முன்ஜென்மத்தில் நீங்கள் என்னவாக இருந்தீர்கள் ! 100 சதவிகிதம் அடித்து சொல்லும் உண்மைகள் மற்றும் துல்லியமான பிறந்த தேதி பலன்கள்!

முன்ஜென்மத்தில் நீங்கள் என்னவாக இருந்தீர்கள் ! 100 சதவிகிதம் அடித்து சொல்லும் உண்மைகள் மற்றும் துல்லியமான பிறந்த தேதி பலன்கள்!

முதலில் இந்த ஜென்மத்தில் நாம் என்னவாக இருக்கிறோம் என்கிற விழிப்புணர்வே நம்மில் பல பேருக்கு இருப்பது இல்லை. இதில் முன்ஜென்மத்தை தெரிந்து கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம் என்று பலருக்குத் தோன்றலாம்.


ஆரம்பத்தில் எனக்கு கூட அப்படிதான் தோன்றியது. ஆனால் இதன் உண்மை மிக சரியாகப் பொருந்தி போனதால் உங்களோடு இந்த பலன்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இங்கே எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பதும் நமது சிறிய கண்சிமிட்டலும் இன்னொருவர் வாழ்க்கையை நல்லவிதமாகவோ மாற்றாகவோ பாதிக்கும் என்பதை நான் நம்புகிறேன்.


புரியும்படி கூறுவதானால் பட்டாம்பூச்சி தியரி தான். கேயாஸ். இதற்கான தமிழ் அர்த்தம் குழப்பம் என்று கூகிள் காட்டுகிறது. உண்மையில் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற ஒழுங்கற்றும் ஒழுங்கோடும் நடக்கும் பலவித செயல்களால் இந்த உலகம் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ளும்படி இயங்குகிறது என்பதுதான் இயற்கையின் நியதி.


பிறப்பின் ரகசியம் இதில் இருந்துதான் தொடங்குகிறது. ஒரு ரகசியத்தை தெரிந்து கொள்ளும் சுவாரஸ்யத்துடன் உங்கள் வாழ்க்கையை அணுகுங்கள். வாழ்தலின் சிறப்பே அதுதான்.


அதன் அடிப்படையில் இந்த முன்ஜென்ம பலன்கள் உங்களுக்கு இந்த ஜென்ம தொடர்புகளை விளக்கலாம். நம்வாழ்வின் நன்மை தீமைகளுக்கு அடிப்படையாகலாம். இதன் மூலம் இதற்கடுத்து நடக்கும் கேயாஸ்களை நாம் நம் கையில் எடுக்கலாம். ஆகவே பலன்களை படித்து பாருங்கள்! நீங்கள் ஆச்சர்யப்படும் விதத்தில் இருந்தால் உங்கள் கமெண்ட்களைக் கூறுங்கள். (numerology)எண் 1 (1,10,19,28)


முப்பிறவிகளில் நீங்கள் உங்கள் ஆத்மாவை பசியோடு அலைய விட்டிருக்கிறீர்கள். சுய த்யாகங்களால் மற்றவர்களை மகிழ்வித்திருப்பீர்கள். உங்களது முழுமை பற்றி நீங்கள் அறியவில்லை. உங்களை பற்றிய சுயமரியாதை உங்களுக்கு இருந்திருக்காது.


இந்தப் பிறவி அதன் தொடர்ச்சி என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் முழுமையை நீங்கள் உணர முயற்சியுங்கள். ஆழ்மனதின் குரலைக் கண்டடையுங்கள். அமைதியை உணருங்கள்.


 எண் 2 (2,20,29)


முற்பிறவியில் நீங்கள் திரவியம் தேடும் முயற்சிகளில் இருந்திருப்பீர்கள். பொருள் தேடி ஓடியபடியே இருந்திருப்பீர்கள். ஒவ்வொன்றையும் சிரமப்பட்டு சம்பாதித்து சேர்த்திருப்பீர்கள்.


அதன் பின் நீங்கள் இறந்து போயிருப்பீர்கள். இப்போது இங்கே இருக்கிறீர்கள். முன்ஜென்ம பாடம் உங்களுக்கு உணர்த்துவது பொருள் என்பது எல்லாம் தருவதில்லை. அதையும் தாண்டி பலவிஷயங்கள் இங்கே உண்டு. அது என்ன என்பதை தேடுங்கள். இந்தப் பிறவியில் அதனை கண்டுபிடித்து அதன் முழுமையை அனுபவியுங்கள்.


 எண் 3 (3,12, 21,30)


உங்களுக்கு முற்பிறவியிலும் சரி, இப்பிறவியின் ஆரம்ப காலத்திலும் சரி உங்களால் வெளிப்படையாக பேசியிருக்க முடியாது .எப்போதும் பயம் , படபபடப்பு , சௌகர்யம் இல்லாத நிலைமை, சுய மரியாதையை இழந்திருப்பது போன்ற நிகழ்வுகள் இருக்கலாம்.


ஏதோ ஒரு நிர்பந்தத்தின் அடிப்படையில் நீங்கள் உங்கள் தனித்துவத்தை வெளிக்காட்ட முடியாமல் போயிருக்கலாம். இப்போது நீங்கள் விட்டுப் போன அந்த குறையை நீக்குங்கள். உங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்த ஆரம்பியுங்கள். மனம் விட்டு பேசுங்கள்.


