பதின்ம வயது பெண்களுக்கான உணவு வகைகள்

பதின்ம வயது பெண்களுக்கான உணவு வகைகள்

அஸ்திவாரம் பலமாக இருந்தால்தான் இல்லம் வலிமையாக இருக்கும் என்பார்கள். அதே போல உங்கள் செல்ல மகள்களுக்கு பன்னிரண்டு வயதில் இருந்து 20 வயது வரை தருகின்ற உணவுதான் அவர்களின் வாழ்நாள் வரை அவர்களுக்கு பலம் தருகிறது.


பதின்ம வயதுகளில் ஹார்மோன் சுரப்பிகள் வேலை செய்ய ஆரம்பிக்கிறது. இந்த காலத்தில் இருந்து 20 வயது வரை உங்கள் பெண் குழந்தைகளுக்கு நீங்கள் தர வேண்டிய உணவு வகைகள் அதில் உள்ள நன்மைகள் சிலவற்றை பார்க்கலாம்.     


பெண்களை பொறுத்தவரை 12வயதிற்கு மேல்தான் உடல் உறுப்புகளில் மாற்றம் ஏற்படும், குரல்களில் வித்யாசம் தென்படும், பூப்படையும் நேரம் நெருங்கும், மாதவிலக்குகள் ஏற்படும் ஆகவே இந்த காலங்களில் அவர்கள் மீதான கவனம் அதிகம் தேவை.        


 


சரியான உணவை சரியான நேரத்திற்கு அவர்கள் சாப்பிடுவதில்தான் இதன் பலன் இருக்கிறது. உணர்ச்சிகளும் கேள்விகளும் அதிகம் நிறைந்த இந்த பருவத்தில் அவர்களை கொஞ்சம் தூரமாக நின்றபடி கவனிப்பதும் தேவைக்கு சேவை செய்வதும் பெற்றோர்களின் கடமையாகும்.                 


டீனேஜ் பெண்கள் அதிக நார்ச்சத்து மற்றும் சக்தி தர கூடிய கார்போஹைட்ரேட்ஸ் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனால் சோர்வடையாமல் புத்துணர்வோடு தினமும் இருக்கலாம்.               


 


நோய் எதிர்ப்பு சக்தியை இந்த சமயத்தில் அதிகரிக்க செய்ய வேண்டும். அதனால் அதற்குரிய பழங்கள் மற்றும் காய்கறிகளை நீங்கள் அவர்களுக்கு தர வேண்டும். தினமும் ஒரு பழம் அல்லது ஒரு காய் அவர்களுக்கு பிடித்தாற்போல செய்து தர வேண்டும்.            


கேழ்வரகு, முட்டை, கீரை மற்றும் எள், பாதாம் மற்றும் நட்ஸ்  போன்ற உணவு வகைகளை அதிகம் தர வேண்டும். ஏனென்றால் இதில் உள்ள இரும்பு சத்துக்கள் உங்கள் செல்ல மகளின் உடல் வளர்ச்சிக்கு தேவையானது. இதனை கவனிக்காமல் விட்டால் ரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படும்.                   


 


பால் பொருட்களை இவர்கள் பெரும்பாலும் தவிர்ப்பார்கள். காரணம் உடல் எடை அதிகரித்தல் போன்ற பயம் இருக்கும். அதனை போக்கி இவ்வகை உணவுகளை கொடுக்க வேண்டும். அதனால் இதய நோய்கள் வராமல் காக்கலாம்.            


பொறித்த உணவு வகைகள் , அதிக நெய்யில் செய்யப்பட்ட உணவு வகைகள் போன்றவற்றை அவர்களுக்கு கொடுக்காமல் இருந்தால் உடல் பருமன் சிக்கல்கள் ஏற்படாமல் காக்கலாம்.                 


ஒரு நாளில் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கி விட வேண்டும்.


 


----


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.