இந்த அசாதாரண புடவை பிளவுஸ் பேக் டிசைன்கள் மூலம் கவர்ச்சியான *பின்புறம்* கொண்டு வாருங்கள்! - - Stylish Blouse Back Designs

இந்த அசாதாரண புடவை பிளவுஸ்  பேக் டிசைன்கள் மூலம் கவர்ச்சியான *பின்புறம்* கொண்டு வாருங்கள்! -  - Stylish Blouse Back Designs

நீங்கள் மணப்பெண்ணாக இருந்தாலும் சரி அல்லது ஒரு கல்யாணத்தின் விருந்தினராக இருந்தாலும் சரி, கல்யாண(ஷாதி) சீசனில் ஒவ்வொரு பெண்ணும் அவருடைய உடையைப்பற்றியே யோசித்து  மிகவும் உற்சாகத்துடன் வலியுறுத்திக்கொண்டே இருப்பார்கள். மேலும் உதாரணத்திற்கு, மிகையான சாப்பாடு மற்றும் விடியும்வரை நடனம் போன்ற பல விஷயங்கள் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள இருந்தாலும், உங்கள் உடை சரியாக இல்லை என்று தோன்றினால் எதுவுமே கண்ணுக்குத்தெரியாது, இல்லையா? ஒரு பெரிய இந்திய திருமணத்தில், எல்லோருடைய கண்களும் உங்கள் மீது இருக்கும் என்பது, நம் இருவருக்குமே தெரியும். அதனால் தான் நீங்கள் சிறப்பாக தோன்றவும், உணரவும், விரும்புகிறீர்கள்.


‘கரீனா லெஹெங்கா’ அல்லது ஷில்பா ஷெட்டி-ஸ்டைல் புடவை எதுவாக இருந்தாலும், ஒரு உயர்ந்த தேசி தோற்றம் பாண்ட் பாஜா பாரத் அளவிற்கு அனுபவத்தை உருவாக்கும்.


புடவை அணிய விரும்புபவர்களுக்கு, புடவையைப் போன்றே புடவையின் பிளவுஸ் டிசைன் முக்கியமானது, உங்களுக்கும் அப்படித்தானே? குறிப்பாக புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைன். மேலும் பின்புற டிசைன் என்று வரும்போது, டிசைனை தேர்வு செய்யும் செயல்முறை நிச்சயம் எளிதல்ல. உங்கள் கல்யாணதிற்கான புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைன் ‘ப்ளாஹ்’ என்று அபத்தமாக இருக்க நீங்கள் விரும்பமாட்டீர்கள் என்பது எங்களுக்கு தெரியும், அதனால் கவலைப்படாதீர்கள், நாங்கள் அப்படி விட்டுவிட மாட்டோம்.


யார் சிறந்த உடை வடிவைமைப்பாளர், மேலும் உங்கள் முதுகு பகுதி எப்படி கவர்ச்சியாக இருக்க வேண்டும் போன்ற அனைத்து புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைன்கள்(blouse back design) பற்றியும் தெரிந்து கொள்ள ஸ்க்ரோல் செய்து கொண்டே இருங்கள்.


50 புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைன்கள்


பேக்லெஸ் ப்லௌவ்ஸ் ப்ராஸ்


50 புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைன்கள் (Stylish Blouse Back Designs)


1. ஆழமான மற்றும் அகன்ற யூ வடிவம் (டீப் அண்ட் வைட் யூ)- (Deep-U Shaped Saree Blouse Back Design)


1-deep-u-shaped-saree-blouse-back-design


 படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


நீங்கள் எந்த வகையான புடவையை அணிந்திருந்தாலும், இந்த டீப்-பேக் ப்லௌவ்ஸ் டிசைன் ஏற்றதாக இருக்கும். ஆழமான, மற்றும் அகன்ற, யூ-வடிவ கட்டில், ப்லௌவ்ஸ்ஸின் ஸ்ட்ராப் மெல்லியதாக இருக்கும். இந்த புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைன் கவர்ச்சியும் மற்றும் பாரம்பரியமும் ஒருங்கே அமைந்திருகிறதல்லவா? பட்டன்கள் அல்லது ஹூக்ஸ் கொண்டு மாட்டுங்கள், மேலும் பின்னால் ஒரு குஞ்சம்(டாசெல்ட் டோரி) சேர்த்து திருவிழாவிற்கான தோற்றத்தை அளியுங்கள்.


Also Read : சேலை குச்சு முறை


2. எம்பிராய்டரியுடன் வெளிப்படையான பின்புறம்(ஷீர் அண்டர்லே)-(Sheer Embroidered Saree Blouse Back Design)


2-sheer-embroidered-saree-blouse-back-design


படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


அழகு படுத்திக்கொள்ள, எம்பிராய்டரி செய்ய, மேலும் பின்புறம் திறந்து இருக்க விரும்புவோருக்கு, இது பொருந்தும். மெல்லிய சதுர வடிவில், மற்றும் ஒரு ஷீர் அண்டர்லே, ஆகிய இரண்டையும் எளிமையாக உள்ளடக்கி இருக்கிறது. இந்த பெண்மையான மலர் மற்றும் பறவை வடிவ  ஐவரி-எம்பிராய்டரி மோடிஃப் இணைப்பு திகைப்பூட்டுகிறது; வரவேற்பிற்கு அல்லது வேறு ஏதாவது முறையான இந்திய நிகழ்விற்கு அணிந்துகொள்ள ஒரு பொருத்தமான புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைன்.


