நீங்க எந்த நேரத்துல பிறந்திங்க! உங்க எதிர்காலம் என்ன சொல்லுதுனு பார்க்கலாம் வாங்க !

நீங்க எந்த நேரத்துல பிறந்திங்க! உங்க எதிர்காலம் என்ன சொல்லுதுனு பார்க்கலாம் வாங்க !

நிறைய பேர் சலித்துக் கொள்வதுண்டு எந்த நேரத்துல பிறந்தமோ நமக்கு இப்படியெல்லாம் நடக்குது என்று, அது உண்மைதான். நாம் பிறந்த நேரம் (Birthtime) நமது பல்வேறு செயல்களுக்கு காரணமாக அமைகிறது.


அதற்குமுன் நாம் இன்னொரு உண்மையையும் புரிந்து கொள்ள வேண்டும். நமது பூர்வ ஜென்ம பாவ புண்ணியங்களின் அடிப்படையில்தான் நமது இந்தப் பிறப்பும் அதன் நேரங்களும் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.


ஆகவே நமது கெட்ட நேரங்களுக்குக் காரணம் நமது தாய் நம்மை ஈன்ற நேரம் அல்ல நாம் முற்பிறவியில் செய்த செயலுக்கு பலன் என்றுதான் நாம் நினைத்து அதனை சரி செய்ய இப்பிறவியில் பிறர் மனம் வாடும்படி நாம் நடக்காமல் அறத்தை பின்பற்றி வாழ வேண்டும்.


அதிகாலை ப்ரம்ம முஹூர்த்தம் 4 - 6 மணி


அத்தனை பேரும் நேசிக்கும் இந்த நேரத்தில் பிறந்தவர்கள் சூரியனின் அன்பை அதிகமாகப் பெற்றிருப்பார். உங்களுடைய முதல் வீட்டை அவர் ஆள்வார். தன்னம்பிக்கைக்கு உதாரண புருஷராக உங்களைக் கைகாட்டுவார்கள். உங்கள் எதிர்கால வாழ்க்கை சூரியன் போல வெளிச்சமாகவே இருக்கும். இருப்பினும் அவ்வபோது உடல் உபாதைகள் ஏற்படும். நீங்கள் விரும்பியதை விட உங்களுக்குத் தேவையானது எல்லாம் உரிய நேரத்தில் கிடைக்காவிட்டாலும் கூட கொஞ்சம் தாமதத்துக்குப் பின் அவை உங்களை வந்தடைந்தே தீரும்.
விடிகாலை 6 மணி முதல் 8 மணி வரை


கொஞ்சம் லேசான வெளிச்சம் இந்த பூமியில் படும் வேளையில் பிறந்த இந்த ராசிக்காரர்களுக்கு சூரியன் 12வது இடத்தில் இருப்பார். இதன் காரணமாக உங்கள் வாழ்வில் பல மர்மமான விஷயங்கள் நடைபெறும். நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டமான விஷயங்கள் எல்லாமே நடக்கும். நீங்கள் மிக அமைதியானவர். நேர்மையும் ஒழுக்கமும் உங்கள் இரு கண்கள். நீங்கள் செய்யும் செலவுகள்தான் உங்கள் சிக்கல். அதனை மட்டும் கவனித்துக் கொள்ளுங்கள்.காலை 8 மணிமுதல் 10 மணி வரை


அனைவரும் சுறுசுறுப்பாக அன்றைய நாளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் இந்த நேரத்தில் பிறந்தவர்களின் 11வது இடத்தில் சூரியன் வசிப்பார். இவர் இங்கு இருந்தால் உங்களுடைய உறவு மற்றும் நண்பர்கள் என்பவர்கள் எல்லாம் உங்களிடம் உள்ள பண நிலைமையை வைத்தே பழகுவார்கள். பணம் உங்கள் வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கும். சில சமயம் நினைத்தபடி நடக்கவில்லை என்று மன அழுத்தம் ஏற்படலாம். எல்லா காலங்களிலும் பொறுமையாக இருப்பது மட்டுமே உங்களை மோசமான சூழ்நிலைகளில் இருந்து காப்பாற்றும்.முற்பகல் 10 முதல் 12 மணி வரை


பகலின் ஆரம்பத்தில் இவர்கள் பிறந்திருக்கிறார்கள். சூரியன் 10வது இடத்தில் இவர்களுடன் இருக்கிறார்,. இது சூரியன் வலிமை பெரும் நேரம். இந்த நேரத்தில் பிறந்த நீங்கள் வெற்றிகளை அனாயசமாக தட்டி செல்வீர்கள். பல்வேறு புகழ் மற்றும் பெயர் போன்றவை உங்களுக்கு கிடைக்கும். அதிகார துஷ்ப்ரயோகம் மட்டும் செய்யாமல் இருந்தால் சந்தோஷம் நிரந்தரமாகும்.
நண்பகல் 12 முதல் 2 மணி வரை


