இந்த காதலர் தினத்தில் இழந்த உங்கள் காதலை மீட்டெடுப்பது எப்படி?

இந்த காதலர் தினத்தில் இழந்த உங்கள் காதலை  மீட்டெடுப்பது எப்படி?

5 வருட ஆழமான காதலுக்குப் பிறகு ஒரு நாள் எனது காதலர் பிரேக் அப் செய்தார். என் உலகமே உடைந்தது போலிருந்தது. இது ஏன் நடந்தது இதற்குப் பின் என்ன செய்வது என்பது பற்றியெல்லாம் எனக்குத் தெரியவில்லை.எனக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது கண்ணீர். எவ்வளவோ நாட்கள் தொடர்ந்து அழுதபடியே இருந்தேன்.


மீண்டும் அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் என்னை எல்லா இடங்களிலும் ப்ளாக் செய்திருந்தார்.


நாளுக்கு நாள் என் சோகம் அதிகமாகிக் கொண்டே போனது. எங்கள் பழைய வாட்சப் உரையாடல்களைப் பார்ப்பது, புகைப்படங்களை பார்ப்பது இது நாங்கள் ஒன்றாக இருக்கும்போது கூட இப்படி நான் இருந்ததில்லை என்பதை எனக்கு உணர்த்தியது.


பிரேக்கப்பிற்குப் பிறகு எல்லாவற்றையும் விட அவர்தான் என் ஒற்றை இலக்காகத் தெரிந்தார். நாங்கள் இருவரும் சேர்ந்து ஒன்றாகக் கண்ட எதிர்காலக் கனவை விட்டுக் கொடுக்க என்னால் முடியவில்லை. அவரால் மட்டும் எப்படியோ அது முடிந்திருக்கிறது.


என்னால் எனது வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.  தொடர்ந்து எல்லா இரவுகளிலும் அழுது கொண்டிருந்தேன். இனி நாங்கள் ஒன்றிணைய மாட்டோம் எனும் உண்மையை நான் ஏற்றுக் கொள்ளவே இல்லை. மீண்டும் அவரைத் திரும்பப் பெறுவது எப்படி என்பது மட்டும்தான் என் சிந்தனையாக இருந்தது.----- தீக்ஷண்யா.பிரேக்கப் என்பது ஒரு பேரழிவிற்கான பாதை போலவும் நமது வலியின் அதீதத்தை அனுபவிப்பதும் போலவும் இருக்கும் ஒன்றாகும். இத்தனை நாள் நாம் நேசித்து வந்த நபர் இனிமேல் நமது வாழ்வில் இருக்க மாட்டார் என்பது நம்மால் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு வலியாகும். ஆகவே மீண்டும் நம்மோடு அவரை இணைக்கும் செயல்களை நாம் செய்யத் தொடங்குவோம்.


புரிதல்கள் சரியாக இல்லாத காதல்தான் பெரும்பாலும் ப்ரேக்கப்பில் முடிகிறது. உடைந்த தொடர்புகள், ஏமாற்றுதல், சூழ்நிலைகள், பொருளாதார தேவைகள் போன்ற பலவித காரணங்களால் ஒரு பிரேக்கப் நிகழ்கிறது.மீண்டும் இணைவதற்கான (Reconnection) செயல்முறைகள்


பிரேக்கப்பிற்குப் பிறகு ஒரு நபர் பெரும்பாலும் தனிமையாகவும், வெறுமையாகவும், கவலையோடும் இருப்பார். வாழ்க்கையின் அடுத்த பக்கங்களைப் பார்க்க அவர் விரும்ப மாட்டார். நாம் இழந்த சௌகர்யம், கதகதப்பு, அக்கறை போன்றவைகளை உடனே திரும்பப் பெற வேண்டும் என்கிற எண்ணம் எழும்.  ஆனால் இது ரிஸ்க்கான நேரம்.


இது ஏன் என்றால் ஒரு ஆய்வின் முடிவின்படி 80 சதவிகித காதல்கள் மீண்டும் இணைகின்றன ஆனால் சரியான புரிந்து கொள்ளல் இல்லாதது, பிரச்னையின் ஆதி வேரை சரி செய்யாமல் மேலோட்டமாக சரியாவது போன்ற காரணங்களால் மீண்டும் ப்ரேக்கப்பிலேயே போய் முடிகின்றன.