 


 எண் 4 (4,13,22,31)


உங்கள் முற்பிறவியில் நீங்கள் குடும்ப சந்தோஷம் பாரம்பர்ய வழக்கங்களில் சந்தோஷமாக இல்லை. எல்லோரும் இருந்தும் தனித்திருப்பீர்கள். உங்களுக்கான சந்தோஷங்கள் எல்லாம் தடை செய்யப்பட்டிருப்பதை உணர்ந்திருப்பீர்கள்.


இந்த பிறவியில் நீங்கள் இழந்தவர்களை மீட்டெடுங்கள். அன்போடு இருங்கள். நீங்கள் தருவதையே பெறுவீர்கள். ஆகவே உங்களுக்கு எது வேண்டும் என்றாலும் அதனை முதலில் கொடுங்கள். எல்லாவகையான இன்பங்களும் உங்கள் வசமாகும்.எண் 5 (5,14,23)


முற்பிறவியில் பிறரிடம் இருந்து இன்பம் பெறுவது எப்படி என்பதை நீங்கள் அறிந்து கொண்டிருக்கிறீர்கள். கொஞ்சம் சுயநலம் சந்தர்ப்பவாதம் தேவைக்காக பழகுவது போன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பீர்கள்.உங்களுக்கு சாதகமற்றவர்களை நீங்கள் மாட்டீர்கள்.


இந்த பிறவியில் அவைகளை தொடராமல் கணக்கு பார்க்காமல் உதவி செய்யுங்கள். உங்களை பற்றிய மதிப்பீடுகள் உங்களுக்கு இருந்தால்தான் நீங்கள் மற்றவரை மிக சரியாக மதிப்பீடு செய்ய முடியும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.எண் 6 (6,15,24)


முற்பிறவி முழுவதும் நோயால் வாடி இருப்பீர்கள். அதன் தொடர்ச்சியாக மன நிலை மாற்றங்கள் உணர்வு ரீதியான குழப்பங்கள் போன்றவை இருந்திருக்கலாம். உங்கள் குடும்பத்தாரின் அன்பு கிடைக்க பெறாமல் ஏங்கி இருப்பீர்கள்.


இந்த பிறவியில் நீங்கள் சமநிலைக்கு வாருங்கள்.உங்களை நீங்களே முதலில் நேசியுங்கள். கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் உள்ளம் சொல்வதை கவனியுங்கள். ஆன்மிகம் தேடுங்கள்.இப்படி நீங்கள் முயற்சிக்காவிட்டால் போதை பழக்கங்களுக்கு அடிமை ஆக நேரிடும்.எண் 7 (7, 16,25)


முற்பிறவியில் நீங்கள் போட்டி போடும் மனநிலையில் இருக்கலாம். உங்களுக்கு தரப்பட்ட அதீத சுதந்திரம் இதற்கு காரணமாக இருக்கலாம். இந்த பிறவி உங்களுக்கு அவசியம் அற்றது. ஆனாலும் இணைந்து வாழும் தன்மை பற்றி நீங்கள் அறிந்து கொள்ளவே இந்த ஜென்மம்.


முற்பிறவியில் செய்யாமல் விட்டதை இப்போது கற்றுக் கொள்ளுங்கள்.கருணையை விதைக்க வேண்டும். மற்றவர்களோடு இணக்கமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட செல்வாக்கை பயன்படுத்தாமல் இருங்கள்.எண் 8 (8,17,26)


இந்த எண்ணில் பிறந்தவர்களின் முற்பிறவியில் தங்களுக்கான பொறுப்புகளை ஏற்க மறுத்திருப்பார்கள். இது முன் ஜென்மத்தில் மட்டுமல்ல இப்போதும் கூட ஆரம்ப காலத்தில் இருந்திருக்கலாம். உண்மையின் தன்மையைக்கூட உங்களின் பார்வையில் இருந்துதான் பார்ப்பீர்கள்.


எந்த நோக்கத்தோடும் பிறர் உந்த நீங்கள் வாழ்வதில்லை. நீங்களாகவே நகர்ந்து செல்கிறீர்கள். உங்களது இருத்தலுக்கான காரணங்களை நீங்கள் கண்டறியுங்கள்.உங்கள் வாழ்வின் நோக்கம் பற்றிய புரிதலை அடையுங்கள். கற்பனைகள் மற்றும் மாயைகள் பின் ஓடாதீர்கள்.எண் 9 (9, 18, 27)


முற்பிறவியில் உங்களுக்கு நடந்தவைகளில் பெரும்பாலும் கெடுதல்கள்தான் அதிகமாக இருந்திருக்கும். அதனால் நீங்கள் கீழே விழுந்திருப்பீர்கள். நீங்கள் அடக்கப்பட்டவர்களாகவே வாழ்ந்திருப்பீர்கள்.கறை நிறைந்த சூழலில் வாழ்ந்திருக்கலாம். போர், மரணம், நாகரிகமற்ற நிலைமை போன்ற காலங்களில் நீங்கள் வாழ்ந்திருக்கலாம்.


இந்த பிறவி நீங்கள் எடுக்க காரணம் நீங்கள் முன்பு வாழ்ந்த சூழல் உங்களுக்கு ஏற்றதல்ல என்பதை நீங்கள் உணர்ந்ததுதான். அழகியல், மகிழ்ச்சி , ஆளுமை போன்றவற்றை அனுபவிக்கவே நீங்கள் பிறந்திருக்கிறீர்கள் .எவ்வளவு மோசமான சூழலிலும் நேர்மறையாக இருப்பது எப்படி என்கிற பாடத்தை உங்களிடம் இருந்து மற்றவர்கள் பெற்றுக் கொள்வார்கள்.


படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்


--
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.