3. நேர்த்தியான ஸ்ட்ராப்ஸ் - (Sleek Straps Saree Blouse Back-Design)


3-sleek-straps-saree-blouse-back-design


படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


ஏதாவது எளிமையாக ஆனால் சலிப்பூட்டுவதாக இல்லாமல் இருக்கும் டிசைனை நீங்கள் விரும்பினால், ஜான்ஹவி கபூர் அணிந்திருக்கும் இந்த ஸ்லீக் ப்லௌவ்ஸ் பேக் டிசைனை உங்களுக்காக தையல்காரரிடம் தைத்துக்கொள்ளுங்கள். இந்த பருவத்திற்கு, மெல்லிய தோள்பட்டை ஸ்டார்ப் மேலும் ஒரு அல்ட்ரா டீப் பின்புறம், ஏதாவது ஒரு கல்யாண விழாவில் பங்கேற்க, பொருத்தமாக இருக்கும். ப்லௌஸ் பின்புறம் மறைக்காமல் இருக்க இந்த டிசைனில் ஒரு ஷீர் புடவையை தேர்வு செய்யுங்கள்.


4. என்னை கட்டுங்கள் (டை மீ அப்) - (Tie Up Saree Blouse Back-Design)


4-tie-up-saree-blouse-back-design
படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்இந்த புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைனை நாங்கள் விரும்புகிறோம்! லோ-கட் ப்லௌவ்ஸ் டிசைனால் சலிப்புற்ற நாட்களுக்கு, இது சிறந்த மாற்றாகும். பட்டன்ஸ் அல்லது ஹூக்ஸ்க்கு பதிலாக, இந்த ப்லௌவ்ஸ் டிசைன்னில் சின்ன ரிப்பன்கள் மெல்லிய பௌ முடிச்சாக கட்ட இருக்கிறது. கூடுதலாக, நடுநடுவே போதுமான அளவு சருமத்தை வெளிக்காட்டும் விதமாக ஒரு சிறிய பகுதி விடப்பட்டு இருக்கிறது.


5. பட்டன் வைத்த பின்புறம் - (Button Up Back Saree Blouse Back Design)


5-button-up-back-saree-blouse-back-design
படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


முழுவதும் மூடும் விதமாக அமைந்த ப்லௌவ்ஸ் சலிப்பாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பட்டன் வைத்த புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைன் சூப்பர் சிக் எனவும் மற்றும் பனாரசி அல்லது சந்த்தேரி ஆகிய நேர்த்தியான லக்ஸ் பொருள் போன்ற அழகான தோற்றத்தையும் தரும். பின்னால் இருக்கும் பட்டன்களை காண்பிக்க, புடவையின் பள்ளுவை முன்புறம் வைக்குமாறு நாங்கள் பரிந்துரை செய்கிறோம்.


6. குடில் வடிவில் எம்பிராய்டரி - (Hut Cutout Saree Blouse Back Design)


 6-hut-cutout-saree-blouse-back-designபடத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


இது ஒரு தனித்துவம் வாய்ந்த புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைன், சரிதானே? நமக்கு நன்றாக தெரிந்த வடிவம் தான் இது. இந்த மாதிரியான ப்லௌவ்ஸ் பேக் டிசைன் செய்ய விரும்பினால், வலுவான, மற்றும் சிக்கலான எம்பிராய்டரி செய்ய வேண்டும் என்பதை, மனதில்  உறுதி கொள்ளுங்கள். நுண்ணிய அலங்காரங்களுடன் ஒரு சிறிய வடிவில் கட்-அவுட் செய்வது எப்போதும் சிறப்பாக தோன்றும்.


7. ஃபிரிஞ் மற்றும் கட்டும்(செல்ப்-டை) ப்லௌவ்ஸ் - (Fringe Self Tie Saree Blouse Back Design)


7-fringe-self-tie-saree-blouse-back-design


 படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


எந்த பட்டன்களும் இல்லை, எந்த ஹூக்ஸ்ஸும் இல்லை, இந்த புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைன்னில் ஒரு ஸெல்ப்-டை டோரி மட்டும் இருக்கிறது, அது ஒன்று தான் பாதுகாக்கிறது. டோரி ப்லௌவ்ஸ்ஸை பாதுகாப்பாக வைப்பது மட்டுமல்லாமல், ஒரு பிளிர்ட்டி அமைப்பையும் புடவை ப்லௌவ்ஸ் பேக்கிற்கு கூட்டுகிறது. நம்முடைய பிடித்தமான பகுதி, நிச்சயம், ப்லௌவ்ஸ் பேக் மேலே உள்ள பிரிஞ் பேனல் தான். மீண்டும், இந்த புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைன் தெரிய பள்ளுவை மாற்றி கட்டுங்கள் அல்லது அகலமாக பின் போடுங்கள்.


8. டபுள்-வி பின்புறம் - (Double V Saree Blouse Back Design)


 8-double-v-saree-blouse-back-design
படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்இந்த புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைன் ஒரு ஆழமான வி-பேக் மற்றும் மேலே ஒரு தலைகீழான வி வடிவை உருவாக்குகிறது. டோரியை கட்டியிருக்கும் இடம் இரண்டு வி வடிவமும் சந்திக்கும் இடம். இந்த ப்லௌவ்ஸ் பேக் எல்லா வகையான புடவைகளுக்கும் அழகாக இருக்கும். மேலே ஒன்றும் நடுவிலும் ஒரு டாஸ்செல்ட் டோரி ப்லௌவ்ஸ்ஸை பாதுகாப்பாக வைத்து, உங்கள் உடை எப்போதும் தேசி விளையாட்டுத்தனமான பொருளாக இருக்கும்.


9. லீஃபீ  ட்ரிம் - (Leafy Saree Blouse Back Design)


9-leafy-saree-blouse-back-design
படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


திருமணத்தில் உங்களால் இயற்கையின் தொடர்புடன் இருக்க முடியாது என்று யார் சொன்னது! இந்த மெல்லிய, விக்டோரியாவினால் ஈர்க்கப்பட்ட புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைன் லேஸ்ஸால் உருவானது, மேலும் ஒரு முக்கோண-வடிவில் உங்கள் பின்புறம் தெரியுமாறு கட்-அவுட் செய்துள்ளது. மேலும், வெட்டிய இடத்தை சுற்றி லீஃபீ பார்டர் மற்றும் மலர் லேஸ் பார்டர் ஆகியவை ஹெம்லைன்னில் இருப்பது நிச்சயம் காண்போரை சொக்க வைக்கும்.