இதற்கு நாம் என்ன செய்யலாம் என்றால் நமது சொந்த நேரத்தை நமக்காக செலவழித்து ஒரு சுயபரிசோதனையை நாம் மேற்கொள்ள வேண்டும். இதனை இருவரும் இணைந்தே செய்யலாம். வாய்ப்பு இல்லாதவர்கள் தங்கள் காதல் பற்றிய சுயபரிசோதனை விளக்கங்களை இன்னொரு நபருக்கு எடுத்துக் கூறலாம்.
1. இந்தக் காதலில் என்ன தவறு நடந்திருக்கிறது


எதனால் இந்த பிரேக்கப் நிகழ்ந்தது என்பதனை ஒவ்வொரு விஷயமாக அலசி ஆராய்ந்து கூறு போட்டு பிரித்தெடுக்க வேண்டும். இந்த நிலை இங்கு மிக முக்கியமானது. இதனை சரியாக செய்தால்தான் அடுத்த அடுத்த செயல்கள் சரியான முடிவை தரும். நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள ஏதாவது செய்தோம் என்றால் மீண்டும் மாட்டிக் கொண்டு வலியால் கதற வேண்டி வரலாம்.


இதனை சரியாக செய்தோம் என்றால் இந்த உறவிற்கான கதவை நாம் மீண்டும் திறக்கலாமா அல்லது ஜன்னல்களையும் சேர்ந்தே சாத்தி விடலாமா என்று நம்மை சரியானதொரு முடிவுக்கு கொண்டு வரும்.
2. இந்தப் பிரிவிற்கு நாம் ஏதாவது வகையில் காரணமாக இருந்திருக்கிறோமா?


நமது பக்கம் குறைகள் இருக்கிறதா நாம் பொசசிவ் ஆக  இருந்திருக்கிறோமா இல்லை சார்ந்து நடந்திருக்கிறோமா பாதுகாப்பின்மையை உணர்திருக்கிறோமா அல்லது அவர்களுக்கு அந்த உணர்வைக் கொடுத்திருக்கிறோமா என்பது பற்றி நாம் கவனமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும்.


நம் அனைவருக்கும் தனி தனி ஸ்டைல்கள் உண்டு. காதலிப்பதில், பிரச்னை செய்வதில், ஒன்றிணைவதில், உணர்ச்சிவசப்படுவதில், தொடர்பு கொள்வதில் என பல ஸ்டைல்களை நாம் பின்பற்றுகிறோம்.


ஆகவே கடந்த காலத்தில் நமது இந்த அணுகுமுறையில் ஏதேனும் சிக்கல் வந்ததா என்பதை சரிபாருங்கள்.


நம்மைப் பற்றி நாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதன் தாக்கம்தான் நமது கையில் இருக்கும் அதிகாரம் முடிவெடுக்கும் திறன் போன்றவை.


நமது உணர்வுகள் நமக்கானவைதானே தவிர இதற்காக நமது துணை இதே போல பதில் தர வேண்டும் என்பது இல்லை.இதனை எப்படி சரி செய்யலாம் என்றால்  நம்மிடம் இல்லாத ஒரு விஷயத்தை நமது துணை வந்து நிரப்புவார் என்று நாம் எதிர்பார்கிறோமா என்று பார்க்க வேண்டும்.


நமது தனிப்பட்ட இடம், உறவின் எல்லைக் கோடுகளை நாம் வகுத்து வைத்திருக்கிறோமா என்பதை பார்க்க வேண்டும்.


நமது சுய பாதுகாப்புத் திறனில் இருந்து நாம் பிறழ்கிறோமா என்பதைக் கவனிக்க வேண்டும்.


சுயபரிசோதனையின் இந்தக்கட்டத்தில் நாம் நமது சொந்த எண்ணங்களை புரிந்து கொள்வோம் மேலும்  மேம்படுவோம் சரியாக செய்யாவிட்டால் எல்லாம் நாம் செய்த பாவம் என்று விரக்தியடைவோம். இதனால் கூட நமது துணை நம்மை விட்டு விலகியிருக்கலாம் என்று கூட யோசனைகளை வரலாம்.3. நமது துணையோடு நாம் ஏன் மீண்டும் ஒன்றாக பயணிக்க விரும்புகிறோம் ?


