உடலுறவிற்கு பிறகு தம்பதிகள் செய்யும் வேடிக்கையான அதிர்ச்சியான காரியங்கள்!

உடலுறவிற்கு பிறகு தம்பதிகள் செய்யும் வேடிக்கையான அதிர்ச்சியான காரியங்கள்!

உடலுறவில்(intercourse) விரும்பம் இல்லாத நபர்கள் யாரேனும் இருக்க முடியுமா? கண்டிப்பாக இருக்க முடியாது. எல்லாருக்கும் அதில் இருக்கும் இன்பம் மிகவும் பிடிக்கும். உடலுறவிற்கு(intercourse) பிறகு இந்த தம்பதிகள் என்ன செய்கின்றனர் தெரியுமா? இது பற்றி சமீபத்தில் பியூர் ரொமான்ஸ் என்ற பெயரில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


இந்த ஆய்வின் முடிவில் உடலுறவிற்கு பிறகு தம்பதிகள் செய்யும் காரியங்கள் சில வேடிக்கையாகவும், அதிர்ச்சியாகவும் சில சுவாரசியமாகவும் இருந்தது.ஆய்வில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் கூறிய பதில்களை வைத்து, பெரும்பாலும் பொதுவாக தம்பதியினர் 10 வகையிலான செயல்களில் ஈடுபடுகிறார்கள் என பிரிக்கப்பட்டன. இந்த பத்தில் ஒரு விஷயம் மட்டும் அவர்கள் தவிர்க்க வேண்டியதாக இருக்கிறது. ஆனால், இந்த தலைமுறையினர் தவிர்க்க வேண்டிய அந்த ஒரு விஷயத்தை தான் அதிகமாக பின்பற்றி வருகிறார்கள் என்பது அதிர்ச்சி தகவலாக அமைந்திருக்கிறது.


பெரும்பாலான தம்பதியினர், கலவுறவில்(intercourse) ஈடுபட்ட பிறகு, கொஞ்சி குலவுதல், கட்டிப்பிடித்து விளையாடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாக கூறி இருக்கின்றனர். உண்மையில், பல ஆய்வுகளில்... பெண் துணைக்கு கலவுதலில் ஈடுபடுவதை காட்டிலும், ஃபோர்ப்ளே எனப்படும் கலவுதலுக்கு முன்னும், பின்னும் ஈடுபடும் விளையாட்டுகளில் தான் இன்பம் அதிகம் அடைவதாக அறியப்பட்டுள்ளன.


கலவுறவில்(intercourse) ஈடுபட்ட பிறகு, சிலர் துணையுடன் சேர்ந்து ஆன்லைன் அல்லது டிவி, மொபைகளில் படம் பார்க்க துவங்குவோம் என்று கூறி இருக்கிறார்கள். இதுவும் சரியான தேர்வு தான்.

சில ஆண்கள் உடலுறவில் ஈடுப்பட்ட பிறகு லேப்டாப் எடுத்து வைத்து கொண்டு வேலை செய்ய ஆரம்பித்துவிடுவார்களாம். இது மனைவியரை மனதளவில் பாதிக்கும். மேலும், வெறும் செக்ஸ் உறவுக்காக மட்டும் இணைந்தது போலவும், உண்மையான அன்பு இல்லாதது போன்ற உணர்வையும் அவர்கள் இடையே உண்டாக்கும்.


அமெரிக்கர்கள் பலரும் இந்த வாக்கெடுப்பில், செக்ஸில் ஈடுபட்ட உடன், தண்ணீர் குடிக்க விரைவோம் என்று குறிப்பிட்டுள்ளனர். இது பலரும் அறியாத உண்மை, நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது கரைக்கப்படும் அதே அளவு கலோரிகள், உடலுறவில் ஈடுபடும் போதும் கரைகிறது. அதனால், தான் உடலுறவில் ஈடுபட்ட பிறகு அதிகமாக தண்ணீர் தாகம் எடுக்கிறது.ஒருசிலர், உடலுறவில் ஈடுபட்ட உடனே, தங்கள் உடைகளை எடுத்து அணிந்துக் கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளனர். இது கூச்சம், அல்லது அதை தொடர்ந்து வேறு வேலைகளில் ஈடுபடும் போது நிர்வாணமாக இருக்க அசௌகரியமாக உணர்வது போன்ற காரணங்கள் கூறப்பட்டுள்ளன.


கொஞ்சி விளையாடுவதற்கு அடுத்ததாக, பல தம்பதிகள் அதிகம் கூறி இருக்கும் விஷயம், மிக முக்கியமான விஷயங்கள் குறித்து பேசுவது, ஆலோசிப்பது. மிக சிக்கலான விஷயங்களுக்கு சரியான தீர்வு எடுக்க தகுந்த சூழலாக இது இருக்கிறது என்றும் சிலர் கூறி இருக்கிறார்கள். மேலும், உடலுறவில் ஈடுபட்ட பிறகு பேசும் விஷயமும், எடுக்கப்படும் முடிவுகளும் அர்த்தமுள்ளவையாக இருக்கின்றன என தெரிவித்துள்ளனர்.உடலுறவில் ஈடுபட்ட பிறகு தாகம் மட்டுமல்ல, பசியும் எடுக்கும். இதனாலேயே, சிலர் உடலுறவுக்கு ஈடுபடுவதற்கு முன் உணவருந்தாமல். ஈடுபட்ட பிறகு ஒன்றாக சேர்த்து சமைத்து அல்லது ஆன்லைனில் ஆர்டர் செய்து உணவருந்த விரும்புகிறார்கள். அதுவொரு ரொமாண்டிக் டின்னராக அமையும் என்றும் தம்பதிகள் தெரிவித்துள்ளனர்.


கலவுறவில் ஈடுப்பட்ட பிறகு சில தம்பதிகளுக்கு ஸ்பூனிங்கில் ஈடுபட விருப்பம் அதிகரிக்கிறதாம்.


சில ஜோடிகள் கலவுறவில் ஈடுபட்ட பிறகு, தங்கள் மொபைலை எடுத்து இன்டர்நெட்டில் அல்லது சமூக தளங்களில் உலாவ துவங்கிவிடுவோம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.உடலுறவானது, செக்ஸ் கொண்ட பிறகு இருவரும் இணைந்து கொஞ்சி மகிழ்வதே ஆகும். ஆனால், மொபைல் போன் எடுத்து நோண்டுவது சரியான முடிவாக இருக்காது. இது கொஞ்சம் அதிர்ச்சியளிக்கும் விஷயமாக தான் இருக்கிறது. சிலர், உடலுறவில் ஈடுபட்ட முடிந்தவுடனே மறு நிமிடம் தன் மொபைலை தான் தேடுவேன் என்று குறிப்பிடுவது வியப்பை அளிக்கிறது. அது எப்படி முழுமையான உறவாக அமைய முடியும்?


இங்கே ஒன்றை மட்டும் தம்பதிகள் மனதில் கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும். உடலுறவில் ஈடுபட்ட பிறகு ஆணோ, பெண்ணோ... தன் துணையை பற்றி கருத்தில் கொள்ளாது, வேறு விஷயங்கள், வேலை, மெயில் செக் செய்வது, சோஷியல் மீடியாவில் உலாவுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இது நிச்சயம், மனதளவில் நீங்கள் வெறும் செக்ஸ்காக தான் நெருங்குகிறீர்கள் என்ற மனோபாவத்தை ஏற்படத்தலாம். இது பின்னாட்களில் உறவில் விரிசல் அடையவும் கருவியாக அமையலாம்.