10. ஜாலி ப்லௌவ்ஸ் (Jaali Saree Blouse Back Design)


 10-jaali-saree-blouse-back-design
படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


உங்கள் பாரம்பரிய புடவை ப்லௌவ்ஸ்களுக்கு நிச்சயம் இப்படியொரு சிக்கலான மற்றும் வெளிப்படையான பின்புறம் தேவை! இப்படிப்பட்ட புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைனை பார்க்க மிகவும் கடினமாக செய்தது போல் இருக்கிறது, இல்லையா? ஆனால் அது அவ்வளவு கடினம் அல்ல. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் டியர்-ட்ராப் வடிவ பேட்ச்சிற்கு தனியாக ஒரு ஜாலி துணியை வாங்குங்கள். பிறகு அதை உங்கள் ப்லௌவ்ஸ் பின்புறம் உள்ளே வைத்து தைத்து விட்டால் அவ்வளவுதான், ரெடி!11. ஹார்னெஸ் ப்லௌவ்ஸ் - (Harness Strap Saree Blouse Back Design)


11-harness-strap-saree-blouse-back-design படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


லாரா கிராப்ட் டாம் ரைடர் அதிர்வை இந்த ஹார்னெஸ்-ஸ்டைல் புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைன் மூலம் வெளிப்படுத்துங்கள். அந்த உடலுக்காக மிகவும் முயற்சித்து வருகிறீர்கள் என்றால், இந்த கவர்ச்சிகரமான பேக் ப்லௌவ்ஸ் டிசைன்னுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். ஆனால், ஸ்லீக்காக இருக்கும் ஒரு புடவையை இதோடு அணிய மறந்துவிடாதீர்கள். லேசான துணியை தேர்வு செய்யுங்கள், மேலும் அது சிம்பிள்ளாக பின்புறத்திற்கு கவனம் போகுமாறு திட்டமிடுங்கள்.


12. ப்ரூச் பேக் - (Brooch Saree Blouse Back Design)


 12-brooch-saree-blouse-back-design


படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


இந்த புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைன்னுக்கு பைத்தியமாகிறோம்! காரணம் வெளிப்படையானது; அலங்கரிக்கப்பட்ட ப்ரூச் வி வடிவ டீப் பேக் ப்லௌவ்ஸ்ஸில் பயன்படும் வகையில் வைத்துள்ளது. நீங்கள் பார்ப்பதை போல, இந்த டிசைன் லேஸ் ப்லௌவ்ஸ்க்கு ஸ்தம்பிக்கும் விதமாக இருக்கிறது. சில்க் புடவை ப்லௌவ்ஸ் அல்லது ஜார்ஜெட் புடவை ப்லௌவ்ஸ் ஆகிவற்றிற்குகூட இந்த ப்ரூச் டிசைன் சேர்த்து, ஸ்தம்பிக்க வைக்கலாம்.


13. ஷீர் பிளோரல் - (Sheer Floral Embroidered Saree Blouse Back Design)


13-sheer-floral-embroidered-saree-blouse-back-design


படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


ஒரு விசித்திரமான கல்யாண விருந்தினருக்கு அல்லது மணப்பெண்ணிற்கு, இந்த புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைன் பொருத்தமான தேர்வாக இருக்கும். இந்த ப்லௌவ்ஸ் டிசைனுக்கு திடமாகவும் மேலும் சூப்பர் ஸ்டைலிஷாகவும் உருவாக்குவது ஷீர் பேக் பேனல் முழுவதும் பிரகாசமான மலர் எம்பிராய்டரியுடன் சீகுயின் தோள் ஸ்ட்ராப் இணைக்கப்பட்டிருப்பதுதான்.


14. லோட்டஸ் காதல் (Flower Cutout Saree Blouse Back Design)


14-flower-cutout-saree-blouse-back-designjpg
படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


இந்த அழகான எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ப்லௌவ்ஸ் நம்முடைய பிரியமான பாரம்பரிய புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைனுள் ஒன்று. அந்த அருமையான தாமரை மோடிஃப்பை பாருங்களேன்! நுணுக்கமான எம்ப்ராய்டரியுடன் ஒரு அலங்காரமான கட்-அவுட், மேலும் பின்புறம் முழுவதும் சிதறிய சிறிய மோடிஃப்ஸ், இந்த ப்லௌஸ் பேக் உங்கள் இந்திய உடைக்கு மிக சரியான விதத்தில் தோன்றும், அப்படித்தானே?


 15. பௌ முடிச்சு கொண்ட ரவுண்டு கட்-அவுட் - (Round With Bow Saree Blouse Back Design)


15-round-with-bow-saree-blouse-back-design
படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்கனமான எம்பிராய்டரி அல்லது அலங்காரம் செய்யப்பட்ட அம்சங்கள் கொண்டதாக உங்கள் புடவை ப்லௌவ்ஸ் டிசைன் இருந்தால், இந்த புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைன் உங்களுக்கானது. இந்த ப்லௌவ்ஸ் பேக்கில் இரண்டு கட்டும் இடம் இருக்கிறது. வட்ட வடிவை கீழே ஒன்று ஹூக்கால் பாதுகாக்கிறது, மற்றொன்று பட்டையான சாடின் பௌவால் கட்டி இருக்கிறது. மேலும், எளிமையாக அணியக்கூடிய இந்த டிசைன் அழகை, நாங்கள் விரும்புகிறோம் என்பதை, சொல்லியே ஆக வேண்டும்.16. கிறிஸ்-கிராஸ் ஸ்ட்ராப்ஸ் - (Criss Cross Straps Saree Blouse Back Design)


 16-criss-cross-straps-saree-blouse-back-design
படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


இந்த கிறிஸ்-கிராஸ் ஸ்ட்ராப்ஸ் கொண்ட தனித்துவம் வாய்ந்த புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைன் ஒரு படபடக்கும் அதிர்வை வெளிப்படுத்தும். உங்கள் ப்லௌவ்ஸ் முன்புறம் டீப்பாக இல்லை என்றால், பெரும்பாலான முதுகு பகுதி இல்லாத ப்லௌவ்ஸ்களில் வைப்பதைப் போல், கப்கள் அல்லது ஸ்டிக்-ஆன் கப்ஸ் வைக்க முன்னேற்பாடாக இருக்கும் ஒரு ப்லௌவ்ஸை வாங்குங்கள்.