பிரேக்கப்பிற்கான காரணங்கள் என்னென்ன என்பதை நாம் அறிவுபூர்வமாக அலசி ஆராய்ந்து முடித்த பிறகு எந்தெந்த சூழலில் நாம் தவறிழைதிருக்கிறோம் எப்படியெல்லாம் இந்த சிக்கலை அணுகியிருந்தால் சரியாக இருந்திருக்கும் என்றொரு கணக்கு இப்போது உங்கள் கைகளில் இருக்கும். இதன் அடிப்படையில்தான் நாம் நமது துணைதான் வேண்டும் என்பதில் ஏன் பிடிவாதமாக இருக்கிறோம் என்பதற்கான பதில் கிடைக்கும்.


இரண்டு நபர்களின் அன்யோன்யம் என்பது அவர்களின் அடிப்படை நம்பிக்கைகள், மரியாதைகள், உறவையும் வாழ்க்கையையும் அணுகும் விதங்கள் என எல்லாம் இணைந்ததுதான். இந்த இடத்தில் சில கேள்விகளை  நம்மை நாமே கேட்டுக் கொள்ளலாம்.


நாங்கள் இருவரும் இணக்கமான துணைதானா ?


சரி செய்ய முடியாத விஷயங்கள் எங்களுக்குள் ஏதேனும் இருக்கிறதா?


இந்த உறவை நாம் மீண்டும் தேர்ந்தெடுக்கக் காரணமாக இருப்பது பயமா, பொருளாதார தேவைகளா, அல்லது சந்தோஷம் மற்றும் சுதந்திரமா?


நமது இழந்த உறவை மீட்டெடுப்பதற்கான சரியான தருணம் எது என்ன என்றால் அவர் இல்லாமல் நீங்கள் வாழப் பழகும் அந்த தருணம்தான்.


தேவைகளுக்காக நாம் அவரோடு இருக்க விரும்பாமல் அவரோடு வாழ்வதற்காக இருக்க விரும்பும் இந்த தருணம்தான் மிக முக்கியமானது.


இப்போது நீங்கள் அவரோடு இணைவதற்கான முயற்சிகளை செய்யலாம். அவருக்கு எழுதுங்கள். எழுத்து மிக அற்புதமான விஷயம். நாம் சொல்ல வருவதை குறுக்கீடின்றி சொல்லி முடிக்கலாம். அவரும் பொறுமையாக படித்து யோசிக்க நேரம் இருக்கும்.


இந்த உறவை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் எவ்வளவு மதிக்கிறீர்கள் என்பதை அவர் சரியான முறையில் புரிந்து கொண்டார் என்றால் நிச்சயம் உங்களை நோக்கி அவர் வருவார்.


ஆனாலும் அடுத்தவர் என்ன முடிவு எடுப்பார் என்பதை எப்போதும் நாம் அறுதியிட்டு சொல்லிவிட முடியாது. அவர்களை நிர்பந்தித்து அதன்மூலம் உறவுகள் இணைந்தாலும் பின்னொரு நாளில் அது மீண்டும் அறுந்து போக வாய்ப்பிருக்கிறது.


அவருக்கான நேரத்தைக் கொடுங்கள். என்ன முடிவு வந்தாலும் இப்போது நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். காரணம் உங்கள் காதல் சுயபரிசோதனை உங்களுக்கு ஒரு தெளிவைக் கொடுத்திருக்கும். ஆகவே உங்களால் இப்போது எதையும் ஏற்றுக் கொள்ள முடியும்.


reconnectfb %282%29


பிரேக்கப் என்ற உடன் உடைந்து போகாமல் இந்த சுயபரிசோதனையை செய்து பாருங்கள். நிச்சயம் நீங்கள் விரும்பியது நடக்கும். அல்லது சரியான ஒன்றை நீங்களே விரும்பி ஏற்றுக் கொள்வீர்கள்.


படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.