கர்ப்ப காலத்தில் குழந்தைகள் கற்றுக்கொள்ளும் சில ஆச்சர்யமான விஷயங்கள்!

கர்ப்ப காலத்தில் குழந்தைகள் கற்றுக்கொள்ளும் சில ஆச்சர்யமான விஷயங்கள்!

குழந்தைகள்தான் நம்மை ஆனந்தத்திற்கு ஆளாக்கும் அற்புதமான பொக்கிஷங்கள். இந்த உலகில் அவர்களை நாம் கொண்டு வருவதாக எண்ணுகிறோம். ஆனால் அவர்கள் விரும்பாமல் இங்கே வந்து பிறக்கவே முடியாது என்பதும் உண்மைதான்.


அவர்கள் பிறந்ததால்தான் நாம் பெற்றோர் ஆகிறோம். நமக்கான பந்தம் உருவாகிறது. நமக்கான பிடிப்பு ஏற்படுகிறது. எத்தனை துன்பம் வந்தாலும் நம் குழந்தைக்காக அதனை இன்பமாக எண்ணி அச்செயலை முடிக்கிறோம்.  


கருவில் இருக்கும்போதே குழந்தைகள் (infant) தங்கள் வாழ்க்கைக்கான பாடத்தைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்து விடுகிறார்கள் என்பது ஆச்சர்யமான விஷயம்தான் இல்லையா. சில விஷயங்கள் நமக்கு முன்பே தெரியும் நாம் அறிந்திராத பல விஷயங்களை அவர்கள் எப்படிக் கருவில் இருந்து கற்று கொள்கிறார்கள் என்பதையும் இந்த உலகிற்கு வந்த உடன் மனித வாழ்விற்கு எப்படித் தயார் ஆகிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்  


மூச்சு விடுதல்  


தாயின் தொப்புள்கொடி மூலமாகத்தான் குழந்தை மூச்சு விடுகிறது என்று கேள்விப்பட்டிருப்போம். உண்மையில் கருவின் ஒன்பதாவது வாரத்தில் இருந்தே மூச்சு விடுவது எப்படி என்பதையும் அது அவர்கள் வாழ்விற்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் அக்கரு கற்றுக் கொள்கிறதாம்.
ருசியறிதல்


தொப்புள் கொடிதான் குழந்தையின் உயிர் வளரத் தேவையானவைகளைத் தரும் உயிர் நாடி என்றாலும் ஒரு சில சுவைகளை நமது உணவின் அமோனியாடிக் திரவம் மூலம் அவர்கள் அறிந்து கொள்வார்கள். இனிப்பு, பூண்டு, சோம்பு, இஞ்சி போன்றவற்றின் சுவைகளை அவர்களால் உணர முடியுமாம். இந்த உலகில் குழந்தை வளர்வதற்கான ஆரம்ப விஷயமாக இது பார்க்கப்படுகிறது.


அம்மாவின் உணர்வுகள்   


அம்மாக்கள் பதட்டமாகவோ மன அழுத்தத்துடனோ இருக்கும்போது குழந்தை தனது தாயின் கருவில் தனது இடது கையை முகம் நோக்கி நகர்த்துமாம். அம்மாவின் மனநிலைகள் குழந்தையை உடனடியாக பாதிக்குமாம். அதனால்தான் அம்மாக்கள் இந்த காலங்களில் பொறுமையாகவும் சந்தோஷமாகவும் இருப்பது நல்லது என்கிறார்கள்.பார்த்தல்    


தனது இருபத்தி எட்டாவது வாரத்தில் இருந்துதான் குழந்தை தனது விழிகளைத் திறக்கிறதாம். அன்னையின் வயிற்றிற்குள் அதிகமாக அவர்களால் எதையும் பார்க்க முடியாவிட்டாலும் சில நாட்களில் வெளிச்சம் வரும்போது எதிர்வினை தருவார்களாம். அம்மாவின் வயிற்றை ஊடுருவும் வெளிச்சத்தால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.


புன்னகை


தனது 36வது வாரத்தில் இருந்தே கருவில் இருக்கும் குழந்தை தனக்கான உணர்ச்சிகளை வெளிப்படுத்த தொடங்கி விடுகிறதாம். தனக்கான புன்னகை தனக்கான அழுகை என தனது முகபாவங்களை அது வரையறுத்துக் கொள்கிறதாம்கவனித்தல்   


கர்ப்ப காலங்களில் அம்மா தனது குழந்தையோடு பேசும்போதும் அதற்கான கதைகள் சிலவற்றை சொல்லும்போதும் குழந்தையின் இதயத்துடிப்பு குறையுமாம். அவர்கள் அதனைக் கவனிப்பதால் ஏற்படும் மாற்றம் இது என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. குழந்தைகள் கேட்கும் அத்தனை குரல்களையும் அவர்கள் பிறந்தபின் சில நாட்களில் அடையாளம் கண்டு கொள்ளுமாம்.


கண்ணீர்  


வயிற்றில் இருக்கும் குழந்தைகள் சில காலம் கழித்து அம்மாவின் வயிற்றில் ஏதேனும் சத்தம் கேட்டால் அழுவதுண்டு என்கிறார்கள் ஆய்வாளர்கள். சில சமயம் அதன் உதடுகள் கீழ்நோக்கி நகருமாம். உதடு பிதுக்கி அழுவதை அது அம்மாவின் வயிற்றில் இருந்தே ஆரம்பித்து விடுகிறது.விரல் சூப்புதல்   


கருவின் மூன்றாவது கட்ட வளர்ச்சியின் போது குழந்தை தனது கைவிரல்களை வாயோடு சேர்த்து சூப்பத் தொடங்குகிறது. உலகிற்கு வந்த உடன் உணவு உண்ணும் முறையை அது அப்போதில் இருந்தே கற்றுக் கொள்கிறது என்கிறது ஆய்வு.


எல்லாமும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதுதான். ஏற்கனவே இருக்கும் ஒன்றைத்தான் நாம் இன்னமும் அறிவியல் என்கிற பெயரில் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறோமே தவிர புதிதாக நம்மால் ஒரு மணல் துகளைக் கூட உருவாக்க முடியாது என்பதுதான் உண்மை. இயற்கையின் பேரதிசயம் அது.


அந்த வகையில் நாம் நேசிக்க மறந்தாலும் நம்மை நேசிக்கும் இயற்கையும் நமக்காக அதனை உருவாக்கிய இறைவனும் கருவில் உள்ள குழந்தைகளைப் பூமியில் வாழப் பழக்குகிறார்கள் என்பதுதான் இதில் மறைவாயிருக்கும் உண்மை.


--


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.