17. டபுள் டோரி - (Double Dori Saree Blouse Back Design)


17-double-dori-saree-blouse-back-designjpg
படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


ஒரு பிரபலமான டபுள்-டோரி ஸ்டைல் புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைன், கிளாசிக்காக இருக்கும். இது ஒரு வழக்கமான ராஜஸ்தானி ப்லௌவ்ஸ் பேக் டிசைன் - முதுகு பகுதியில் இறுதி பகுதியை தவிர வேறு இடங்களில் எந்த துணியும் இல்லாமல், மேலும் மெல்லிய கயிறால் அல்லது டோரி என்றழைக்கப்படுவதால்  கட்டப்பட்டிருக்கிறது.


18. பௌவுடன் ஒரு ஸ்லிட்  - (Slit With Bow Saree Blouse Back Design)


18-slit-with-bow-saree-blouse-back-design


 படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


பெரிய கட்-அவுட் விரும்பவில்லையா நீங்கள்? பின் ஒரு ஸ்லிட் நல்ல வழி! இந்த புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைன் போல ஒரு ஸ்லிம்மான ஸ்லிட் வைத்துக்கொள்ளுங்கள். ப்லௌவ்ஸ்க்கு தேவையான அந்த கூடுதல் ஊம்ப்பை கீழே இருக்கும் சாடின் பௌ தரும். அழகுதான், இல்லையா? இந்த ப்லௌவ்ஸ் டிசைனுக்கு உங்கள் புடவையை எப்படி வேண்டுமானாலும் கட்டலாம்.


19. பிஷ்நெட் மெஷ் பேக் (Fishnet Mesh Saree Blouse Back Design)


 19-fishnet-mesh-saree-blouse-back-designபடத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


உங்கள் பேண்ட்டிஹோஸ்க்கு மட்டுமல்ல, உங்கள் முதுகுக்கு கூட நீங்கள் பிஷ்நெட் அணியலாம். லூசான பிஷ்நெட்-மெஷ் பேட்டேர்ன் இந்த வருடத்தின், சமீபத்தில் வந்த புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைன் ஆகும். கூர்மையான சதுர ஸ்டைலில் பின்புறம் அழகாக தோன்றும். உங்களுக்கு வேண்டுமெனில், திறந்த மெஷ் பேக் டிசைனுக்கு ஒரு ஷீர் அண்டர்லேவை சேர்க்கலாம்.


20. முக்கோண-ஸ்ட்ராப் பேக் (Triangle Straps Saree Blouse Back Design)


 20-triangle-straps-saree-blouse-back-designபடத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


இந்த புடவை ப்லௌவ்ஸ் பேக் தோளில் உள்ள ஸ்ட்ராப், நீங்கள் பார்ப்பதைப்போல் இரண்டு முக்கோண வடிவில் தைத்திருக்கிறது. இடது புறம் ஒன்று, மேலும் வலது புறம் ஒன்று. அவை ஒரு முக்கோண வடிவத்தை தரும், மேலும் உங்கள் முதுகை மூடாமல் இருப்பினும் ஒரு நல்ல அழகை உருவாக்க வேண்டுமெனில், இது சுவாரசியமான சிக் என்ற டிசைனை உண்டாக்கும்.


 21. ஆர்ச் கட்-அவுட் ப்லௌவ்ஸ் பேக் - (Arch Cutout Saree Blouse Back Design)


 21-arch-cutout-saree-blouse-back-designபடத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


மற்றுமொரு கட்-அவுட் ட்ரெண்டியாகவும் இருப்பது ஆர்ச்-வடிவ புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைன். இன்னும் அழகூட்ட, ப்லௌவ்ஸ்க்கு மேலும் கீழும் டோரிஸ் தேர்வு செய்யுங்கள்.


22. பிரிஞ் மீது பிரிஞ் - (Fringe Saree Blouse Back Design)22-fringe-saree-blouse-back-design


படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


எப்போதும் ஒரு பிரிஞ் பேனல் பத்தாது, தானே? அதனால் தான் நாங்கள் இத்தனை பிரிஞ்கள் இருக்கும் பின்புறத்தை நெருடுகிறோம். ப்லௌவ்ஸ் பின்புறத்தை எம்பிராய்டரி போட்ட மெட்டாலிக் பிரிஞ் டேப்கள் நிறைத்து விடும், உங்கள் கவர்ச்சியான முதுகு சற்று வெளிப்பட. *விங்க்*


 23. ஸெல்ப்-டை பௌவுடன் வி-பேக் - (V With Bow Saree Blouse Back Design)


 23-v-with-bow-saree-blouse-back-design
படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


இந்த ஒரு பிளைன் சிம்பிள் மாதிரி, டீப் வி-நெக் புடவை ப்லௌவ்ஸ் பேக்கில் ஏதோ இருக்கிறது, அப்படித்தானே? ப்லௌவ்ஸ் பேக் கீழே ஒரு மெல்லிய ஸெல்ப்-டை பௌ தவிர, கூர்மையான வி இந்த பிலௌஸ் டிசைனுக்கு ஸ்பாட்லைட் தரும்.


24. டோரியுடன் பாட்டம்-லெஸ் ப்லௌவ்ஸ் பேக் - (Bottomless Saree Blouse Back Design)


24-bottomless-saree-blouse-back-design
படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


இது தடிமனாக ஆனால் மதிப்பானது. அடுத்த திருமண விழாவிற்கு இந்த புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைனை உடுத்த தைரியம் இருக்கிறதா? பெயர் பரிந்துரைப்பதைப்போல், இந்த ப்லௌவ்ஸ்க்கு கீழ் பகுதி இல்லை; ப்லௌவ்ஸ் பேக்கில் மேலே மட்டும் ஒரு பிடி இருக்கிறது. மேலே ஒரு பௌ அல்லது மேலே குறிப்பிட்டது போல் மெல்லிய கயிறை சேர்த்துக் கொள்ளலாம்.