சூரியன் உச்சிக்கு வரும் சமயம் இவர்கள் பிறந்திருப்பதால் இவர்கள் ஜாதகத்தில் 9வது இடத்தில் சூரியன் வசிப்பார். பயணங்கள் உங்களுக்கு அதிகமாக நடைபெறும். மிக அழகானவராகவும் அதே சமயம் புத்திசாலியாகவும் நீங்கள் இருப்பீர்கள். அதிர்ஷ்ட சாலி என்பது நீங்கள்தான்.பிற்பகல் 2 முதல் 4 மணிவரை


இந்த நேரத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் 8வது இடத்தில் இருப்பார். உங்களுக்கு பொறுப்புகள் அதிகம் இருக்கும் பணிகள் அமையும். பணம் சம்பந்தமான துறையில் நீங்கள் வேலை செய்யலாம். உங்கள் அந்தரங்க வழக்கை சிக்கல்கள் உள்ளதாக இருக்கலாம். விபத்துக்கள் நிகழலாம். அல்லது கோர்ட் படியேற வேண்டி வரலாம். முடிந்தவரை இருக்கும் இடம் தெரியாமல் வாழ்ந்து விடுதல் நல்லது!மாலை 4 முதல் 6 மணி வரை


இந்த சிறப்பு நேரத்தில் பிறந்த உங்கள் ஜாதகத்தில் சூரியன் 7வது இடத்தில் இருப்பார். உங்களுக்கு பொறுப்புகள் அதிகமாகவே இருக்கலாம். திருமணத்திற்கு பின் நிறைய தடங்கல்கள் வரலாம் ஆனால் முயற்சியைக் கைவிடாதீர்கள். பேச்சு தொடர்பான வேலைகள் வெற்றியைக் கொடுக்கும். எதிரிகள் அதிகம் வருவார்கள் ஆகவே கவனம்.மாலை 6 மணி முதல் 8 மணி வரை


உங்கள் பிறந்த ஜாதகத்தில் சூரியன் 6வது இடத்தில இருப்பார். நண்பர்களைப் பொறுத்தே உங்கள் வாழ்க்கை நகரும். குடும்பம் என்பது அப்புறம்தான். சமூக சேவைகள் செய்வீர்கள். உங்கள் உழைப்பும் கவனமான அறிவும் உங்களை உயர்த்தும். எங்கிருந்தாலும் புன்னகையோடு இருப்பீர்கள்.இரவு 8 மணி முதல் 10 மணி வரை


நட்சத்திரங்கள் உருவாகும் இந்த நேரத்தில் பிறந்த நீங்கள் கற்பனைவளத்தோடு இருப்பீர்கள். சூரியன் ஐந்தாவது இடத்தில் இருப்பார்.ஆளுமைத்தன்மையோடு இருக்கும் நீங்கள் உங்கள் மனதிற்குப் பிடித்த வேலையை செய்தால் மட்டுமே வாழ்வில் உயர முடியும். வெற்றி உங்களைத் தேடி வரும்போது மற்றவர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் பிரச்னை ஏற்படும்.இரவு 10 மணி முதல் 12 மணி வரை


ஊரே உறங்கத் தொடங்கும் நேரத்தில் பிறக்கும் இவர்கள் ஜாதகத்தில் சூரியன் 4வது இடத்தில் இருப்பார்.பணம்தான் எல்லாம் என்பது பற்றி நீங்கள் யோசிக்க மாட்டிர்கள். பூமி சம்பந்தப்பட்ட பொருள்களில் பணிகள் உண்டாகும். வெற்றி தோல்வி எது வந்தாலும் சமமாக பார்ப்பீர்கள். அதனால் என்ன நடந்தாலும் சமநிலையை அனுசரிப்பீர்கள்.நள்ளிரவு 12 மணி முதல் 2 மணி வரை


இந்த நேரத்தில் பிறந்த உங்கள் ஜாதகப்படி சூரியன் 3வது இடத்தில் இருப்பார். உங்களுக்கு சாகசம் மற்றும் பயணம் ஆகியவை விருப்பமாக இருக்கும். மீடியா சம்பந்தப்பட்ட பணிகள் உங்களுக்குத் பொருத்தமாக இருக்கும். புத்திசாலியான உங்களை உங்கள் உறவுகள் மாற்ற பார்ப்பார்கள். சமூகத்தில் அனைவரோடும் நட்போடு இருப்பீர்கள்.
பின்னிரவு 2 மணி முதல் 4 மணி வரை


இவர்களது ஜாதகத்தில் சூரியன் இரண்டாமிடம் எடுத்துக் கொள்வார். இது குடும்பவருமானம் பற்றியது. இது சமையல் மற்றும் உணவு தொடர்பான இடம் என்பதால் நீங்கள் உணவு சம்பந்தப்பட்ட தொழில் அல்லது பணியில் இருந்தால் உங்களுக்கு நிரந்தர வருமானம் ஏற்படும்.--


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.