logo
ADVERTISEMENT
home / அழகு
பூக்களை கொண்டு உங்கள்  சிகையை அலங்கரிக்க  சில தனிப்பட்ட வழிகள் – பண்டிகை நாட்களிற்கான பாணி  (Pretty Hairstyles With Flowers For This Festive Season) !!

பூக்களை கொண்டு உங்கள் சிகையை அலங்கரிக்க சில தனிப்பட்ட வழிகள் – பண்டிகை நாட்களிற்கான பாணி (Pretty Hairstyles With Flowers For This Festive Season) !!

பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பதில் அதிக பங்கு அவர்களின் கூந்தலையே சேரும். பொதுவாக பெண்கள் ஆடை அலங்காரத்திற்கு மேலாக தலைமுடி அலங்காரத்திற்கு (hairstyle)  அதிக அளவிலான முக்கியத்துவம் கொடுப்பார்கள். சாதாரணமாக ஃப்ரி  ஹேர் விடுவதிலாகட்டும், ஜடை பின்னிப் போடுவதிலாகட்டும் எதிலுமே ஒரு அழகு இருக்கும். இயற்க்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்று பெண்கள், மற்றொன்று பூக்கள்!

அதனால்தான் கவிஞர்கள் பூவையும் பெண்ணையும் ஒப்பிட்டு பேசறாங்க. பல வண்ணங்களில், வடிவங்களில் வாசனைகள் கொண்டு நம் மனதை கொள்ளை கொள்ளும் பூக்கள் இல்லாமல் பெண்களின் சிகை அலங்காரம் (hairstyles) முழுமை அடையாது.  திருமணம், பார்ட்டி, வீட்டு விஷேசங்கள் (festival), போன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் பெண்களுக்கு போட்டு செல்வதற்கென்றே பல சிகை அலங்காரங்கள் இருக்கின்றன.

அதில் சிலவற்றை பார்ப்போம். தை திருநானில் நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்களேன்!  

பண்டிகை காலங்களில் நீங்கள் முயற்சிக்க அழகிய மலர் கொண்ட சிகை அலங்காரங்கள் (Pretty Hairstyles With Flowers To Try Out This Festive Season)

ஸ்டைல் 1: பாலேட் கொண்டை (Ballet Bun)

hairstyles-with-flowers-1

ADVERTISEMENT

    இந்த பாலேட் கொண்டை, முடி (hair) நீளமானவர்கள் மற்றும் குறைவானவர்கள் இருவருமே போடலாம். இதை போடுவது சுலபமானது. முதலில் முன்னாடி இருக்கும் முடியை சிறிதாக சேர்த்து நன்கு சீவி கொண்டு லேசான பஃப் வைத்து சைடு முடியை சுற்றி விட்டு பின் அனைத்தையும் ஒன்றாக சேர்ந்து பெண்டு போட்டு பின் நான்கு பிரிவாக பிரித்து எடுத்து தனி தனியே சுற்றி ஒன்று சேர்ந்து வளைத்து ஹேர்பின் அல்லது கொண்டை ஊசியை கொண்டு பின் செய்து தங்கள் ஆடைக்கு ஏற்ற நிறத்தில் பூவை கொண்டையை சுற்றி வைத்தால் ஹேர் ஸ்டைல் ரெடி.

Also Read About நேராக முடிக்கு சிகை அலங்காரங்கள்

ஸ்டைல் 2: பர்பெக்ட் லோ நெக் கொண்டை(Perfect Low Neck Bun)

hairstyles-with-flowers-2

இது சிம்பிளாக இருந்தாலும் உங்க லுக்கை டாப் ஆக காண்பிக்கும். நீங்க டிரஸிங் கிரான்டா போட்டு இந்த ஹேர்ஸ்டைலை டிரை பண்ணுங்க சூப்பரா இருக்கும். நேர் வகுடு எடுத்து இரண்டு சைடும் கொஞ்சம் முடி(hair) எடுத்து ஹேர்பின் குத்தி பின் எல்லா முடியையும் சேர்த்து ஒரு ரப்பர் பெண்டு போட்டு தொங்கும் முடியை சுருலாக்கி சுற்றி பின் செய்து. மல்லிகை பூவை இரண்டாக இல்லனா நாலாக கொண்டையை சுற்றி வைத்துக் கொண்டு கிளம்புங்கள்.

ADVERTISEMENT

ஸ்டைல் 3: பூ ஜடை(Indian Bridal Hair Style)

hairstyles-with-flowers-3

நேர் வகுடு எடுத்து இரு புறம் குட்டி பஃப் வைத்து பின் பிரெஞ்ச் பிளாட் மேலே இருக்கும் முடியில் போட்டு அணைத்து முடியையும் ஒன்று சேர்த்து ஐந்து பிரிவாக பிரித்து முதல் மூன்று பகுதிகளாகப் சாதாரணமாவும் பின் மிதம் இருக்கும் இரண்டு பகுதியை எடுத்து இணைத்து புரான் பின்னலை பின்னி கொள்ளவும். நெருக்கமாக கட்டிய மல்லிகை பூ / கோர்த்து வைத்த மல்லிகை பூவை (flowers) இரண்டாக அல்லது மூன்றாக ஜடையில் பின் பன்னி ஜிக் ஜாக்/ஏக்ஸ்(×) போல் சுற்றி வர வேண்டும்.விலகாமல் இருக்க, தைத்து கொள்ளலாம் அல்லது பின் குத்திக் கொள்ளலாம். இடையே உள்ள காலியிடங்களில் பீட்ஸ் வைத்து அலங்கரிக்கவும்.