25. ரிவர்ஸ் ஷர்ட் காலர் பேக் - (Reverse Shirt Collar Saree Blouse Back Design)


 25-reverse-shirt-collar-saree-blouse-back-design


படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


உங்கள் அனைத்து காட்டன் புடவைகளுக்கும் இது நம்பமுடியாத அளவு சிக் என்ற தோற்றத்தை தரும் ப்லௌவ்ஸ் டிசைன் ஆகும். ஒரு லைட் நிற ரிவர்ஸ் ஷர்ட் ப்லௌவ்ஸ் பேக் டிசைனை ஒரு பளிச்சென்ற வண்ணம் நிறைந்த பனாரஸி புடவையுடன் அணிந்து அடுத்து நீங்கள் பங்கு பெரும் மெஹெந்தி அல்லது ச்சூடா விழாவில் தனியாக தோன்றுங்கள்.


 26. லார்ஜர்-தேன்-லைப் ஃப்ளோரல் டேசெல்ஸ் - (Giant Flower Tassels Saree Blouse Back Design)


26-giant-flower-tassels-saree-blouse-back-design
படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


உங்கள் புடவை ப்லௌவ்ஸ் பேக்கில் லார்ஜர்-தேன்-லைப் டோரி டேசெல்ஸ் இருந்தால் யாருக்குத்தான் ரோசெஸ் வேண்டும்? அதிக டோரிஸ் இருந்தால், அருமையான தோற்றம் கிடைக்கும்! பல வடிவங்களிலும் வண்ணங்களிலும் நீங்கள் டேசெல்ஸ் தேர்ந்தெடுக்கலாம், ஆனால் உங்கள் ப்லௌவ்ஸ் நிறத்திற்கு ஏற்றதாக இருக்க நினைவில் கொள்ளுங்கள்.


27. 3டி பூக்கள் கொண்ட உடுப்பற்ற ப்லௌவ்ஸ் - (Naked 3D Flowers Saree Blouse Back Design)


 27-naked-3d-flowers-saree-blouse-back-design.படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


நீங்கள் உடுப்பற்ற உடையை, கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைன் அதே மாதிரியானது… உடை இல்லாத, கனமான அலங்காரத்துடன் ஷீர் துணி. எனினும், உடுப்பற்ற உடையை ஒரு ஸ்லிப்புடன் அணியலாம், உடையில்லாத எதுவும் இல்லாத பின்புற ப்லௌவ்ஸை நீங்கள் அணியலாம்! எப்படி? உங்கள் ப்லௌவ்ஸ் முன்புறத்தை திடமாக அல்லது லைனிங் கொடுத்தால் போதும், அவ்வளவுதான். அழகாக தோன்றும், அப்படித்தானே?


 28. நெட் ஸ்ட்ராப்ஸ் வைத்த ஹை-நெக் பேக் - (Net Straps Saree Blouse Back Design)


28-net-straps-saree-blouse-back-design


படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்
 


நெட் கொண்டு ஸ்ட்ராப்ஸ் உருவாக்க முடியும் என்று யாருக்கு தெரியும்? இந்த ஷீர் ஸ்ட்ராப்ஸ் உங்கள் சருமத்தின் மீது கண்ணுக்கு தெரியாது மேலும் பிரமிக்க வைக்கும் எம்பிராய்டரி துணியில் இரண்டு பேட்ச்கள் இருப்பதாக தோன்ற வைக்கும் - எதுவுமே இவை இரண்டையும் இணைப்பதாக இராது. மாயமாக!


 29. ரேசர் ஜிப்-அப் - (Racerback Saree Blouse Back Design)


 29-racerback-saree-blouse-back-design
படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


ரேசர்பேக் விளையாட்டு ப்ராகளில் மட்டுமல்ல புடவை ப்லௌவ்ஸ்க்கும் சிறப்பாக தோன்றுவதை பார்க்க எங்களுக்கு வியப்பாக இருக்கிறது. கண்ணாடி வேலைபாடு மற்றும் ஒரு விளையாட்டு ரேசர்பேக் கொண்ட இந்த புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைன் உங்கள் முதுகிற்கு மெலிதான தாக்கத்தை உருவாக்கும், அது இருக்கும் தொனியைவிட அதிகமாகவும் தோன்றும். ஒரு லேசான, ஷீர் புடவை இந்த இந்திய-சிக் டிசைனுக்கு சிறப்பாக தோன்றும்.


30. பிரிஞ் கொண்ட ஷீர் - (Sheer With Fringe Saree Blouse Back Design)


 30-sheer-with-fringe-saree-blouse-back-designபடத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


கனமான எம்பிராய்டரி புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைன்கள் (back designs) என்ன வென்று யூகிக்க முடியாது. எனினும், இந்த வட்ட வடிவ கட்-அவுட் கொண்ட ஷீர் மற்றும் ஹெம்லைன்னில் சில லேசான பீட்ஸ் கொண்ட பிரிஞ் தைக்கவும் ஸ்டைல் செய்யவும் எளிதாக இருக்கும். இந்த ஸ்டைலை ஒரு லைட் புடவை அல்லது ஒரு விரிந்த ஒன்றோடு நீங்கள் அணியலாம் - இரண்டுமே அழகாக தோன்றும்.


 31. எம்பிராய்டரி செய்த ஆங்கில் ரேசர்பேக் ப்லௌவ்ஸ்  - (Angled Racer Back Saree Blouse Back Design)


 31-angled-racerback-saree-blouse-back-designபடத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்உங்கள் ரேசர்பேக் புடவை ப்லௌவ்ஸ் டிசைனை இந்த கூரான அங்கிள்ஸ் கொண்டு இந்த பீஸ் போல ஸ்டைல் செய்யுங்கள். அதுபோல, உங்கள் ரேசர்பேக் புடவை ப்லௌவ்ஸ்க்கு சில எம்பிராய்டரி செய்து விளையாட்டுத்தனமாக இல்லாமல் பெண்மையாக இருக்குமாறு தோற்றம் அளியுங்கள். திடமான புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைன்க்கு பதிலாக, முழுவதும் ஷீர்ருடன் எல்லா பக்கமும் எம்பிராய்டரி செய்ததை தேர்ந்தெடுங்கள்.


32. கண்கவரும் முத்து (Pearl Strands Saree Blouse Back Design)


 32-pearl-strands-saree-blouse-back-designபடத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


உங்கள் புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைனில் கூடுதலாக தோன்ற வேண்டும் என்றால், பல அடுக்கு முத்து சரங்கள் சேர்த்துக்கொள்வது உங்களுக்கு ஒரு சிறப்பான தேர்வாகும். உங்கள் ப்லௌவ்ஸ் டிசைனை காண்பிக்க, உங்கள் புடவையை மீரா கபூர் போல இடுப்பில் சுற்றி பின் உங்கள் கைமீது அணியுங்கள்.


33. பௌவுடன் கூடிய பேக்லெஸ் ஹால்டர் ப்லௌவ்ஸ் (Halterneck With Bow Saree Blouse Back Design)


 33-halterneck-with-bow-saree-blouse-back-design


படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


நீங்கள் முயற்சிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துவது ஒரு ஸ்லீக் மற்றும் கவர்ச்சியான புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைன். கீழே கட்டும் இடத்தில்  அச்சிடப்பட்ட அல்லது அலங்கரிக்கப்பட்ட பௌ ஒரு பெண்மை உணர்வை இந்த கவர்ச்சியான ஸ்டைலுக்கு தரும், மேலும் இதை தவறவிடுவது கடினம் என்ற உறுதியையும் தரும்.


34. தலைகீழான முக்கோண கட்-அவுட்டுடன் ஆஃப்-ஷோல்டெர் - (Off Shoulder Saree Blouse Back Design)


 34-off-shoulder-saree-blouse-back-designபடத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


ஆஃப்-ஷோல்டெர் மற்றும் டீப் பேக் ப்லௌவ்ஸ் என்று வரும்போது சரியான பிட்டிங் கொண்டுவருவது கடினம் ஏன்னெனில் பிடிமானத்திற்கு எதுவும் இல்லை. எனினும், தோள் அளவில் ஒரு மெல்லிய கயிறு கட்-அவுட் விளிம்பை உருவாக்கி உங்கள் நடன அசைவில் நழுவாமல் பிடித்துக்கொள்ள எளிதாக இருக்கும்.


35. பௌ-வடிவ பேக்  - (Bow Shaped Saree Blouse Back Design)


35-bow-shaped-saree-blouse-back-design
படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்உங்கள் பின்னால் இரண்டு வி வடிவமும் மேலே ஒரு புள்ளியில் சந்திக்கும், மேலும் இரண்டும் டீப்பாக இருக்கும் என்பதை தவிர, இது டபுள்-வி புடவை ப்லௌவ்ஸ் (blouse) பேக் டிசைனை (back design) போன்றது. இறுதியாக, இது ஒரு பௌ வடிவத்தை உருவாக்கி மேலும் ப்லௌவ்ஸ் டிசைன் கீழ் பகுதி இல்லாமல் அமையும்.


36. ஒன்றன் மேல் ஒன்று முக்கோணம் (ஓவர்லாப் ட்ரைஆங்கிள்) (Overlap Saree Blouse Back Design)


 36-overlap-saree-blouse-back-designபடத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்இந்த புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைன் பூரணமாக உங்கள் மெஹெந்தி அல்லது சங்கீத் புடவைகளுடன் இணையும். துணியை ஓவர்லாப் செய்ய ப்லௌவ்ஸ் பேக் தைக்கப்பட்டுள்ளது. உங்கள் ப்லௌவ்ஸ் ஓவர்லாப்பை முன்னிலைப்படுத்த பார்டரில் எம்பிராய்டரி அல்லது அலங்காரங்கள் செய்யலாம்.


37. டியர்ட்ராப் வடிவில் கட்-அவுட் - (Teardrop Cutout Saree Blouse Back Design)


 37-teardrop-cutout-saree-blouse-back-designபடத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


உங்கள் புடவை ப்லௌவ்ஸ் பின்புறத்தில் டியர்ட்ராப் மற்றும் பய்ஸ்லே-வடிவ கட்-அவுட் உங்கள் உடைக்கு ஒரு இந்திய தொனியை தரும். அதனால், நீங்கள் ஒரு லைட் புடவை உடுத்தி இருந்தால் அதில் திருவிழா உணர்வை அலங்கரிக்க விரும்பினால், இந்த புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைன் நன்றாக இருக்கும். 


38. பிரிஞ்சுடன் ஸ்கேலோப் வேலைப்பாடு  (Scallop And Fringe Saree Blouse Back Design)


38-scallop-and-fringe-saree-blouse-back-design
படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


தற்சமயம் ஸ்கேலோப் சூப்பர் ட்ரெண்டியாக இருக்கிறது. சில மெட்டாலிக் பிரிஞ் மற்றும் ஒரு பீடெட் டேசெல் டோரியுடன் இது ஒரு நாடக நகரமாகி விடும். நேர்மையாக, இது ட்ராமா போல இல்லையென்றால் ஒரு மெஹெந்தி புடவை ப்லௌவ்ஸ் டிசைன் பொருந்தாது.


 39. டோரி கொண்ட ஸ்கேலோப் அலங்காரம் - (Scallop With Dori Saree Blouse Back Design)


 39-scallop-with-dori-saree-blouse-back-design


படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


மற்றொரு ஸ்கேலோப் உடை, இது நாடகத் தனமாக இல்லாமல் மிக திடமாக மற்றும் கவர்ச்சிகரமாக இருக்கிறது. எனினும், உங்களுக்கு தேவை எனில், நீங்கள் எம்பிராய்டரி சேர்க்கலாம் அல்லது ஒரு மைல் சென்று ஒரு ஷீர் துணியாக உருவாக்கலாம்.


 40. கூடுதல் நீளம் கொண்ட டோரியுடன் கிறிஸ்-கிராஸ் -(Lace Saree Blouse Back Design)


 40-lace-up-saree-blouse-back-design


படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


உங்கள் ப்லௌவ்ஸ் பேக் டிசைனுக்கு ஒரு கார்செட் அதிர்வோடு ஒரு டீப் கிறிஸ்-கிராஸ் லேஸ்-அப் பேனல் மூலம் இணையுங்கள். ப்லௌவ்ஸ்ஸை லேஸ்-அப் செய்யும் டோரி கூடுதல் நீளமாகவும் மற்றும் இதில் பெரும்பாலும் தரை கூட்டுவதாகவும் இருக்கிறது, அதனால் தான் நாங்கள் இதை விரும்புகிறோம்!


 41. கிறிஸ்-கிராஸ் பாட்டம்லெஸ் பேக் - (Criss Cross Backless Saree Blouse Back Design)


41-criss-cross-backless-saree-blouse-back-design


 படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


லேஸ்-அப் பேனல் இல்லாமல் கிறிஸ்-கிராஸ் தோற்றம் வேண்டுமா? வெறுமனே உங்கள் பார்டர் ஸ்ட்ரைப்ஸ் கொண்டு உங்கள் ப்லௌவ்ஸ்ஸை பிடித்துக்கொள்ள செய்யுங்கள் மேலும் உங்கள் முதுகை திறந்து வையுங்கள். இந்த புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைன் உங்கள் இந்திய தோற்றத்தை அடுத்த இடத்திற்கு உங்களை உயர்த்தும்.


 42. கண்ணாடி வேலை செய்த டோரியுடன் டீப்-யூ - (Deep U Mirror Tassels Saree Blouse Back Design)


 42-deep-u-mirror-tassels-saree-blouse-back-designபடத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


கிளாஸ்சிக்கான யூ-வடிவ புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைன் மற்றும் மாபெரும் கண்ணாடி-வேலை டேசெல்களுடன் மேலும் கீழும் ஸெல்ப்-டை டோரியுடன் ஒரு புது சுழற்சியை உருவாக்குகிறது! யாராவது மெஹெந்தி என்று சொன்னார்களா?


43. ஃப்ளோரல் ப்ரூசெஸ்சுடன் ரைன்ஸ்டோன் ஸ்டட்டட் ஷீர் (Rhinestone Studded Saree Blouse Back Design)


43-rhinestone-studded-saree-blouse-back-design 


படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


ரைன்ஸ்டோன் வசீகரிக்கும் மற்றும் உங்கள் புடவை ப்லௌவ்ஸ் பேக்  முழுவதும் இருந்தால், அவை இன்னும் அதிகமாக ஜொலிக்கும், இல்லையா? உங்கள் புடவை கட்டோடு கலந்து மேலும் பின்புறம் பின் செய்வது போல் செய்து விடுங்கள். உங்கள் ப்லௌவ்ஸ்க்கு பொருத்தமாக ப்ரூச்ஸ் பயன்படுத்தி பக்கவாட்டில் பின் செய்யுங்கள்.


44. பீட்டெட் டோரியுடன் வட்டம் - (Round Cutout With Dori Saree Blouse Back Design)


 44-round-cutout-with-dori-saree-blouse-back-design


படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


எல்லா மணப்பெண்களையும் அழைக்கிறது! இந்த என்றும் பசுமையான வட்ட வடிவ புடவை ப்லௌவ்ஸ் (blouse) பேக் டிசைனை உங்கள் திட்டமிடுதலில் புக்மார்க் செய்யுங்கள். மாபெரும் டோரி டேசெல் அல்லது லட்கன்ஸ்க்கு பதிலாக, உங்கள் புடவைக்கு பொருத்தமாக சின்ன பீட்ஸ் தேர்வு செய்யுங்கள் அது சிம்பிளாகவும் பாரம்பரியமாகவும், இன்னும் ஆஃப்-பீட்டாகவும் இருக்கும்.


 45. கேப் பேக் இணைக்கப்பட்டது  - (Attached Cape Saree Blouse Back Design)


45-attached-cape-saree-blouse-back-design
படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


உங்கள் புடவை பள்ளுவிற்கு சில ட்ராமா சேர்க்க விரும்புகிறீர்களா? உங்கள் மாஸ்டர்ஜியிடம் ஆலோசித்து ஒரு லேசான, மற்றும் சின்ன, கேப்பை உங்கள் பேக்லெஸ் டிசைனோடு இணைத்து ஒரு ஃபெய்ர்டேல் அதிர்வை உண்டாக்குங்கள்.


 46. ஓம்பரே எம்பிராய்டரியுடன் முழு ஷீர் - (Sheer-with-embroidery-saree-blouse-back-design


46-sheer-with-embroidery-saree-blouse-back-design


 படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


இது உங்கள் மெஹெந்தி உடைக்கு மிக பொருத்தமானது. உங்கள் புடவையை பல நிறங்களில் நுணுக்கமான நூல் வேலைப்பாடுகள் செய்த பின்புறத்தை மூடிய ஒரு பிளவுஸ்சுடன் இணையுங்கள். கலர் கிரெடேஷன் விளைவை உருவாக்க வேண்டும் - உங்கள் புடவை நிறத்திற்கு கான்ட்ராஸ்ட்டாக இருக்கும் நிறங்களை தேர்வு செய்து கலக்குங்கள்.


