கண்களில் வண்ணமிக்க ஒப்பனைகளை நாம் நிறைய பார்த்திருக்கோம்.உங்களின் தனித்துவத்தை வெளிக்கொணர நாங்கள் உங்களுக்கு தொடர்ந்து சில மேக்கப் உத்திகளை அளிக்க இருக்கிறோம்! இந்த குடியரசு தினத்தன்று உங்கள் கண்களில் உங்கள் தேசபக்தியை காட்டும் அளவிற்கு நாங்கள் உங்களை தயார் செய்ய இருக்கோம்! ஆடைகளில் மட்டுமில்லை கண்களிலும் நம் தேசிய கொடியின் நிறங்களை(color) காட்டலாம் என்று நாங்கள் உங்களுக்கு ஒரு புதிய கண் ஒப்பனையை அளிக்கிறோம்.
படத்தின் ஆதாரம் – இன்ஸ்டாகிராம்
இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள் –
- உங்கள் சரும நிறத்திற்கு ஏற்ற ஒரு ஃபவுண்டேஷனைப் பூசவும். இதை நீங்கள் உங்கள் கைகளில், அல்லது ஒரு ப்ரஷில் பூசலாம்.
- அதன் பிறகு, ஒரு கன்சீலரை கண்களின் கீழே புள்ளிகளாய் வைக்கவும்.இதையும் ஒரு கன்சீலர் பிரஷால் சரிசமமாக பூசுங்கள்.
- அடுத்து, இதன் மேல் பழுப்பு (brown) நிற ஐஷாடோவை பூசவும். இதுதான் உங்கள் கண் ஒப்பனைக்கு அடித்தளம்.
- இதன் மேல் ஒரு ஒளிரும் ஆரஞ்சு நிற ஐஷாடோவை பூசவும். இதை நீங்கள் உள்ளிருந்து வெளியே (கண் ஆரம்பிக்கும் இடத்தில் இருந்து வெளியே..) பூசவேண்டும்.
- இதன் பிறகு, ஒரு கரும் பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் கண்கள் முடியும் இடத்தில் (வெளியில் இருந்து உள்நோக்கி வரும்படி ) பூசவும்.இதை அதிகமாக பூசாமல் கண் ஓரங்களில் மட்டும் தேவைக்கேற்ப பூசுங்கள்.
- இதற்கு மேல் ஒரு ஷிம்மரிங் கோல்டன் ஐஷாடோவை லேசாக பூசுங்கள்.
- இதில் நீங்கள் ஒரு நல்ல பிராண்டட் கருப்பு ஐலைனரைப் பயன்படுத்தி ஒரு கோட்டை வரையவும். இதை நீங்கள் உங்கள் இஷ்டம் போல் தடிமனாக அல்லது மெல்லியதாக வரையலாம்.
Also Read: அற்புதமான கண் ஒப்பனையை பெற சில டிப்ஸ்
அடுத்து கீழ் பகுதி …
- கீழ் கோட்டில் முதலில் ஒரு பச்சை அல்லது டீல் ( teal ) நிற ஐலைனரைப் பயன்படுத்தி ஒரு கோட்டை வரையுங்கள். இது தடினமாக இருந்தால் பார்க்க அழகாய் இருக்கும்.
- இதற்கு கீழ், அடுத்து கோட்டில், பச்சை நிற ஐஷாடோவை பயன்படுத்தி, இனொரு கோட்டை வரையுங்கள். இவை இரண்டும் ( உள்ளிருக்கும் பச்சை கொடு + வெளியிருக்கும் பச்சை ஐஷாடோ) தனியாக தெரிந்தால் அற்புதமாக இருக்கும். அது உங்கள் கண்களை மிக நன்றாக வரையறுக்கும்!
- ஒரு அடர்த்தியான மஸ்காராவை உங்கள் கண் இமை முடிகளில் பூசவும்.
- மேல் இருக்கும் புருவங்களுக்கு நல்ல பென்சிலை பயன்படுத்தி வரையவும். அதை இன்னும் கருப்பாக காண்பிக்க , கருப்பு நிற ஐஷாடோவை டிஃபைனிங் அல்லது கண் இமை பிரஷால் பூசுங்கள்.
நடுவில் இருக்கும் உங்கள் அழகான கண்களையும் சேர்த்தால், நம் தேசிய கொடியின் மூன்று நிறங்களும் தெரியும்! எத்தனை அழகு!! குடியரசு(Republic) தினத்தன்று இப்படி ஒரு தோற்றத்தில் செல்வதுதானே ட்ரெண்ட்!
POPxo பரிந்துரைக்கிறது –
ஐஷாடோ ப்ரஷ் – வேகா ஐஷாடோ ப்ரஷ் (Rs.90)
கன்சீலர்-எல் எ கேர்ள் ப்ரோ கன்ஸீல் எச் டி (Rs.536)
மின்னும் ஆரஞ்சு ஐஷாடோவிற்கு – கிளாம் கர்ல்ஸ் கோல்டன் ஐ ஷாடோ (Rs.370)
மின்னும் பச்சை ஐஷாடோவிற்கு – வெட் அண்ட் வைல்ட் கலர் ஐகான் (Rs.108)
நீங்கள் பச்சை ஜெல் ஐலைனர் கீழ் கண் இமைகளில் பயன்படுத்தலாம் – மேபிளீன் நியூயார்க் லாஸ்டிங் டிராமா வாட்டர்ப்ரூப் ஜெல் பென்சில் (Rs.353)
மஸ்காரா – கலர்பாற் லாஸ் இல்லுசன் மஸ்காரா (Rs.383)
ஐலைனர் – மேபிளீன் நியூயார்க் லாஸ்டிங் டிராமா ஜெல் ஐலைனர் (Rs.368)
எங்கள் டிப் – இதற்கு நீங்கள் ஒரு ஆரஞ்சு டாங்கோ நிற மேட் லிஸ்ப்டிக் அணிந்து, வெள்ளை குர்தி – பாட்டியாலா உடன் ஒரு பச்சை -ஆரஞ்சு துப்பட்டா அணிந்தால், ஈர்க்கும் தோற்றத்தில் அசத்தலாக தெரிவீர்கள்!!
கட்டுரை பட ஆதாரம் – இன்ஸ்டாகிராம்
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.