ஸ்டைல் 4: பிரைட்டடு கொண்டை(Braided Bun)

hairstyles-with-flowers-4

முன்னே முடியை கோணல் வகுடு  எடுத்து, சிறிதளவு முடி(hair) எடுத்து மூன்று பாகம் பிரித்து முன்புறம் சைடாக பிரன்ச் பிளாட் பின்னவும்.காது வரை பின்னி அங்கேயே ஹேர்பின் குத்தி விட்டு பின்னி இருக்கும் பிரன்ச் பிளாடை ஹேர்பின் லுசாகாமல் பின்னலை மட்டும் லுசாக்க வேண்டும் , மீதும் இருக்கும் முடி அனைத்தையும் லூசாக பின்னி, சுற்றி பண் போல் சுற்றி பின் பண்ணவும்.  அதற்க்கு மேல் ரெட் பட்டன் ரோஸ் எடுத்து நம் கற்பனைக்கு ஏற்ப கோர்க்க வேண்டும். அதனை கொண்டைக்கு மேலே சுற்றி பின் செய்து விடவும். கொண்டையை அழகரிக்க பூ அல்லது ஸ்டோன்ஸ் பயன் படுத்தலாம். கழுத்தில் சோக்கர் போன்ற பிரம்மான்ட நகை அணியும் பட்சத்தில் இது பெஸ்ட் சாய்ஸ்.

ADVERTISEMENT

ஸ்டைல் 5:ஒன் சைடு பூ (One Side Flower With Curls)

hairstyles-with-flowers-5

நிச்சயம், மறு அழைப்பு போன்ற நிகழ்வு, லேஹாங்கா, டிசைனர் சாரீஸ், கிறிஸ்தவ கல்யாண ஆடை, இது போன்ற உடைக்கு இப்படி ஒரு ஹேர் ஸ்டைல் டெரன்டியா இருக்கும்.. முன்னாடி கோணல் வகிடு எடுத்து பஃப் வைத்தது போல் பிரன்ஞ் பிளாட் போட்டு பாக்கி இருக்கும் முடியை, கர்லர் வைத்து ஸ்பிரிங் போல செய்து கொண்டு நேர்த்தியானதாக மாற்றி கொள்ளுங்கள். இப்போ மல்லிகை பூ மூன்று  வரிசை, அல்லது உடைக்கு ஏற்ற நிறத்தில் கிடைக்கும் பூவை இரு வரிசையாக எடுத்து இரு காது அளவு வரை சைடாக பின் பண்ணிட்டு கீழ முடிய பிரீயா விட்ருங்க..மிக ரம்மியமான தோற்றம் தரும்.

ஸ்டைல் 6:சிம்புல் பூ கொண்டை(Simple Flower Bun)

hairstyles-with-flowers-6

முதலில் தலையின் முன் பகுதியில் “பஃப்” வைக்கவும் பின் மேலே ஓவர் ரோல் போடவும். பின்னர் மீதியுள்ள முடியை டைட்டாக ரப்பர் பெண்டு போடவும். முடியை பின்னி சுற்றி வளைத்து கொண்டை போட்டு ஹேர் பின்னால் பின் பன்னவும்.  மல்லிகை பூவை கொண்டை அளவுக்கு கட்டி அல்லது கோர்த்து கொண்டை முடி சிறிதும் தெரியாத அளவுக்கு மல்லிகைப் பூவை சுற்றி அசையாமல் இருக்க நடு நடுவே ஹேர்பின் குத்தவும். இந்த ஹேர்ஸ்டைல்க்கு மல்லிகைப்பூ மட்டுமே சிறப்பாக இருக்கும்.

ADVERTISEMENT

ஸ்டைல் 7:மெஸ்ஸி கொண்டை(Messy HairBun)

hairstyles-with-flowers-8

தலையின் 1/4 பகுதி முடியை எடுத்து முன் பகுதியிலிருந்து  லூசாக டபுள் சைடு பிரன்ச் பிளாட் போட்டு அதற்கு மட்டும் பேண்டு போடவும்.பின் மேலாக ஆங்காங்கே முடியை கலந்தது போல் எடுத்து விடவும். பின் மீதியுள்ள முடியை டைட்டாக ரப்பர் பெண்டு போட்டு கீழே தொங்கும் முடியை சுருட்டி வளைத்து கொண்டை போட்டு அதன் மேலே ஒரு ரப்பர் பேண்டு போட்டு ஹேர்பின்னால் பின் பன்னவும். பிறகு கொண்டையின் முடியை மேலே சிறிது சிறிதாக இழுத்து விட்டால் மெஸ்ஸி பன் ரெடி. மல்லிகை பூவை அல்லது ஆடைக்கு தகுந்த கலர் பூக்கள் அல்லது ஸ்டோன் கிளிப்களை கொண்டையை சுற்றி வைத்து ஹேர்பின் குத்தவும்..

நாகரீகம் என்ற பெயரில் எத்தனையோ புதுமையை மறந்தாலும், பூ என்பதை பெண்கள் எப்பேதும் வெறுக்க மாட்டார்கள்.

பாரம்பரிய விழா அல்லது கொண்டாட்டம் வந்தால், ஆடைக்கு கவனம் செலுத்துவது போல பூவையும் தவறாமல் கவனிக்கணும்!

ADVERTISEMENT

படங்களின் ஆதாரங்கள் – இன்ஸ்டாகிராம் 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

To approve a single suggestion, mouse over it and click “✔”
Click the bubble to approve all of its suggestions.
 

14 Jan 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT