உடல் எடையை குறைப்பதையும் தாண்டி உடற்பயிற்சியால் கிடைக்கும் மற்ற நன்மைகள்

உடல் எடையை குறைப்பதையும் தாண்டி  உடற்பயிற்சியால் கிடைக்கும் மற்ற நன்மைகள்

இன்றைய காலத்தில் நம் அனைவருக்கும் உடல் நலன் குறித்த விழிப்புணர்வு வந்துவிட்டது.செல்வங்களும் உறவுகளும் நம் சப்போர்ட் தான். நம் ஆரோக்கியமே நமக்கு என்றும் உதவியாக இருக்கும்.


சரி எல்லோரும் தூங்கும் போது அலாரம் வச்சு நாம மட்டும் ஏன் 5 மணி க்கு எந்திரிச்சி லொக்கு லொக்கு னு வாக்கிங் போகணும். இப்படி நம் அன்றாட வேலையில் உடல் பயிற்சி, உடல் ஆரோக்கியம் னு ஏன் பாடுபடனும்??  ஏதோ டாக்டர் சொல்றாரேன்னு போகாம, அதில் இருக்கும் விஷயங்களை ரசித்து பாருங்கள்!


running-runner-long-distance-fitness-40751


மறுபக்கம், காலை பொழுதினை பார்க்க மறுக்கும் மக்களும் உள்ளனர். அவர்களை தட்டி எழுப்பும் விதத்தில், உடல் (body) பயிற்சி (exercise)  வெறும் உடம்பின் தோற்றதை/எடையை (weight)  மாற்ற மட்டும்தான் என்ற எண்ணத்தை விட்டுட்டு ,வேறு என்ன பலன் தரும் என்பதை பாப்போம்!


தன்னம்பிக்கை:


திருமணம் குழந்தைகள் சம்பாத்தியம் என வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு சென்ற நம்மில் பலர் உடலை கவனிக்க மறந்ததால் உடல் இடை கூடி வயதான தோற்றம் பெற்றுவிட்டோம்.ஆகையால், இளமையான தோற்றம் பெற உடல் பயிற்சி மூலம் தேவையற்ற கொழுப்பை கரைத்து மனதில் உற்சாகமும் நம்பிக்கையும் பெற முடியும்.


இதன் மூலம் வாழ்க்கையை எதிர் கொள்ள வேண்டிய நம்பிக்கை மனதில் வரும். இது கல்யாணம் ஆகாதவர்களுக்கு மிகவும் பொருந்தும்!


புத்துணர்ச்சி :


அதிகமான உடல் இடையால், சோர்வும் சோம்பேறி தனமும் இருக்கும். வேகமான நடை,  லிப்ட் பயன்படுத்தாமல், படியில் ஏறுவது, யோகா, உடல் பயிற்சி போற்ற செயல்களால், உடல் ஒரே சீராக இயங்குவதோடு, உடலும் மனமும் புத்துணர்ச்சி அடைகின்றது. காரணம் உடல் கட்டுக்கோப்பாக இருப்பதால் இரத்த ஓட்டம் ஒரே சீராக இருக்கின்றது.


இளமையான தோற்றம் :


pexels-photo-372042


உடல் சதை மற்றும் கொழுப்பின் காரணத்தால் சருமமும் பாதிக்கப்படும். தினசரி உடல் பயிற்சி மூலம்,


டேமேஜ் ஆனா செல்களை   வெளியேற்றி, சரும ஆரோக்கியம் பெறுவதோடு, தோல் சுருக்கம் குறைத்து இளமையான தோற்றம் பெறலாம்.


மகிழ்ச்சி :


உடல் என்பது நம்மை இயக்கும் கருவி.அதன் செயல்படும் விதம் எப்போதும் தெளிவாகவும் சுருசுருப்பாகவும் இருந்தால் நமக்கு வெற்றியை தேடி தரும்.நிரந்தர மகிழ்ச்சி கிடைக்கும்.


உடல் வலிமை :


அன்றாட உடல் பயிற்ச்சி நம்மை வலிமை படுத்துகிறது. ஆரோக்கியமான தசை மண்டலம்,  மிக வலிமையான எலும்பு பகுதி, வலுவான நரம்பு மண்டலம்,அன்றாண்ட வாழ்வில் அதிக கவனம்  என உடலின் அணைத்து பகுதிகளும் வலுப்பெறும். அதனால் அதிக  சக்தியும் உற்சாகமும் பெறலாம்.


தேவையற்ற கவலையை நீக்கலாம்  :


belly-body-clothes-diet-53528


பொதுவாக பெண்களில் பலர் உடல் இடை காரணமாக பழைய மனதிற்கு பிடித்த ஆடைகளை உடுத்திக் கொள்ள முடியாமல் தவிப்போம். அன்றாட  உடல் பயிற்சி செய்து தேவையற்ற கொழுப்பு சேரவிடாமல் தவிர்க்கும் பழக்கம் வேண்டும்.அதோடு யோகா வாக்கிங் போன்ற பழக்கம் கண்டிப்பாக இருக்க வேண்டும். வெளியே செல்லும் போதும் பிடித்த உடையை எடுத்தால் உடையின் அளவு எப்போதும் கச்சிதமாக பொருந்தினால் வெளியே கிளம்பும் போதும், தேவையற்ற டென்ஷன் தவிர்க்கலாம்.


தேவையற்ற செலவு நீங்கும் :


இன்னைக்கு மெடிக்கல் செக் அப் அத்தியாவசிய பழக்கம் ஆகிருச்சு.சுகர் பிரஷர் ஸ்ட்ரெஸ் போன்ற பிரச்சனையால் மாத்திரை மருந்து என ஒரு தொகை செலவு செய்கிறோம். தினசரி நடை பயிற்சி, யோகா, உடல் பயிற்சி போன்ற காரணங்கள் உங்களை மருத்துவரிடம் இருந்து தள்ளி வைக்கும். இதனால் தேவையற்ற செலவு குறையும்.


வாழ்க்கை தரம் :


இதனால் வாழ்க்கை தரம் மேம்பாட்டு, எல்லாம் நேரங்களிலும் நல்ல எண்ண ஓட்டத்தோடு இருப்பதால் தன்னம்பிக்கை பெறுகிறோம்.


நோயற்ற வாழ்வு :


pexels-photo-866019


இரத்த ஓட்டம் ஒரே சீராக இருப்பதால், இதயம் இயக்கம் தெளிவாக இருக்கும். ஆகையால்  இரத்த அழுத்தம் போன்ற தொல்லை இல்லாமல், மனஅழுத்தம், பதற்றம் போன்ற பல நோய்கள் வராமல் தடுக்கலாம். ஆகையால், மனதில் நிம்மதியோடு தேவையற்ற கோபத்தை தடுப்பதனால் அன்பை பரவச்செய்யலாம்.


 
நீண்ட ஆயுள் :


சரி நம்முடைய அன்றாட சம்பாத்தியத்தை இன்சூரன்ஸ் சேவிங்ஸ் னு சேர்க்கும் பழக்கம் நம் எல்லோருக்கும் இருக்கு. வயதான பின்னாடி செலவு செய்யணும் நினைக்கும் நாம் உடல் ஆரோக்கியத்தை உடல் பயிற்சி மூலம் உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள முடியும். இதன் விளைவாக நாம் நல்ல நீண்ட ஆயுளை பெறலாம்.


இதனால் வாழ்க்கை தரம் மேம்பட்டு வாழ்வில் வெற்றியை எளிதில் அடையலாம்.


இனிமே,  உண்டியலில் காசை சேர்க்கும் போதும் ஆரோக்கியத்தை சேர்த்தோமா னு யோசனை பண்ணனும். உடல் பயிற்சிக்கு  நேரம் ஒதுக்கி கட்டுக்கோப்பான உடல் அமைப்பை மட்டுமில்லாமல் மனதளவிலும் ஆனந்தம் பெற எங்கள் வாழ்த்துக்கள்!


படங்களின் ஆதாரங்கள் -  pexelsPOPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.To approve a single suggestion, mouse over it and click "✔"

Click the bubble to approve all of its suggestions.