பெண்கள் அலட்சியப்படுத்தும் சில அறிகுறிகள் மற்றும் அதன் விளைவுகள்

பெண்கள் அலட்சியப்படுத்தும் சில அறிகுறிகள் மற்றும் அதன் விளைவுகள்

குடும்பத்தில் பெரியவர் முதல் குழந்தைகள் வரை ஓடி ஓடி சென்று அக்கறையாக கவனிக்கும் பெண்கள் இங்கே அதிகம் உண்டு. மற்றவர்களுக்கு சாதாரண காய்ச்சல் என்றாலும் பதறும் இவர்கள் தங்களுக்கு ஏதாவது வந்தால் அதனைப் பார்க்கக் கூட மாட்டார்கள்.          


இப்படி தங்களைத் தியாகிகளாக்கி ( selfless ) கொள்ளும் பெண்கள் சில ஆபத்தான நோய்களுக்கான அறிகுறிகள் உடலில் தென்பட்டால் கூட அறியாமை மற்றும் கவனமின்மை காரணமாக அதனை அலட்சியப்படுத்தி விடுவார்கள்.


உடல் தனக்கு முன்கூட்டியே நடக்கப் போகும் பேராபத்துக்களை நமக்கு குறியீடாக அவ்வவ்போது காட்டும். அதனை அலட்சியம் செய்யாமல் கவனிப்பதுதான் அதற்கு நல்லது.         


    


கவனிக்கா விட்டால் உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம். ஆகவே என்னென்ன அறிகுறிகள் எதைப் பற்றி நமக்கு முன்கூட்டியே எச்சரிக்கிறது என்பதைப் பற்றி படித்துப் புரிந்து கொண்டு தேவையான நடவடிக்கைகள் எடுங்கள். அல்லது குடும்பத்தார் தங்கள் குடும்ப சொத்தான பெண்களிடம் இதனைப் பற்றி புரியவைத்து அவர்களை சரியான மருத்துவத்தை எடுத்துக் கொள்ள வையுங்கள்.


பெண்கள் பூப்பெய்திய ஆரம்ப காலம் மற்றும் மாதவிலக்கு நிற்கும் காலங்களில் அதிக ரத்தப் போக்கைச் சந்திப்பார்கள். இது தவிர சாதாரண காலங்களில் அதிக ரத்தப் போக்கு இருந்தால் அது கட்டியாக இருக்கலாம். இதனை அலட்சியப்படுத்தினால் புற்று நோயாக மாறவும் வாய்ப்பு அதிகம். உடலுறவுக்குப் பின் ரத்தப் போக்கு இருந்தால் தொற்று காரணமாக இருக்கலாம். இரண்டையும் மருத்துவருக்குத் தெரியப்படுத்துவது அவசியம்.       


        


தாய்மை அடைந்த பிறகு பால் கொடுக்கும் சமயங்களில் அனிச்சையாக வெண்மை நிறத்தில் மார்பகங்களில் பால் வடியலாம். அது தவறில்லை. ஆனால் பழுப்பு அல்லது ரத்தம் வடிவது போல இருந்தால் அது மிகவும் ஆபத்தான அறிகுறி. உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இதற்கு அறுவை சிகிச்சைதான் வழியாகும்.         


   


வாந்தி, கழுத்து வலி, வியர்வைப் பெருக்கு , மூச்சுத்திணறல் இதனோடு மார்பு வலி வந்தால் அது மாரடைப்பிற்கான அறிகுறியாக இருக்கலாம். தாமதிக்காமல் மருத்துவமனை சென்று விட வேண்டும்.           


 


உடலில் உள்ள மச்சம் கொஞ்சம் கொஞ்சமாக அதன் அளவுகளில் அதிகரித்தபடி சென்றால் இது ஒருவித தோல் நோய்க்கான அறிகுறி. கண்டிப்பாக சரும மருத்துவரோடு நீங்கள் கலந்தாலோசிக்க வேண்டியது அவசியம்.   வெள்ளைப்படுதல் என்பது சாதாரண விஷயம். ஆனால் அதுவே மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் இருந்தாலோ அல்லது அரிப்பு எரிச்சல் ஏற்பட்டாலோ துர்நாற்றம் வந்தாலோ கண்டிப்பாக நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும். பால்வினை நோய் அல்லது கர்ப்பப்பை வாய் புற்று நோயாகக் கூட அது இருக்கலாம்.   


    


மலவாயில் ஏற்படும் ரத்தக் கசிவுகளை அலட்சியம் செய்யக் கூடாது. குடலில் ஏதேனும் அழற்சி போன்றவை இருக்கலாம். அதற்கான உணவுமுறைகளை பின்பற்றுவதும் மருத்துவரை அணுகுவதும் செய்ய வேண்டும். தொடர்ச்சியான ரத்தக்கசிவு புற்று நோயை ஏற்படுத்தும்.     


      


 


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.