 47. டைமென்ட்-வடிவ கட்-அவுட் - (Diamond Cutout Saree Blouse Back Design)


 47-diamond-cutout-saree-blouse-back-design


படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


வைரங்கள் பெண்களின் சிறந்த தோழி, அல்லவா? பெரிதாக இந்த புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைனில் ஒன்றும் இல்லை, இருப்பினும் வன்மையாக இருக்கிறது. அந்த கூடுதல் ஊம்ப்க்கு, உங்கள் ப்லௌவ்ஸ்க்கு மேலே ஒரு நாடா அல்லது ஒரு பௌ கொண்டு இணையுங்கள்.


48. ஐலிட் பிளவுஸ் பேக் (Eyelet Saree Blouse Back Design)


 48-eyelet-saree-blouse-back-design


படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


அதிநவீனமாக மற்றும் மிதமாக, இந்த புடவை பிளவுஸ் பேக் டிசைன் மெல்லிய புடவைகளுடன் அசாதாரணமாக தெரியும். உங்கள் புடவை ப்லௌவ்ஸ்க்கு கொஞ்சம் அழகு சேர்க்க, நீங்கள் பிளவுஸ் நடுவில் துணியால் மூடப்பட்ட பட்டன்களை சேர்க்கலாம்.


 49. ஃப்ரில்லி சதுர பேக் - (Square With Frills Saree Blouse Back Design)


 49-square-with-frills-saree-blouse-back-design.


படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


உங்கள் இந்திய உடைக்கு கொஞ்சம் அதிக கவர்ச்சி பயன்படுத்தலாம், ஆனால் ரொம்பவும் மிகையாக இருக்க கூடாதா? நம் கவித்துவ போக்குகளை பின்னுக்கு வைத்து விட்டு, உங்கள் ப்லௌவ்ஸ் பேக் டிசைன் எதையோ இழந்ததாக இருப்பதாக நீங்கள் நினைத்தால், ரப்பில்ஸ்ஸை முயற்சியுங்கள். அவற்றை எளிதாக நீக்கி விடலாம் மேலும் சூப்பர் ஸ்டைலாகவும் இருக்கும்.


50. கூர்மையான சதுர கட்-அவுட் - (Sharp Square Cutout Saree Blouse Back Design)


 50-sharp-square-cutout-saree-blouse-back-design


படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்


நீண்ட நாள் விருப்பமான ஒன்றில் முடிக்கலாம், உங்கள் புடவை ப்லௌவ்ஸ் பேக்கில் ஒரு பெரிய சதுர-வடிவு கட்-அவுட் செய்யுங்கள், மேலும் அதை உங்கள் புடவையை இடுப்பில் சுற்றி கை மேல் போட்டு அதை ஸ்டைல் செய்யுங்கள். எங்களை நம்புங்கள், லேசான அல்லது கனமான, சாதாரண அல்லது நேர்த்தியான, என இது உங்கள் எல்லா புடவைகளுடனும் இணைக்கலாம்.


இப்போது உங்களுக்கு டாப் 50 புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைன்களின் ஒரு பட்டியல் இருக்கிறது, புடவையை பற்றி நினைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது, அல்லவா? உண்மையில், திருவிழா பருவத்திற்கான பூரண வழிகாட்டி எங்களிடம் இருக்கிறது. நீங்கள் அதிக புடவை ப்லௌவ்ஸ் பேக் டிசைன்களைகூட இங்கே பார்க்கலாம்.


பேக்லெஸ் பிளவுஸ் ப்ராஸ்  (Bras For Backless Saree Blouse


பிளவுஸ்களை விரும்பினீர்கள் ஆனால் டீப்-யூ பிளவுஸ் அல்லது பேக்லெஸ் பிளவுஸ்க்கு எந்த வகையான ப்ரா அணிய வேண்டும் என்று உங்களுக்கு தெரியவில்லையா? நாங்கள் உங்களுடன் இருக்கோம் . புரிந்ததா?


1. ஸ்பெஷல் பேக்லெஸ் ப்ராஸ் (Backless Bras)


 backless-bras-for-backless-saree-blouse-back-designPOPxo பரிந்துரைக்கிறது : ரோசலின் டபுள் லேயர்ட் வ்யர்பிரீ கபோர்ட் பேக்லெஸ் ப்ரா- ஜிவாமேயின் வெள்ளை (ரூ 449)


2. நிப்பில் பாஸ்டிஸ் - (Nipple Pasties Bras)


 nipple-pasties-bras-for-backless-saree-blouse-back-design


POPxo பரிந்துரைக்கிறது : டிஸ்போஸபிள் சர்க்கிள் நிப்பிள்ஸ் கவர்ஸ் 5ஜோடிகள் ஷேன்னின் (ரூ 222)க்கு3. ஸ்டிக்-ஆன் ப்ராஸ் (Stick On Bras)


 stick-on-bras-for-backless-saree-blouse-back-designPOPxo பரிந்துரைக்கிறது : ஹங்கேமொலரின் ஸ்டிக்-ஆன் ப்ரா (ரூ 2,195)


நீங்கள் சரியான ப்ராவை உங்கள் புடவை பிளவுஸ் பேக் டிசைன்படி கண்டுபிடித்த பின் நீங்கள் மற்றொன்று செய்ய வேண்டும். அது என்னவென்று, நீங்கள் கேட்கிறீர்களா? நிச்சயமாக, உங்கள் முதுகு பகுதியை இந்த புடவை பிளவுஸ் பேக் டிசைன்களுக்கு தக்கவாறு உணர்வூட்ட தயாராகுங்கள்! பின்புறத்தை சுத்தமாக, மென்மையாக, மற்றும் ஜொலிப்பதாகவும் செய்யுங்கள்!


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.


 To approve a single suggestion, mouse over it and click "✔"

Click the bubble to approve all of its suggestions.To approve a single suggestion, mouse over it and click "✔"

Click the bubble to approve all of its suggestions.To approve a single suggestion, mouse over it and click "✔"

Click the bubble to approve all of its suggestions.To approve a single suggestion, mouse over it and click "✔"

Click the bubble to approve all of its suggestions.To approve a single suggestion, mouse over it and click "✔"

Click the bubble to approve all of its suggestions.To approve a single suggestion, mouse over it and click "✔"

Click the bubble to approve all of its suggestions.