logo
ADVERTISEMENT
home / Bollywood
அனுஷ்கா மிகவும் அழகான பெண்.. சீக்கிரமே திருமணம் செய்து கொள்ள போகிறேன்.. பிரபாஸ் !

அனுஷ்கா மிகவும் அழகான பெண்.. சீக்கிரமே திருமணம் செய்து கொள்ள போகிறேன்.. பிரபாஸ் !

பாகுபலி திரைப்படம் வந்த பிறகு அனுஷ்கா பிரபாஸ் (anushka prabhas)  காதல் பற்றிய வதந்திகளும் வர ஆரம்பித்தன. அதற்கேற்றாற்போல நிகழ்ச்சிகளுக்கு பங்கேற்க வரும் சமயம் இருவரும் அருகருகே அமர்ந்திருப்பதும் அணுக்கமாக இருப்பதும் பார்ப்பவர்களுக்கு இது காதலேதான் என்கிற தோற்றத்தை கொடுத்திருந்தது.                                           

இவர்கள் இருவரும் காதலில் இருப்பதாக பல செய்திகள் வந்த போதும் அனுஷ்காவோ அல்லது பிரபாஸோ இருவரில் ஒருவர் கூட வாய்திறக்கவில்லை. மறுக்கவும் இல்லை. அதனாலேயே இவர்கள் பற்றிய வதந்திகள் அதிகமாக வந்தன. ரசிகர்களும் இவர்கள் இருவரும் நிஜத்தில் ஜோடி சேருவதையே விரும்புகிறார்கள்.                                        

இந்த தீபாவளி எந்த நட்சத்திர தம்பதிகளுக்கெல்லாம் தலை தீபாவளி தெரியுமா!

ADVERTISEMENT

Youtube

இந்த நிலையில்தான் அனுஷ்கா பற்றி பிரபாஸ் முதல் முறையாக மனம் திறந்து பேசியிருக்கிறார். ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த பிரபாஸ் வதந்திகள் வந்த வண்ணமே இருக்கின்றன. இதனை எப்படி நிறுத்துவது என்று எனக்கு தெரியவில்லை. கொஞ்ச காலம் அடங்கி இருந்த வதந்தி இப்போது மீண்டும் பேசப்பட்டு வருகிறது.

உண்மையில் அனுஷ்காவும் நானும் பதினோரு வருடங்களாக நல்ல நட்பில் மட்டுமே இருந்து வருகிறோம். ஒரு மற்றவர்கள் சொல்வது போல எங்களுக்குள் அப்படி ஒரு உறவு இருந்தால் அதனை நாங்கள் ஏன் மறைக்க வேண்டும். அப்படி எந்த கட்டாயமும் எங்களுக்கு இல்லை.                                                               

இந்தியன் 2 படத்தையடுத்து வெங்கட் பிரபுவின் வெப் சீரிஸில் வைபவுடன் இணைந்த காஜல் அகர்வால்!

ADVERTISEMENT

Youtube

இந்த வதந்தி நிற்க வேண்டும் என்றால் ஒன்று எனக்கு திருமணம் ஆக வேண்டும் அல்லது அனுஷ்காவிற்கு திருமணம் ஆக வேண்டும். அப்போதுதான் இந்த வதந்திகள் நிற்கும் என்று நிறுத்தி நிதானமாக கூறுகிறார் பிரபாஸ்.

அனுஷ்கா மிகவும் அழகானவர். அதனால்தான் அவர் பாகுபலியின் தேவசேனா கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் மூலம் திரையில் எங்கள் ஜோடி பொருத்தம் மக்களுக்கு பிடித்து போகவே இந்த வதந்திகளை அவர்களும் நம்புகிறார்கள்.

ADVERTISEMENT

மணிரத்னம் மூலம் வெளியானது பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் மிஷ்கினின் சைக்கோ பட டீஸர் !

Youtube

எனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் கண்டிப்பாக இருக்கிறது. படவேலைகள் தொடர்ந்து இருப்பதால் அதனை தள்ளி போட்டேன். சீக்கிரமே திருமணம் செய்து கொள்ள போகிறேன். சாஹோ திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து ஷ்ரத்தா கபூருடன் அடுத்த திரைப்படத்திலும் இணைய இருக்கிறார் பிரபாஸ்.

ADVERTISEMENT

பிரபாஸ் சொன்னபடி அவருக்கு திருமணம் முடியும் வரை இந்த வதந்திகள் நிற்காதுதான். ஆனால் அவரது திருமணம் யாருடன் என்பதில்தான் இந்த வதந்திகளுக்கான பதில்கள் இருக்கிறது.

 

Youtube

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

28 Oct 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT