதான் நீங்கள் எதிர்பார்த்தது !


மாதவிலக்கு சுழற்சி நாட்களில் 8ஆம் நாள் தொடங்கி 19 நாட்கள் வரை கருத்தரிக்கும் நாட்கள். தங்களது சுழற்சியின் முதல் 7 நாட்களிலும் கடைசியாக 23 நாட்களுக்குப் பின்னரும் இயற்கை முறையில் சுதந்திரமாக உறவு கொள்ளலாம்.


எல்லாப் பெண்களுக்கும் இது பொருந்தாது . உடல்வாகை பொறுத்து உடலில் உள்ள ரத்தமின்மை காரணமாக திடீரென மாதவிலக்கு சுழற்சி பாதிக்கப்படலாம் என்பவர்கள் வேறு ஒரு முறையைப் பின்பற்றுங்கள். அவசியம் மருத்துவ ஆலோசனை எடுத்துக் கொள்ளுங்கள்.


 


படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்.


--


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.